Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்!

Featured Replies

சீமானுக்கு முதலே.. பல ஈழத்து பொருளாதார தடைகளை அந்த தமிழக சாதாரண மக்களின் பங்களிப்புகள்தான் தகர்த்தன. 

அங்கே தமக்கான உணவு அட்டைகளில்கூட பொருட்கள் வாங்கி பங்களித்தவர்களைப்பற்றி அப்போது கேள்விப்பட்டேன்.

 

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் போராட்டத்திற்கு எப்படியான வரவேற்பு இருந்தது.

அவர் எவ்வளவு உதவிகளைச் செய்தார்_

அதற்காக அவர் பாடலை எடுத்தாரா? கொடியை பயன்படுத்தினாரா? உண்டியல் குலுக்கினாரா... 

அல்லது ஈழத்து போராட்டத்தில் தனது மூக்கை நுழைத்துக் கொண்டாரா?

 

தமிழ்நாட்டு அரசியலோடு நின்று கொண்டு எமக்கான ஆதரவை தந்து கொண்டிருந்தார்.

இதைத்தானே சீமானிடம் எதிர்பார்க்கிறோம்...

இது இவரால் முடியாது... ஏனெனில் இவரது முகவரியே இதுதானே?!  :wub:  :o  :lol:

அண்ணா எம் ஜி ஆர் முதலமைச்சர் ,பெரிய கட்சி பெரிய புள்ளி .............காசை விட்டெறிந்தார் / :D
 
ஆனால் சீமான் ஒரு தொண்டர் .எதுவும் அவரிடம் இல்லை ,ஆனால் எமக்காக எதோ செய்து கொண்டிருக்கிறார் ......................இசை சம்பந்தமாக     ஒரு பாடல் செய்வதற்கே பணம் இல்லை என்றால் அந்த விடயம் நகராது ,,,,,,,,,,,,,,,,அப்பிடி இருக்க ????? :o  :lol:
 
இப்பிடியெல்லாம் ஏன் சார் எங்களால சிந்திக்க முடியல  :o  :wub:  :D
  • Replies 61
  • Views 5.6k
  • Created
  • Last Reply

அப்படி சொல்லாதீங்க சார்.. உலகம் சுற்றும் படம் எடுக்கிறபோது அவரது வீடு தோட்டம் எல்லாம் அடைவிலதான் இருந்தது. 
அதை சமாளித்து படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்கத்தான், சந்திரகலா என்ற நடிகைக்கு தன்னுடன் இணையாக நடிக்க முதன்முறையாக சந்தர்ப்பம் வழங்கியதாக அப்போது 'கிசுகிசு'க்கள் அடிபட்டன.

எதுவும் அவரிடம் இல்லை என்று சொல்லாதீங்க...
செயல்வீரர்களை எல்லாம் நாடி வரும்!!  :o  :lol:

அப்படி சொல்லாதீங்க சார்.. உலகம் சுற்றும் படம் எடுக்கிறபோது அவரது வீடு தோட்டம் எல்லாம் அடைவிலதான் இருந்தது. 

அதை சமாளித்து படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்கத்தான், சந்திரகலா என்ற நடிகைக்கு தன்னுடன் இணையாக நடிக்க முதன்முறையாக சந்தர்ப்பம் வழங்கியதாக அப்போது 'கிசுகிசு'க்கள் அடிபட்டன.

எதுவும் அவரிடம் இல்லை என்று சொல்லாதீங்க...

செயல்வீரர்களை எல்லாம் நாடி வரும்!!  :o  :lol:

நன்றி அண்ணா தகவலுக்கு  :lol:

 

 

நானும் எம் ஜி ஆர் பக்தன் என்பதயும்  அக்கு வேர் ஆணி வேராக சொல்கிறேன் சேர் .. :D  :lol:

பாரிவேந்தர் என்று ஒருவர் இருக்கிறார் என்பது இந்தப் பிரச்சினைக்குப் பின்னால்தான் எனக்குத் தெரியும். உங்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். சீமானுக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியாமல் இருந்திருக்கலாம்.

