Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோ - ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gary அவர்கள் ஒருமுறை எனக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.

எனது வீட்டு முகவர் இவரை பரிந்துரை செய்தபோது எனது சந்தேகத்தைக் கேட்டேன். தகப்பனுக்கும், இவருக்கும் எந்த தொடர்பும், கருத்தியல் ஒற்றுமையும் இல்லை என்பதை எனது முகவர் தெளிவுபடுத்தினார்.

ஐநாவில் Gary அவர்களின் செயற்பாட்டில் அதை உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

யாழில் உள்ள கனபேருக்கும்.. கள்ள ஸ்ரேட்மெண்ட் போட்டு.. அசைலம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் போல. அதுதான் விசுவாசம் தலைகீழ் புரியாமல்.. இருக்குது. :lol:

ஐநாவில்.. அவரின் செயற்பாடு என்பது.. ஐநா சார்ந்த பிற..புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாகவே தான் உள்ளதே அன்றி விசேட தனித்துவமான நிலைப்பாடு என்று ஒன்றுமில்லை.

இவரை விட.. கிருபாகரன் போன்றவர்கள்.. வெளிப்படையாகவே இனப்படுகொலை.. பற்றி உச்சரித்திருக்கிறார்கள். அதேபோல் அனந்தி அக்காவும். இவர் அனந்தி அக்காவை அது விடயத்தில் கட்டுப்படுத்த முற்பட்டதும் சந்தேகத்திற்குக் காரணமாக உள்ளது. மேலும்.. இவரின் பேச்சைக் கேட்கிறப்போ.. இனப்படுகொலை என்றதை உச்சரிக்க மறுக்கிறார்..!!

போர்க்குற்றம் என்பதை தான் இவரும் முன்மொழிவதோடு.. LLRC இன் பரிந்துரைகள் சிலவற்றை உலகமே அங்கீகரிப்பது போல.. இவரும் அங்கீகரிக்கிறார். ஆனந்தசங்கரியும் தான் ஆசுவா.. கீசுவா என்றார். கடைசியில்.. LLRC பரிந்துரைகளும் கிடப்புக்குப் போய்விட்டன. சங்கரியின் இறுதிக் கனவான.. மாகாண சபை அமைச்சரும்.. கிளிநொச்சி மக்களால்.. முறியடிக்கப்பட்டுள்ளது.

இவர் பிழைப்புக்கு அசைலம் எடுத்துக் கொடுத்தார் (பிற வகை குடியேற்ற வழக்குகளையும் கையாண்டிருக்கலாம்) என்பதற்காக..அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் விருப்புக்கு சரியான வகையில் ஒத்துப்போவார் என்று சொல்ல முடியாது. அதற்கான உறுதிமொழிகளையே மக்கள் இவர்களிடம் இருந்து எழுத்திருவில் எதிர்பார்க்கிறார்கள்..! வாக்குத் தேவைன்னா அதைச் செய்யட்டும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ரிலாக்ஸ் பிளீஸ்.. :D நான் போன விடயம் வீடு வாங்குவது சம்பந்தமாக.. வேறு என்ன விடயங்களை எல்லாம் கையாள்கிறார் என்று எனக்குத் தெரியாது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு ஹரி ஆனந்தசங்கரியைப் பற்றி எதுவும் தெரியாது. ஹரியின் தகப்பனது அரசியலைத் தெரிந்து வைத்துக்கொண்டு வெறும் ஊகத்தில் கனடிய அரசியலைப் பற்றி விமர்சனம் வைக்கின்றார். தெரியாதவர்களைப் பற்றி தெரிந்தமாதிரி அவதூறுகளைத்தான் எழுதமுடியும்.

பி.கு. எனக்கு ஹரி ஆனந்தசங்கரியின் ஆதியும் தெரியாது, அந்தமும் தெரியாது. தெரிய வேண்டிய தேவையும் இல்லை.

