Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா?

Featured Replies

ஈழப்பிரச்சினையும் தமிழக ஊடகங்களும் மாற்றத்துக்குக் காரணம் ஆட்சி மாற்றமா?

-பொ.ஐங்கரநேசன்-

ஈழப்போராட்டத்துக்குத் தமிழ்நாட்டு மக்களிடையே பெருகி வரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாற்றி வருகிறது ! பேராசிரியர் கு.அரசேந்திரன் (சென்னை கிறித்துவக் கல்லூரி)

தமிழ்த்தேசியக் கொள்கை பேசிய திராவிட இயக்கங்கள் இந்திய அரசியலில் கரைந்துபோன காரணத்தால் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்த முன்வரவில்லை. பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியுள்ள ஊடகங்களும் ஈழப்பிரச்சினையை இருட்டடிப்புச் செய்யவே விரும்புகின்றன. இந்த இரு நிலைகளையும் தாண்டித் தமிழீழ மக்களின் துன்பங்கள,விடுதலைப் போராட்ட வெடிப்புகள். தமிழ்நாட்டு ஊடகங்களில் சில பல நேரங்களில் வெளிவந்துவிடுகின்றன. இந்நிலைக்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை அரசியலுக்கு அப்பால் உறுதியாக முன்னெடுக்கின்ற தலைவர்களும் தொண்டர்களும் தான். இவர்கள் மக்களுடன்

சேர்ந்து வேலை செய்கின்றபோது ஊடகங்கள் எங்கே தங்களின் பொய்முகம் மக்கள் மத்தியில் முழுதாக வெளுத்துவிடுமோ என்ற அச்சத்தில் செய்திகளை வெளியிட்டு விடுகின்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் கிளிநொச்சியில் நடத்திய உலகப் பத்திரிகையாளர் மாநாட்டு நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தமிழ் நாட்டில் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் அப்பொழுது அந்த நிகழ்ச்சியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள். பெரும்பான்மையான மக்கள் தமிழீழப் போராட்டத்தின் பக்கமே இருக்கிறார்கள். ்தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் 'என்பார்களே, அதுபோல ஈழத்தமிழர்கள் படுகின்ற துன்பங்களில், பெறுகின்ற வெற்றிகளில் இவர்களும்

சொந்தம் கொண்டாடிக் கலந்து போகிறார்கள். இவர்களிடையே ஈழ ஆதரவுக்குரலை ஒலிக்கின்ற செய்தி ஏடுகளின் விற்பனை பெருகுவதைக் காணமுடிகிறது. பிரபாகரன் அவர்களைச் சந்தித்தது தொடர்பான இயக்குநர் மகேந்திரனின் நேர்காணலைத் தாங்கி வந்த குமுதம் இதழ் வெளியானவுடனேயே விற்றுத் தீர்ந்துவிட்டது. இந்த நிலையும் தமிழீழச் செய்திகளைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

ஸ்ரீலங்கா அரசு தருகின்ற தகவல்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த தமிழ் நாட்டு ஊடகங்கள் இன்று பெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல்வேறு இணையத் தளங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைவரங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுகின்றனர். இந்த நெருக்கடியும் தமிழீழத்தின் நடப்பினை ஊடகங்கள் ஓரளவுக்கு நடுநிலையுடன் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது.

தமிழீழம் என்பது தமிழ் நாட்டின் ஒரு உறுப்பாகவே தமிழக மக்கள் நெஞ்சில் இப்பொழுது பதிந்திருக்கிறது. அல்லைப்பிட்டிப் படுகொலைகளும், செஞ்சோலைப் பிஞ்சுகளைக் கொன்றொழித்த நிகழ்வும் அவர்கள் குடும்பத்தின் துயரங்களாகவே கனத்துத் தொங்குகின்றன. இந்திய

அரசாங்கம் சிங்கள அரசுக்குத் துணை போகுமேயானால் தமிழ் நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அதை எதிர்க்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த உணர்வலைகளுக்கு விரும்பியோ, விரும்பாமலோ ஊடகங்கள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தமிழீழப் போராட்டத்துக்கு தமிழ் நாட்டு மக்களிடையே பெருகிவரும் ஆதரவு தமிழ்நாட்டு ஊடகங்களையும் தவிர்க்க இயலாமல் ஆதரவு நிலைப்பாட்டுக்குத் தள்ளி வருகிறது.

ஈழத்தமிழர்களுக்காக இன்று எல்லாப் பத்திரிகைகளுமே கண்ணீர் வடித்தாலும் கண்ணீரின் நோக்கம் ஒன்றல்ல !

ஆர் .கோபால் ஆசிரியர் - நக்கீரன்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற போர் பற்றி, அங்கு தமிழர்கள் படுகின்ற அவலங்களைப் பற்றி, இராமேஸ்வரத்தில் கரையேறுகின்ற அகதிகளைப் பற்றி இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளுமே எழுதிக் கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்த, அவர்களது போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஏடுகள் கூட இவற்றில் அடக்கம். தங்களுடைய பழைய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு ஈ ழ ஆதரவு என்ற முகமூடியை மாட்டியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கின்ற ஆட்சிமாற்றம்தான்.

கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகைகளால் நிறைவாகச் சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் ஜெயலலிதாவினுடைய ஆட்சிக் காலத்தில் ஈழத்துக்குச்

சென்று பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய பாரதிராஜாவிடம் அதுபற்றி இப்போது ஆனந்தவிகடனால் பேட்டி காணமுடிகிறது. அவராலும் பிரபாகரன் அவர்களை எட்டாவது அதிசயம் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. அதேபோல இயக்குநர் மகேந்திரனாலும் குமுதத்தில் தன்னுடைய ஈழப்பயணம் பற்றி ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்யமுடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்க முன்னர், மே- 12, 2006க்கு முன்னர் இவற்றைப் பிரசுரித்திருந்தால் பாரதிராஜாவையும் மகேந்திரனையும் சிறையில்தான் பார்த்திருக்க முடியும்.