முன்பு புலிகளை எதிர்த்தவர்கள் பலர் இப்போது இளக்கமாகி வருகிறார்கள். உதாரணம் ஜெயலலிதா. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாரிவேந்தர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பாளராக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் விமர்சனத்தை வைத்துப் பார்க்கும்போது எதிர்ப்புப் படம் எடுக்கவில்லைஎன்பது புரிகிறது. ஆனால் விடயத்தை வைத்து பணம் பார்க்க முயன்றிருக்கிறார்கள் (சினிமாவில் இது வாடிக்கைதானே).

பழைய விடயத்திற்காக எதிர்ப்பதாக இருந்தால் சீமான் ஜெயாவுக்கு வாக்கு சேர்த்ததே தவறு. ஆனால் அது தவறல்ல என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்திவிட்டன்.

ஆகவே முன்பு பகையாளியாக இருந்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பது எனது வாதம் சட்டவாளர் துளசி அவர்களே... :D That's all your honour..! :lol:

அண்ணா,

சீமான் அண்ணா இசை வெளியீட்டிற்கு சென்ற பின்னர் பாரிவேந்தர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்னரேயே புலிப்பார்வை என்றொரு படம் பாலச்சந்திரன் போராளி சீருடையணிந்த படி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது என்ற செய்தி முகநூலில் வரும்போது பாரிவேந்தர் பற்றிய காணொலியும் வந்து நான் அதை பகிர்ந்திருந்தேன்.

பாரிவேந்தர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும். ஆனால் படத்தை திருத்தியமைத்த பின்னர் அது சரியாக உள்ளதா என அனைவரும் உறுதி செய்த பின்னர் இசை வெளியீட்டிற்கு சீமான் அண்ணா சென்றிருந்தால் பல பிரச்சினைகள் வந்திருக்காது.

முன்னரேயே இசை வெளியீட்டிற்கு சென்றமை, இசை வெளியீட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் தாக்கப்படுகையில் சீமான் அண்ணா தடுக்காமல் அமைதியாக இருந்தது, கண்டனம் தெரிவிக்காமல் இருந்தது போன்றன தான் சீமான் அண்ணாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

மாறன் என்ற மாணவன் கூறுவதை நான் நம்புவதில்லை. அவர் தி.மு.க வை சேர்ந்தவர். போன வருட மாணவர் போராட்டத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியவர். ஆனால் சிவப்பிரியன் செம்பியன் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கருத்து கூறும் நிலை புலிப்பார்வை இசை வெளியீட்டில் இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்டு விட்டது. அதன் பின் பலர் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகியிருந்தார்கள்.

அதே நேரம் கத்தி படம் தொடர்பான பேட்டியில் மாணவர்கள் 2 நாள் போராடுவார்கள். பின்னர் போய் விடுவார்கள் என்றெல்லாம் சீமான் அண்ணா கூறிய கருத்து நாம் தமிழர் கட்சிக்கும் மாணவர்களுக்கும் விரிசலை ஏற்படுத்தி விட்டது.

அருகில் இருந்து போராடியவர்கள் ஒன்றொன்றாக விலகுவது, ஆதரவு கொடுத்தோர் கொடுத்த ஆதரவை நீக்குவது போன்றன நேரடியாக நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவன.

 

இதை கேட்டால் சீமானே விழுந்து விழுந்து சிரிப்பார்.
நீங்கள் அதிகம் தமிழ் சினிமா பார்க்கும் ஆள் போல உள்ளது. அது தான் ஒரே பாட்டில் பெரிய ஆள் ஆவது போல ஒரே தேர்தலில் சீமான் வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள். 
எமது போராட்டத்தையும் பலர் சினிமா போல பார்க்க வெளிகிட்டுதான் இப்ப இந்த நிலமையில நிக்கிறம்.

