Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர் குறும்படங்கள்!!

Featured Replies

1. துலைக்கோ போறியள்!

 

thulaikkoporiyalposter_zps93e6611c.jpg
 

துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல்துலைக்கோ போறியள்?”. 

 

அப்படி என்றால்எங்கே போறீங்கஅல்லதுதூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள்.

 

குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள்.

 

ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ்

 

தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

இலங்கையில் ஒரு திருடனின் வாழ்க்கையில் ஒரு நாளில் சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களை படம்பிடித்து நகைச்சுவையுடன் காட்டியுள்ளனர். அதோடு சில சமூக கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மதிசுதா.

 

வெளிநாட்டில் இருந்து வருபவரிடம் அந்த திருடன் 200 ரூபாய் சுடுவது, சைக்கிளை திருடி செல்வது, பின் இறுதியில் மாட்டிக் கொண்டு அடி வாங்குவது எல்லாம் சூப்பர். இக்குறும்படத்தின் கதைக்களமும் அருமையாக அமைந்திருக்கிறது.

 

கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று குறும்படத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நச்சுன்னு புரிகிறது

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/105648/

 

https://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E

Edited by sOliyAn

  • Replies 141
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2. சீட்டு

 

c00b6ca3-a52e-48e2-b099-365673b90cd0_zps

 

இலங்கைத் தீவின் வடபுலத்தில் இருந்து குறும்படத்துறையில் ஒரு வரவுசீட்டு‘!

 

இளையவர்களின் குழு முயற்சியால் இன்று வெளியான குறும்படம். ஈழத்தமிழ் சமூகத்தின் பொருண்மியம் சார்ந்த கதைக்கருவைக் கையாண்டமைக்கு வாழ்த்துக்கள்!இத் தெரிவிலேயே ஒரு துணிச்சல் தெரிந்துவிடுகிறது!

பூசிமெழுகாத இயன்றவரை இயல்பான நடிப்பு, இட்டுக்கட்டாத நடைமுறைத்தனமான வசனம், பொருண்மியம் சார்ந்த ஏதிலிப்படகுப் (அகதி) பயணம், நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்நம்மவர்அடையாளம், பாத்திர வார்ப்புக்கள் இயல்பானமை, இடையூறு பண்ணாத அரிதாரம் (ஒப்பனை), நடைமுறை உடை & அலங்காரம், இரைச்சல் கொட்டாது சேர்ந்து பயணிக்கும் இசை, கண்களை உறுத்தாத கலை, அரைத்த மாவை அரைக்காது புத்தாக்கத்துடன் உண்மைச் சம்பவங்களைத் தழுவி குறும்படம் ஆக்கிய தயாரிப்பாளர் Manoouj Krishnan & இயக்குநர் Mayan Kanthan பாராடுக்குரியவர்களே!

 

https://www.youtube.com/watch?v=MZ9y3yLlK_8

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

3. ஊனம்

 

46 கிரியேசன்ஸ் வழங்கும்

ராஜின் கதை, திரைக்கதை, நெறியாள்கையில் 'ஊனம்'!

 

https://www.youtube.com/watch?v=qs4tC7B5Ens

  • தொடங்கியவர்

 

கிளியவன்! தயவு செய்து பொருத்தமான இடத்தில் தங்களது இணைப்புகளை இணைக்கவும்.

 

இதற்குள் இடையூறு செய்ய வேண்டாம்! நன்றி!!

  • தொடங்கியவர்

4. துடிப்பு

 

BA40BC10B9F0BBF0BAA0BCD0BAA0BC10_zps8481

 

இளைஞர்களிடத்தில் தற்போது அதிகரித்துவரும் மோட்டார்சைக்கிள் மோகமும் அதனால் இளைஞர்களின் வாழ்வு எப்படி தடம் மாறிப்போகின்றது என்பதனையும் கருவாக கொண்டு வெளியாகியிருக்கிறது “துடிப்பு” குறும்படம். 17 நிமிடங்கள் கொண்ட இக் குறும்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்கரன். மோட்டார்சைக்கிளுக்காக இன்றைய இளைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், அவர்களுடைய குடும்ப பின்னணி, வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நம்மவர்களின் வாழ்க்கை முறை என அனைத்தையும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கது.

 

குறும்படத்தில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பு, இன்றைய இளைஞர்களையும், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்திலும் கலக்கியுள்ளார்கள் துடிப்பு குறும்பட குழுவினர்.

