Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
நல்லூர் கந்தன் ஆலயத்துக்குள் மேலங்கியுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட பொலிஸாருக்குத் தடை! 
[Tuesday 2014-07-29 08:00]
nallur-200-news.jpg

நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்கள் மற்றும் திருட்டுக்களைத் தடுப்பதற்காக இம்முறை அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் மேலங்கியுடன் ஆலயத்திற்குள் செல்வதற்கு இம் முறை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத் திருவிழா இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக் கால முன்னேற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கூட்டம் மாநகர சபையில் நேற்று மாலை நடைபெற்றது.

  

இதன் போது திருவிழாக் காலங்களில் ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்கள் - குறிப்பாக பெண்கள் - கலாசார உடைகளை அணிவதன் அவசியம் குறித்தே பலராலும் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு விசேட உற்சவ தினங்களின் போது அடியவர்களுக்கு ஏற்படுகின்ற அசெளகரியங்களைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் ஆலயச் சுழலிலும் ஆலயத்தை அண்மித்த பிரதேசங்களிலும் இடம்பெறுகின்ற திருட்டுக்களைத் தடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. அடியவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் இம்முறை கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார் என மாநகர முதல்வர் தெரிவித்தார்.

உற்சவ காலத்தின் விசேட தினங்களில் ஆலயத்திற்குள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் மேலங்கியுடன் கடந்த முறை ஈடுபட்டனர் எனவும் இதற்குப் பலரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இம்முறை மேலங்கியுடன் பொலிஸாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113979&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

914-2.jpgMRNK123.jpg

 

நல்லூர் கந்தன். மகிந்தவின்ரை மேலாடையையே....கழட்ட வைத்தவன்,

அத்துடன்.... கந்தன், காட்சியளிப்பதும் கோவணத்துடன் தான்...
பொலிஸ்காரனுக்கு மட்டும்.... மேலாடை கேட்குதோ.....

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமக்கந்தனுக்கு வந்தநிலை

விரைவில் நல்லூர்க்கந்தனுக்கும் வரும்...... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமக்கந்தனுக்கு வந்தநிலை

விரைவில் நல்லூர்க்கந்தனுக்கும் வரும்...... :(  :(  :(

கதிர்காம கந்தன் நிலை நல்லூர் கந்தனுக்கு வராது ஏனெனில் அவர் இருக்கும் இடம் சூடு சொரணை உள்ள மக்கள் வாழும் இடம் ஆகையால் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.