Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலித் சகோதரிகள் பலாத்காரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படாயூன் (உ.பி):  உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசிடம் விளக்கம் கோரினார்.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் 7 பேர் வழக்கு பதிவு செய்தனர்.

2 காவலர்கள் பணி நீக்கம்

மேலும், அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்‌ஷாபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

3 வது குற்றவாளி கைது

இந்நிலையில் குற்றவாளிகள் 7 பேரில் சர்வேஸ் மற்றும் பப்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அவதேஷ் யாதவ் என்ற 3வது குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வழக்கை வாபஸ் பெறுமாறு தாக்குதல்

இதனிடையே, புகாரை வாபஸ் வாங்குமாறு குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, அச்சிறுமிகளின் தாயாரை வீடு புகுந்து தாக்கியதில் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.  இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனால் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதிrajnath%20singh%20%282%29.jpg ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.

 

விளக்கம் கேட்ட மத்திய அரசு

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நடந்த சம்பவம் குறித்து  அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து  உ.பி. அரசும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரேத பரிசோதனை அறிக்கை

இதனிடையை பிரேத பரிசோதனை அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28477

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2,w=985,c=0.bild.jpg

 

இந்த கொடூரசம்பவம் ஒருசில ஊடகங்களில் முக்கியசெய்தியாக இடம் பிடித்துள்ளது.

 

http://www.bild.de/news/ausland/vergewaltigung/indien-pervers-immer-wieder-vergewaltigungen-36192860.bild.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.