அதேசமயம், ஈழத்தமிழர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கின்ற பத்திரிகைகள் எல்லாவற்றினது நோக்கமும் ஒன்றல்ல. தமிழகத்தின் பத்திரிகைச் சூழலில் மேற்தட்டு கீழ்த்தட்டு என்று, வெளிப்படையாகச்

சொல்வதானால் பிராமணர்களது பத்திரிகைகள்- பிராமணர்கள் அல்லாதவர்களது பத்திரிகைள் என்று தெளிவான எல்லைகளைப் பார்க்க முடியும். இதில் பிராமணர்களது பத்திரிகைகள் இலங்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாக என்றுமே இருந்ததில்லை. ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சியை ராஜீவ் கொலையைக் காட்டி அடக்கவே முயன்று வந்திருக்கின்றன. ஆனால் இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? சொல்லு என்று கலைஞரின் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாகத் தலையங்கங்கள் தீட்டுகின்றன. இதில் ஈழத்தமிழர்களின் மீதான அனுதாபம் என்பதைவிட அவர்களின் அரசியல்தான் அதிகம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸுடன் கூட்டுவைத்துள்ளது. கூட்டணியில் முறிவை ஏற்படுத்தி ஜெயலலிதா அம்மையாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்தப் பத்திரிகைகள் விரும்புகின்றன. நெருக்குதல்களை ஏற்படுத்திக் கலைஞரின் வாயாலேயே ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்லவைத்துவிட்டால் இதனைச் சாதித்து விடலாம் என்று நினைக்கின்றன.

தமிழகத்தின் தேர்தல் அரசியல் ஒன்றுபட்டிருந்த ஈழ ஆதரவு அரசியல் சக்திகளைத் திசைக்கொன்றாகப் பிரித்து வைத்துள்ளது. பரபரப்புச் செய்திகளுக்காக பத்திரிகைகள் இந்தத் தலைவர்களது பேட்டிகளைப் பிரசுரித்து ஆளாளுக்கு சேறுபூசவைக்கும் கைங்கரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றன. இது வேதனையான ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு உதவுவது என்பது ஊர் கூடித் தேர் இழுக்கும் செயல். இதில் நக்கீரன் தன்னுடைய பொறுப்பை இது காலவரை சரியாகவே செய்து வந்திருக்கிறது. இனியும் செய்யும்.

தமிழகப் பத்திரிகைகளின் பார்வை அரசின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

தளவாய் சுந்தரம்(பத்திரிகையாளர், ஊடகவியல்ஆய்வாளர்) தமிழக மக்களும் தமிழகப் பத்திரிகைகளும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு நோக்குகின்றன என்பதை பார்க்கத் தொடங்கும் முன், தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டு பிராமணர், பிராமணரல்லாதார் அரசியலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பிராமணர், பிராமணரல்லாதார் அரசியல், சரியாகவோ அல்லது தவறாகவோ இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் இணைத்து தமிழகப் பிராமணர்களால் பார்க்கப்படுகிறது. பிராமணரல்லாதார் எழுச்சி, பெரியார் என்ற ஆளுமை, திராவிடர் கழகம் உருவானது, திராவிட முன்னேற்றக் கழகமும் அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சியைக் கைப்பற்றி தமிழகத்தில் செய்துவரும் மாற்றங்கள், இடஒதுக்கீடு அமுல் செய்யப்பட்டது என்று கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் அனைத்தையும் பிராமணர்கள் தங்கள் வாழ்வுரிமைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன்பு எழுத்தாளர் அசோகமித்திரன், அவுட்லுக் ஆங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் வாழும் பிராமணர்கள், ஹிட்லரின் கீழே வாழ்ந்த யூதர்கள் போல்தான் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இது அசோகமித்திரன் என்ற தனி ஒருவரின் குரல் மட்டுமல்ல. பெரும்பான்மை தமிழகப் பிராமணர்களின் குரலும் இதுதான்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ் உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் தமிழகப் பிராமணர்கள் அணுகுகிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைவது மீண்டும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழச் செய்யும் என்பது அவர்கள் எண்ணம். அப்படி நிகழ வாய்ப்பில்லை என்பதும், இது தேவையில்லாத அச்சம் என்பதும் ஒருபுறமிருக்க தேசியப் பார்வையுடைய பிராமணரல்லாதவர்களுக்கும் இந்த எண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பின்னணி இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த தமிழக பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கிடைத்த ஸ்கூப் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தினமலர் நாளேடு மகிழ்ச்சியடைந்ததும், அது தவறான செய்தி என்று அதற்குப் பிறகு உறுதியான பின்னர் இன்றைக்கு வரைக்கும் அச்செய்திக்கு மறுப்பு வெளியிடாததும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முடிவில், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது பிரபல வார இதழ் ஒன்றில் எழுதப்பட்ட தலையங்கமும் இங்கே கவனிக்க வேண்டியது. தண்டனை நிறைவேற்றப்படும் போது, தூக்குக் கயிறு கழுத்தை முறிக்கும் சத்தம் கேட்டு ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்னும் அர்த்தம் தொனிக்கும் வகையில் அந்த தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. அது பிராமணரல்லாத ஒரு முதலாளியால் நடத்தப்படும் பத்திரிகையில் வெளியானது என்றாலும் பத்திரிகையின் ஆசிரியர் பிராமணர்.

