Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகனசபை உறுப்பினர்களே! வடமாகன முதலமைச்சர் அவர்களே !

Featured Replies

வடமாகனசபை உறுப்பினர்களே! வடமாகன முதலமைச்சர் அவர்களே !

வடமாகனசபை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது வடமாகான மக்கள் முதலமைச்சர் என்ற அதிகாரத்தினையும் மாகானசபை உறுப்பினர்கள் என்ற பதவிகளையும் உங்களிற்கு கொடுத்த நாட்கள் முதல் இன்று வரைக்கும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

சிங்கள தேசத்திடம் எழுதிக்கொடுக்கப்படாத அடிமை சாசனம் கிழித்து எறியப்படுமா என்ற ஏக்கத்துடனும். இதுவரைகாலமும் நாங்கள் பட்ட அவலங்கள் இனி எமது பிள்ளைகளுக்கு நிகழ்ந்துவிடாது என்ற சிறு நம்பிக்கையுடனும் நாட்கள் நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

ஆனால் வடமாகான முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் உள்ள சீ. வீ விக்கினேஸ்வரன் மத்திய அரசு எமக்கு தடைகள் போடுகின்றது என்றும் மாகணசபைக்குரிய அதிகாரங்களை கொடுக்க மறுக்கின்றது என்றும் ஒலிவாங்கிகளை காணும் இடங்களில் எல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றார்.

ஆனால் தமக்குரிய அதிகாரம் என்ன என்பதை மறந்துவிட்டாரோ? என்ற ஒரு சிறிய சந்தேகம் எழுகின்றது. காரணம் அதிகாரம் என்பது தங்கத்தட்டில் வைத்து கொடுக்கப்படுவதல்ல. தமக்குரிய அதிகாரத்தினை தாமே எடுத்துக்கொள்ளத்தவறிவிட்டு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என்று எடுத்துக்காட்டுக்களைக் கூறிக்கொள்வதை நீண்ட நாட்களுக்கு தமிழ்மக்கள் விரும்பப்போவதில்லை.

எனவே முதலமைச்சர் என்ற அதிகாரத்தினை தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிற்கு கொடுத்துள்ளோம் எனவே முதலமைச்சருக்குரிய அதிகாரத்தினை எடுத்துக்கொள்ளவேண்டியவர் நீங்கள் மாத்திரமே அன்றி தமிழ் மக்கள் அல்ல ஈழத்தீவில் விழுதுகள் விட்டு அகலக்கிளை பரப்பி நிற்கும் அரசபயங்கரவாதத்தினையும் சிங்களப்பேரிவாதத்தினையும் அடியோடு அழிக்கவேண்டுமானால் முதலில் ஈழத்தீவுமுழுவதிலும் உள்ள பேரினவாத விழுதுகளை ஒவ்வொன்றாக அறுத்து அதன் பிற்பாடுதான் ஆணிவேரிலே கைவைக்கவேண்டும் அதுதான் நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று. ஆனால் ஆட்சிபீடம் ஏறிய உடனேயே ஆளுநரை மாற்று, அதிகாரத்தினைகொடு என்று சீறிய முதலமச்சர் உற்பட அனைத்து மாகான சபை உறுப்பினரும் காலப்போக்கில் வலு இழந்த மின்கலங்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் சிங்களப்பேரினவாதமோ தமிழின அழிப்புக்கான அனைத்து யுத்திகளையும் மிக மிக துல்லியமாக நாளுக்கு நாள் செயற்படுத்திக்கொண்டே வருகின்றது.

இதனை முதலமைச்சரோ, மாகனசபை அமைச்சர்களோ, மாகனசபை உறுப்பினர்களோ யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எடுத்துக்காட்டாக இன்று கலசார சீர்கேடு, பாலியல் குற்றங்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைத்துக்கொண்டிருக்கும் யாருமே அதனை தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒரு காத்திரமான விடயங்களையும் முன்னெடுக்கவில்லை. கலாசாரம், பன்பாடு, ஒழுக்கம் என்பது எல்லாமே பாடசாலைகளில் இருந்துதான் தேதற்றம் பெறுகின்றது. ஆனால் வடமாகான சபையே உனது எல்லைக்கு உற்பட்ட எத்தனை பாடசாலைகள் அதனை கடைப்பிடிக்கின்றன என்பதை அறிந்துகொள். அறிவுறுத்து. மத்திய அரசாங்கம் தடை போட்டுக்கொண்டிருக்கின்றதா? இன்று எத்தனை பாடசாலையின் சீருடைகள் கவர்ச்சி உடைகளாக மாறியுள்ளது என்பதனை நீ ஏன் இன்னமும் அறிந்துகொள்ளவில்லை. எத்தனையோ பிரேரனைகளை நிறைவேற்றினாய் ஆனால் அதில் எத்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. வடமாகாணத்தில் உள்ள ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் அணியும் சீருடைனனது சினிமா நடிகர்கள் போன்ற தோற்றப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

