Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

27 ஏப்ரல் 2014

TR%20Re1_CI.jpg

சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து நேற்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தங்கள் ஊருக்குத் திரும்பாமல் அகதிமுகாங்களில் வாழும் இந்த மக்களின் போராட்டம் என்பது உக்கிரமானதொரு வாழ்தலே. ஈழத் தலைநிலம் திருகோணமலை மாவட்டத்தின் இத் துயர் என்பது ஒட்டுமொத்த ஈழம்மீதும் படிந்திருக்கும் பெருந்துயர்.

உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட பலர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அகதிகள் இன்னமும் தமது சொந்த இடத்தில் குடியமர முடியவில்லை என்பது நாட்டின அரசியலின் ஸ்திரமற்ற தன்மையை தெளிவாக உணர்த்துகின்றது. யுத்தம், இடப்பெயர்வு என்பவற்றின் அரசியலும் மீள் குடியமர்த்தல் என்பவற்றின் அரசியலும் அவை இடம் பெறும் நிலப்பகுதியை சேர்ந்த மக்களை கடுமையாக துன்புறுத்துகின்றன. நில அபகரிப்பு என்பது பாதிப்பல்ல சனக்குழுத்தினை அழித்தல் என்றே சொல்லப்படுகிறது.

சம்பூர் வரலாறு:-

ஈழத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இடங்கள் அவர்களின் வரலாறு பண்பாடு மொழி வாழ்வியல் என்று இன்னோரன்ன விடயங்கள் கலந்த பூமியாகும். சம்பூரும் அப்படியானதொரு கிராமமமே. குளக்கோட்ட மன்னன் காலத்திற்கு முன்பாகவே சம்பூரில் மக்கள் வாழ்ந்து வந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன. திருக்கரசை புராணம், மற்றும் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் வைத்து பார்க்கும்பொழுது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கொண்டிருப்பதை மதிப்பிட முடிகிறது. அதற்கு முன்னரும் சம்பூரில் மக்கள் வாழந்;திருக்க்கூடும். சம்பூர் என்பது அக் கிராமத்தின் வனப்பு மிகுந்த எழிலைக் குறிப்பிடுகின்றது. சம்பூரண அழகு பெற்ற ஊர் என்பதனால் சம்பூர் என்ற பெயர் டிந்தக் கிராமத்திற்கு ஏற்படட்டிருக்கிறது.

ஈழத்தில் கிழக்கில் திருகோணமலை மண்ணில் தனித்துவமான தமிழ் மொழி, பண்பாடு, மண்வாசனை என்பன உள்ளன. திருகோணமலை பல்லவர் காலத்தில் பாடல் பெற்ற திருத்தலம் என்கிற கோணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதி. திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாராப்பற்று என் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த நிலப்பகுதியில் சம்பூர் அமைந்துள்ளது. சம்பூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரட்ணபுரம், கடற்கரைச்சேனை ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இலங்கை இந்திய கூட்டு உற்பத்தியான இலங்கை அரசின் உத்தேச அனல் மின்னிலையம் அமைப்பதற்காக அபகரிக்கபட்டன.

முதல் இடப்பெயர்வு:-

ஈழத்தில் நான்காம் ஈழப்போர் தொடங்கிய பொழுது முதல் முதலில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசம் சம்பூர்பகுதியே. விடுதலைப் புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் என அறிவிக்கப்பட்டு இலங்கை அரசு யுத்தத்தை தொடங்கிய நாட்களில் முதன் முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் சம்பூர் மக்கள். 2006.04.26 அன்று தொடங்கப்பட்ட யுத்தத்தில் இந்த மக்கள் அகதியான வரலாறு தொடங்கியது. அன்றைய நாளில் சம்பூர் கிராமம்மீது மிகக் கடுமையான விமானத் தாக்குதல்களும் எறிகணைத்தாக்குதல்களும் நடத்தப்பட்டன. மக்கள் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சனங்கள் பலரும் செத்துச் சிதறுவதைப் பார்த்த மக்கள் இரவோடு இரவாக சம்பூரை விட்டு இடம்பெயர்ந்ததார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை விட்டு போகும் திசை அறியாதது செல்லத் தொடங்கினார்கள் மக்கள்.

