Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்தை மேசையில் காத்­தி­ருந்தும் அர­சாங்கம் சமு­க­ம­ளிக்­க­வில்­லை : சம்­பந்­தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்தை மேசையில் காத்­தி­ருந்தும் அர­சாங்கம் சமு­க­ம­ளிக்­க­வில்­லை : சம்­பந்­தன்
 
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு அர­சாங்­கமே பொறுப்பு. மூன்று தினங்கள் பேச்­சு­வார்த்­தைக்­காக சென்று நாம் காத்­தி­ருந்த போதும் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை மேசையை தவிர்த்­தி­ருந்­தது என பி.பி­.சி­.யிடம் தெரி­வித்­துள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், அர­சாங்கம் தெளிவுத் தன்­மை­யு­டனும் இத­ய­சுத்­தி­யு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு முன்­வந்தால் நாம் அதற்கு தயா­ராகவே இருக்­கின்றோம் என்றும் ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் எந்த வித­மான குந்­த­கமும் ஏற்­ப­டா­து நியா­ய­மான நிரந்­த­ர­மான மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய தீர்­வு­களை முன்­வைத்தால். அதனை கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறி­யுள்ளார்.
R.-Sampanthan1_4.jpg
பேச்­சு­வார்த்தை முறி­வ­டைந்­த­மைக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே கார­ண­மென ஜனா­தி­பதி முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு தொடர்­பி­லேயே சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு பி.பி.­சி­.யிடம் தெரி­வித்­துள்ளார்.
 
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;
 
2011 ஜன­வரி மாதத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடையில் பேச்­சு­வார்த்தை ஆரம்­ப­மா­னது. இதன்­போது எப்­ப­டி­யான தீர்­வுகள் எதிர் பார்க்­கப்­ப­டு­கின்­றன என்­பது குறித்து நாம் அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறி­னோம். அது மாத்­தி­ர­மின்றி அர­சியல் தீர்வு தொடர்­பி­லான எமது நிலைப்­பா­டு­களை எழுத்து வடி
விலும் அர­சாங்­கத்­திற்கு சமர்­ப்பித்­திருந்தோம்.
 
எமது எழுத்து வடிவக் கோரிக்­கைக்கு பதி­லொன்றை பெற்று தரு­வ­தாக அர­சாங்கம் கூறி­யி­ருந்த போதும் அதனை தர­வில்லை.
 
இதன்­பின்னர் இடம் பெற்ற பேச்­சு­வார்த்தையின் போது பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­பட்டு 5 மாதங்கள் கடந்­து­விட்­ட­தையும் இதன்­போது 7 தட­வைகள் கூடி பேசப்­பட்டு விட்­ட­தா­கவும் அர­சாங்­கத்­திற்கு சுட்­டிக்­காட்­டிய நாம் எமது எழுத்து வடி­வி­லான கோரிக்­கைக்கு இன்­றைய பேச்­சின் போது பதில் தர­வேண்டும் என்றும் இல்­லா­விட்டால் அடுத்த பேச்­சு­வார்த்தை குறித்து திக­தியை தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் கூறினோம். எனினும் அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் கிடைக்­கப்­பெ­றா­ததனால் அன்­றைய தினம் திகதி குறிப்­பி­டப்­ப­டாத வகையில் பேச்­சு­வார்த்தை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
 
இதன்­பின்னர் 2011 செப்டெம்பர் 02 ஆம் திகதி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ என்னை அழைத்­தி­ருந்தார். அதன் போது எமக்­கி­டையில் இடம் பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது எமது நிலைப்­பா­டு­களை மீண்டும் வலி­யு­றுத்­தினோம் . முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ரண­சிங்க பிரே­ம­தாஸ, சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ரது ஆட்சி காலங்­களின் போதும் உங்­க­ளது (ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ ) காலத்­திலும் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமை­வாக தயா­ரிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை பேச்­சு­வார்த்தை மேசையில் சமர்ப்­பிக்கும் பட்­சத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் பேசு­வ­தற்கு தயார் என்­பதை தெரி­வித்தோம்.
 
