Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் எம்மைக் கவர்ந்த பதிவு / திரி

Featured Replies

 
யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான)   பதிவு / திரியினை  தவற விட்டுவிடுகிறோம்.  
 
சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும்.
நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை.
 
எனவே நாம் இந்த திரியில் , 
 
நாம் ரசித்துப் படித்த பதிவுகளை
 
உபயோகமான பதிவுகளை  
 
ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம்.
 உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம்.
 
 இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திரிகளுக்கும் செல்லாத என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். சில வேளைகளில் நல்ல கருத்தாடல்கள் உள்ள திரிகளைத் தவறவிடுபவர்களில் நானும் ஒருவன். தொடருங்கள் ஆதவன்

  • தொடங்கியவர்
இரண்டு யாழ்கள உறவுகள் எதிர்பாராத விதமாக ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். அவர்கள் தாம் சந்தித்த அனுபவத்தினை மிகவும் உணர்வுபூர்வமாக‌ கீழுள்ள திரியினில் பதிந்துள்ளார்கள் , வாசிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 
நீங்களும் அந்த நெகிழ்ச்சியான அனுபவத்தினை பெறுங்கள்.
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை உணர்வைப் பற்றியும், அதனால் எற்படும், ஆபத்து பற்றியும்... கிருபன் பதிந்த பதிவு பலரது கவனத்தை ஈர்க்காமல் இருந்துள்ளது.

 

நாம் புலம் பெயர்ந்த போது... எமது பெற்றொர் பெற்ற வேதனையை... அடுத்த தலை முறையினராகிய நாம் அனுபவிக்கும் நேரம் இது.
எமது பிள்ளைகள் கல்வி நிமித்தமாகவோ, வேலை கிடைத்ததோ... எம்மை விட்டுப் பிரியும் போது... ஏற்படும் தனிமை பலரை ஆட்கொண்டுள்ளதை அண்மையில் அறிய முடிந்தது.
 

அதிலிருந்து மீள இப்பதிவு நிச்சயம் உதவி புரியும் என நம்புவதால்... எனக்குப் பிடித்த பதிவு இது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=140875

  • 1 month later...
  • தொடங்கியவர்

எல்லோராலும் மதிக்கப்படும் திரு விவசாயி விக் அவர்களின் அற்புதமான பதிவொன்று. இந்தப் பதிவிற்கு சசி வர்ணம் எழுதிய பின்னூட்டம் இதோ.

 

விவசாயி விக், 
சத்தியமாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை !!
 
முதலில் நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், இன்னல்கள் வாசிக்க கண்கள் கலங்கியது. 
நான் இழந்த பள்ளி நண்பர்கள், அன்றாடம் பேசித்திரிந்த அயலவர்கள், பண்பும், பாசமும் கொண்ட  போராளிகள்...இப்படி பலபேர் என் கண் முன்னே தோன்றி மறைந்தார்கள்.  
 
உங்கள் எழுத்து திறன், மொழி ஆளுமை, கருப் பொருளை சொல்லிய விதம்.... அப்பாடா ...ஒவ்வொரு வரியும் வாசித்து உண்மையில் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறேன். 
 
பெரூவில் நீங்கள் சாமன் ஒருவர் மூலம் உணர்ந்தது "உங்களை நீங்களே அறிதல்"  என்ற உன்னத நிலை.
எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவது இல்லை. தேடுதல் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் யோகம் அது. 
எம் முன்னோர் தந்த நாடி சுத்தி, பிரணாயாமம், தியானம், மந்திர ஜெபங்கள் கூட "அயவாஸ்கா" போன்ற நிலையை அடைய உதவும்.  
 
நீங்கள் வாழ்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவத்தையும் நானும் ஆழமாய் சந்தித்து இருக்கிறேன். இலங்கையில் தமிழனாய் பிறந்த பாவத்திற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பட்ட அவஸ்தைகள் தான் எத்தனை, இழப்புகள் தான் எதனை. 
 
சகோதரரே,
உங்களை செம்மை படுத்தியது உங்கள் அனுபவம்,
உங்களை நேர்வழிப் படுத்தியது உங்கள் அனுபவம் 
உங்களை திடமானவனாகவும் திறமை உள்ளவனாகவும் மாற்றியதும் கூட உங்கள் அனுபவங்கள் தான்
உங்களை அமைதியானவனாகவும் இந்த அனுபவங்கள்  மாற்றி இருக்கக் கூடும்.
 
"யாழ் களத்தில் இதுவே உங்கள் கடைசிப் பதிவு" இது மட்டுமே எனக்குப் புரியவில்லை!!!
விடை தருவீர்களா?
 
 

விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142245

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
 
ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்
 
 
 
 
அலுவலகத்தில் ஒரு இள‌ம் மேனேஜரின் திறமயை விபரிக்கும் நல்லதொரு பதிவை அபராஜிதன் அவர்கள் இணைத்துள்ளார். 
 
இந்தப் பதிவுக்கு யாயினி பின்வருமாறு பின்னூட்டம் பதிந்திருந்தார்
 
"ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது..."
 
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சசி வர்ணம் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக சிறப்பான கவிதையொன்றினை பதிவு செய்துள்ளார்.

விமானத்தினுள் நடந்த நிகழ்வுகளை விவரித்த விதம்  நாம் நேரில் பார்ப்பது போல் இருந்தது. 
 
இக் கவிதை தொடர்பாக அர்ஜுன் தனது கருத்தினை பின்வருமாரு பதிகிறார்.
 
"சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் ."

 

மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142807

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

இக்கவிதை  தாயகத்தில் என் வீட்டின் ஏக்கங்களை உணரவைத்தது.

