Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரகாசன் தலைமையில் நடைபெறும் இரகசிய கலந்தரையாடல் நிகழ்விற்கு சென்ற மாணவர்கள் விரட்டியடிப்பு!

Featured Replies

ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவரான சந்திரகாசன் தலைமையில் சென்னை மைலாப்பூரில் நடைபெற்று வரும் இரகசிய கலந்துரையாடலிற்கு சென்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினைச் சேர்ந்த மாணவர்களை விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து மாணவர் தரப்பில் இருந்து அறிந்த போது...

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கான கலந்துரையாடல் மைலாப்பூரில் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்று என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கு உள்ளே சென்றோம். அப்போது அங்கு காவல்துறை பாதுகாப்புடன் இரகசிய கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எங்களை கண்டதும் அங்கிருந்தவர்களது முகங்கள் இறுக்கமானதை அவதானிக்க முடிந்தது. எங்கள் பிரச்சினை குறித்து எங்களது மக்களுடன் கலந்துரையாடலை நடத்துகின்றோம். இங்கு உங்களுக்கு வேலையில்லை என்று கூறி விரட்டியடித்துள்ளார்கள். காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றுவரும் இந்த இரகசிய கலந்துரையாடலிற்கு சந்திரகாசன் தலைமைதாங்கி வருகின்றார் என மாணவர்கள் சற்றுமுன்னர் எம்மை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

விரட்டியடிக்கப்பட்ட மாணவர்கள் அங்கேயே இருந்து கடும் முயற்சியெடுத்து என்னவிடையம் தொடர்பாக கலந்துரையாடல் நடக்கின்றது என்பதை அறிந்துள்ளார்கள். அவர்கள் கூறிய விடையம் அதிர்ச்சியாக உள்ளது.

இனப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரனைக் குழு தனது விசாரனைகளை ஆரம்பிக்க உள்ளது. அதற்கு சிங்கள அரசு விசா வழங்க மறத்துள்ள நிலையில் நாட்டிற்கு வெளியே ஏராளமான சாட்சியங்கள் குவிந்து கிடங்கின்றன. அதனால் சிறீலங்காவிற்குள் செல்லாமலே முழுமையான விசாரனையை நடத்த முடியும் என்று அன்மையில் நவநீதம்பிள்ளை அவர்கள் அதிரடியாக அறிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசை பின்பற்றி இந்திய அரசும் ஐ.நா.விசாரனைக் குழு இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தும் உலகத் தமிழர்கள் தமிழக அரசை நோக்கி ஐ.நா.விசாரனை குழுவை தமிழகத்திற்கு வரவழைத்து முழுமையான சுதந்திர விசாரனை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இந்தப் பின்னணியில் ஒருவேளை தமிழகத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ விசாரனைக்குழுவினர் வந்து விசாரனை நடத்தக் கூடும் என சிங்கள அரசு அச்சத்தில் உறைந்துள்ளது.

அந்த அச்சத்தின் வெளிப்பாடாகவே சந்திரகாசன் தலைமையில் இந்த இரகசிய கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. தமிழீழம் என்பது இனி சாத்தியமே இல்லை... வெளிநாட்டு விசாரனைக் குழு என்பது ஏமாற்று வேலை... அதற்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த இரகசிய கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இரகசிய கலந்துரையாடலிற்கு தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களில் உள்ள ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சிங்கள அரசை காப்பாற்றுவதற்கு சந்திரகாசன் தலைமையில் இரகசிய கலந்துரையாடல் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்றுவருவது அதிர்ச்சியளிக்கின்றது.http://www.pathivu.com/news/33308/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசனின் கடந்த கால..நடவடிக்கைகள்.. எப்போதும் சிங்களப் பேரினவாத அரசுகளை ஆசுவாசப்படுத்துவதாகவே இருந்து வருகிறது. இப்படியான நிலையில்.. அவர் இதையும் செய்யலாம். இதனை ஆதாரங்களோடு மக்கள் முன் அம்பலத்தி.. மக்களை விழிப்பூட்டுவது அவசியமானதாகும்..!

 

சிங்கள பேரினவாத அரசுகளுக்கும்.. அவைக்கு ஆதரவாக உள்ள.. இந்திய நடுவன் அரசுகளுக்கும்.. ஆலவட்டம் பிடிக்கும் கும்பல்களே எனி தமிழீழமும்.. தமிழருக்கு உய்வும் இல்லை என்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சந்திரகாசனின் இரகசிய கலந்துரையாடல் நிகழ்விடம் தமிழீழ ஆதரவு அமைப்பினரால் முற்றுகை!!!

Arsu.JPGசந்திரகாசனின் தலமையில் சென்னை மைலாப்பூரில் நடைபெற்று வரும் இரகசிய கலந்துரையாடல் நிகழ்விடம் தமிழீழ ஆதரவு அமைப்பினரால் சற்று முன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சிங்கள அரசின் மீதான சர்வதேச விசாரனைக்கு தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் சந்திரகாசன் தலைமையில் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது.

அந்த கலந்துரையாடல் நிகழ்விற்கு சென்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டார்கள். இது குறித்த தகவல் அறிந்ததும்  தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகள் இயக்கங்களைச் சேர்நதவர்கள் நிகழ்விடத்திற்கு சென்றுள்ளதாக தற்போது அங்குள்ள மாணவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழ ஆதரவு அமைப்பினரினரின் திடீர் முற்றுகையால் நிலைகுலைந்த சந்திரகாசன் குழுவினர் அங்கிருந்த ஈழத்தமிழர்களை அரங்கத்தின் மேல் தளத்திற்கு அனுப்பிவருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

http://www.pathivu.com/news/33313/57//d,article_full.aspx

முன்னைய  செய்தி

சந்திரகாசன் தலைமையில் நடைபெறும் இரகசிய கலந்தரையாடல் நிகழ்விற்கு சென்ற மாணவர்கள் விரட்டியடிப்பு!

 

ஒன்று மட்டும் புரிகிறது முல்லிவாய்க்கால் முன்னரும், பின்னரும் ஒரு கூட்டமே தமிழ்மக்களின் மத்தியில் சிங்கள எதிரிக்காக இரவுபகலாய் வேலை செய்கிறது.எல்லாம் சுய நலனுக்காக இனத்துரோகிகளாக மாறியுள்ள இவர்கள் திருந்த இனி இடமில்லை. இவர்களை தமிழ்மக்களுக்கு பகிரங்கப்படுத்தவதன் மூலம் விழிப்பாக இருந்து ஏமாறமாட்டார்கள். அல்லது பாலில் ஒரு துளி விசமே போதும் போல் இவ்வாறன சிலர் எங்கள் இனத்தை அழித்துவிடுவர். உலகமுழுவதும் சிங்களத்துடன் கொண்டாடும் எம்மக்களின் பட்டியலை விரைவில் வெளிவிடுவதன் மூலம் தமிழ் நாடு தொடக்கம் எல்லா தமிழர்களும் விழிப்பாக இருப்பர். இவர்களை நரிகள் என்னும் பட்டியல் மூலம் அறிமுகமாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.