பிராமணர் ,பிராமணரல்லாதார் அரசியல் போலவே இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றிய தமிழகப் பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுவது ராஜீவ்காந்தி கொலை. 1980களில் தமிழகப் பத்திரிகைகள் மத்தியில் ஈழப் போராட்டத்துக்கு உணர்ச்சிமயமான ஒரு ஆதரவு இருந்தது. அக்காலத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், ஊர்வலங்களுக்கு, அப்போது பத்திரிகைகளில் வெளியான செய்திகள், கட்டுரைகள் முக்கிய காரணம். அந்த அளவுக்குக் கொந்தளிப்பான, உணர்வு ரீதியான ஒரு பார்வையைத் தமிழகப் பத்திரிகைகள் கொண்டிருந்தன. அக்காலகட்டத்தில் தமிழக மக்களிடையே ஈழப்போராட்டத்துக்கு இருந்த அபரிமிதமான ஆதரவையும் ஈடுபாட்டையும் பத்திரிகைள் பிரதிபலித்தன என்றும் இதனைப் பார்க்கலாம். அப்படியொரு உணர்ச்சிப் பெருக்கு ஏற்படத்தக்க வகையில் பத்திரிகைகள் செயலாற்றின என்றும் இதனைப் பார்க்கலாம். உண்மையில் தமிழக மக்கள், பத்திரிகைகள் இரண்டு பேருக்கும் இடையே பரஸ்பரம் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பதுதான் சரியாக இருக்கும்.

நன்றி-தினக்குரல்

http://www.thinakkural.com/news/2006/9/17/...s_page10872.htm

  • தொடங்கியவர்

இந்தப் பின்னணியில்தான் தமிழ் உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் தமிழகப் பிராமணர்கள் அணுகுகிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைவது மீண்டும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழச் செய்யும் என்பது அவர்கள் எண்ணம். அப்படி நிகழ வாய்ப்பில்லை என்பதும், இது தேவையில்லாத அச்சம் என்பதும் ஒருபுறமிருக்க தேசியப் பார்வையுடைய பிராமணரல்லாதவர்களுக்கும் இந்த எண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பின்னணி இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்த தமிழக பத்திரிகைகளின் பார்வையில் முக்கிய பங்காற்றுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கிடைத்த ஸ்கூப் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு தினமலர் நாளேடு மகிழ்ச்சியடைந்ததும், அது தவறான செய்தி என்று அதற்குப் பிறகு உறுதியான பின்னர் இன்றைக்கு வரைக்கும் அச்செய்திக்கு மறுப்பு வெளியிடாததும் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் முடிவில், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது பிரபல வார இதழ் ஒன்றில் எழுதப்பட்ட தலையங்கமும் இங்கே கவனிக்க வேண்டியது. தண்டனை நிறைவேற்றப்படும் போது, தூக்குக் கயிறு கழுத்தை முறிக்கும் சத்தம் கேட்டு ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்னும் அர்த்தம்

****** . :evil: :evil: :evil: :evil: :evil:

**** - நீக்கப்பட்டுள்ளது - மோகன்

கலைஞர் ஈழப்போராட்டத்துக்கு என்ன செய்து கிழித்து விட்டார் என்பவர்களுக்கு இந்தக் கட்டுரையே பதில் சொல்லும்....

இன்றைய நிலையில் தமிழீழப் போராட்டத்தைப் பற்றி தமிழக ஊடகங்கள் பேசக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலையை கலைஞர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.....

கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி!!!!

மேற்கோள்:

கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பத்திரிகைகளால் நிறைவாகச் சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் ஜெயலலிதாவினுடைய ஆட்சிக் காலத்தில் ஈழத்துக்குச்

சென்று பிரபாகரன் அவர்களை சந்தித்து விட்டுத் திரும்பிய பாரதிராஜாவிடம் அதுபற்றி இப்போது ஆனந்தவிகடனால் பேட்டி காணமுடிகிறது. அவராலும் பிரபாகரன் அவர்களை எட்டாவது அதிசயம் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. அதேபோல இயக்குநர் மகேந்திரனாலும் குமுதத்தில் தன்னுடைய ஈழப்பயணம் பற்றி ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்யமுடிகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்க முன்னர், மே- 12, 2006க்கு முன்னர் இவற்றைப் பிரசுரித்திருந்தால் பாரதிராஜாவையும் மகேந்திரனையும் சிறையில்தான் பார்த்திருக்க முடியும்.

லக்கி லுக் சொல்வது உண்மையே! 8)

ஆனால் இந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி வைகோ போன்ற சிலர் கலைஞர் ஆட்சிக்கு சங்கடங்கள் ஏற்படுத்த முயல்வதும் உண்மையே!!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி வைகோ போன்ற சிலர் கலைஞர் ஆட்சிக்கு சங்கடங்கள் ஏற்படுத்த முயல்வதும் உண்மையே!!!!!

வசம்பு அண்ணா

உங்களுக்கு என்ன அபார மூளை

எந்த மண்ணைத்தான் கையில் தந்தாலும் அதில் புலிஎதிர்ப்புதனம் செய்து காட்டக்கூடியதிறமை. வாழ்க! வாழ்க! மேதாவித்தனம்.

தன்தாய்த் துன்பத்திலும் பணம் செய்யும் மனிதமே நீவழ்க!

ஆனால் இந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி வைகோ போன்ற சிலர் கலைஞர் ஆட்சிக்கு சங்கடங்கள் ஏற்படுத்த முயல்வதும் உண்மையே!!!!!

நீங்கள் சொல்வதும் உண்மைதான்.....

பிரைச்சினை வேறு.........