 

https://www.youtube.com/watch?v=fw7XXnMO9wQ

 

 

(நுணாவிலான் மன்னிக்க.. மீண்டும் இங்கே இப்படத்தைப் பதிவதற்கு.)

  • தொடங்கியவர்

5. வல்லூறு

 

valluru001_zpsc71bd99d.jpg

 

சக மனிதனை உடல் ரீதியாக துன்புறுத்துவது குற்றம் என பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது

 

ஆனால் அந்த சட்டங்கள் எல்லாம் தாண்டி இப்போது பல நாடுகளில் இப்படிபட்ட துன்புறுத்தல்கள் நிறைய நடந்து வருகின்றன.

 

கதை ஆரம்பமாகிறது, தாய் இல்லாமல் வாடும் ஒரு அண்ணன், தங்கை. அவர்களுக்கு ஒரு குடிகார அப்பா. தினமும் குழந்தைகளை பட்டினி போடுவதும், அவர்களை போட்டு அடிப்பதும் என மனிதனாக வாழ்ந்து வரும் மிருகம்.

 

ஆனால் அந்த சிறுவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறாள் அவர்களின் எதிர் வீட்டு சிறுமி. திடீரென அப்பெண் பரிதாபமாக இறந்து விடுகிறாள். அவளுக்கு என்ன நடந்தது, ஏன் இறந்தாள் என்பது கதை.

 

மிகவும் தெளிவாகவும், ஷார்ப்பாகவும் அமைந்திருக்கிறது கதைக்களம். அருமையான ஒளிப்பதிவு மற்றும் வரிகள். அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம், ஒரு குறும்படம் தொழில்நுட்ப ரீதியாக எப்படி அமைய வேண்டும் என்பதற்கு உதாரணம்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/105175/

 

https://www.youtube.com/watch?v=nBwNMtMdjPE

வணக்கம் சோலியன் ஒரு வருடத்துக்கு பிறகு இன்றைக்கு  ஒரு லிங்க போட்டன் ஓடி வந்து பதில் போட்ட உங்களுக்கு நன்றி.

 

இந்த குரும்படங்களின் மூலம் நீங்கள் திருத்த நினைப்பது யாரை?

 

பழைய சமுதாயத்தையா? அல்லது

இளைய சமுதாயத்தையா? அல்லது

இணைய சமுதாயத்தையா?

 

 

 

 
  • தொடங்கியவர்

 

வணக்கம் சோலியன் ஒரு வருடத்துக்கு பிறகு இன்றைக்கு  ஒரு லிங்க போட்டன் ஓடி வந்து பதில் போட்ட உங்களுக்கு நன்றி.

 

இந்த குரும்படங்களின் மூலம் நீங்கள் திருத்த நினைப்பது யாரை?

 

பழைய சமுதாயத்தையா? அல்லது

இளைய சமுதாயத்தையா? அல்லது

இணைய சமுதாயத்தையா?

 

 

யாரை யார் திருத்துவது?!  :o

விபரமானவர்கள்தானே இந்தக் களத்துக்கு வருகிறார்கள்?!  :o 

எம்மவர்களின் படைப்புகளை (நேரம் உள்ளபோது) இந்த யாழில் பகிர்ந்து அழகு பார்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான்!!  :lol:

  • தொடங்கியவர்

6. அகரம்

 

பிரவீன் மற்றும் யேசுராசா நடிப்பில் வனிதா சேனாதிராஜா இயக்கி இருக்கும் குறும்படம் அகரம்.

 

சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதை ஒரு சின்ன கருத்தை வைத்து எடுத்துள்ளனர் இப்படக்குழுவினர்.

 

சிறுவன் ஒரு பூச்செடி குப்பைகளுக்கு நடுவில் இருப்பதை காண்கிறான். அதனால் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முயல்கிறான். அவன் செய்யும் வேலையை பார்த்து ஒருவர் வந்து அந்த சிறுவனுக்கு உதவி செய்கிறார்.

 

அடுத்த நாள் அந்த இடத்தை பார்க்கும் போது அதேபோல் குப்பைகள் இருக்கின்றன. மீண்டும் சுத்தம் செய்கின்றனர். பின் அந்த இடம் எப்படி சுத்தமாக மாறுகிறது என்பது கதை

 

www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100158/

 

https://www.youtube.com/watch?v=2iw17mYIv5o

  • தொடங்கியவர்

7. அம்மா நலமா?

