Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழுநீளத் திரைப்படம்

Featured Replies

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. படத்தின் முக்கால்வாசி இந்தியாவிலேயே செய்யப்பட்டால் மட்டும் தமிழீழத் திரைப்படமா??????????????

  • Replies 113
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து தமிழீழத்தில் வெளிவந்த அதாவது சிறிலங்கா அரசின் அல்லது அரச கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி வெளிவராத அதே நேரம் வீடியோ திரைப்படம் அல்லாத ஒரு திரைப்படம் சொல்லுங்கோ..

பதில் Please

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தின் முக்கால்வாசி இந்தியாவிலேயே செய்யப்பட்டால் மட்டும் தமிழீழத் திரைப்படமா??????????????

இது தவறாக இருந்தால் என்ன செய்வதாக உத்தேசம்..

மேலே கொடுக்கப்பட்ட தலைப்பிற்கும் நீங்கள் தரும் தகவல்களுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?? சரி நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டாலும் முக்கால்வாசி இந்தியக்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஒரு திரைப்படைத்தை தமிழீழத்திரைப்படம் என்று உரிமை கொண்டாடுவதில் என்ன பெருமையுண்டு???

இதற்கு உங்கள் பொன்னான பதிலைத் தருவீர்களா???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம். இது தமிழீழ - தமிழக கூட்டுத்தயாரிப்பு.

ஆனால் இதற்கு முன் வந்த தமிழீழ படங்களை தாருங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தயாரிப்பாளர் ஒருவர் இந்திய இயக்குனருக்கு சம்பளம் குடுத்து படத்தை எடுத்திருக்கிறார். தெனாலி கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் இருந்த வியாபார நோக்கு இதில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் இயக்குநர் ஜோன் றோசான் (38) சென்னையில் பின்வருமாறு கூறினார், «இப்படம் முழுமையான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஆவணப்படமல்ல. இதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருக்கிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பகள் இலங்கைக் கிராமங்களிலேயே மேற்கொள்ளபட்டுள்ளன. மதுமிதாவும் நந்தாவும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஐரோப்பாவில் வசிக்கும் தொலைக்காட்சி இணையத்தை நடாத்தும் இலங்கைத்தமிழரான பிரபாகரனின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இப்படத்தை இயக்கிய அனுபவம் சுவாரிசியமானது. எனக்கு ஆரம்பத்தில் இலங்கை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. இவர் வழங்கிய ஏராளமான நூல்களைப்(கதைகள் - கட்டுரைகள்) படித்தே அறிந்து கொண்டேன். இப்படத்தின் வெளியீட்டுக்கான பிரித்தானிய உரிமம் கிடைத்துவிட்டது. சுவிஸில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் உலகமெங்கிலும் உள்ள இரசிகர்களை மையப்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்படம் பெறும்

http://koluvithaluvi.blogspot.com/2006/09/...og-post_15.html

இதில் சில விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பருக்கு

இதன் பெரும்பாலான படப்பிடிப்பகள் இலங்கைக் கிராமங்களிலேயே மேற்கொள்ளபட்டுள்ளன.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோபாசக்தியின் தம்பி விமர்சனத்தை இங்குப் பொருத்த முடியாது.

தம்பி திரைப்படத்துக்கும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் ஒரு துளிகூடச் சம்பந்தமில்லை; அதன் இயக்குநர் ஈழத்தமிழர் ஆதரவாளர் என்பதையும் தொலைக்காட்சிப் பேட்டியின்போது தேசியத்தலைவரின் படம் பொறித்த 'T shirt" போட்டிருந்ததையும் தவிர.

ஆனால் சில ஊடங்கள் வேறுமாதிரியான தோற்றத்தைக் கட்டமைத்திருந்தன.

ஆனால் ஆணிவேரில் ஈழப்பிரச்சினை காட்டப்படுகிறது. அந்த மக்களைப் பற்றிய கதைதான் வருகிறது. அது எப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்பதைத் திரையில் முழுமையாகப் பார்த்தபின்தான் முடிவு சொல்லலாம்.

ஆனால் 'தம்பி'க்குப் பின்னாலிருந்த அளவுக்கு இப்படத்தின் பின்னணியில் வியாபார நோக்கம், மலிவுப் பிரபல்யம் இருக்காது என்று நம்பலாம்.

