Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு27 இடங்கள்: Exit Poll

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், தமிழகத்தில் அதிமுகவுக்கு 27 இடங்களும் கிடைக்கும் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ( Exit poll ) தெரியவந்துள்ளது.

C Voter என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சிக்கு தனியாக 249 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 78 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள் 153 இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நகர்புறத்து வாக்காளர்களின் கவனத்தை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. முன்னிலை

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு 27 இடங்களும், திமுகவுக்கு 6 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்குjaya%204a%2810%29.jpg ஒரு இடமும், பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 2, தேமுதிக மற்றும் பாமகவுக்கு தலா 1 இடமும், மதிமுகவுக்கு 1 இடமும் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் உடன்பாடில்லை: காங்கிரஸ் - திமுக

இதனிடையே இந்த கருத்துக்கணிப்பில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், கடந்த காலங்களில் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போன உதாரணங்கள் உள்ளதாகவும், மே 16 ஆம் தேதியன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரியவந்துவிடும் என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

கேரளா

கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

பீகார்

பீகார் மாநிலத்தில், பாஜ.க.-24, ஆர்.ஜெ.டி.-9, லோக் ஜன் சக்தி-3, ஐக்கிய ஜனதாதளம்-2, கங்கிரஸ் கட்சி-1 இடத்தை பிடிக்கும்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா

கேரள மாநிலத்தில், காங்கிரஸ்-13, பா.ஜ.க.-0, இடதுசாரிகள்-4, முஸ்லீம் லீக்-2, கேரள காங்கிரஸ்-1 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.-54, சமாஜ்வாதி-11, காங்கிரஸ்-7, பகுஜன் சமாஜ்வாதி கட்சி -8 இடங்களை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க.-31, காங்கிரஸ்-14, ஆம் ஆத்மி-1, மற்றவை-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் 42 தொகுதிகளில் பா.ஜ.க.-12, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-14, காங்கிரஸ் கூட்டணி-8, டி.ஆர்.எஸ்.-8 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்-27, காங்கிரஸ்-4, இடதுசாரிகள்-9, பா.ஜ.க.-2 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.

Modi%20150%2864%29.jpgடெல்லி

டெல்லியில் உள்ள மொத்தம் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

மோடி பிரதமர்

மேற்கூறிய கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்பட்சத்தில் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதியாகும். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27845

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கணிப்பு பிழை. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு இடமும் பெறாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.