Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது

Featured Replies

இந்திய அரசாங்கம் புலிகளுக்கு உதவும் சாத்தியம் உருவாகிறது

[09 - September - 2006] [Font Size - A - A - A]

இந்திய அரசு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு உடையது என்பது உண்மைதான். ஆயினும், இதனைவிட இந்தியா, பாகிஸ்தானுக்கு விரோதமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்குப் பெரும் சவாலாகவும் முக்கிய விரோதியாகவும் இருந்து வருவது பாகிஸ்தானே. இந்தியா புலிகள் இயக்கத்துடன் ஒரு யுத்தத்தில் முன்னர் ஈடுபட்டிருந்தாலும் பாகிஸ்தானுடன் மூன்று பெரிய யுத்தங்களைச் செய்த நாடாகும். இந்திய அரசு, இந்தியாவின் தெற்கு வாசலில் ஒரு தனியான தமிழ் நாடு.

(குறிப்பாக, புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில்) உருவாகுவதை விரும்பாது விட்டாலும், அதைவிட, விரோத நாடாகிய பாகிஸ்தான் ஸ்ரீ லங்காவில் செல்வாக்குப் பெறுவதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது.

இதேவேளை, அண்மையில் கொழும்பு - பாகிஸ்தான் தூதரகம் அருகே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் புலிகள் இயக்கத்தின் வேலை இல்லையென்றும் இந்திய "றோ" அமைப்பினரே அந்தத் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் வாலி மொஹமட் அறிவித்திருப்பது துரதிர்ஷ்டமான ஒரு சம்பவமாக இருப்பதற்குக் காரணம் மேற்படி இந்தியா பாகிஸ்தான் விரோத நிலைப்பாடேயாகும். ஸ்ரீ லங்காவும் பாகிஸ்தானுக்குமிடையே ஏற்பட்டுள்ள அதிகரித்துவரும் நெருக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள், புத்திஜீவிகள் கொண்டுள்ள அபிப்பிராயம் மேற்படி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் உறுதிப்படவே செய்யும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருக்கும்வரை, இந்திய அரசு புலிகள் இயக்கத்தினருக்கு வெளிப்படையான முறையில் உதவி செய்யப்போவதில்லை. ஆயினும், பாகிஸ்தானும் இந்தியாவும் பரஸ்பரம் விரோத நாடுகள் என்ற வகையில் ஸ்ரீ லங்காவில் இந்தியாவுக்கு விரோதமான முறையில் பாகிஸ்தான் தலையிட்டுள்ளது என்ற புதுடில்லியின் இந்திய மத்திய அரசு தரப்பில் நிலவும் அபிப்பிராயம் தற்போது அது ஒரு வல்லரசு ரீதியிலான ஏகாதிபத்திய அபிப்பிராயமாக மாறிவரும் நிலை மேற்படி பாகிஸ்தான் தூதரக அறிக்கயைால் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாடு மாநிலம் மூலமாக உதவிகள் கிடைப்பதற்கு இடம்கொடுத்து இந்திய மத்திய அரசு பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது புலிகள் இயக்கத்தினர் தேவைப்படும் முக்கிய ஆயுதங்களைக் கடல்மார்க்கமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள கடல்பிராந்தியங்களில் இந்திய கடற்படையினரின் புலிகளுக்குப் பாதகமான நடவடிக்கைகளை விலக்கிக் கொள்வதன் மூலம் புலிகள் தேவைப்படும் ஆயுதங்கள், உதவிகளைப் பெற்று பலமடைவதற்கு இந்திய அரசு இடமளிக்கக்கூடும். - லங்காதீப விமர்சனம்: 6.9.2006 -

http://www.thinakkural.com/news/2006/9/9/s...s_page10348.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையின்ர உதவியை யார் கேட்டது? உவத்திரம் செய்யாமல் இருங்கோ எண்டுதான் கேட்கிறோம்.. அதுவே இந்தியா செய்கின்ற பெரிய புண்ணியம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தன்னுடைய மோட்டுச் சனத்திற்கு எழுதிய மொக்கனுடைய பிரசாரக் கதையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ இவையின்ர ஆயுதங்களை எதிர்பார்த்துத்தான் தலமை இருக்கிறமாதிரி! கதையும் ஆட்களும்..

35 வருடம் கழிஞ்சிட்டுது.. போராட்டம் எங்கயோ போயிட்டுது.. இப்பபோய் ஆயுதம் தரினமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நாடும் தன் நாட்டிற்காகத் தான் எதையுமே செய்யத் துணியுமே தவிர, மனரீசமாக உதவிகள் என்பது, அந்த நாட்டு மக்களில் இருந்து வருவதே!

எம் தாயகத்தை நாம் தான் போராடி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முடிவு. ஆனால், வருகின்ற எந்த ஆதரவையும் வரவேற்கத் தான் வேணும்

நானும் தூயவனின் கருத்துடன் உடன்படுகிறேன்.