படம் பற்றிய முழு விவரங்கள் இனிமேற்றான் வருமென்று நினைக்கிறேன்.

காட்சிகள் எங்குப் படமாக்கப்பட்டன என்ற தகவலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அசலானவை என்பது தெரிகிறது. (இன்னும் தமிழகத் திரைப்படம் இந்தக் கட்டத்துக்கு வரவேயில்லை; அண்மையில் வந்த 'அரண்' படத்தைத்தவிர. அதுகூட இராணுவ மேஜர் ஒருவர் இயக்குநர் என்பதால்).

முன்னோடடத்தில் ஒரு காட்சியில் வன்னியின் ஒட்டங்குளப் பாலம் போலத் தெரிகிறது. படத்தில் வேறு கோணத்தில் வந்தால்தான் உறுதிபடச் சொல்லலாம்.

என்கருத்துப்படி இதுவொரு கூட்டுத்தயாரிப்பு என்பதே நன்று.

காவடி

நீங்கள் முன்பு நான் எழுதியது போல் ஒரு பிழையை மறைக்க மேலும் மேலும் பிழையான தகவல்களைத் தந்து சமாளிக்கப் பார்க்கின்றீர்கள். ஒரு திரைப்படம் இலங்கை அரசின் தணிக்கைச் சான்றிதழ் பெறாமல் வெளிவருகின்றது என்று பிதற்றிக் கொள்வதில் என்ன பயன். இந்தத் திரைப்படத்தை பகிரங்கமாக அரசகட்டுப்பாட்டுப்பகுதியில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம ஆக்களுக்கள்ள பெரிய பிரச்சனை

எதையும் நான்தான் முதலில் செய்தது என்று சொல்றது.

ஆம். இது தமிழீழ - தமிழக கூட்டுத்தயாரிப்பு.

இதை முந்தி சொன்னது நான் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தின் இயக்குனரே இலங்கை அரசின் அனுமதி பெற்றுத்தான் இலங்கையில் காட்சிகளை எடுத்துள்ளார்.

எங்கேயிருந்தய்யா இந்த தகவல்களை பெற்றீர்கள்..

இந்தப்படம் வன்னியில் எடுக்கப்பட்ட போது இது குறித்த செய்திகள் எதுவும் வெளிவராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இந்த பட தொடக்க நாளன்று பாரதிராசா மற்றும் மகேந்திரன் ஆகியோர் அங்கு நின்றனர். தமிழீழத்தின் முதல் நீளத்திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் தமிழ்ச்செல்வன் கமெரா முன்பாக நீன்று பாக்கின்ற ஒரு படமும் இலங்கைப் பத்திரிகைகளிலும் வெளியானது. அவ்வளவும் தான். அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.

தினக்குரலில் வன்னிப்பகுதியில் ஒரு திரைப்படம் எடுப்பதாகவும் அதன் தொடக்க விழாவில் தமிழக இயக்குனர்கள் கலந்து கொண்டதாகவும் அது பற்றி தொடர்ந்து எழுதுவதாகவும் ஒருமுறை ஒரு கட்டுரை வெளிவந்தது. அக்கட்டுரை யில் தமிழக நடிகர்கள் என்று மட்டுமே வந்தது. ஆயினும் தொடர்ந்து அந்த கட்டுரை வெளிவரவில்லை. இவை யாவும் 2005 நடுப்பகுதியில் நடந்தன.

புலிகளின் பகுதிகளில் திரைப்படமெடுக்க அரசாங்கம் அனுமதி குடுத்து அனுப்புகிறதாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்புக்களில் சில படங்கள் உள்ளன

http://www.tvttn.co.uk/Raj

http://www.britishtamil.com/aanivaer/

இந்த இணைப்புக்களில் சில படங்கள் உள்ளன

http://www.tvttn.co.uk/Rajhttp://www.britishtamil.com/aanivaer/

இணைப்புக்கு நன்றி காவடி......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் வம்பு உமக்கேன் குறுகுறுக்கிறது என்று தெரியும். யாரோ ஓருவர் ஈழத்தமிழர் வரலாற்றில் முதல் முழு நீளத்திரைப்படம் என்றால் அதைத் து}க்கி பிடித்துக் கொண்டு அலையிறிர். பன்னாடை மாதிரி கஞ்சல்களை தக்கவைக்காமல் படத்தைப்பற்றி கதையும்!