அரசியல் அங்கு விளையாடுகிறது......

ஒன்றாய் இருந்தவர்கள் பிரிந்தார்கள்.....

திரும்பவும் சேர்ந்தாங்க........

திரும்பவும் பிரிஞ்சாங்க.........

திரும்பவும் சேரமாட்டாங்க என்றதுக்கு .....

ஏதும் உத்தரவாதம் இருக்கா?

அரசியல் கட்சிகளாய் - பதிந்து கொண்டவர்கள்......

தாம் கொண்ட சூழ்நிலையை - உறுதிப்படுத்த -வலுப்படுத்த-

என்னனமோ செய்வார்கள்.......

வேண்டியதெல்லாம்........

எங்களைபற்றியும் அவர்கள் சிந்திக்கிறார்களா? இல்லையா என்பதே! 8)

வர்ணன்

உங்களுக்காவது புரிந்ததே. சிலருக்கு புரிதலிலுள்ள பிரைச்சினைகளால் புலம்புவதே தொழிலாகிவிட்டது.

மேலும் தமிழ் நாட்டரசியலில் பிரிவதும் சேர்வதும் சகஜமென்றாலும் தற்போது எமக்குச் சாதகமான சில நல்ல சூழ்நிலைகளை வைகோ போன்றவர்கள் தமது அரசியலுக்காக தவறாக பயன்படுத்த முனைவதால் சில வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். அதனால் சூழ்நிலைகளும் மாறலாம்.

வெறுமனே எங்களைப்பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களா என்ற சுயநலச்சிந்தனைகள் மட்டுமின்றி அப்படியான சூழ்நிலைகள் தொடர்வதற்கு எங்களாலும் என்ன செய்யமுடியும் என்று சிந்திப்பதும் சாலச்சிறந்தது.

வசம்பு சொல்வது சரியே.

டெல்லியில் ஈழத்தமிழருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் என்று கெளம்பிப்போன கறுப்புத்துண்டு மைனர் பேருக்கு 5 நிமிடத்துக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக கோஷம் பொட்டு விட்டு மீதி 35 நிமிடம் கலைஞரை திட்டித் தீர்த்தார்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக கலைஞர் கிழிக்க வேண்டும் என காட்டுக் கத்தல் கத்தும் வைகோ தன் உடன்பிறவா சகோதரியிடம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படும்படி கோரிக்கையாவது வைப்பாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.

ஸ்ரீலங்கா அரசு தருகின்ற தகவல்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த தமிழ் நாட்டு ஊடகங்கள் இன்று பெரும் சிக்கல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் பல்வேறு இணையத் தளங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மை நிலைவரங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திவிடுகின்றனர். இந்த நெருக்கடியும் தமிழீழத்தின் நடப்பினை ஊடகங்கள் ஓரளவுக்கு நடுநிலையுடன் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது

2.

அதை விட்டுட்டு, கலைஞர் வந்தார், பத்திரிகை சுதந்திரம் வந்தது என்று மார் தட்டுகிறார்கள்! சிலர்!!! என்ன அப்போ இந்தியாவில் சனநாயகமே இல்லையா? செயலலிதாவுக்கு அவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தது யார்? செயலலிதா சர்வாதிகாரமாக நடந்து கொண்டார் என்றால், அப்போ இந்தியா சனநாயக முறையில் கோளாறா?

¬¨º þÕó¾¡Öõ «ÐìÌ ÐÉ¢× §¾¨Å «¨¾ ¦ÀüÚ ¦¸¡Îò¾Ð ¬ðº¢ Á¡üÈÓõ ¾¡ý þÐ ±ý ¸ÕòÐ

§À¡¼ §À¡ÉÖõ ¾¡¼ §À¡É¡Öõ ¦ƒÂÄÄ¢¾¡ þÕó¾¡ Å¡¼ ±ýÈ ÒÐ ºð¼õ( «ÅÕìÌõ ÁðÎõ ¯Ã¢Â) §À¡ðÎ «¼ì¸ À¡÷ôÀ¡÷ :!:

¬É¡ ¦ƒÂÄÄ¢¾¡ ¸ÕÉ¡¿¢¾¢ «Ç×ìÌ ´ôÀ¢¼ ÓÊ¡ Å¢ð¼¡Öõ ¾ý¨É ¸ÕôÒ ±õ.¨ƒ. ¬÷ ±ýÚ ¦º¡øÖÀÅரை விட பாறவாய் இல்லை போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I.V.Sasi "§À¡¼ §À¡ÉÖõ ¾¡¼ §À¡É¡Öõ ¦ƒÂÄÄ¢¾¡ þÕó¾¡ Å¡¼ ±ýÈ ÒÐ ºð¼õ"

:lol::):lol:

I.V.Sasi "¬¨º þÕó¾¡Öõ «ÐìÌ ÐÉ¢× §¾¨Å"

ஆகவே தமிழீழ ஊடகங்களுக்கு இருந்த, இருக்கும் துணிவை பார்க்கிலும் தமிழக ஊடகங்களுக்கு இப்போ வந்து விட்டது என்று கூறுகிறார்களா? :?:

ஆகவே தமிழீழ ஊடகங்களுக்கு இருந்த, இருக்கும் துணிவை பார்க்கிலும் தமிழக ஊடகங்களுக்கு இப்போ வந்து விட்டது என்று கூறுகிறார்களா?