 

amma_nalama001_zpsafe2b989.jpg

 

ஒரு சில குறும்படங்கள் பார்த்து முடித்த பிறகும் நம் மனதை விட்டு நீங்காது இருக்கும், அந்த வகை தான் இந்த அம்மா நலமா.

 

கடல் சார்ந்த உலகில் தாய் இல்லாமல் வாழும் ஒரு சிறுமி தன் அப்பாவிடம் அம்மா எங்கே என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் தன் மகளிடம் கை நீட்டி அம்மா வானத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்.

 

தினம் தோறும் அவர் அப்பா மீன்பிடிக்க செல்ல, கடல் கிட்ட உட்கார்ந்து வானத்தை நோக்கி அம்மாவுக்காக ஏங்குகிறார். அந்த குழந்தை.தன் கஷ்டங்களையும், வலிகளையும் வெளியில் கூட சொல்ல முடியாது, ஏனென்றால் வாய் பேச முடியாத குழந்தை அது. தன் எண்ணங்களை ஒரு கடிதத்தின் மூலம் சொல்லி உணர்வுகளால் கட்டி போடுகிறார். அந்த சிறுமியின் ஏங்குதலும் அவளின் உணர்வுகளும் தான் இந்த அம்மா. 

 

நலமாகண்டிப்பாக அம்மா நலமா இயக்குனர் அருள் செல்வத்தின் அருமையான படைப்பு என்று தான் சொல்லவேண்டும். இசை ,ஒளிப்பதிவு , அந்த குழந்தையின் நடிப்பு மற்றும் அப்பாவின் நடிப்பு யதர்த்தம் . வசனமே அதிகம் இல்லாமல் இல்லாமல் இசை முலம் உணர்வுகளை சொல்லி இருப்பது வலியின் உச்சம்.

 

மொத்தத்தில் அம்மா நலமா - அழகான தேடல்.

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/

 

https://www.youtube.com/watch?v=ZtX0j1RQBX4

  • தொடங்கியவர்

8. இது

 

B870BA40BC10_zpsf679bc04.jpg

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக தெரு சார்ந்த கதைக்களத்தைமையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டஇதுகுறும் படம்போட்டியில் இரண்டாவதh தெரிவாகி பாராட்டுக்களை  பெற்றுள்ளது

 

குறிப்பிட்ட கால அளவுக்குள், பல காட்சிச் சட்டகங்களை உள்ளடக்கியுள்ள இக் குறும்படம், நல்ல கருப்பொருளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trinco Creation  அணியினரின் இது குறும்படம்.

 

https://www.youtube.com/watch?v=pcQusWRNkto

  • தொடங்கியவர்

9. நன்றி அம்மா!

 

Naammma_zps0c237a60.jpg

 

காதல் எப்போதும் காமத்தோடு சேர்ந்ததுதான்ஆனால் காமத்திற்கு பின்னான காதல், அது மாத்திரமே உண்மைக்காதல். தன் காதலனை நெஞ்சிலும் குழந்தையை மார்போடும் சுமக்கும் ஒரு காதலியின் கதை தான் இந்தநன்றி அம்மா

 

தன் காதலனை கல்யாணம் செய்துகொள்ள அம்மா, அப்பாவிடம் அனுமதி வாங்குவதில் ஆரம்பிக்கிறது படம். பிரான்சு நாட்டின் தெருக்களில் எல்லாம் காதலர்கள் சுற்றித்திரிகிறார்கள், அன்பு முத்தங்கள், ஆச்சரிய கிஃப்டுகள் என காதல் நிரம்பி வழிகிறது படம் முழுவதும். கல்யாணத்துக்கு அனுமதி கிடைத்ததும், காதலின் உச்சக்கட்ட வெளிப்பாடாக காதலி தன்னையே காதலனுக்கு பரிசளிக்கிறாள். ஆறு மாதங்கள் கழித்து திருமணம் என நிச்சயம் பண்ணி முடிக்கும்போது காதலி கர்பமாகிறாள். தன் அம்மாவிடம் ஒரு வழியாக இதை சொல்லி, திருமணத்தை முன்கூட்டியே நடத்திவிட சம்மதம் வாங்குகிறாள். அம்மாவும் சம்மதம் தெரிவிக்கிறார்

 

பின்னர் என்ன ஆனது என குறும்படத்தில் பார்க்கவும்!

