Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விருது அ.முத்துலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.முத்துலிங்கம்

 

Muthulingam%20(1).jpgவிருது

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன்பலவிதமான பரிசுகளும்விருதுகளும் வழங்கினார்கள்எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான்.

ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள்சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமேநடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர்ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார்அசுர சாதனைநிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான்இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும்பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன்உலகத்திலேயே அதிகசெல்வம் சேர்த்தவர்கள் இந்தத் தம்பதியினர்தான்அதிக கொடை வழங்கியவர்களும் இவர்களேஅவர்கள் சமீபத்தில் சொன்னார்கள்: ‘நீங்கள் ஈட்டிய பொருளைஉங்களுடன் எடுத்துப் போகமுடியாதுஉங்களுடைய அதியற்புதமான மூளை செல்வத்தைப் பெருக்கியிருக்கிறதுஅதே மூளையை ஈகையின் பின்னால்நிறுத்தினால் உலகத்தில் ‘இருப்பவர் - இல்லாதவர்’ என்ற வேறுபாடு வெகுவாக மறைந்துபோகும்.’

மேலே குறிப்பிட்ட விருது வாங்கியவர் நடப்பு வரு டத்தில் எவ்வளவு நன்கொடை வழங்கினார் என விசாரித்தேன்ஒருவருக்கும் தெரியவில்லை.

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

சில காலத்துக்கு முன்னர் படத்துடன் செய்தி வெளியாகியிருந்ததுபிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன் லண்டனில் பொதுமக்களோடு பாதாளரயிலில்சாதாரணமாகப் பயணம் செய்தார்அவருக்கு அமர இருக்கை கிடைக்காததால் நின்றபடியே பயணம் செய்யவேண்டி நேர்ந்ததுஅவருக்குப் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து தூங்கினார்இன்னொருவர் பேப்பர் படித்தார்.பாவம்பிரதமரை யாருமே கவனிக்கவில்லைஒருவரும் அவருக்கு இருக்கைதர முயலவும் இல்லைஒரேயொரு இந்தியப் பெண்மணி அவரை அணுகி ‘நீங்கள் இந்த நாட்டுப் பிரதமரா?’ என்று கேட்டார்அவர்ஆமாம்’ என்றார்அவசரமான ஒரு கூட்டத்திற்கு அவர் சென் றார்காரிலே வீதியில் பயணித்தால் நேரத்துக்குப் போகமுடியாதுஅதுதான் பாதாள ரயிலை தெரிவு செய்ததாகச் சொன்னார்.

நேற்று நான் ரிம்ஹோர்ட்டன் கோப்பிக் கடையின் நீண்ட வரிசையில் நின்றேன்வெள்ளைக் கோட்டு அணிந்துஸ்டெதாஸ்கோப் மாட்டிய ஒருவர் அவசரமாக வந்து வரிசையில் சேர்ந்தார்டேவிட் கமரோனுக்குநடந்தது நினைவுக்கு வந்ததுடொக்டருக்கு என்ன அவசரமோநான் என் இடத்தைக் கொடுத்தேன்அவர் மறுத்துவிட்டார்நான் சொன்னேன். ‘எனக்குப் போதிய நேரம் இருக்கிறதுநான் வேலை இல்லாத ஆள்.உங்களுக்கு நேரம் முக்கியம்.’ அவர் சொன்னார்: ‘நாங்களும் காத்திருக்கப் பழகவேண்டும்நோயாளிகள் எங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அல்லவா?’ நான் அவர் சொல்லைக் கேட்காமல் அவருக்குப் பின்னாலேபோய் நின்றேன்அவர் அதைத்தடுக்க முடியாதல்லவா?  அவர் என்ன துறையில் மருத்துவராக இருக்கிறார் என்று கேட்டேன். ‘பேஸ்மேக்கர் (இருதய முடுக்கிபொருத்துவது’ என்றார்காலையில் இரண்டு பேருக்குஇருதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தியிருக்கிறார்பின் மதியம் கோப்பி குடித்தபின்னர் இன்னொருவருக்கு செய்யவேண்டும் என்றும் சொன்னார்அறுவைச் சிகிச்சை செய்துதான் வழக்கத்தில் இதைப்பொருத்துவார்கள்ஆனால் சமீபத்தில் செய்தித்தாள்களில் ஒரு செய்தி வந்தது. ‘அமெரிக்காவில் அறுவை சிகிச்சை இல்லாமலே ஒரு நுண்ணிய பேஸ்மேக்கரை ரத்தக் குழாய் வழியாக இருதயத்துக்குள் செலுத்திவெற்றிகரமாகப் பொருத்தி விட்டார்களாம்உண்மையா?’ என்றேன். ‘அது சரிதான்அந்தத் தொழில்நுட்பம் விரைவிலேயே கனடாவுக்கும் வந்துவிடும்’ என்றார்.