ஆம் இலங்கையை பொறுத மட்டில் அப்படிதான் புலிகள் கட்டுபாட்டில் நீங்கள் புலிகளுக்கு ஏதிராக என்ன வேன்றாலும் எழுதலாம் ஆனா அதுக்கு சரியான விளக்கம் சொல்லவேண்டும் சோ புலிகள் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிப்பவர்கள் அங்கு படுகொலை என்ற சொல்லுக்கு இடம் இல்லை ஆனா இலங்கை அரசின் கட்டுபாட்டில் பாருங்கள் எததனை இளப்புகள்??????????

ஆனா தமிழ்நாட்டில் ? ஜெயலலிதா இருந்து இருந்தால்?

மூல்லைத்தீவில் நடந்த படுகொலைய சட்ட சபையில் கண்டனம் தெரிவிச்சு இர்ப்பாவா?

அவாக்கு சசிகலாவின் கனவர் நடறாஜன் வைச்சு இருந்த பெண்னை கஞ்சா வழக்கில் பழி வாங்கவே நேரம் கானது :P :P

வசம்பு சொல்வது சரியே.

டெல்லியில் ஈழத்தமிழருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் என்று கெளம்பிப்போன கறுப்புத்துண்டு மைனர் பேருக்கு 5 நிமிடத்துக்கு ஈழத்தமிழருக்கு ஆதரவாக கோஷம் பொட்டு விட்டு மீதி 35 நிமிடம் கலைஞரை திட்டித் தீர்த்தார்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக கலைஞர் கிழிக்க வேண்டும் என காட்டுக் கத்தல் கத்தும் வைகோ தன் உடன்பிறவா சகோதரியிடம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படும்படி கோரிக்கையாவது வைப்பாரா?

அவர்தான் அப்பிடி செய்யுறார் எண்டால் நீங்கள் வேறயா...??? :roll: :roll: :roll:

கலைஞரும் வைகோவும் சண்டை போடுவதும் விடுவதும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பையும் கொண்டு வராது...! ஆனால் ஈழ விடயத்தில் அப்படி அல்ல...! அது மூத்தவர் கலைஞருக்கு தெரியாத்தும் அல்ல...! அதனால்த்தான் கலைஞர் ஈழப்பிரச்சினையில் வைகோவின் செயற்பாடுகளை இன்னும் எதிர்க்கவில்லை(முக்கியமாக வெளிப்படையாக)...! அதை உணர்ந்துதான் வைகோ தன் கோரிக்கைகளை வெளிப்படையாக்குகிறார்...!

ஆனால் வைகோ வசைவுகளை குறைக்கலாம் தான்... அது வைகோவினதும் கலைஞரதும் பிரச்சினை என்பதால் அதுக்குள் கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை...! இருவரது அனுசரைனைகளையும் வேண்டி நிற்பவர்கள் நாங்கள் என்பதாலும்தான்....!

மேற்கோள்:

கலைஞரும் வைகோவும் சண்டை போடுவதும் விடுவதும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பையும் கொண்டு வராது...! ஆனால் ஈழ விடயத்தில் அப்படி அல்ல...! அது மூத்தவர் கலைஞருக்கு தெரியாத்தும் அல்ல...! அதனால்த்தான் கலைஞர் ஈழப்பிரச்சினையில் வைகோவின் செயற்பாடுகளை இன்னும் எதிர்க்கவில்லை(முக்கியமாக வெளிப்படையாக)...! அதை உணர்ந்துதான் வைகோ தன் கோரிக்கைகளை வெளிப்படையாக்குகிறார்...!

வைகோ இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்பலிகள் அமைப்பை பகிரங்கமாக ஆதரிப்பது, தமிழ்நாடு காஷ்மீராக மாறுமென முட்டாள்த் தனமாகக் கருத்து வைப்பது போன்றவை நிச்சயமாக தமிழக அரசுக்கு சங்கடங்கள் ஏற்படுத்துபவைதான். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் வைகோ முழுக்கமுழுக்க கருணாநிதிக்கு சங்கடம் ஏற்படுத்தவே முயல்கின்றார். ஈழத்தமிழர்களுக்காக இவற்றைக் கருணாநிதி பொறுத்துக் கொண்டாலும் திமுகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் போன்றவை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்கள் திமுகவிற்கு இது விடயத்தில் நெருக்கடியை ஏற்படுத்தவே முனைவர். இதனால் திமுகவும் நிலைமைகளைச் சமாளிக்க வைகோவை கைது செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வைகோவும் இதையே எதிர்பார்க்கின்றார். தான் கைது செய்யப்பட்டால் அதன் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் இலாபம் எற்படுத்தலாமென்று. ஆனால் அரசியலில் சாணக்கியரான கருணாநிதி இதனை எவ்வாறு புத்திசாலித்தனமாக கையாளப் போகின்றராரென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதே வைகோதான் திமுக மகாநாடுகளில் கலைஞர்தான் எனக்கு எப்போதும் தலைவர் என்று கண்ணீர் விடுடழுதவர்.

கலைஞர் ஜெயலலிதா மாதிரி ஒருபோதும் ஈழதமிழர்க்கு எதிராக செயற்பட்டதில்லை(சில வேளைகளில் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மெளனம் சாதித்திருக்கிறார்). இதில் இலங்கை வாழ் தமிழ் அறிவுஜீவிகள் என்று தங்களை தாங்களே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் " அது வேறு இது வேறு".

தமிழக அரசியல் அகில இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பது. ஆக சில வேளைகளில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசுகளால் இலங்கை தமிழர்களுக்கு உதவ முடியாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அதற்காக எவரையும் திட்டும் அல்லது ஏளனமாக பேசும் அருகதையோ எமக்கு இல்லை. "ஏனென்றால் எமது போராட்டத்தை நாம்தான் வெற்றி கொள்ள வேண்டும்".