இன்னும் மிக வேதனையான விடயம் ஒரு சில பாடசாலைகளிலே மாணவிகள் தொடைக்கும் மேலான உள் ஆடை தெரியும் அளவு ஒரு குட்டையான பாவாடையினை அணிந்து வீதியோரமாக நின்று எந்தக்கவலையும் இன்றி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். இது இதுவரைக்கும் ஈழத்தமிழிச்சிகள் என்ற பெருமைக்குரிய எம் பெண்ணினம் வீடுகளில் தமது சகோதரர்களுக்கு முன்னால் கூட அணிந்துகொள்ளாத ஒரு கேவலமான உடையினை அணிந்துகொள்ள அனுமதித்த பாடசாலைகளுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் எதிராக வடமாகன சபை நடவடிக்கை எடுக்குமா? முதலமைச்சர் ஐயா விக்கினேஸ்வரன் அவர்களோ கலலசார சீர்கேடுபற்றி பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் இனியேனும் இதனை கருத்தில் கொண்டு வடமாகன சபைக்கு உற்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இதனை அறிவுறுத்துங்கள் பாடசாலைகளிலே இவ்வாறன கவர்சி உடைகள் அணியும் பெண்கள் நாளை பாடசாலை விட்டு வெளியேறியபின்னே எவ்வாறான உடைகளை அணிவார்கள் தமிழிச்சிகள் என்ற பெருமையினை எவ்வாறு நிலைநாட்டுவார்கள் செம்மொழியான தமிழ்மொழி என்றும் திட்டமிட்டே தமிழ்மொழி அழிக்கப்படுகின்றது என்றும் பேசிக்கொள்ளும் எல்லோருமே வெறும் மேடைப்பேச்சாளர்கள் மட்டும்தானா ஈழத்தீவில் இன அழிப்புடனே மொழி அழிப்பும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.

எங்களுக்கு என்று ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு அற்ற காலங்களில் நாங்கள் ஏக்கத்துடன் இருந்தோம் ஆனால் இப்போது வடமாகானத்துக்கென்று கல்வி அமைச்சராக ஐயா குருகுல ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் கல்வியமைச்சர் என்பது வெறும் பேச்சளவில்தானா என்ற சந்தேகம் எழுகின்றது. காரணம் இன்று தமிழ் மானவர்களிற்கான பாடநூல்கள் அனைத்திலுமே எழுத்துப்பிளைகள் இது எழுத்துப்பிழை என்பதைவிட மொழிக்கொலைகள் என்றே கூறலாம். ஆனால் வடமாகன கல்வியமைச்சு ஒருவருடமாகியும் இதனை ஏன் இன்னமும் கண்டுகொள்ளவில்லை. இதற்கான கண்டனத்தினையோ அல்லது அறிவுறுத்தலையோ இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அறிவியலுக்கும் ஆண்மீகத்திற்கும் ஓவாத மூட நம்பிக்கையான கதைகள் பாடசாலை நூல்களிலேயே தமிழ் மாணவர்களுக்கு போதிக்கவேண்டிய அவசியம் என்ன? தமிழ்ப்போராளிகளை மட்டுமல்லாது தமிழர்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கவேண்டிய அவசியம் இன்றய ஆட்சிபீடத்திற்கு. மொழியையும் மொழி ஆற்றலையும் வளர்கவேண்டிய பாடசாலை நூல்களிலேயே எழுத்துப்பிழைகள் என்றால் அதை எவ்வாறு அனுமதிக்க முடியும்.

அதை கற்கும் மாணவர்கள் எவ்வாறு தமிழர்கள் என்ற தனித்துவத்தினை நாளை நிலைநாட்டுவார்கள் இதனை வடமாகன கல்வி அமைச்சு கவனத்தில் எடுக்குமா? வடமாகனத்தில் உள்ள எத்தனையோ தமிழ்ப்பாடசாலைகள் பிரதான நுழைவாசலில் தமிழில் உள்ள பாடசாலையின் பெயர்களை எல்லாம் அழித்துவிட்டு ஆங்கிலத்தில் பெயர்கள் எழுதிக்கொள்கின்றன. தமிழ்மொழியின் முக்கியத்துவத்தினை மறந்து பாடசாலைகளே செயற்பட்டால் அங்கே கல்விகற்கும் மாணவர்கள் தமிழ்மொழியின் முக்கியத்துவத்தினை எவ்வாறு அறிந்து கொள்ளுவார்கள் எனவே வடமாகனத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் முதலில் தமிழிலேயே தமதுபாடசாலையின் பெயர்களை எழுதவேண்டும் அதன் பின்பு வேறு மொழிகளில் எழுதவேண்டும் என்று ஒரு சட்டத்தினை உருவாக்குமா வடமாகனசபை இதற்கும் மத்திய அரசாங்கம் தடை போடுகின்றது என்ற பல்லவி இழுக்கப்படுமா?? ஈழத்தின் விடியலுக்காக பேராட புறப்பட்ட எத்தனை போராளிகள் கைகளை கால்களை இழந்து குருடர்களாகவும் முடவர்களாகவும் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் வடமாகான சபை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடங்கள் நெருங்கிவிட்டது ஆனால் இவர்களுக்கான காத்திரமான வாழ்வாதரத்திட்டத்தினை இன்னமும் மாகானசபை செயற்படுத்தியதாக தெரியவில்லை இதற்கெல்லாம் மத்திய அரசுதான் காரணமா? அதிகாரங்கள் தேவையா? என்று பல கேழ்விகள் எழுகின்றன.