இந்த மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பிற்குச் சென்று கதிர வெளிப்படாசாலையிலும் வாகரையிலும் தங்கியிருந்தனர். அங்கு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். தொடர் யுத்த நடவடிக்கை காணரமாக சம்பூரிலிருந்து 100 கிலோ மீற்றர் கால் நடைப்பயணமாக மட்டக்களப்பு நகரை அடைந்தார்கள். சம்பூரில் யுத்தம் தொடங்கியது முதல் அதன் பாதிப்புக்களை எதிர்கொள்ளத் தொடங்கிய சம்பூர் மக்கள் இன்றுவரை அதை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். யுத்தம் உடல்ரீதயான காயங்களை ஏற்படுத்தியது. உயிர்களைப் பறித்தது. யுத்தத்தின் முடிவில் மாபெரும் சிறை வாழ்வாக அகதிமுகாங்களை வந்தடைந்தனர் சம்பூர் மக்கள். முதலில் மட்டக்களப்பு நகரில் உள்ள முகாங்களிலும் பின்னர் திருகோணமலை மூதூரில் உள்ள கிளிவொட்டி, பட்டித்திடல், மணற்சேணை, கட்டைப் பறிச்சான் முதலிய இடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். ஏழு ஆண்டுகளைக் கடந்தும் நிலம் மறுக்கப்பட்ட, நிலம் பறிக்கப்பட்ட சனங்களாய் அந்த முகாங்களில் உள்ளனர்.

தாயக அபகரிப்பு

ஈழத்தின் வடக்கில் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை உயர்பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அபகரித்த பொழுது 'நாட்டின் பாதுகாப்பிற்காக மக்கள் தமது நிலங்களை தியாகம் செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. கிழக்கில் சம்பூர் நிலம் அபகரிக்கப்பட்ட பொழுது 'அபிவிருத்திக்காக நிலங்களை மக்கள் தியாகம் செய்ய வேண்டும்' எனப்பட்டது. இங்கு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு எப்படியானது? அபிவிருத்தி எப்படியானது? ஈழ மக்களின் நிலங்களை அபகரிக்க இப்படிப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஏற்கனவே மனிதாபிமான யுத்தத்திற்காக இந்த மக்கள் அங்கங்கள் பறிக்கப்பட்டார்கள். காயங்கள் உண்டாக்கப்பட்டார்கள். உயிர்கள் பறிக்கப்படடார்கள். இப்பொழுது இந்த மக்களிடம் எஞ்சியிருப்பத நிலம் மட்டுமே. அந்த நிலத்திற்காகவே வாழ்வதும் போராடுவதும். அதையும் பறிக்கும் பொழுது இந்த மக்கள் எங்கு செல்லுவார்கள்? என்ன செய்வார்கள்?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல வந்தது இந்தச் செய்தி. 1499ஃ25 ஆம் இலக்க 2007 ஆம் ஆண்டு மே 30ஆம் திகதி வர்த்தமானியில் விசேட பொருளாதாரத்துடன் இணைந்த சம்பூர் அனல் மின்னிலையத்திற்கான நிலச்சுவிகரிப்பு பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்தத் திட்டடத்தில் சுமார் 1700 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர், கடல் வளம், மண் வளம், மரங்கள் என்று அழகும் வளமும் கொண்ட சம்பூரின் வளத்தை குறித்த அனல் மின்னிலையம் பாதிக்கும் என்றே கருதப்படுகிறது. 530 குடும்பங்கள் வசிக்கும் சன நெரிசல் கொண்ட சம்பூர் இதில் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மக்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மக்களை மீள்குடியேற்றம் செய்வோம் என்று தெரிவித்த இலங்கை அரசு அந்த மக்களின் வாழ்வை வளத்தை அபகரித்திருப்பது என்ன வகையான மனிதாபிமானம்? சம்பூர் பகுதியை தமிழ் மக்களிடமிருந்து பறித்து அங்கு தமிழ் மக்களின் தாயகக் கோட்டபாட்டுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதே அரசின் திட்டம் எனப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பின்றி அதை மேற்கொள்ளவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மூதூரில் அகதிமுகாம்ங்கள்:-