முக்கிய விடயம்:

எல்லோருக்கும் பல வட்டங்கள் இருக்கிறன. உங்களது வட்டங்களை நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு முதல் வரும் குடும்பம் நண்பர்களை விடுத்து

1: சாதி

2: ஊர்

3: மாவட்டம்

4: மதம்

5: இனம்

6: நாடு

ஒவ்வொன்றும் ஒன்றை விட ஒன்று பெரிய வட்டங்கள். தமிழகமும் தமிழ்ஈழமும் புள்ளி 5 இல் ஒன்றினைகின்றன. புள்ளி 6(நாடு) வரும் போது தமிழகத்தின் வட்டம் இந்தியாவுக்குள் போய்விடும்.

இதில் இருந்து என்ன புரிகிறது??????

எவருக்காவது தமிழக மக்களின் ஆதரவு வேண்டும் என்று தோன்றினால் அவர்கள் தமிழகமக்களின் ஆதரவையோ அநுதாபத்தையோ இன ரீதியில் கோரவேண்டும். அரசியல்வாதிகளை தனிப்பட்ட ரீதியில் தாக்க வேண்டிய அவசியம் இல்லை.

மக்களின் செலவு இல்லாத ஆசைகளை நிறைவேற்ற எப்போதும் அரசியல்வாதிகள் விரும்பவார்கள்.

பெரும் தொகையான மக்களை வளி நடத்தி குறிப்பிட தக்க அளவுக்கு மக்களின் வாக்குக்களை வாங்கிய...( ஈழ தமிழரின் அரைவாசியளவுக்கு) வைகோவை முட்டாள் என்பவரின் தகுதி நிலை சரியாக இங்கு புரிபடலுக்குள் இல்லை...

வைகோ, தமிழகம் இன்னும் ஒரு காஷ்மீராக மாறும் எண்று எச்சரிக்கைதான் விட்டு உள்ளார். அதாவது அவர் பிரிவினையை கோரவில்லை என்பதையும். அப்படியான சம்பவம் நடக்க இடமளிக்க கூடாது எண்டுதான் எச்சரிக்கையாகத்தான் சொல்லி உள்ளார் எண்று கலைஞர் விளக்கமாகத்தான் சட்ட மண்றத்தில் சொல்லி உள்ளார்...! அதை புரிதல் இல்லாமல் இருப்பதுதான் இங்கு கேவலம்...!

இப்போ கலைஞ்ருக்கு வேண்டும் எண்டே இக்கட்டை கொடுப்பது காங்கிரஸ்காரர்கள்தான்... கலைஞர் அவர்களுக்கு செய்ய வேண்டியது எதையாவது மிச்சம் வைச்சு இருக்கிறாரோ தெரியாது...

:?: :?: :?: :?: :?: :?:

அவர்களின் அலுவல்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் எங்கடை அலுவலைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கோள்:

கலைஞரும் வைகோவும் சண்டை போடுவதும் விடுவதும் தமிழகத்துக்கு எந்த பாதிப்பையும் கொண்டு வராது...! ஆனால் ஈழ விடயத்தில் அப்படி அல்ல...! அது மூத்தவர் கலைஞருக்கு தெரியாத்தும் அல்ல...! அதனால்த்தான் கலைஞர் ஈழப்பிரச்சினையில் வைகோவின் செயற்பாடுகளை இன்னும் எதிர்க்கவில்லை(முக்கியமாக வெளிப்படையாக)...! அதை உணர்ந்துதான் வைகோ தன் கோரிக்கைகளை வெளிப்படையாக்குகிறார்...!

வைகோ இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்பலிகள் அமைப்பை பகிரங்கமாக ஆதரிப்பது, தமிழ்நாடு காஷ்மீராக மாறுமென முட்டாள்த் தனமாகக் கருத்து வைப்பது போன்றவை நிச்சயமாக தமிழக அரசுக்கு சங்கடங்கள் ஏற்படுத்துபவைதான். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் வைகோ முழுக்கமுழுக்க கருணாநிதிக்கு சங்கடம் ஏற்படுத்தவே முயல்கின்றார். ஈழத்தமிழர்களுக்காக இவற்றைக் கருணாநிதி பொறுத்துக் கொண்டாலும் திமுகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் போன்றவை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்கள் திமுகவிற்கு இது விடயத்தில் நெருக்கடியை ஏற்படுத்தவே முனைவர். இதனால் திமுகவும் நிலைமைகளைச் சமாளிக்க வைகோவை கைது செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வைகோவும் இதையே எதிர்பார்க்கின்றார். தான் கைது செய்யப்பட்டால் அதன் மூலம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் இலாபம் எற்படுத்தலாமென்று. ஆனால் அரசியலில் சாணக்கியரான கருணாநிதி இதனை எவ்வாறு புத்திசாலித்தனமாக கையாளப் போகின்றராரென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வந்துடான்யா புலிஎதிர்ப்புத்திலகம் புத்திசொல்ல இந்தியாவுக்கும்.

எங்கே ஐயா! இதுவரை ஒரு ஆக்கபூர்வமாய் கருத்து சொன்ன ஒரு பதிவை சொல்லுல்பார்ப்போம்?

உம் ஒவ்வொரு பதிவுகளின் வரிகளிலும் கொம்பு முளைத்த புலிஎதிர்ப்புவாதம் குரூரமாக பல் இளிப்பதை நாம் பார்க்கவில்லைப்போலும்.

நடக்கட்டும் நடக்கட்டும் குசும்பு பார்ப்போம் எதுவரைக்கும் என்று.

தற்போது "பொடா" (PoTA) சட்டம் ரத்து செய்யப்பட்டதனாலேயும்

உங்களுக்கு இந்திய அரசியல் நிகழ்வுகள் தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும்.

