Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மீதும் சட்டவிரோத வழக்கு

Featured Replies

இலங்கையிலிருந்து சென்னை நகருக்குள் உளவாளியை அனுப்பி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் சமீபத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக, இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, கியூ பிரிவு போலீசார் ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் ஜாகீர் உசேன், மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.
 
மும்பையில் தாக்குதல் நடத்தியதுபோல, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவார்கள். இலங்கையில் தங்கியிருந்து கொண்டு, கடல் வழியாக ஊடுருவி வந்து, தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். தீவிரவாதிகளின் முதல் இலக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம். அடுத்த இலக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம்.
 
இதுபோல அடுத்தடுத்து, தமிழகத்தின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கும் விநாயகர்சதுர்த்தி திருவிழா, ஆகஸ்டு-15 சுதந்திர தினவிழா அல்லது டிசம்பர்-6 பாபர்மசூதி இடிப்பு தினம் ஆகிய நாட்களில் அரங்கேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் உசேனைப்போல மேலும் 2 உளவாளிகளை, சென்னை நகருக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அவர்களை சென்னையில் தங்க வைக்க, இடம் பார்க்கும் வேலையும், ஜாகீர் உசேனிடம் கொடுக்கப்பட்டது. அந்த உளவாளிகள் இருவரும் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களை கட்டுமான தொழிலாளர்களைப்போல, சென்னையில் தங்கவைப்பதற்கும், ஜாகீர் உசேன் ஏற்பாடு செய்துவந்ததாக தெரிகிறது. அதற்குள் அவர் போலீஸ் கையில் சிக்கிவிட்டார். ஆனாலும், அந்த உளவாளிகள் இருவரும், சென்னை நகருக்குள் கண்டிப்பாக ஊடுருவி வந்து, பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அந்த உளவாளிகளின் பெயர் விவரங்களை, ஜாகீர் உசேன், கியூ பிரிவு போலீசாரிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் காவல் விசாரணை முடிந்து, நேற்று காலை 10.30 மணி அளவில், ஜாகீர் உசேன், சென்னை எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், ஜாகீர் உசேன், நேற்று பகலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரை, அவரது வழக்கறிஞர் ஜெய்னுல்ஆப்தீன் பார்த்து பேசினார். வழக்கறிஞர் ஜெய்னுல்ஆப்தீன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜாகீர் உசேன் மீது போலீசார் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
 
இதற்கிடையில், கியூ பிரிவு போலீசார், அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஜாகீர் உசேன் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஜாகீர் உசேன் தான் வைத்திருந்த செல்போன் மூலம், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்புகொண்டு பேசிய, செல்போன் பேச்சு மற்றும் சில முக்கிய ஆதாரங்கள் அடிப்படையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாஸ் என்ற ஷா, அமீர்சுபேர்சித்திக் ஆகிய இருவர் மீதும், கியூ பிரிவு போலீசார் சட்டவிரோத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டுவரவும், மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கியூ பிரிவு போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. ஜாகீர் உசேனுடன் சேர்ந்து, செயல்பட்டதாக இன்னொரு இலங்கை ஆசாமி சிவபாலன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சலீம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திட, கியூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானிக்கு கிடைத்த தூதரக பாதகாப்பு பாகிஸ்தானிகளுக்கு கிடைக்காதா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானிக்கு கிடைத்த தூதரக பாதகாப்பு பாகிஸ்தானிகளுக்கு கிடைக்காதா? :wub:

 

நல்ல, கேள்வி.

ஆனால் ஸ்ரீலங்கா என்ன.... அமெரிக்காவா?

 

அதுகும்... இந்தியா, அமெரிக்காவுடன், தேவயானிக்காக சண்டை பிடித்த மாதிரி....

ஒரு இலங்கை முஸ்லீமுக்காக சண்டை பிடிக்க திராணி.... இருக்கா?

 

இந்தியா இப்ப செய்ய வேண்டியது....

"ஒடுற நரியில... எந்த நரி, நல்ல நரி என்று... ஏறிக், குந்த வேண்டியது தான்"

வேறை... சான்ஸே.... இல்லை. பாவம்.

தேவயானிக்கு கிடைத்த தூதரக பாதகாப்பு பாகிஸ்தானிகளுக்கு கிடைக்காதா? :wub:

 

சாதாரண குற்றங்கள் என்றால் நாடுகடத்த முடியும்...இதுக்கு எப்படி என்று தெரியவில்லை....இது போய் செய்தியோவும் தெரியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.