பரந்துவாழும் எங்கள் தமிழினத்தின் ஒவ்வொரு டொலர்களும் யூரொக்களும் போதும். இவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இதையெல்லாம் விடுத்து வெற்றுப்பாத்திரமாக வட மாகானசபை இருப்பது ஏன் நீட்டிப்பிடித்தால் வந்து விழும் பவுஸ்சுகளும் டினார்களும் இதற்கெல்லாம் அதிகாரம் தேவையா? ஒரு சாதாரன தனி மனிதனாலேயே முடியும் இது ஏன் உங்களால் செயற்படுத்த முடியவில்லை எமக்கு அதிகாரத்தினை கொடுக்கவில்லை கொடுக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கும் முதலமைச்சர் அவர்களே!! எத்தனையோ இளையவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று கடந்த குறுகிய காலங்களுக்குள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள் அதையெல்லாம் பயங்கரவாதச்சட்டம் என்ற கொடிய அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு சற்று திரும்பிக்கொண்டால் கடந்த சில நாட்கள் முன்னே வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த இரு இளையர்கள் மீது சிறீலங்கா பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலே ஒருவர் பலியாக்கப்பட்டு மற்றவர் காயமடைந்து வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரைக்கும் உங்கள் கண்டணமோ அல்லது கருத்துக்களோ வெளிவரவில்லை.

முதலமைச்சருக்கான அதிகாரம் கொடுக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் எல்லைக்குள் உற்பட்ட ஓர் இடத்திலே ஒரு அப்பாவி இளையன் வண்டியை நிறுத்தாது சென்றான் என்ற சிறிய குற்றத்துக்காக சுட்டுக்கொல்லப்பட்டபோது ஏன் ஆத்திரப்படவில்லை. ஒரு நீதியரசராகிய நீங்கள் உங்கள் ஆட்சிக்கு உற்பட்ட அப்பாவி இளையனை சுட்டுக்கொன்ற காவல்துறைக்கொதிராக ஏன் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அதிகாரங்களை செலுத்தவேண்டிய இடத்தில் எல்லாம் அதிகாரம் செலுத்த தவறிவிட்டு மத்திய அரசை சாடிக்கொண்டிருப்பது முறையல்ல. அகலக்கிளை பரப்பிய பேரினவாதத்தின் விழுதுகளை ஒவ்வென்றாக அறுத்தெறிந்துகொண்டே இருக்கவேண்டியதுதான் காலத்தின் அவசியம் விழுதுகளை வெட்டி என்ன செய்வது ஆணிவேருடனே பிடுங்கி எடுப்போம் என்று காலத்தினை கடத்திக்கொண்டிருப்பது வேதனையானவிடயம். உங்களை முதலமைச்சராக அமரவைத்த மக்கள் ஏமாற்றமடைந்துகொண்டே இருப்பார்கள் வெறும் ஓட்டு இயந்திரங்களா நாங்கள் என்று வேதனைப்படுவார்கள். கண்ணீரும் ரத்தமும் மீண்டும் சூழ்ந்துகொள்ளும் தமிழினத்தை எனவே நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை செயற்படுத்துங்கள் மாகாணசபை உருப்பினர்கள் அனைவருமே ஒருமரத்தின் கிளைகளாக செயற்படுங்கள் வேற்றுமை என்ற பேதம் மறந்து ஒற்றுமை என்ற வேதம் ஓதுங்கள்.

நன்றி -  பதிவு இணையத்திற்காக ஆதி

 

http://www.pathivu.com/news/31703/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்குதனமான கட்டுரை. பெட்டயள் குட்டபாவாடை போடுறதை நிறுத்த சீவி என்ன முல்லா ஓமரா?

முதலில் மாகாணத்தை மாகனம் என்று எழுதுவதை நிறுத்துங்கள், பிறகு தமிழ் அழிவதை பற்றிப் பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுப் பிழை பிச்சப்பா எழுதின கட்டுரைபோல கிடக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.