பொடா சட்டத்தை பா.ஜ.க. திரும்பப் பெற மறுத்ததாலே தான் கலைஞர் அந்தக் கூட்டணியை விட்டு மதிமுகவுடன் வெளியேறினார்.

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மத்தியிலே புதிய ஆட்சி அமைத்து பொடா சட்டத்தை திரும்பப் பெற வைத்தார்.

- இதை வைகோவே ஒத்துக்கொண்டு கலைஞருக்கு நன்றி கூறினார்.

மேலும் பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்ட போது அந்தச் சட்டத்தால் முறைகேடாக தமிழகத்தில் ஜெயாவால் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களான நெடுமாறன், சுபவீ மற்றும் நக்கீரன் கோபால் போன்றவர்கள் முதலில் நன்றி தெரிவித்தது கலைஞருக்கு தான்.

பொடா சட்டத்தை திரும்பப் பெற்று பேச்சு மற்றும் எழுத்துச் சுதந்திரத்தை தமிழர்களுக்கு பெற்றுத் தந்திருப்பவர் டாக்டர் கலைஞரே. இதை எந்தக் கொம்பனாலும் (வைகோ உட்பட) மறுக்க முடியாது.

காய்த்த மரம் தானே கலைஞர். கல்லடி படத்தான் செய்வார். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உங்களுக்கு இந்திய அரசியல் நிகழ்வுகள் தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும்."

அன்புள்ள லக்கி, இந்திய அரசியல் நிகழ்வுகளை எல்லாம் என்னால் உள்வாங்க முடியாததுதான். ஆனால் பொடா சட்டம் எப்படி மீளப் பெற்றது என்பது தெரியும். கலைஞர் எப்படி பிறந்தார், எப்படி அரசியலுக்கு வந்தார், எப்படி கூட்டணி அமைத்தார், விலகினார், திரும்பக் கூட்டமைத்தார், எப்படி சட்டத்தை மீளப் பெற்றார் என்பதை விளக்க வேண்டியதில்லை! ஆனால் தமிழக ஊடகங்கள் மற்றய காரணிகளுடன் பொடா சட்டத்திற்கும் பயந்தே தமிழீழத்தின் துயரத்தை வெளிக்கொணரத் தயங்கின! என் நிலைமை எந்த இந்திய அரசியல்வாதி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளவன் என்பதில்லை. என் ஆதங்கமெல்லாம் எம்மால், (ஈழத் தமிழரால்) சனநாயகமுறையினால் தெரிவுசெய்யப் பட்ட பிரதிநிதிகள் ஈழத் தமிழரின் அவல நிலைகளை எப்படி சிங்கள அரசாங்க பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியா வந்து மூடி மறைக்கிறார்கள் என்பதை இந்திய தலைவர்களுக்கு நேரடியாக எடுத்துரைக்கவே இந்தியா வந்துள்ளார்கள். இவர்களை கட்சி பேதமின்றி ஏன் கலைஞர் சந்திக்க இன்னும் தயக்கங்காட்டுகிறார் என்பதே! எமக்குத் தோள் கொடுபவனே நாம் தோளனெனலாம் இல்லயா? எனக்குத் தெரிந்தபடி, தமிழ்மாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்களே தற்போது தோள் கொடுக்கிறார்கள் என்பதை பன்னாட்டு ஊடகங்கள் மூலம் அறிகிறேன்! கலைஞர் ஏன் எம் பிரதிநிதிகளை இன்னும் புறக்கணிக்கிறார்? ஏதாவது உங்கள் நாட்டு ஊடகங்களில் எம் பிரதிநிதிகளை சந்திப்பார் என்று செய்திகள் வந்ததா? Hindustan Timesல் இப்படி ஒரு கருத்தை வாசித்தேன்! Spoilsport Karunanidhi by PK Balachandran. காங்கிரஸ்காரங்களுக்குப் பயப்படுகிறாரா?

அன்புள்ள லக்கி' date=' இந்திய அரசியல் நிகழ்வுகளை எல்லாம் என்னால் உள்வாங்க முடியாததுதான். ஆனால் பொடா சட்டம் எப்படி மீளப் பெற்றது என்பது தெரியும். கலைஞர் எப்படி பிறந்தார், எப்படி அரசியலுக்கு வந்தார், எப்படி கூட்டணி அமைத்தார், விலகினார், திரும்பக் கூட்டமைத்தார், எப்படி சட்டத்தை மீளப் பெற்றார் என்பதை விளக்க வேண்டியதில்லை! ஆனால் தமிழக ஊடகங்கள் மற்றய காரணிகளுடன் பொடா சட்டத்திற்கும் பயந்தே தமிழீழத்தின் துயரத்தை வெளிக்கொணரத் தயங்கின! என் நிலைமை எந்த இந்திய அரசியல்வாதி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளவன் என்பதில்லை. என் ஆதங்கமெல்லாம் எம்மால், (ஈழத் தமிழரால்) சனநாயகமுறையினால் தெரிவுசெய்யப் பட்ட பிரதிநிதிகள் ஈழத் தமிழரின் அவல நிலைகளை எப்படி சிங்கள அரசாங்க பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியா வந்து மூடி மறைக்கிறார்கள் என்பதை இந்திய தலைவர்களுக்கு நேரடியாக எடுத்துரைக்கவே இந்தியா வந்துள்ளார்கள். இவர்களை கட்சி பேதமின்றி ஏன் கலைஞர் சந்திக்க இன்னும் தயக்கங்காட்டுகிறார் என்பதே! எமக்குத் தோள் கொடுபவனே நாம் தோளனெனலாம் இல்லயா? எனக்குத் தெரிந்தபடி, தமிழ்மாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்களே தற்போது

தமிழ்மாறனா? யார் அவர்? தற்போது அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.... ஒருவேளை நான் தான் தமிழக அரசியல் நிகழ்வுகளை சரிவர தெரிந்து கொள்ளவில்லையா? :lol::lol::lol:

மற்றபடி வைகோ தோள் கொஞ்ச நாளைக்கு முன்னால் (தேர்தலுக்கு முன்) தன் தோளை மறைத்துக் கொண்டார்... ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் இருக்கும் போது தோளே இல்லாமல் கருப்புத்துண்டு போட்டு மறைத்துக் கொள்கிறார் என்பதற்கெல்லாம் நீங்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்....

