Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எல்லாம் தெரியும் - என்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

samapanthan-%20r-.jpg

அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் மற்றும் அந்த சமாதான முயற்சிகள் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய செவ்வி. 

உங்களின் தென்னாபிரிக்கப் பயணத்தின் நோக்கம் என்ன? 

அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே நாம் அங்கு சென்றோம். 

தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவே இது. 

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டின் பக்க நிகழ்வாக தென்னாபிரிக்காவின் முன்முயற்சியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. 

அப்போது தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா எனது தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்திருந்தார். 

தென்னாபிரிக்காவின் முன்முயற்சி என்பதன் அர்த்தம் என்ன? விபரிக்க முடியுமா? 

என்னால் மேலதிகமாக எதையும் கூறமுடியாது. இது எவ்வாறு முன்னேற்றமடையும் என்பதைக் காலம் தான் பதில் சொல்லும். 

அது சிறிலங்கா அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சார்ந்துள்ளது. 

தென்னாபிரிக்காவின் பேச்சுக்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவையும் தாண்டிச் செல்லுமா? 

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு என்றால், அது பேச்சுக்களின் இறுதியானதாக இருக்கும். அது கடைசிப் பகுதியாகும். 

அந்தப் பேச்சுக்களில் அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்த நிலை என்ன? 

அரசியல்தீர்வு பற்றிய பேச்சுக்களில், கடந்தகாலத்தில் என்ன நடக்கவில்லை, இப்போது என்ன நடக்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும், என்பனவெல்லாம் கலந்துரையாடப்படும். 

13வது திருத்தச்சட்டம் ஏற்கனவே உள்ளது. 

அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க கடப்பாடுகள் உள்ளன. 

எல்லா விடயங்கள் குறித்தும் நாம் கலந்துரையாடுவோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு இணங்குவது, ஜெனிவாவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க அரசாங்கத்துக்கு உதவும் என்று கூறுகிறார்கள். அதுகுறித்த உங்களின் பதில் என்ன? 

நாம் எப்போதும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுக்களில் ஈடுபட தயாராகவே உள்ளோம். 

ஏனையவர்களின் நடவடிக்கைகளின் நோக்கங்கள் குறித்து நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. 

தற்போதைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளிடையே, தீவிரமான கருத்து வேறுபாடுகள் உள்ளதாக செய்திகள் உள்ளன. 

அவர்களுக்கு தமது கருத்தைக் கூறும் தகைமை உள்ளது. அது ஒரு விடயமே அல்ல. 

இறுதியாக கட்சி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் செயற்படும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பார்கள். 

இந்தச் சூழல், அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுக்களை நடத்த வழிவகுக்குமா? 

எதையும் இப்போது என்னால் கூறமுடியாது. பேச்சுக்களைக் கைவிட்டது அரசாங்கமே. அந்த முறிவுக்கு அரசாங்கமே பொறுப்பு. 

அத்தகைய பேச்சுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக உங்களின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் கூறியிருக்கிறாரே. அது அதிகாரபூர்வ கருத்தா? 

அவர் என்ன கூறினார், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ், பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என்று தானே கூறினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா இன்னமும் ஆதரவளித்து வருகிறது. தென்னாபிரிக்காவின் முன்முயற்சி தொடர்பான அதன் பதில் என்ன? 

அவர்கள் எல்லா முன்னேற்றங்கள் குறித்தும் அறிவார்கள். 

தென்னாபிரிக்கா அரசாங்கம் இந்தியாவுக்கு விபரிக்கும். 

நாம் பிரிட்டோரியா அரசாங்கத்திடம் இந்தியாவின் பங்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளோம். 

இந்தியா நீண்டகாலமாக அந்தப் பங்கை வகித்துள்ளது. இந்த செயல்முறையில் அது தொடரும். 

ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு என்று எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? 

ஏற்றுக்கொள்ளததக்க தீர்வை கண்டுபிடிப்பதற்கான உண்மையான விருப்பத்தை அரசுத்தரப்பில் இதுவரையில் நாம் காணவில்லை. 

அதனைக் கண்டறிவதென்றால், அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

 
 

எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்., எத்தனை பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டனர் போன்ற எல்லா விடயங்களும்கூட இந்தியாவுக்கு நன்றாக தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.