 

முதலில் நடிகர்கள் தேர்வுக்கும், திரைக்கதைக்கும் பெரிய ஒரு பொக்கே!! அழகு காதலியாக மிஷா ரொட்னி.. கண்களினாலே காதல் பேசும் நடிப்பு. சந்தோசம், அழுகை, தவிப்பு, காதல் என அத்தனை உணர்ச்சிகளை கொட்டும் போது பர்ஃபெக்ட் நடிகை. காதலனாக தீபன் துரைஸ். காதலியை சந்திக்க லேட்டாக வரும்போது, கோபத்தில் இருக்கும் காதலியை சமாதானப்படுத்த மரத்தில் தொங்கும் ஒரு பூவை பறித்துக்கொண்டு வரும்போது மாத்திரம் கவனம் ஈர்க்கிறார்.

 

பகுதி 1

 

https://www.youtube.com/watch?v=ccNKsDaxkJg

 

பகுதி 2

 

https://www.youtube.com/watch?v=M4QULXgpgOY

 

  • தொடங்கியவர்

10. நிர்ணயம்

 

வாழ்க்கையில் ஏதும் நிரந்தரம் என்பதில்லை என்று சொல்லியிருக்கிறது இந்த நிர்ணயம். இந்த அவசர உலகத்தில் நாம் அனைவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, சொல்லவந்த கருத்தை 2 நிமிடத்தில் சொல்லி முடித்துவிட்டது இக்குறும்படம்.

 

ஒருவன் 2000ம் ஆண்டு காரில் வந்து பெட்ரோல் போடுகிறான், பின்பு 2010ம் ஆண்டு பைக்கில் வந்து பெட்ரோல் போட 2014ல் அவன் வளர்ச்சி எங்கு உள்ளது என்பதை மிக அழகாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.. நிலான்

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/movie/100131/

 

https://www.youtube.com/watch?v=8GokLWNZ72k

  • தொடங்கியவர்

11. எனக்கும் உனக்கும்

 

B8E0BA90B950BCD0B950BC10BAE0BCD0_zpsa736

 

பல விருதுகளை வாங்கிய பாஸ்கி மன்மதன் அவர்களின் தயாரிப்பில் உருவான [எனக்கும் உனக்கும் ] குறும்படம்..

இன்று தாயகத்தில்..

01. 
யாழ். ஆவராங்கால் இளம்பெண் விசுவமடுவில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு!

02. 
யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு!

நடந்த மரணங்கள் இவை. இப்படி தினமும் 10 பேராவது சாகிறார்கள். அது எந்த பின்னணியில் நடக்கிறது என்பதை துல்லியமாகப படம் பிடித்திருக்கிறார்கள் தமிழீழ கலைஞர்கள்.

https://www.youtube.com/watch?v=t-cn23FCOBM

 

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

12. 3 இரவு 4 பகல்
 

இப்படத்துக்கான விமர்சனத்தை எழுத முன்பு, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் காலநிலையை ஒருமுறை பரிசோதித்தோம். -14 என்று காட்டியது காலநிலை குறிகாட்டி. பொதுவாகவே ரஷ்யா எவ்வளவு குளிர் மிக்க நாடு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த அடர் குளிருக்குள், அடர் காட்டுக்குள், இரவு பகலாக படம் பிடித்த குழுவினருக்கு பெரியதொரு பாராட்டினை வழங்கிக் கொண்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறோம்.

 

கொழும்பு கட்டுநாயக்கவில் இருந்து புறப்படும் விமானம் ஒன்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இறங்குகிறது. அதில் இறங்கும் சில தமிழர்களைஆட்களை கடத்தும் குழு”( ஏஜென்சி ) ஒன்று, தரை வழியாக பாரிஸ் அழைத்துவருகிறது. கடும் பனிக்குள்ளே, காடு மலை எல்லாம் நடக்கிறார்கள். குளிர் தாங்க முடியாமல் நடுங்குகிறார்கள். அந்த குழுவிலே ஒரு சிறுவனும், சிறுமியும் இருக்கிறார்கள். பயணத்தை தொடர அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

 

ஒருவாறு 3 இரவுகளை முடித்துக் கொண்டு நாலாம் நாள் பகல் பாரிஸ் நகருக்குள் வருகிறார்கள். அந்த குழுவில் வந்த தன்னுடைய தம்பியை அழைத்துச் செல்ல ஆவலுடன் பாஸ்கர் வருகிறார். காரின் கதவு திறக்கிறது. இதோ தம்பியை பார்க்கப் போகிறோமே என்று நினைக்கும் போது, சட்டென்று கதவை இழுத்து மூடிவிடுகிறார்கள். 2000 ஃபிராங்குகள் கொடுத்தால் மட்டுமே தம்பியை விட முடியும் என்று பேரம் பேசுகிறார்கள் ஏஜென்சிக்காரர்கள்.