உங்கள் தொழிலில் பிரச்சினைகள் உண்டா?’ அவர், ‘உயிரோடு இருப்பவர்களால் பிரச்சினை இல்லைஇறந்தவர்களினால்தான் பிரச்சினை’ என்றார்எனக்கு ஆச்சரியம். ‘அது எப்படி இறந்தவர்களினால்பிரச்சினை?’ அவர் சொன்னார்: ‘பேஸ்மேக்கர் பொருத்திய ஒருவர் இறந்ததும் அவரை அப்படியே புதைத்து விடுகிறார்கள்இருதயம் வேலைசெய்வதை நிறுத்திவிடும்ஆனால் பேஸ்மேக்கர் துடித்தபடியேஇருக்கும்மனிதரின் வாழ்நாள் முடிந்தாலும் பேஸ்மேக்கர் அதன் வாழ்நாள் முடியுமட்டும் துடிக்கும்.’

அவர் முறை வந்ததுகோப்பியை வாங்கிக்கொண்டு போனார். ‘இருதயம் கனிந்த வாழ்த்துக்கள்’ என்றேன்திரும்பாமலே கோப்பிக் குவளையை உயர்த்திக் காட்டிவிட்டு மறைந்தார்.

100 டொலர்

கண் வைத்தியரிடம் செல்வதில் சில அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றனஎன்னுடைய கண் வைத் தியர் பிரபலமானவர்யார் சொன்னதுஅவர்தான்ரொறொன்ரோவிலேயே நோயாளிகளால் அதிகம்வேண்டப்படும்உடல்நல சஞ்சிகைகளால் தொடர்ந்து போற்றப்படும் ஒரே மருத்துவர்அதில் சந்தேகமே இல்லைஅவரிடம் காலை 9 மணிக்குப் போனால் 11 மணிக்கு அவருடைய உதவியாளர் உங்களைக்கூப்பிட்டு கண்ணைப் பரிசோதிப்பார். 12 மணிக்கு இன்னொருவர் வேறுவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டு சில குறிப்புகளைப் பதிவார்ஒரு மணிக்கு இன்னொரு பெண்மணி இருட்டு அறையில்கம்ப்யூட்டரில் ஓடும் பச்சை நிற நட்சத்திரங்களை  எண்ணச் சொல்வார்அப்படியும் ஒரு சோதனைஇப்படியாக முன்னேறி 3 மணிக்கு கண்மருத்துவர் என்னைப் பரிசோதிக்கத் தயாராக இருப்பார்பலஅடுக்குகளைத் தாண்டி இப்படிக் காத்திருக்கும்போது காளமேகப் புலவருடைய பாடல் ஒன்று நினைவுக்கு வரும்அவர் சத்திரத்தில் இரவு உணவுக்காகக் காத்திருந்தபோது ஒருமுறை விடிவெள்ளிதோன்றிவிட்டதாம்அப்போது அவர் வயிறெரிந்து பாடிய பாடல் இது:

கத்துக் கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

இலையில் இட வெள்ளி எழும்.

இப்படியெல்லாம் காக்கவைத்து சோதித்து எழுதித் தந்ததுதான் கடந்த 6 மாதங்களாக நான் அணிந்த கண்ணாடிஒரு வாரம் சென்ற பின்னர் கண்ணாடி கடைக்காரரிடம் சென்று ‘இரண்டு இரண்டாகத் தெரியுது.கண்ணாடி சரியில்லை’ என்று சொன்னேன்அவர் நம்பவில்லை. ‘கண்ணாடி புதிதுகண் பழையதுபழகப் பழக சரி வரும்’ என்றார் நடிகர் தனுஷ் சொல்வதுபோலஆனால் சரியாகவில்லையூட்யூப் பார்க்கும்போதுஇரண்டு இரண்டாகத்  தெரிந்ததுவிஜய் நடித்த படம் ஒன்றில் விஜய் நடனமாடினார்இரண்டு விஜய் தெரிந்தனர்நான் இரட்டை வேடம் என்று நினைத்தேன்அப்படியில்லை என்று பின்னர் தெரிந்ததுஒருமுறைமனைவி கடைக்கு சாமான் வாங்கச் சென்றபோது 200 டொலர் கொடுத்தேன்மனைவி ‘இல்லை இது 100 டொலர்’ என்று சொன்னபோதுதான் விசயம் எத்தனை சீரியஸ் என்று புரிந்தது.

