Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை, காரைநகர் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கடும் விசனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஓமந்தை, காரைநகர் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கடும் விசனம்!

 

 

America-300x225.jpgகடந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட நிலைமை குறித்து அமெரிக்கா தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றது. அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியளிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நிகழ்ச்சியானது கடந்த வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சி தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பங்குபற்ற வந்தவர்களின் மீதான மிரட்டல் மற்றும் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த ஊடகவியலாளர் ஒருவர் மீதான அச்சுறுத்தல் உள்ளடங்கலாக நாடெங்கிலும் உள்ள ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களின் காரணமாக இறுதியில் கைவிடப்பட்டது.

மே மாதம் முதல் இலங்கையில் கைவிடப்பட்ட மூன்றாவது பயிற்சி அமர்வாக இது இருக்கின்றது.

பயிற்சியில் கலந்து கொண்ட பங்குபற்றுனர்களுக்கு ஆபத்து விளைவிப்பதாக அச்சுறுத்தல் விடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளினால் இதற்கு முந்தைய பயிற்சி அமர்வுகளுக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தற்போதும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு வழங்குவதற்கோ அல்லது அச்சுறுத்தலை மேற்கொள்பவர்கள் மீதான நடவடிக்கை எடுப்பதற்கோ பொலிஸார் முன்வரவில்லை.

காரைநகர் கடற்படைத் தளத்தில் இலங்கை கடற்படையில் கடமையாற்றுபவர்களினால் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இலக்காக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜூலை மாதம் 25ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகள் குறித்த செய்திகளை தெரிந்து கொள்ளச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து நாம் மிகுந்த விசனத்தை வெளியிடுகின்றோம்.

இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் கூடுவதற்கான சுதந்திரம் தொடர்பில் தடங்கலை விளைவிப்பவர்கள் தொடர்ந்தும் தண்டனையில் இருந்து தப்பி வருகின்றமை இந்த நிகழ்வுகளால் தொடர்கின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் என்பவற்றிற்கு எமது கரிசனையை நாம் வெளியிட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களினதும், இலங்கையில் உள்ள அனைவரினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

http://tamilleader.com/?p=38211

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி.... எத்தனை நாடு, எத்தனை தரம், எத்தனை வருசமாய்.....

விசனம் தெரிவித்ததை தமிழன் காலங்காலமாக.... பார்த்து விட்டான்.
ஏதாவது...... உருப்படியாய் செய்யிறதாய் இருந்தால், செய்யுங்க.
இல்லாவிட்டால்..... கடுபேத்தாமல், சும்மா இருங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.