 

துடித்துப் போகிறார் பாஸ்கர். அவர்களுடன் வாதாடுகிறார். அவர்களோ இசைவதாக இல்லை. வேறு வழி இன்றி, பேசியதொகைக்கு மேலதிகமாக 2000 ஃபிராங்குகளை கொடுத்துவிட்டு, ஆசையோடு தன் தம்பியை அழைத்துச் செல்கிறார் பாஸ்கர். இப்போது இருவரும் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்துக்குள் வந்துவிடுகிறார்கள். தம்பியிடம் டிக்கட் இல்லை. அதை வாங்கிக் கொடுக்க பாஸ்கரிடம் பணமும் இல்லை. அதனால் தடைக் கம்பிக்குள்ளால் புகுந்து உள்ளே செல்கின்றனர்.

 

அங்கே டிக்கட் பரிசோதகர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். டிக்கட் இல்லை என்று தெரிந்தவுடன், சந்தேகப்பட்டு, வதிவிட அட்டையினை கேட்கின்றனர். அதுவும் இல்லை என்று தெரிந்தவுடன் போலீஸ் வரவழைக்கப்படுகிறது. போலீஸ் வந்த பின்னர் என்னாகிறது என்பதே மீதிக் கதை.

 

வெளிநாடுகளில் சட்டங்கள் மிக இறுக்கமானவை. இங்கு லஞ்சம் கொடுத்து கூட தப்பிக்க முடியாது. ஆனாலும் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல, சொந்த நாட்டில் பிரச்சனைகாரணமாக வெளிநாட்டுக்கு வரும் மக்களை இந்த சட்டங்கள் கூட அவ்வப்போது சோதிப்பதுண்டு.

 

இதைத்தான் தனது குறும்படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் .வி.ஜனா. படத்தின் மேக்கிங் ஸ்டைல், அதற்கு அவர்கள் பட்ட கஷ்டம் அனைத்துக்கும் பெரியதொரு சல்யூட். க்ளைமேக்சில் வரும் புல்லாங்குழல் இசை இதயத்தை பிழிகிறது. போலீஸ் வந்த பின்னர் நடந்த சம்பவங்களைக் காட்டும் போது மட்டும் கேமரா கொஞ்சம் தடுமாறியிருக்கிறது. மற்றும்படி படம் மிகவும் அழகாக தொகுக்கப்பட்டு இதயத்தில் பதியும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=BOFjn4b5m-o

 

 

இதனால்தான் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த கேமரா, சிறந்த பார்வையாளர்கள் விருது என்று ஏகப்பட்ட விருந்துகளை வென்றிருக்கிறது இப்படம்!

  • தொடங்கியவர்

13. வன்மம்

 

நான் செய்யாத பிழைக்காக என்னை தண்டிக்கும்போது, நான் ஏன் அந்த பிழையை செய்யக்கூடாது? அருமையான கேள்வி

 

இந்த ஒரு வரியை மையப்படுத்தி வன்மம் கதை நகர்கிறது.

 

ஒருவன் தவறு செய்தால் போதும் அவனை சுற்றி இருப்பவர்கள் கூட தவறானவர்கள் என்று பார்க்கும் கண்ணோட்டம் காலகாலமாக இருந்து வருகிறது.

 

இக்குறும்படத்தில் திருடனின் மகனான தேசிகன் பாடசாலையில் சேர்வதற்கு வருகிறான்

 

அப்போது ஆரம்பித்து ஒவ்வொரு சமயத்திலும் அவனை ஒவ்வொருவரும் திருடன் மகன் என்று முத்திரை குத்துகின்றனர்.

 

இப்படி தேசிகன் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் அவனை கள்ளன் மகன் என்று ஒரு மாதிரியாக பார்க்கும் போது அந்த பிஞ்சு மனம் எப்படி இருந்திருக்கும்.