மறுபடியும் கண் மருத்துவரிடம் முறைப்பாடு செய்யச் சென்றேன்அன்று அவ்வளவு சனமில்லைகாலை 9 மணிக்கு சென்று மாலை 4 மணிக்கே மருத்துவரைப் பார்த்துவிட்டேன்சிலவேளை இப்படி அதிர்ஷ்டம்அடிப்பதுண்டுமருத்துவரிடம் ‘எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறதுகண்ணாடியில் ஏதோ பிழை’ என்றேன்அவர் மீண்டும் பரிசோதனைக் குறிப்புகளைப் பார்த்தார்என் கண்களின் அளவுகளுக்கும் கண்ணாடிக்கும் சம்பந்தமே கிடையாது. ‘இது எப்படி நேர்ந்தது?’ என்று வியக்கக்கூட இல்லைபுதுவித அளவு கள் எழுதித்தந்து புதுக்கண்ணாடி பெறும்படி சொன் னார்மருத்துவர் வாயிலிருந்து ஒன்றிரண்டுவார்த்தைகள் வரும் என்று  எதிர்பார்த்தேன். ‘தவறு நேர்ந்துவிட்டதுமன்னியுங்கள்.’ அது வரவே இல்லை.

இப்பொழுது புதுக்கண்ணாடி அணிந்து இருக்கிறேன். 100 டொலர் தாள் 100 டொலர் தாளாகவே தெரிகிறதுஎத்தனை பெரிய அதிசயம்கண் மருத்துவ விஞ்ஞானத் தின் அதிவேக வளர்ச்சியை நினைக்கும்போதுபுல்லரிக்கிறது.

கடவுளுக்கு வேலைசெய்பவர்

சில மருத்துவ உப கரணங்களை வாங்குவதற்காக  நானும் மனைவியும் மருத்துவர் பரிந்துரைசெய்த அதே கடைக்குச் சென்றோம்ஆச்சரியமாயிருந்ததுஅங்கே வேலை செய்த அத்தனைபேரும் 70 வயதைத்தாண்டி யவர்களாக இருந்தார்கள்நத்தை வேகத்தில் நடந்தார்கள்ஆமை வேகத்தில் ஆட்களைக் கவனித்தார்கள்ஒருவரு டன் ஒருவர் முகத்துக்கு கிட்ட வந்து ரகஸ்யம் பேசு வதுபோல கதைத்தார்கள்.கம்ப்யூட்டரைத் திறந்து ஒவ்வொரு எழுத்தாகத் தேடி குத்திக் குத்திப் பதிந்தார்கள்சரிஇன்றைக்கு இங்கே அரைநாள் கழியும் என்று மனதுக்குள் நினைத்தபோது ஒரு மூதாட்டி தரையைத் தேய்த்தபடி எங்களிடம்வந்தார்நான் சீட்டைக் கொடுத்தேன்அதிலே எல்லா விவரமும் எழுதியிருந்ததுமூதாட்டி ஒவ்வொரு பொருளாகக் கொண்டு வந்து எங்கள் முன் வைத்தார்சில பொருட்களைப் பூட்டவேண்டும்அவற்றைஎடுத்துச் சென்று பூட்டியபின் மீண்டும் கொண்டு வந்தார்எல்லாம் நிறைவேறி விட்டது.

கடைசியில் பில் போடும் வேலைமூதாட்டி கம்ப்யூட் டரின் முன் உட்கார்ந்து பொருள்களை பதியத் தொடங் கினார்பாதியிலே நிறுத்தி சொன்னார், ‘100 டொலர் களுக்கு மேல் வாங்கினால் 20 டொலர் கழிவு.’நல்லது என்றேன். ‘மொத்தத் தொகை 235 டொலர்’ என்றார்நான் பணத்தைக் கட்டத் தயாரானேன்அவரோ என்னை உற்றுப் பார்த்தபடியே அசையாது அமர்ந்திருந் தார்மறுபடியும் சொன்னார், ‘100 டொலர்களுக்குவாங்கினால் 20 டொலர் கழிவு.’ என் மூளை பிரகாசிக்க வில்லைஅப்படியே நின்றேன்அவருக்குப் புரிந்துவிட்டதுஇந்த மக்கு மனிதருக்கு 10 தடவை சொன்னாலும் புரியாது என்றுஎன்னைப் பார்த்து வாய்க்குக்கிட்டவாக வந்து ரகஸ்யக் குரலில் சொன்னார். ‘பில்லை இரண்டாகப் பிரிக்கலாம்அப்பொழுது உங்களுக்கு இரண்டு 20 டொலர் கழிவு கிடைக்கும்மொத்தம் 40 டொலர்.’ ‘அப்படியாநன்றி’ என்றேன்.