 

 

அதிமுக கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் ஒரேயொரு (முதலாவது) இடைத்தேர்தல்... அடுத்தது ஒரே தேர்தல் தமிழ்நாட்டில்... பிறகு சாகும்வரை அவர்தான் தமிழக முதல்வர்... 

 

அவர்தான் எம்ஜிஆர்.

 

சினிமாவை விட்டு வெளிய வாங்க... உங்களால் நம்ப முடியாதவைகளை சினிமா என்று கொச்சைப்படுத்தும் மனநிலையில் இருந்து மீளுங்கள்!!  :o  :lol:

நன்றி அண்ணா தகவலுக்கு  :lol:

 

 

நானும் எம் ஜி ஆர் பக்தன் என்பதயும்  அக்கு வேர் ஆணி வேராக சொல்கிறேன் சேர் .. :D  :lol:

அவசரத்தில் உலகம் சுற்றும் வாலிபனில் வாலிபன் தவறிவிட்டது... மன்னிக்கவும்.. அவரு வாலிபந்தான்!! 

எந்த நம்பிக்கைகளையும் அவர் இழக்கவில்லை .

ஈழத்தமிழனாக ..சிந்திக்கிறேன்

எந்த ஒரு அமைப்பும் அது ஐ நாவாக இருந்தாலும் சரி லைக்காவாக இருந்தாலும் சரி லிபராவாக இருந்தாலும் சரி சிறிலங்காவின் அனுசரணை இன்றி எம் மக்களுக்கு உதவும் ஓர் சூழல் தற்போது இருக்கின்றதா

??

இந்த சர்ச்சைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி அதன்பின் தீர்வு காண்பது தவறான விடயமா ,அல்லது அது எம் கௌரவத்திற்கு இழுக்கா? [ தமிழீழ விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்காக சிறி லங்காவின் ஹெலிகொப்டர்களை பயன் படுத்தியதை நினைவில் கொண்டு ]

திராவிடமே தலை எடுத்துள்ள தமிழகத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஓர் மீண்டும் தமிழர்களின் ஆதிக்கத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தப்படுவது பிழையா ???

உண்மையாக செயல் வடிவம் கொடுப்போர் எதுவும் சீமானுக்கு இது வரை சொல்லாத நிலையில் செயல் வடிவம் கொடுக்க விவஸ்தை இல்லாதவர்கள் தங்கள் சிந்தனைக்கமைய கருத்துக்களை எழுதுவது எவ்வகையில் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் ::???

எம் புதல்வன் பாலச்சந்திரனின் திரைப்படம் சம்பந்தப்பட்ட மிகையான காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அங்கு சென்று அதை மேலும் வலு சேர்க்கும் முகமாக செயல்பட்ட சீமான் பிழையா?? .அல்லது அங்கு செல்லாமல் படம் முழுமையாக வெளி வந்தபின் அதை எதிரித்து போராடவேண்டும் என்று நாம் நினைப்பது பிழையா ???

ஒட்டு மொத்தத்தில் 2009 இற்கு பிறகு சீமானின் யதார்த்தமான செயல்பாட்டால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் எப்பிடி பார்க்கின்றோமோ அதேபோல இந்த இரு திரைப்படங்களும் யதார்த்தமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் சிந்திப்பது பிழையா :???

இவற்றைத்தான் சீமான் அங்கே மிக தெளிவாக கூறியுள்ளார் .இதுவரை எந்த விதமான துரோகத்தனமான செயலோ ,சொல்லோ அதில் காணப்படவில்லை ..........