 

ஒருநாள் வகுப்பு ஆசிரியையின் பணம் காணாமல் போகிறது. மாணவர்களை பரிசோதிக்கும்போது தேசிகன் மட்டும் தயங்குகிறான். இதை பார்த்ததும் ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை, குறும்படம் பார்க்கும் நமக்கு தேசிகன் திருடி இருக்கிறான் என்ற எண்ணம் வருகிறது.

 

ஆனால் அவன் திருடவில்லை என்று தெரியவரும்போது மனதில் ஒரு வலி ஏற்பட்டது.

 

இக்குறும்படத்தில் தொழில்நுட்ப வேலைகள் எல்லாத்தையும் தாண்டி, இதில் பிடித்தது தேசிகன் என்ற அந்த மாணவனின் நடிப்பு

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100154/

 

https://www.youtube.com/watch?v=zWVjfoumLf8

 
  • தொடங்கியவர்

14. விழி ஓரம் ஒரு துளி

 

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானவிழி ஓரம் ஒரு துளிகுறும்படம் உஷா பிலிம்ஸ் வழங்கும் வின்சன் குரு வின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், நடிகர்களாக , எஸ் விஜய், வின்சன், ஜெயா, ஜசீர், இசை ஒலிப்பதுவு செந்தூர், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு யுறா சன்வவா ஆகியோரின் முயற்சியில் காதலின் ஏமாற்றத்தை காயத்தின் சாரலோடு தூவி சென்றுள்ளதுவிழி ஓரம் ஒரு துளி”.

 

காதலில் ஏமாற்றப்பட்ட வாய் பேச முடியாத ஓர் இளைஞ்சனின் தற்கொலை முடிவின் பயன் ஏது, முட்டாள்தனமான முடிவு எடுப்பதன் மூலம் எதை அடைந்து விட முடியும் என்று விழியோரம் துளி வைத்து காட்சியமைத்து காட்டியிருக்கிறது ..!

 

ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு வாலிபர், அப்பெண்ணை அவரது நண்பராகிய வாய் பேச முடியாத நண்பரும் அப்பெண்ணால் காதலித்து ஏமார்ந்தவர், ஏமார்ந்த அந்த இளைஞனின் மனோ நிலை ஏமாற்றத்தின் வலியை தாங்க முடியாத இக்கட்டான சூழ்னிலைக்கு தள்ளப்பட்டு விபரிதமான முடிவு எடுக்கிறான், பின்பு அது தவறு என்று உணர்ந்து நண்பனுக்கு உண்மையை சொல்லி உதவி செய்ய முன் வருகிறான். அதை எப்படி சொல்கிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

 

காதலில் ஏமாற்றுத்தின் வலியை காயங்களோடு உணர்த்த முயற்சித்திருக்கிறார்கள், படத்தின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது.

 

https://www.youtube.com/watch?v=BuW15ADOUkY

 

 

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

15. சிறகு விரிக்க 

(Tamil mobile shortfilm)

 

அழகான கவிதையாக தான் உள்ளது இந்த "சிறகு விரிக்க".முன்னேற முயற்சிப்பவர்களுக்கு நாம் வழியை காட்டிவிடலாமே தவிர அவர்களை தோள்மீது சுமந்து செல்லவேண்டும் என நினைக்கக்கூடாது. ஏனெனில் நாம் யாரும் 100% அறிந்தவர்கள் கிடையாது. இதை தான் சொல்ல வருகிறது "சிறகு விரிக்க" குறும்படமும்.

 

பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருக்கும் இளைஞன் ஒருவன் அதன் ஜன்னலில் இருக்கும் பாட்டில் ஒன்றை கல்லால் அடித்து வீழ்த்த முயற்சிக்கிறான். பின்னர் அருகில் இருந்த சிறுவனை அழைத்து அந்த பாட்டிலை எறிந்து வீழ்த்த சொல்லி அவனுக்கு தானே உதவி புரிகிறான்.

 

சிறுவனின் கையை பிடித்து தானே கல்லை எறிகிறான். ஆனால் அந்த சிறுவனால் பாட்டிலை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் இளைஞனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் சிறுவன் ரப்பர் பாண்டின் உதவியுடன் கல்லால் அந்த பாட்டிலை அடித்து சாய்க்கிறான்.

