Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்ட மக்களிற்கு அஞ்சலி செலுத்த கூட ஈபிடிபி தயார் இல்லையா - வட மாகாண சபையில் இன்று நடந்தவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்தில் ஈபிடிபியினர் நாள் தோறும் கொல்லப்பட்டனர். அதனால் வருடத்தின் 365 நாளும் துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டுமல்லவா எனக் கூறினார்; ஈபிடிபி சார்பு எதிர்கட்சித்தலைவர் தவராசா. ஆனால் அவர்களில் பலர் உள்வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களென கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் மற்றும் கஜதீபன் பதிலடி கொடுத்தனர்.

வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில்; ஆரம்பமாகிய வேளை சிவாஜிலிங்கம் தன்னால் எடுத்து வரப்பட்ட மெழுகுதிரிகளை அனைவரிடமும் வழங்கி தீபமேற்றி மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனையடுத்து கூட்டமைப்பு உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிஸை சேர்ந்த ரயீஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அத்துடன்  எதிர்க்கட்சித்தலைவர்  தவராசா பங்கெடுப்பதா இல்லையாவென்பது பற்றி முடிவெடுக்க முடியாது வெளியே வந்திருந்தார்.

ஆவ் அவ்அஞ்சலியின் பின் தொடர்ந்து வெளியே வந்த சிவாஜிலிங்கம் மக்களிற்கு அஞ்சலி செலுத்த கூட ஈபிடிபி தயார் இல்லையாவென கேள்வி எழுப்பினார். அவ்வேளை தனது விளக்கத்தை முன்வைத்த தவராசா முதலில் உங்கள் கட்சி உறுப்பினர்களில் கொலையானோருக்கு அஞ்சலி செலுத்துங்களென ஆலோசனையினை முன்வைத்தார். அவ்வாறாயின்  நீங்களும் வாருங்கள் மே18 இனை அனைவரிற்குமான நாளாக அனுஸ்டிப்போமென தெரிவித்தார்.

இதனால் சுதாகரித்துக்கொண்ட தவராசா தமது கட்சிக்காரர் கொல்லப்பட்டமை பற்றி கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார். எனினும் தவிசாளர் தலைமையில் பின்னர் நடந்த அஞ்சலி நிகழ்வினில் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107260/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட மக்களிற்கு அஞ்சலி செலுத்த கூட ஈபிடிபி தயார் இல்லையா?

ஓநாயை ஆட்டுக்காக அழ சொன்னால் அது கொன்பியூஸ் ஆகும் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் BBC இல் வந்த செய்தி:

இலங்கையின் வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால், முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அவை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, மெழுகுவர்த்திகளை ஏற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள், அந்த அஞ்சலி நிகழ்வை நடத்தியதாக மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மன்னார் மாவட்ட உறுப்பினரும் கலந்து கொண்டதாகவும், ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக அவையில் அமர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அந்த நிகழ்வின் போது அவைத் தலைவரும், முதல்வரும் அங்கு இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி BBC

இங்கே EPDP பற்றி கதைப்பதை விடுத்து முதல்வரும்,அவைத்தலைவரும் என்ன செய்தார்கள் என்று கேட்டால் யார் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.