தகரங்களுக்குள் தவிக்கும் ஒரு வாழ்வை இந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூர் பிரதேசத்தில் உள்ள அகதிமுகாங்களில் தங்கள் சொந்த நிலத்திற்கே செல்வோம் என்றும் வாழ்வையே ஒரு போராட்டமாக்கிக் கொண்டு இந்த மக்கள் வாழ்கிறார்கள். தகரங்களால கட்டப்பட்ட நீண்ட கொட்டகைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன இந்த மக்கள் வசிக்கும் அகதிமுகாம். தகர்களாலும் தறப்பால்களாலும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறைகளிலும் குடியிருப்பத் தப்பட்டிருக்கிறார்கள்.

வயல்வெளிகளுக்குள்தான் பட்டித்திடல் முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைகாலத்தில் அந்தக் தகரக் கொட்டகைகளினுள் வெள்ளம் நுழைந்து விடும்பொழுதும் அவற்றுக்குள்தான் மக்கள் வசிக்கின்றனர். இவைகள்தான் இயல்வான வாழ்வு ஒன்றைப்போல அனர்த்த கால முகத்துடன் ஒவ்வொரு முகாமும் காணப்படுகிறது.

இந்த முகாங்களில் பார்த்த குழந்தைகள் நமது அரசியல் துயரத்தை தமது முகங்களில் வெளிப்படுத்துகின்றனர். கூடுகளைப்போலிருக்கும் தகர வீடுகளுக்குள் இருந்து சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வாடிய முகத்தோடு குந்தியிருக்கிறார்கள். நிவாரண பொருட்களில் சமைத்த உணவை பசியோடு அள்ளி உண்டு கொண்டிருக்கும் பல குழந்தைகள் எதிர்காலம் குறித்த ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.எவ்வளவு காலத்திற்குத்தான் இந்க் குழந்தைகள் அகதிமுகாம் பிள்ளைகளாக வளர்வது என்ற ஏக்கமே அந்த மக்களின் நெஞ்சில் அனலால் கொதிக்கிறது. தமது ஊரை அறியாத தமக்கொன்று ஒரு வீட்டை அறியாத பிள்ளைகளுக்கு 'சம்பூர் என்று எமக்கொரு ஊர் இருக்கிறது' என்று தர்மார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சல்மான்குர்ஷின் கையெழுத்து

இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது பயணத்தில் ஒரு நிகழ்வாக சம்பூர் அனல்மின்னிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளார். சல்மான் குர்ஷித் சம்பூர் அனல் மின்னிலையம் தொடர்பில் எட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார்.இலங்கை இந்திய கூட்டு யுத்தத்திற்கு பரிசாக சம்பூரை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. தமது நிலம் தமக்குக் கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் இந்தச் செய்தி இடிபோல விழுந்திருக்கிறது என்று சம்பூர் மக்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் வடக்கு கிழக்கு மக்களின் மேம்பாட்டிற்காக என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பயணமும் தமிழ் மக்களின் நிலத்தை பறித்தெடுக்கும் பயணமாகவே அமைந்துவிட்டது. இருப்பதையும் புடுங்கிய கதையாக சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் சம்பூர் அகதிகளை நிரந்தர அகதிகளாக்கியுள்ளது. சல்மான் குர்ஷித் ஒப்பந்த்தில் இட்ட கையெழுத்து அந்த சம்பூர் மண்ணின் குழந்தைகனை நிரந்தர அகதிகளாகக்கும் தலையெழுத்தாக்கிவிட்டது.

எப்பொழுது ஊர்?

சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் தாம் அகதி முகாங்களில் தங்கியிருப்ப்பதாகவும் தம்மை தமது இருப்பிடங்களில் குடியமர்த்துமாறும் கோரி சம்பூர் பிரதேச மக்கள் மனுவை தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவுக்கு அனல் மின்னிலையம் அமைக்கும் அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றிடங்களில் குடியேற வருமாறு பல தடவைகள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டபோதும் தமது சொந்த இடங்களே தமக்குத் தேவை என்றும் மாற்றிடங்களில் குடியேறமுடியாது எனவும் மக்கள் தெரிவித்தனர். எங்களை வேறு ஒரு நிலத்தில் குடியேற்ற வேண்டாம்! சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்பதே சம்பூர் மக்களின் உறுதியான கோரிக்கை. உயர்நீதிமன்றமும் மக்களை மீள்குடியேற்றவே தீர்ப்பளித்துள்ளது.

புலிகளால் திருகோணமலை நகரத்திற்கும் துறைமுகத்திற்கும் பிறிமா ஆலைக்கும் மாத்திரமல்ல சம்பூர் மக்களுக்கும்தான் பாதிப்பு என்று சம்பூர்மீது யுத்தம் தொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு சம்பூரில் மக்கள் மகிழ்ச்சியோடு நிம்மிதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அன்று தொடங்கிய யுத்தம்தான் சம்பூர் மக்களின் நிலத்தை பறித்தது. அதுவே சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கச் உதவியது. அதுவே இப்பொழுதுதான் இந்த மக்களை ஆபத்திற்குள் தள்ளியது.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நிலப்பகுதி என்பதால் இந்த இடம் இலக்கு வைக்கப்பட்டது. அதை இந்தியாவிடம் கொடுத்தது கூட்டமைபபு எதிர்க்காது என்பதற்காகவே. தமிழர்களை சம்பூர் பகுதியிலிருந்து இல்லாமல் செய்யவும் அதை சிங்கள மயமாக்கி அபகரிப்பதுவும்தான் இதன் பின்னால் உள்ள திட்டம். இங்கு நில அபகரிப்புக்கு ஒரு சாட்டே அனல் மின் நிலையம். அதற்கு பாதுகாப்பாகவே இந்தியா. ஆனால் உறுதியாக போராடினால் மக்களால் எதுவும் முடியும். போராட்டம் என்பது எப்பொழுது தோற்றுப்போகாத எழுச்சி. போராட்டத்தின் வடிவங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிகொண்டே போராடவேணும். போராட்டத்தின் அடிப்படையாக மக்களின் உன்னதமான உணர்வும் தர்மீக நியாயமும் இருக்கும்பொழுது அது வெல்லும். இன்றைக்கு வாழ்தலைத்தான் தங்கள் உக்கிர போராடடமாக மாற்றியிருக்கிறார்கள் சம்பூர் மக்கள்.

அகதி முகாங்களும் நிலப் பறிப்புக்களும் குழந்தைகளதைதான் அதிகம் பாதிக்கின்றன. இன்றைய அகதிமுகாங்களும் அரசியலும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறது என்பே இங்குள்ள சனங்களின் துக்கம். ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது என்பதே இந்த மக்களின் கேள்வி. நிச்சயமாக இங்குள்ள ஒவ்வொரு மனிதர்களின் ஒவ்வொரு இரவுக் கனவுகளும் ஊர் பற்றியதாகத்தான் இருக்கிறது. ஊரில் வாழ்வது போல ஊருக்கச் செல்வதுபோல தினமும் இவர்கள் கனவு காண்கிறார்கள். தாம் காணாத ஊருக்குச் சென்று வசிப்பதுபோலவும் தமது ஊரிலுள்ள வீட்டில் விளையாடுவதுபோல, பள்ளிக்கூடம் செல்வது போல இங்குள்ள குழந்தைகள் உரிமையோடு கனவுகள் காண்கிறார்கள். குழந்தைகள் காணும் கனவுகள் நியாயமும்உன்னதமும் மிக்கவை.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106141/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.