கலைஞர் உங்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்ததாக நான் இங்கே கேள்விப்படவில்லை.... அதுமாதிரி அவர் யாரிடம் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கருத்துக்களை சொல்லுக்கு சொல் ஆராய்வதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். பழ. நெடுமாறனென்பதே சரி. தவறுக்கு வருந்துகிறேன்!

உமக்கெப்படி ஈழத் தமிழருக்காதரவாக இருக்கும் வைகோவை இகழ்ந்து பேசுவது சரியாக இருக்குமோ, அதே போல் நாங்கள் கலைஞரை அநாகரிகமாக "மைனர்" என்றோ அல்லது கறுப்புக்குப் பதிலாக மற்றய நிற சால்வைகளையோ போத்துபவர் என்று தனி நபர் குறிப்பீடுகளை இங்கு குறிப்பிடுவதும் என் நோக்கமல்ல! உம்முடைய குதர்க்கமான கேள்விகளுக்கு வைகோ தோள் கொஞ்ச நாளைக்கு முன்னால் (தேர்தலுக்கு முன்) தன் தோளை மறைத்துக் கொண்டார்... ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் இருக்கும் போது தோளே இல்லாமல் கருப்புத்துண்டு போட்டு மறைத்துக் கொள்கிறார் என்பதற்கெல்லாம் நீங்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்....

உம்மைப் போன்றவர்கள்தான் பதில் வைத்திருப்பார்கள்!

மேலும், என் குறிப்பீடுகளில் எங்கே கலைஞரின் "மறுப்பை" நான் எழுதியிருக்கிறேன்! "தயக்கம்

http://www.hindustantimes.com/news/7598_17...00500020009.htm

மேலும் தி.மு.க. ஆட்சியில் தமிழர் ஒன்றுகூடல் சுதந்திரம் பற்றி இதோ சில வரிகள்:

ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் மாநாட்டிற்குத் தடை போடப்பட்டு உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் தடை தகர்க்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடந்தது. இப்போது தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் கூடுவதை தாய் தமிழகமே தடுக்குமானால் அவர்கள் எங்கு கூடுவார்கள்?.....

உலகத் தமிழர்கள் ஒன்று கூடி தங்களது பிரச்சiனைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இனியாவது மாற வேண்டும் என்று பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க. ஆட்சியில் தமிழர் ஒன்றுகூடல் சுதந்திரம் பற்றி இதோ சில வரிகள்:

ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல் மாநாட்டிற்குத் தடை போடப்பட்டு உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் தடை தகர்க்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடந்தது. இப்போது தி.மு.க. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் கூடுவதை தாய் தமிழகமே தடுக்குமானால் அவர்கள் எங்கு கூடுவார்கள்?.....

உலகத் தமிழர்கள் ஒன்று கூடி தங்களது பிரச்சiனைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை

மாநாடு கூடுவது பிரச்சினை அல்ல... மாநாட்டில் பேசும் பேச்சாளர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பது தான் பிரச்சினையே.... தமிழ்நாடு காஷ்மீர் ஆகும் என்றோ.... தனித்தமிழ்நாடு ஒன்றே தீர்வு என்றோ பேசக்கூடிய பேச்சாளர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கும் நிலையில் அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மேல் ஆணையிட்டு ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் அரசு எப்படி அனுமதிக்கும் என நினைக்கிறீர்களோ?

மாநாட்டின் நிர்வாகிகள் நீதிமன்றத்தை அணுகி மாநாடு நடத்தும்போது நீதிமன்றம் வழங்கும் சில வரையறைகளுக்குட்பட்டே, நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டே மாநாட்டினை நடத்தமுடியும். இதன் மூலம் நான் மேலே குறிப்பிட்ட சங்கடங்களை அரசு தவிர்க்க முடியும்.

ஒரு நாணயத்துக்கு இருபுறம் உண்டு... ஒரு புறம் பற்றியே பேசாதீர்கள்.....

உங்கள் நோக்கம் "கலைஞர் மீதான வெறுப்பை ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்க வேண்டும்" என்பதே.... அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அதைவிட துரதிருஷ்டமான விஷயம் வேறு எதுவும் இல்லை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்துக் கொள்கிறேன்....

தர்ஷினி பாலியல் வன்முறைக்குட்பட்டபோது கூட இந்தியாவில் இருந்து அதுகுறித்து அக்கறையாக விசாரித்து கண்டனம் தெரிவித்தவர் கலைஞர் தான்.... அவர் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தமிழருக்கான அவரது உரிமைக்குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டோய் லக்கி!!!!

நீர் உதுகளைச் சொல்லத் தேவையில்லை!!!!! "தானாடா விட்டாலும் தன் தசையாடும்" என்பார்களே அதுதான் கலையருக்கும்!!!!!!!!!!

அனால்...... ஒரே ஒரு கவலை எங்களுக்கு ...... அது "இன்று வரை மு.க.ஸ்ராலின், எமக்காக ஒரு அறிக்கை தானும் விடாதது!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.