 

இதில் நாம் முன்பே சொன்ன கருத்தை விட நமக்கே தெரியாமல் பல கருத்துகள் சொல்லப்பட்டு இருக்கிறது. கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்யாமல், மிகவும் எளிதாக இஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என்பதே, தவறாமல் பார்த்து விடுங்கள் இந்த "சிறகு விரிக்க" குறும்படத்தை

 

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/103652/

 

https://www.youtube.com/watch?v=uz8ae0sDvGc

 
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் பார்த்தேன்

அருமையான பதிவு

 

குறும்படங்களை  ஊக்குவிப்பதனூடாக  எவ்வளவோ விடயங்களை  வெளிக்கொண்டு வரலாம்

அதைச்செய்யும் தங்கள் பணி  தொடர்க.

 

(தம்பி  கிளியவன் பற்றி  தப்பாக விளங்கிக்கொள்ளாதீர்கள் ஐயா.  ஏதோ  தவறு நடந்துள்ளது.  இருவரும் புரிந்து கொள்ளுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சோழியான் மிகவும் நல்ல முயற்சி.நன்றி..." நன்றி அம்மா" படத்தில் கதாநாயகியாய் நடித்த பெண் தமிழர் இல்லை என்பதால் முழுமையான நம்மவர் ஆக்கம் என சொல்ல முடியாமல் உள்ளது

  • தொடங்கியவர்

இன்று தான் பார்த்தேன்

அருமையான பதிவு

 

குறும்படங்களை  ஊக்குவிப்பதனூடாக  எவ்வளவோ விடயங்களை  வெளிக்கொண்டு வரலாம்

அதைச்செய்யும் தங்கள் பணி  தொடர்க.

 

(தம்பி  கிளியவன் பற்றி  தப்பாக விளங்கிக்கொள்ளாதீர்கள் ஐயா.  ஏதோ  தவறு நடந்துள்ளது.  இருவரும் புரிந்து கொள்ளுங்கள்)

 

இதற்குள் வேறு அம்சங்கள் புகுந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே சுட்டிக்காட்டினேன். வேறு எந்த தவறான புரிதலோ அல்லது முரண்களோ எமக்குள் இல்லை. 

 

நன்றி விசுகர்!!  :D

தொடருங்கள் சோழியான் மிகவும் நல்ல முயற்சி.நன்றி..." நன்றி அம்மா" படத்தில் கதாநாயகியாய் நடித்த பெண் தமிழர் இல்லை என்பதால் முழுமையான நம்மவர் ஆக்கம் என சொல்ல முடியாமல் உள்ளது

 

ஓம். கதாநாயகியைத் தவிர ஏனையவர்கள் பிரான்சில் வாழும் நம்மவர்கள்!

கருத்திற்கு நன்றி ரதி!  :D

  • தொடங்கியவர்

16. Merci la France

 

ஒருவன் மனதால் காயப்படும் போது, அவனுக்கு ஆறுதலாக யார் இருந்தாலும்அவர் தான் அவனுக்கு கடவுள் , தெய்வம்…. எல்லாம்! சரியான சமயத்தில் குடுக்கப்படும் அனுசரிப்பும், நம்பிக்கையும் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைக்கொடுக்கும், வாழ வழியைக்கொடுக்கும். இங்கே வாழ்க்கை கொடுத்த ஒரு தேசத்திற்கு கண்ணீரால் நன்றி சொல்வதே இந்தமெர்ஸி லா ஃப்ரான்ஸ்

 

சரியான சந்தர்ப்பத்தில், எதுவுமே கைகளில் இல்லாத ஒருவருக்கு, எதுவுமே இவரிடமிருந்து வாங்கிடமுடியாது என தெரிந்தும்..  ஒருவர் தரும் ஆரவிற்கும், அடைக்கலத்திற்கும் எதன் மூலம் நன்றி சொல்லிவிட முடியும்கண்ணீரால் தான்

 