பணத்தைக் கட்டிவிட்டு மூதாட்டியிடம் விடை பெறும்போது கேட்டேன். ‘நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்கம்பனிக்காகவாவாடிக்கையாளருக் காகவா?’

அவர் சொன்னார்! ‘கடவுளுக்காக.’  

நல்ல செய்தி

அமினாட்டா ஃபோர்னா என்பவர் இங்கிலாந்தில் வாழும் ஓர் ஆப்பிரிக்க எழுத்தாளர்இவரைப் பத்து வருடங்களுக்கு முன்னர் நேர்காணல் செய்திருக்கிறேன்இவர் எழுதிய புத்தகம் The Devil that Danced on Water.இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்ததுஅதற்குப் பல காரணங்கள்இந்த நாவலின் கதை நிகழ்ந்த இடம் சியாரா லியோன்அங்கே நான் வாழ்ந்த காலத்தில் நடந்த கதைஇந்த நாவலில் எழுதப்பட்ட ஒவ்வொருவசனமும் செதுக்கப்பட்டிருக்கும்முதல் நாவல் என்ற படியால் ஆசிரியர் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத் தார்அதன் பிறகு 3 நூல்கள் எழுதினார்அவை என் மனதை அவ்வளவாகக் கவரவில்லை.இப்பொழுது கொரேசியா நாட்டின் பின்னணியில் இவர் எழுதிய The Hired Man என்ற நாவல் வெளிவந்திருக்கிறதுஇதை மின் நூலாக வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்இன்னும் முடிக்கவில்லைஇன்றுசெய்தி படித்தேன் இவருக்கு Windham - Campbell Award அமெரிக்காவில் கிடைத் திருக்கிறதுபரிசுத் தொகை 150,000 டொலர்ஓர் எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய தொகைஅவருக்கு உடனேயே வாழ்த்துக்கடிதம் போட்டேன்பதில் கிடைத்திருக்கிறதுஎனக்கே பரிசு கிடைத்ததுபோல மகிழ்ச்சியாக உள்ளது.

நேரமில்லை

Muthulingam%20(2).jpgஒரு கவிஞரைச் சந்தித்தேன்பல வருடங்களுக்கு முன்னர் அருமையான கவிதைகள் எழுதிப் பாராட்டப் பட்டவர். ‘ஏன் இப்போழுதெல்லாம் கவிதைகள்எழுதுவதில்லை?’ என்று கேட்டேன். ‘நேரமில்லை’ என்று சொன்னார்.

சில கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படிக்கலாம்ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாக ஏதாவது மனதிலே தோன்றும்.  சமீபத்தில் வெளியான சில்வியாபிளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பை தமிழில் படித்தேன்கீதா சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். ‘ரயில் ஒரு கோடாக மூச்சு விடுகிறது’ என்றவரி ஆங்கிலவரியிலும் பார்க்க சிறப்பாக அமைந்திருப்பதாக எனக்குப் பட்டதுபலமுறை படிக்கலாம்

ஹைக்கூ ஜப்பானிய வகைக் கவிதைசொல்ல வேண்டியதை 18 அசைவில் சொல்லி முடித்துவிட வேண்டும். 300 வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டகவிதை வகைப்பாடு இன்று உலகம் முழுக்கப் பரவிவிட்டதுஅந்தக் காலத்து ட்விட்டர் என்று இதைச் சொல்லலாம்ஐரோப்பிய கவுன்சில் என்பது 28 நாடுகளின்பிரதம மந்திரிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது. 28 நாட்டுத் தலைவர்களுக்கும் ஒரு தலைவர் உண்டுமுன்னாள் பெல்ஜியம் நாட்டுப் பிரதம மந்திரி ஹேர்மன்வான்ரோம்பு இந்தக் கவுன்சிலுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்இத்தனை பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தாலும் இவர் ஹைக்கூ கவிதைஎழுதுவதை நிறுத்தவில்லை. ’பிஸியாக இருக்கிறேன்’ என்று இவர் சொன்னதே கிடையாதுஇதுதான் இவர் எழுதிய கவிதை:

வேலையில் மூழ்கியுள்ளேன்

கோதுமை அதே சமயம் வளர்கிறது

இன்னும் உயரமாக.

