Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதூர் நாகதம்பிரான் ஆலய தூபியில் இருந்து சொட்டும் நீர்! - கோடையில் வியப்பான சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதூர் நாகதம்பிரான் ஆலய தூபியில் இருந்து சொட்டும் நீர்! - கோடையில் வியப்பான சம்பவம். Top News 
[sunday, 2014-06-15 18:52:14]
nahathmpiran-water-150614-150.jpg
புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வசந்த மண்டபத்தின் மேற்பகுதியிலிருந்து, நீர் வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக வசந்த மண்டபத்தின் மேற்பகுதியில் நாக சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு கீழாக ஒரு வகை நீர் சொட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது அங்கு பக்தர்கள் அதிகளவில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந் நிலையில் இப் பகுதியில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை இந் நீர் சொட்டும் பகுதியில் வெள்ளை நிறத்தில் மா தன்மையான ஒரு பொருள் காணப்படுவதோடு நீர் கீழே விழும் இடம் வெண்ணிறமாக மாறி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நீர் வழிந்து செல்லும்போது வர்ணம் பூசப்பட்ட பகுதிகளில் வர்ணம் அழிந்து செல்கிறது. எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இடம்பெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
மிகவும் வெப்பமான காலநிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் வசந்த மண்டபத்தின் மேற்பகுதியிலிருந்து இவ்வாறு நீர் சொட்டுவதானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆலயத்தின் பரிபாலனசபையின் தலைவர் க.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
nahathmpiran-water-150614-seithy%20(3).j
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் 'ஜெனிலான்' குகைக் கோவில்களின் கூரையிலிருந்து சிந்தும் நீர்....!

 

அதிசயம்...ஆனால் உண்மை! :D

 

4927ee1e.jpg

 

ஆற்றையாவது தலையில விழுகிறதுக்கு முன்னர் கோவில் கூரையைத் திருத்தினால், நாகதம்பிரானுக்குப் புண்ணியமாய்ப் போகும்!

குகைக்குள் கற்பாறைகளின் இடுக்குகளுள் (குகையின் கூரை) உள்ள நீர் வருகிறது எனலாம்...

 

கோயிலின் கூரையினுள் எப்படி? A/C ஏதாவது...அல்லது  மழை நீர் தேங்கி வடிகிறதா? ஆனால் படிவை பார்த்தால் அந்த சீமெந்துகூரை நீரை உறிஞ்சி பின் விடுவது (நீர்த்தொட்டிகளில் நடப்பது போல்) உள்ளது.......

  • கருத்துக்கள உறவுகள்

குகைக்குள் கற்பாறைகளின் இடுக்குகளுள் (குகையின் கூரை) உள்ள நீர் வருகிறது எனலாம்...

 

கோயிலின் கூரையினுள் எப்படி? A/C ஏதாவது...அல்லது  மழை நீர் தேங்கி வடிகிறதா? ஆனால் படிவை பார்த்தால் அந்த சீமெந்துகூரை நீரை உறிஞ்சி பின் விடுவது (நீர்த்தொட்டிகளில் நடப்பது போல்) உள்ளது.......

யாழ் மாவட்டத்தின் நிலப்பரப்பின் கீழ் சுண்ணாம்புப் பாறைகள் உள்ளன! சுண்ணாம்புக் கற்களுக்குள் மழைநீர் புகும்போது, அது காபனிக் அமிலமாக மாறி,சுண்ணாம்புப் பாறைகளைக் கரைக்கும்! அப்போது சிந்தும் நீரே, வசந்தமண்டபத்தின் கூரையிலிருந்து துளித் துளியாகச் சிந்துகின்றது! அந்த 'ஒப்புவமையைக்' காட்டுவதற்காகவே 'ஜெனலோன் குகைகளின்' படத்தை இணைத்தேன்! கருங்கற்களை உபயோகிக்கும் போது, இந்த மாதிரியான 'அதிசயங்கள்' ஏற்படும் வாய்ப்புக்கள் இல்லை! இந்தச் சுண்ணாம்பு அம்புகள், யாரும் பக்கதர்களின் தலைகளில் விழுந்து, காயப்படுத்தும் ஆபத்தும் இங்கு உள்ளது!

நன்றி உங்களது விளக்கத்துக்கு....இவ்வளவு நாளும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த பிரச்னை...நீங்கள் தீர்த்து வைத்ததற்கு...

 

இந்த கபோனிக் அமிலமும், சீமேந்தில் உள்ள காரமும் சேர்ந்து உப்பாக வெளிவருகிறதா? ஆனால் "சுண்ணாம்பு"க்கல் காரமே? (சிலவேளை தண்ணீரில் இருக்கும் அமிலத்தன்மை காரணாமாக இப்படி நடக்கிறதோ)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்களது விளக்கத்துக்கு....இவ்வளவு நாளும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த பிரச்னை...நீங்கள் தீர்த்து வைத்ததற்கு...

 

இந்த கபோனிக் அமிலமும், சீமேந்தில் உள்ள காரமும் சேர்ந்து உப்பாக வெளிவருகிறதா? ஆனால் "சுண்ணாம்பு"க்கல் காரமே? (சிலவேளை தண்ணீரில் இருக்கும் அமிலத்தன்மை காரணாமாக இப்படி நடக்கிறதோ)

வெளியே வருவது உப்பு அல்ல!

 

அது சுண்ணாம்புக்கல் மற்றைய கனிமங்கள் கலப்பதால், உருவாகும் பளிங்கு வடிவம் என எண்ணுகின்றேன்!

 

jenolan-caves-9380192.jpg

மேலுள்ள படத்தில் காணப்படுவது, இப்படியான குகைகளுக்குள் ஓடுகின்ற ஒரு ஆறு!

 

இந்த நீரின் சுவை, அருமை!

 

நிலாவரைக்கிணறு, இப்படியான நிலங் கீழ் ஆற்றுக்கு நல்ல உதாரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

இது மெக்சிக்கோவில்..

 

Naica_08.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள விளக்கம் புங்கை. இன்று புதிதாய் ஒன்றை தெரிந்து கொண்டேன். நன்றி.

கோவில யாராவது திருத்துங்கப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.