நன்றி கண்மனி அக்கா

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141903&p=1028776

  • 2 months later...
  • தொடங்கியவர்

ஜெர்மனியில் தமிழர்கள் நிகழ்வுகளை. நடத்துவதர்க்காக ஒரு மண்டபத்தை திறக்க இருக்கும் சபேசன் அண்ணாவை வாழ்த்துவோம்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/147013-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
20 மில்லியன் கனடிய டொலரை  லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற கனடா வாழ் ஈழத்தமிழர்.
 
 

http://www.yarl.com/forum3/index.php?/topic/145445-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A/page-28

 

நன்றி யாயினி 

  • 1 month later...
  • தொடங்கியவர்
 
கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 ஆக இன்னும் சில நாட்களில் புதுப்பிக்கப்படவுள்ளது. இப்புதுப்பிக்கப்படும் விதிமுறைகள் பற்றி யாழ் களத்தின் முன்னேற்றத்திற்கு என்றென்றும் துணைபுரியும் கள உறுப்பினர்களின் எண்ணப்பாட்டை அறிந்துகொள்ளும் முயற்சியாக இக் கருத்துக்கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
யாழ்க் கள உறவுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று சர்வதேச விருது ஒன்றிற்காக போட்டியிடுகிறது,நாமும் வாக்களித்து அந்நிறுவனத்தினை வெற்றியடையச் செய்வோம்.
 
மேலதிக விளக்கங்கள் இங்கே
அந்த நிறுவனத்துக்கு, வாக்களித்து விட்டேன்.
தற்போதைய.... வாக்கு நிலவரம்: 413
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ளது நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதவன்,
எதிர் பாராவிதமாய் இன்று தான் உங்கள் இந்தப் பதிவினை பார்க்க நேர்ந்தது.
தவறிய சில முத்துக்களை இங்கே பொருக்கவும் முடிந்தது...
இங்கே  நான் எழுதியிருந்த கவிதை, மற்றும் ஒரு கருத்தை இணைத்து இருந்தீர்கள்.
பரவசம், நெகிழ்ச்சி இரண்டும் கலந்த உணர்வுடன் உங்களுக்கு நன்றியை தெரிவிகின்றேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக என் நினைவுக்கு வந்த ஒரு கவிதை ...

அஞ்சரன் எழுதியிருந்தார்
கவிதையில் வரும் எம் மண் சார்ந்த அடையாள உருவகங்கள் மிகவும் அருமை...
 

http://www.yarl.com/forum3/index.php?/topic/143454-இலக்கை-நோக்கி-நடந்த-வேளை/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
நல்லதோர் வீணை செய்வோம்!
 
கள உறவு ஜஸ்டின் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கான திரி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இத்திரியை ஆரம்பித்ததற்கான காரணத்தினை திரு ஜஸ்டின் பின் வருமாறு கூறுகிரார்.
 
"கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (நான் வைத்தியரும் அல்ல!). ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபணமான தகவல்கள் மட்டுமே பகிரப் படும். ஓரிரு நாட்களில் தொடர்வேன்."
 
இப்போது அவர் கொலஸ்ட்ரோலைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதி வருகிறார்........., திரியின் தலைப்பு மிகவும் அருமை. 
 
மிக்க நன்றி ஜஸ்ரின் இப்படியொரு சிறந்த பதிவைத் தொடர்ந்து தருவதற்கு.
 
 
பதிவுக்குச் செல்ல
 
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
எண்ணை கலந்த யாழ்ப்பானம் நீர் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம்..? ஒரு பகிர்வு
 
தற்போது தமிழர்களை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய பிரச்சனையான சுன்னாகம் எண்ணைக் கிணறுகள் தொடர்பில் நாம் அணைவரும் ஒன்றிணைந்து போராடா வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
 
கள உறவு உதயம் இதற்கென ஒரு திரி திறந்து மிகசிறந்த  கருத்துப் பரிமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
 
இந்தத் திரியில் தமிழறிவு அவர்கள் தாயகத்திலிருந்து எண்ணைக் கிணறுகள் தொடர்பில் தனது நேரடி அனுபவத்தினை பதிந்துள்ளார். அவரது பதிவு  நாம் எமது போராட்டத்தினை இன்னும் தீவிரப்படுத்தி , விரைவு படுத்த வேண்டிய அவசியத்தினை உணர்த்தி நிக்கின்றது
 
திரிக்குச் செல்ல
 
 
 
  • 3 months later...
  • தொடங்கியவர்
தாயகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசன்ரேசன் தயாரிப்பு.

 

 

எமது தாயக மக்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்காக ஆரம்ம்பிக்கப் பட்டுள்ள திரி. தயவு செய்து அணைவரும் உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி எமது இளையோரை மீட்டெடுத்து பாதுகாக்க வாருங்கள்

 

இத்திரியை ஆரம்பித்துவைத்த நெடுக்கால்போவானுக்கு பெரு நன்றிகள்

 

இத்திரி தொடர்பாக நெடுக்கால்போவான் பின் வருமாறு கூறுகிறார்

 

யாழ் இணையம் சார்ப்பாக.. யாழ் இணைய கள உறவுகளின் ஒருமித்த கருத்தியல் அடிப்படையில்.. தமிழர் தாயகத்தில் ஏவிவிடப்பட்டுள்ள.. மாணவ சமூகத்தையும் இளைய சமூகத்தையும் சீரழிக்கவல்ல.. போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்பூட்டல் பிரசன்ரேசன் ஆன்லைனில் தயாரிப்பதற்கான முன்னெடுப்பாக இத்தலைப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

 

திரிக்குச் செல்ல

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/158445-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/

 

தொடர்புடைய மேலுமொரு திரி

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/158387-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/#entry1114714

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.