எனக்கு நேரமில்லை’ என்று சொல்லும் தமிழ்க் கவிஞருக்கு இதைப் படிக்கக் கொடுக்கவேண்டும்.

பணக்காரன்

என்னுடைய வங்கிக்குப் போனேன்யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார்நெஞ்சு சட்டையில் ‘பயிலுநர்’ என்று குத்தியிருந்ததுவங்கி நடப்புகளைப் பயில்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார்இவர்பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன்என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார்எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்றுநினைக்கிறேன்பளிச்சென்று எல்லா பற்களும் மின்னினஎன்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார்அவர் சொல்லு வார், ‘ஐயாஎல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்ய  வேண்டும் என்றஅவசியமில்லைஎதற்காக மெனக்கெட வேண்டும்எந்த எந்தப் பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.’ இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்றுபட்டது.

உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?’ ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்ச ரிப்பதுபோலகனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்திச் சொன்னார். ‘உங்கள் பெயர்தெரியவில்லையே?’ என்றேன்அவர் ‘அநுபமா’ என்றார்பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாதுநிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில்குத்தலாம்அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும்.

அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம்இந்தியாமலேசியாசிங்கப்பூர்சீஷெல்ஸ் ஆகவும் இருக் கலாம்ஆனால் அவர் புன்னகையைப் பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோதுஇலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்கவைத்தது. ‘ஒரு காசோலை வந்திருக்கிறதுஅதை வங்கியில் என் கணக்கில் கட்ட வேண்டும்’ என்றேன். ‘சரிமிக்க மகிழ்ச்சியுடன்’ என்றுசொன்னார்உடன் அட்டையை மெசினுள் நுழைத்துஎன் கடவு எண்ணையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன்அதைப் பெற்றவர் பல்வைத்தியருக்கு தலையை உயர்த்துவதுபோல உயர்த்திகாசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார்அதன் பின் பக்கத் தில் கையொப்பம் வைக்கச் சொன்னார்வைத்தேன்கம்ப்யூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார்நகங்க ளில் பொய் நகம் ஒட்டிநீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்துவைத்துப் பதிந்தார்பின்னர் எழுந்து நின்று சறுக்குவதுபோல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டார்மறுபடியும் இருக்கைக்குத் திரும்பிசாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார்.

நான் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன்என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்ததுநான் கொடுத்த காசோலை 2500 டொலர் மட்டுமேஅவர் வரவுவைத்தது 25,001 டொலர்காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டொலரைக் கணக்கில் சேர்த்திருந்தார்திரும்பவும் அவரிடம் போனேன்குனிந்த தலையை நிமிர்த்தாமல்கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். ‘இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்’ என்றேன்ரசீதைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லைபிழையை சுட்டிக் காட்டினேன்பள்ளிச் சிறுமிசெய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார்.

பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றைத் தந்தபோது ‘மன்னிக்கவும்’ என்றார். ‘நான் ஏன் மன்னிக்கவேண்டும்நன்றியல்லவா சொல்லவேண்டும்’ என்றேன்அவர் ஒன்றுமே சொல்லாமல்அழகாகச் செதுக்கப்பட்ட புருவத்தைஅதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமே என்பதுபோல  உயர்த்தினார். ‘இன்று நான் பணக்காரனாகியிருந்தேன்ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன்பணக்காரன்தானே’ என்றேன்அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டொலர் பெறுமதியான புன்னகை.

ஓவியங்கள்ஞானப்பிரகாசம் ஸ்தபதி

 

leftcurve.gif

http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=6549

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவங்கள்.

 

இன்று காலையில் இதைப் படிக்க வந்து இடைக்கிடை அங்கே , இங்கே என்று ஓடி ஒருமாதிரி மதியத்துக்கு மேல் படித்து முடித்து விட்டேன்...! :)

 

நன்றி பெருமாள்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.