சரி கொஞ்சம் மேலே கேட்கிறேன் .இவற்றை பற்றி விமர்சிக்க எமக்கு என்ன உரிமை இருக்கு ஏனனில் எங்கும் லைக்கா எதிலும் லைக்கா என்று வாழ்ந்து கொண்டிருந்து கொண்டு நாய்க்கூட்டம் போல சீமானை பார்த்து கேள்வி கேட்க எமக்கு என்ன உரிமை இருக்கு .கொஞ்சம் டெண்ட்சன் ஆகாமல் யோசியுங்க தாயி .......... :D

உங்கள் நம்பிக்கையை சீமான் அண்ணா இழக்கவில்லை. ஆனால் கூட இருந்து ஆதரவு கொடுத்தோர் பலரின் நம்பிக்கையை இழந்து விட்டார்.

இங்கே லைக்காவை பற்றி நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நாமே லைக்காவை பயன்படுத்திக்கொண்டு சீமான் அண்ணாவை கேள்வி கேட்க எமக்கு தகுதியில்லை. தனியே கத்தி படம் தொடர்பாக கொடுத்த பேட்டி பற்றியே எழுதியிருக்கிறேன்.

அதே போல் புலிப்பார்வை படம் திருத்தியமைக்கப்பட்டு சரிபார்க்கப்பட முன் இசை வெளியீட்டிற்கு சென்றது பிழை.

ஈழ உறவு என்ற ரீதியில் நீங்கள் சிந்திக்கிறீர்கள். அதே போல் நான் சிந்திப்பதால் தான் எமக்காக யார் நல்லது செய்திருந்தாலும் அதை யாழிலும் முகநூலிலும் பகிர்கிறேன். இப்பொழுது கூட புலிப்பார்வை படம் தொடர்பான அவர் நடவடிக்கையை விமர்சனம் வைக்கிறேனே தவிர சீமான் அண்ணாவின் போராட்டங்களை மதிக்கிறேன் என்றே கூறியிருந்தேன்.

உண்மையாக செயல்வடிவம் கொடுத்தோர் ஒவ்வொன்றாக விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் செயல் வடிவம் கொடுக்க விவஸ்தையற்ற நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். :o

Edited by துளசி

உண்மையாக செயல்வடிவம் கொடுத்தோர் ஒவ்வொன்றாக விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் செயல் வடிவம் கொடுக்க விவஸ்தையற்ற நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். :o

யாரும் விலகவில்லை ...............செயல்வடிவம் மிக நேர்த்தியாக நடந்துகொண்டிருக்கு ...........ஒ ..நீங்க எழுதுபவர்களை சொல்றீங்களா  :(

யாரும் விலகவில்லை ...............செயல்வடிவம் மிக நேர்த்தியாக நடந்துகொண்டிருக்கு ...........ஒ ..நீங்க எழுதுபவர்களை சொல்றீங்களா :(

இந்த திரியில் நான் எழுதிய கருத்துகளை ஒழுங்காக வாசிக்காமலா பதில் எழுதுகிறீர்கள்? :o

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக அருகில் நின்று செயல்வடிவம் கொடுத்தவர்கள் ஒவ்வொன்றாக அவரை விட்டு விலகுகிறார்கள் என்று குறிப்பிட்டேன்.

இந்த திரியில் நான் எழுதிய கருத்துகளை ஒழுங்காக வாசிக்காமலா பதில் எழுதுகிறீர்கள்? :o

சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக அருகில் நின்று செயல்வடிவம் கொடுத்தவர்கள் ஒவ்வொன்றாக அவரை விட்டு விலகுகிறார்கள் என்று குறிப்பிட்டேன்.

இந்த விடயத்தில் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன் .சோலி அதிகம் உள்ளது நன்றி வணக்கம்  :D

நானும் இத்திரியிலிருந்து விடைபெறுகிறேன்.

பின்னுக்கு போயிருந்த இந்த திரியை யாரோ கள உறவு கருத்து போட்டு முன்னுக்கு கொண்டுவந்து விட்டதால் தான் தேவையில்லாமல் நாமும் கருத்து வைத்து இந்த திரியை நீட்டி விட்டோம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியே சுத்த வேஸற்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.