தமிழ்ஈழ நிர்வாகத்துக்கு உடபட்ட பகுதியிலிருந்து பல குறும்படங்கள் வெளிவந்தன.. இதுதான் முதல் முதல் நீளப்படம். அவ்வளவுதான். இதை விளங்கிறதுக்கு பண்டிதராய் இருக்கவேணும் எண்டில்லை .. பன்னாடையாய் இருக்காட்டிச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தொற்றுவியாதி போலக் கிடக்கு. நமக்கும் வராமல் இருக்க தள்ளி இருப்போம். :arrow:

''ஆணிவேர்''

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும் போரின் அவலங்களையும் சொல்கிறது.

இது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர் சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின் மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம் இது.

தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில் உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.

தனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார். இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம் பிடிக்கிறார்.

அப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர் வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.

அந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போது தமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன் தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.

இந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால், அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.

அப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.

மனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய் காட்டப்பட்டுள்ளனவாம்.

பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழர்கள் படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.

ஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கிய அம்சம்.

படத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ls/Aaniver.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழப்பதிந்திருக்கிறது ஆணிவேர்

ஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் பிறப்பெடுத்த நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா? மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப்படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா? என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து நிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.

தமிழ்த்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. திரைப்படத்தின் தலைப்பு “ஆணி வேர்”. குறித்துக் கொள்ளுங்கள் இது தமிழத்; திரைப்படத்துறையில் ஒரு பெரும் பாய்ச்சல்.

கடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ திரையரங்கில் இத்திரைப்படத்தின் பிரத்தியேக காட்சி, ஊடகவியலாளருக்கு காண்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க வன்னி பெருநிலப்பரப்பில் படமாக்கப்பட்டுள்ள இந்த முழுநீளத்திரைப்படத்தை “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தை கிள்ளாதே” போன்ற பிரபலமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர்; ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திரமேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.

இதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால்; மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும் பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.

பாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள்;, அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இடப்பெயர்வு காட்சிக்கு இருபத்திஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப்பட்டு அந்த நிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச்சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.

நடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் JOHN மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப்பட்டுள்ளபோதும் புலி என்ற சொல் ஒரிரு தடவைகள்தான் பாவிக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

கதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்த போதும்; இந்த திரைப்படத்தில புதுப்பிறப்பெடுத்துள்ளார்க

aaniver1pz9.jpg

ரெயிலர்கள் அருமையாக எம் இனத்தின் சோகங்களை கொண்டு இருக்கிறது இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் கண்ட கண்டதை எல்லாம் எடுத்து திரையிடும் அவுஸ்திரேலெயா விந்யோகஸ்தர்கள் இதையும் போடுவார்களா

ரெயிலர்கள் அருமையாக எம் இனத்தின் சோகங்களை கொண்டு இருக்கிறது இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் கண்ட கண்டதை எல்லாம் எடுத்து திரையிடும் அவுஸ்திரேலெயா விந்யோகஸ்தர்கள் இதையும் போடுவார்களா

இதை பற்றி தாங்கள் சுண்டல் அண்ணாட்ட தான் சொல்ல வேண்டும்

:wink: :wink:

இதை பற்றி தாங்கள் சுண்டல் அண்ணாட்ட தான் சொல்ல வேண்டும்

:wink: :wink:

ஏன் சுண்டல்தான் விநயோகிஸ்த்தரா அவர் சுண்டல் மட்டும் தான் விநயோகிப்பார் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 வருடத்தில் அம்மா நலமா, கனவுகள் நிஜமானால், தமிழச்சி ஆகிய 3 ஈழத்தமிழர்களின் படங்கள் மட்டுமே சிட்னியில் திரையிடப்பட்டுள்ளது. குறைவான மக்களே இப்படங்களினைப்பார்த்தார்கள

கடந்த 3 வருடத்தில் அம்மா நலமா, கனவுகள் நிஜமானால், தமிழச்சி ஆகிய 3 ஈழத்தமிழர்களின் படங்கள் மட்டுமே சிட்னியில் திரையிடப்பட்டுள்ளது. குறைவான மக்களே இப்படங்களினைப்பார்த்தார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.