இதன்­பின்னர் 2011 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 11 திகதி பேச்­சு­வார்த்தை மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அன்­றைய தினம் அடுத்த பேச்­சு­வார்த்­தையை ஜன­வரி மாதம் 17, 18 இ 19 ஆகிய தினங்­களில் முன்­னெ­டுப்­ப­தாக­வும் இணங்­கப்­பட்­டது. எனினும் மேற்­படி தினங்­களில் நாம் பேச்­சு­வார்த்­தைக்கு சென்­றி­ருந்தோம்.ஆனாலும் இந்த மூன்று தினங்­க­ளிலும் அரச தரப்­பினர் பேச்­சு­வார்த்தை மேசைக்கு வர­வில்லை. இதுவே பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு கார­ண­மா­னது. இதன்­பின்னர் 2012 மே மாதம் மீண்டும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தற்கு உடன்­பாடு எட்­டப்­பட்­டது. அதுவும் அர­சாங்­கத்­தி­னா­லேயே மீறப்­பட்­டு­விட்­டது . ஆகவே பேச்­சு­வார்த்தை முறி­வ­டை­வ­தற்கு அர­சாங்­கமே பொறுப்பு.
 
மேலும் 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனா­தி­பதி இ பிர­தமர் இ பாது­காப்பு செய­லாளர் மற்றும் அர­சாங்­கத்­தி­லுள்ள பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் என சக­லரும் வெவ்­வேறு வித­மான கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ளனர். இவ்­வா­றான நிலைப்­பா­டு­க­ளு­டைய அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் நம்­பிக்கை கொள்ள முடி­யாது. மேற்­படி தெரி­வுக்­கு­ழு­வில் 31 அங்­கத்தவர்­கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் அதில் எமது தரப்பில் மூன்று முதல் நான்கு உறுப்­பி­னர்­களே பங்­கேற்க முடியும் .
 
எம்மை பொறுத்த வரையில் நாம் பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆனால் நடை­பெறும் பேச்­சு­வார்த்தை தொடர்பில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். தெளிவு இருந்தால் மாத்­தி­ரமே அதனை எம்­மால்­ஏற்றுக் கொள்ள முடியும். அதே­போன்று அர­சாங்­கத்­திடம் நியா­யமும் நேர்­மையும் இருப்­ப­துடன் வார்த்தை ஒன்­றாக இருக்க வேண்டும். ஒன்­று­பட்ட இலங்­கை நாட்­டிற்குள் எந்த வித குந்­த­கமும் ஏற்­ப­டாமல் நியா­ய­மான நிரந்­த­ர­மான நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய அரசியல் தீர்வொன்றையே நாம் கேட்கின்றோம். எமது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி நன்றாகவே அறிந்திருக்கின்றார். ஆகவே அரசாங்கத்திடமிருந்து திருப்பம் வரவேண்டும்.
 
மேலும் எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் மூன்று மொழிகளிலுமே கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.அண்மையில் பாராளுமன்றத்தில் கூட என்னால் ஆங்கிலத்தில் ஆற்றப்பட்ட உரை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. ஆகவே தமிழ் மொழியில் மாத்திரம் நாம் அறிக்கையிட்டு வருவதாக கூறுவதை ஏற்கமாட்டோம் என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சர்வதேச அக்கறையால் ஒருவேளை தமிழருக்குச் சார்பாக வெண்ணை திரண்டுவிடக்கூடும் என்கிற பயத்தில் தலைவர் சம்பந்தன் அவர்களைக்  கோபப்படுத்தி தயிர்ச் சட்டியை உடைக்கப்பார்க்கிறார். இதுவரை தலைவர் சம்பந்தன் சர்வதேச சமூகத்தை அனுசரித்து மகிந்தவுக்கு இடம் அளிக்காமல் மிகவும் நிதானமாகவே சதுரங்க காய்களை நகர்த்துகிறார்.

 

இதுபோன்ற தருணங்களில் தென் சூடான், எரிதிரியா கொசோவோ கிழக்கு தீமோர் தலைவர்கள் காட்டிய நிதானத்தை சம்பந்தன் அவர்கள் இறுதிவரை முன்மாதிரியாகக் கொள்ளவேன்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை விட சிங்களம் சாதுரியமாக கூட்டமைப்பை பேய்க்காடுகிறார்கள் என்பதும் விளங்குகிறது. சிங்களவர்களின் காலத்தை கடத்தும் கைங்கரியத்தை பல காலமாக பலருடன் வெற்றிகரமாக செயற்படுத்துகிறார்கள். அதனை கூட்டமைப்பு உடைக்குமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.