நாம் தனித்துச் சாதிப்போம் என்று மார்தட்டுவது இலகு. ஆனால் செயல்முறையில் எத்தனை கடினம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் எங்கள் களத்தில் கூடத் தனித்துச் சாதிப்போம் என்று மார்தட்டும் பலர் வன்னியிலே குழந்தைகள் மீது குண்டுபோட்டதுமே ஐயோ சர்வதேசமே கண்டுகொள்ளவில்லையே என்று கூப்பாடு போடுகின்றனர்.

எனவே கிடைக்கின்ற உதவிகள் அத்தனையும் எங்களுக்கு இப்பொழுது தேவை.

அதற்காக இந்தியா உதவிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது என்று நான் நம்பவில்லை. சிலவேளைகளில் அள்ளிக் கொடுப்பதைப் போலச் சிங்களத்திற்குப் புூச்சாண்டி காட்டலாம்.

எதிரிக்கு எதிரி நன்பன் என்றரீதியில் இந்தியா உதவ முன் வரலாம். ஆயினும் ரோவிற்குள் இருக்கும் பார்ப்பாணீயப் படைகள் உள்ளவரை அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. எது எப்படியாயினும் இந்தியா எம் போராட்டங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலிருந்தால் அதுவே தமிழீழமக்களுக்கு அவர்கள் செய்யும் பேருதவீ. ஆயுதத்;தைக் கொடுத்து விட்டு இப்படிச் செய் அப்படிச் செய்யாதே என்ற முனங்கல்களுக்கு அடிபணியாமல் எம் உறுதியால் உதவியால் எம் போராட்டத்தை வெல்வதே சிறப்பாகும்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைக்கு, "லங்காதீப"வின் அதியுயர் கற்பனையால், நாலு தமிழர்கள் சந்தோஸம் அடைந்திருக்கிறார்கள்!!!... நன்றிகள் லங்காதீப!!! :wink:

எதிரிக்கு எதிரி நன்பன் என்றரீதியில் இந்தியா உதவ முன் வரலாம்.

"லங்கா தீப" வின் கட்டுரைக்கு (கற்பனைக்கு) நாங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லையென்றாலும் இந்தியா இனி நமக்கு உதவ வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இங்கு ஆபத்து என்னவென்றால் இது இந்தியாவும் பாகிஸ்தானும் தமது பலத்தை பரீட்சிக்கும் தளமாக இலங்கை தீவை மாற்றவே வழி கோலும். இவ்விரு நாடுகளும் தமது சண்டயை எம்மூலமாக அரங்கேற்ற தொடங்கினால் விளைவு: யுத்தம் இன்னும் பெரிதாகி இழப்புகள் இரு பக்கமும் அதிகமாகும்.

பிறகு இரு பகுதியும் நினைத்தால் கூட விடுபடுவது கடினம்.

  • தொடங்கியவர்

இந்தியா மீது தென்னிலங்கையில் சீற்றம் அதிகரித்து வருவதையே லங்காதீபவின் கட்டுரை உணர்த்துகிறது. நம்மைப் பொறுத்தவரை எமது விடுதலையை நாம் தான் போராடிப் பெற முடியும் ஆனால் அதன் பின்னரான சர்வதேசத் தொடர்புகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இந்தியாவின் அனுசரணை மிக அவசியம்.பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இன்றைய உலக ஒழுக்கின் பிரகாரம் இந்தியாவின் நிலைப்பாட்டையே மற்றைய சர்வதேச நாடுகள் பெரும்பான்மையாக அங்கீகரிக்கும், பின் பற்றும்.ஆகவே இது நம்மைபொறுத்தவரை மிக நல்ல சகுனம், தொடர்ந்தும் சிங்கள தேசம் இந்தியா மீது பகை கொண்டு எழுவது எமக்கு அவசியம் ஆகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The only private ship was the South Indian cargo ship, "City of Liverpool," that was unloading cement in Point Pedro port during the daytime and stays anchored in KKS during the nights in the recent days http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19510

இதன் அர்த்தம் என்ன? உண்மையில் சிமெந்து இறக்கிறதா? ஏன் இந்த இந்திய கப்பல் இரவில் KKSல்? இந்தியாவை ஒருமுறை நம்பினோம், நம்பிக் கெட்டோம்! இம்முறையும் யாருக்காவது தமிழகத்தில் ஒரு சிலரைத்தவிர மற்றைய முந்திய, இன்றைய ஆளும் தரப்பினரும் புலி எதிர்ப்பாளராகவே இருக்கின்றனர். எந்த நிலையிலும் இந்தியா எங்களுக்கு உதவப் போவதில்லை. தமிழகத்தின் எதிர்ப்பினாலேயே, சிங்களத்திற்கு நேரடியாக உதவமுடியாமலிருக்கிறதே ஒழிய, மற்றப்படி வடக்கிலுள்ளவர்கள் எமக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். ஆனால், பலமான தமிழீழம், இந்தியப்பாதுகாப்பிற்கு அனுசரனையாக இருக்கும் என்பதை எப்போதுதான் இந்தியா உணரப்போகிறதோ தெரியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.