அழகிய பிரான்சு தேசத்தில் சலனமற்று கிடக்கும் ஒரு காஃபி ஷாப்கதைக்களம். காஃபி ஷாப்பின் மூலையில் ஒரு ஓரமாய் ஒரு மேஜை. மேஜையில் ஒரு காஃபி கப். அவ் மேஜையை ஒட்டி கண்களில் வெற்றுத்தன்மையான பார்வையுடன், இயலாமையின் வெளிப்பாடாக உடைந்துபோயிருக்கும் வெவ்வேறு நாட்டின் மனிதர்கள் !! காஃபி அருந்துகிறார்கள். சடசட..சடவென துப்பாக்கி குண்டுகள் தெறிக்கிறது. யுத்தம் நடைபெறுகிறது. உடனிருந்தவர்கள் இறக்கிறார்கள். சிலர் உயிரை கையில் பிடித்தபடி ஓடுகிறார்கள். கை கால்கள் இழந்தபடி சில பிணங்கள் தெறித்து விழுகின்றனஇவையெல்லாம் அவர்கள் கண்களில்தான் தெரிகிறது, கண்ணீர் சொட்டுகிறது. படம் முடிகிறது.

 

பாராட்டுக்கள் படக்குழுவினர் அனைவருக்கும். சொல்லவந்ததை சரியாக சொன்னதற்கு. ஐபோனில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. இப்படத்தில் எடிட்டிங், கேமரா, லைட்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், வசனம்எதுவுமே இல்லைஎதுவுமே தேவையும் இல்லை. 59 செக்கனில் அசரடித்திருக்கிறது அவதாரம் டீம்.

 

https://www.youtube.com/watch?v=3mM6_ORIFpg

 

  • தொடங்கியவர்

17. அஞ்சனம்

 

ஒரு சில குறும்படங்கள் நம்மை நெகிழ வைக்கும், அப்படி ஒரு குறும்படம் தான் இது

 

'நான் இந்த உலகத்திடம் ஒன்று தான் கேட்டேன், ஆனால் அதையும் தர மறுத்துவிட்டது' என்று கண்ணீருடன் ஒருவன்.

 

அவன் கண்ணீருக்கு என்ன காரணம் என்று தொடர்கிறது படம், மரண படுக்கையில் இருக்கும் தன் தாயின் நோய்களை குணப்படுத்த முடியாமல் போராடுகிறான், இந்த வலிகளை தாங்க முடியாமல் கருணை கொலை கூட செய்ய சொல்லி ஒரு சில அதிகாரிகளிடம் முறையிடுகிறான்

 

ஆனால் யாரும் முன் வரவில்லை, இதனால் இறுதியாக அவன் எடுக்கும் முடிவு அவனை மட்டுமில்லாமல் பார்க்கின்ற நம்மையும் கண் கலங்க வைக்கிறது.

 

கருணை கொலை என்பது அவர்களால் வாழவே முடியாது என்ற நிலையில் தான் இந்த முடிவை எடுப்பார்கள், ஆனால் அதற்கான முழு வலியையும் இக்குறும்படத்தில் காட்டவில்லை என்பது தான் மிகப்பெரிய குறை.

 

அம்மாவாக நடித்தவர் இன்னும் தன் வேதனையை முகத்தில் காட்டியிருந்தால் நமக்கும் அந்த வேதனை புரிந்திருக்கும், ஆனால் இந்த குறையை மகன் தன் அழுகையில் காட்டியது உண்மையாகவே பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100144/

 

https://www.youtube.com/watch?v=mLpzQmHphwE

  • தொடங்கியவர்

18. கராளம்

 

மகிழ்தரன் இயக்கத்தில், போதைப் பாவனை பற்றிய விழிப்புணர்வு குறும்படமாக வந்திருக்கிறது கராளம் குறும்படம்.

 

இக்குறும்படம் தொடங்கிய முதலில் இருந்து இறுதி வரை சற்று கூட திரும்பாமல் எல்லோரையும் பார்க்க வைத்துள்ளது.

 

அதற்கு முக்கிய காரணம், போதைப் பாவனை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த அன்புமைந்தனும், தன் கதைக்கும், அதில் வரும் கதாபாத்திரத்துக்கும் உரிய நடிகனை தேர்வு செய்த இயக்குனர் மகிர்தரனும், இயக்குனர் நினைத்ததை அப்படியே ஒளிப்பதிவு செய்த பாலமுரளி ஆகிய மூவரின் பங்களிப்பே ஆகும்.

 

போதைப் பழக்கத்தை கருவாக கொண்ட சிறப்பான திரைக்கதை, கச்சிதமான எடிட்டிங், பின்னணி இசை அசத்தல்

 

http://www.cineulagam.com/eelatamil/reviews-tamil/short-film/100168

 

https://www.youtube.com/watch?v=UlTmAh0ON4A

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.