ஏன் கிருபண்ணா.. உங்களுக்கு தெரியல்லை என்பதற்காக.. நெடுக்ஸிற்கும் தெரியாது என்று அர்த்தமா..??! எப்ப இருந்து.. இந்த தியறி எழுத தொடங்கினனீங்க.

மோடியை பற்றி எழுதனுன்னா.. மோடியின் அரசியல் நடவடிக்கைகளை அருகில் இருந்து பார்த்தவன் மட்டும் தான் எழுத முடியும் என்றில்லை. மோடியின் நடவடிக்கைகள் தொடர்பில் வரும் செய்திகளை.. தொடர்ந்து அவதானிப்பவனும் எழுத முடியும்.

ஹரி ஆனந்தசங்கரிக்கு இங்கு தலைப்பிடப்பட்டு இப்ப கிட்டத்தட்ட 8.. 9 மாதம் ஆகுது. நன்கு திட்டமிட்டுத்தான் தேர்தலை நோக்காகக் கொண்டு தலைப்பிடப்பட்ட செய்திகளோடு அந்தத் தலைப்பு  திறக்கப்பட்டிருந்தது.. நிறைய விடயங்கள் பகிரப்பட்டிருந்தன. காணொளிகளும் இடம்பெற்றிருந்தன.

நீங்கள்  அவதானிக்காமல் இருந்ததற்கு எங்களைக் குறைசொல்லி என்ன பிரயோசனம். இதே இன்னொருவில்.. ஹரி ஆனந்தசங்கரி பற்றி எழுதி இருந்தால் வாசிப்பதும் இன்றி வேரும் விழுதிலும் ஒட்டி இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் விமர்சனங்களுக்கு அப்பால் இருக்க முடியாது. அதுவும் மக்கள் இவர்கள் தொடர்பில் மறை விமர்சனங்களையும் சந்தேகங்களையும் கொண்டுள்ள வகையில்.. எமது கேள்விகள்.. மக்களின் எண்ணங்களை தெளிவாக பிரதிபலிப்பதும்.. அவற்றிற்கு விளக்கம் தேடுவதுமாக உள்ளதே அன்றி.. ஹரி ஆனந்தசங்கரி என்ற தனிநபர் பற்றி அறிய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. மக்கள் பிரதிநிதி.. தமிழ் மக்களின் ரட்சகர்கள் என்று இவர்கள் வேடம் போட வரும் போது தான்.. தமிழ் மக்கள் என்ற வகையில் இவர்களைப் பற்றி அறிய வேண்டி ஏற்படுகிறது. அந்த வகையில் அமைந்த தேடல் ஏற்படுத்திய சந்தேகங்களும் கேள்விகளுமே எங்கள் கருத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு பதில் தர வேண்டிய தரப்புக்கள் அதற்குப் பதில் தேடாமல்.. வழமையான கருத்தாளர்கள் மீது நொட்டிச்சாட்டுச் சொல்லும்.. அவதூறு செய்யும் கருத்துக்களைப் பதிவது..என்பது.. இவர்கள் எதனையோ மறைத்து மக்களிடம் தாங்கள் நினைப்பதை திணிக்க முயல்கிறார்கள் என்றே பொருள்படும்..! அது ஜனநாயக உலகில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. :icon_idea::)

விடுதலைப்புலிகளைக் கூட மீளாய்வு செய்யும் கட்டுரைகளை இணைக்கும் நீங்கள்.. ஹரி ஆனந்த சங்கரி பற்றிய கேள்விகளை எழுப்புவதை இட்டு கடுப்பாவது ஏனோ..????! :lol:

எங்கேயோ  இடிக்குதே... :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை என்பதை நியாயப்படுத்த வேண்டிய காரணிகளில் இருந்து நாங்கள் தூரமாக நிற்பதால் தான் போர்க்குற்றம் என்பதைக் ஹரி போன்றவர்கள் முன்வைப்பதாக முதலில் சொன்னேன். இனப்படுகொலை என்பதை நாங்கள் ஆதாரப்படுத்தினாலும், அதை உலகிற்குக் கொண்டு செல்வதில் ஏற்படும் தவறுகளை நாங்களே செய்கின்றோம். சிறிலங்காவிற்குப் போவது , காட்டும் ஆடம்பரங்கள் உற்பட்ட அனைத்து விடயங்களிலும் ... அந்தத் தவறினை நான் உற்பட்ட அனைவரும் செய்கின்றோம். ஏதோ தவிர்க்க முடியாத காரணிகள் என்று எம்மை நாமே ஏமாற்றியபடி....மேலே சொன்ன கொசாவா, ஈராக் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட படுகொலைகள் பின்வரும் வழியில் சேர்கின்றன... அன்று அல்பீனியர்கள் முஸ்லீம்கள் என்றால் கொல்லப்பட்டார்கள் எனவும், ஈராக்கில் இஸ்லாம் மதம் மாறாத கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர் எனும்போது அது இனத்துவ அடிப்படையாகவே வருகின்றது. இங்கே ஹரியைப் காப்பாற்றுவதற்காக எழுதுகின்றேன் என அர்த்தம் கொள்ளக்கூடாது. ஏனெனில் உலகம் எடுத்துக் கொண்ட விடயத்தை நாங்கள் தான் தெரியாத மாதிரி இருக்கின்றோம்.

இதுவரை காலமும் சிங்கள அரசு செய்த படுகொலைகளைப் புலிகள் மீதே பழி போட்டது. தமிழர்கள் கொல்லப்பட்ட தடவைகளிலும் அது புலிகள் தான் செய்தததாகச் சித்தரித்தது.பல சிங்கள ஊடகங்கள் "சிங்கள அரசால் கொல்லப்பட்ட தமிழர்களை விடப் புலிகள் கொன்ற தமிழர்கள் அதிகம் என்றே எழுதியதைப் பல தடவைகள் கண்டிருக்கின்றேன். அவர்கள் இனப்படுகொலை என ஆக்காமல் புலிகள் கொன்றனர், அல்லது புலிகள் கொல்லப்பட்டனர் என்ற வகையில் செய்த பிரச்சாரங்கள் தமிழர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களை இனப்படுகொலை என்றும் வகையில் எம்மால் கொண்டு செல்ல முடியவில்லை என்பதை விட நாமும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. எமக்குள்ளேயே இனப்படுகொலை என்பதைச் சொல்லிக் கொண்டு திரிந்தோம்.

ஹரி போன்றவர்கள் அது பற்றிய கலந்துரையாடலைச் செய்திருக்கலாம். இப்போதும் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தி ஆதாரப்படுத்துவதற்கான காலம் கடந்து போகவில்லை. ஆனால் அதை நிறுவ நாங்கள் தயாராக இல்லை. எங்களில் அதீனவலு என்பது யாழில் கருத்தெழுதுவது மட்டும் தான்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்க சிலபேர்.. ஹரி ஆனந்தசங்கரி போதையில மிதக்கிறீங்க போலத் தெரியுது. அது தெளிய கொஞ்சம் காலம் எடுக்கும் போல.

சிறீலங்காவில் தமிழினப் படுகொலை என்பது.. இன்று நேற்றான ஒன்றல்ல. இது பற்றி உலக மட்டத்தில் பலரும் பேசியே வருகிறார்கள். போர்க்குற்ற விசாரணை என்பது கூட ஒரு கால வரையறைக்குள் நிகழ்ந்த சம்பவங்களை மட்டுமே கவனத்தில் எடுக்கும். தொடர் இனக்கலவரங்கள்.. நிலப்பறிப்பு.. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.. குடிப்பரம்பல் மாற்றியமைப்பு.. சமூக இராணுவ ஒடுக்குமுறைகள்.. இப்படி பல இன அழிப்பு அம்சங்களை போர்க்குற்ற விசாரணை கவனத்தில் எடுக்காது. போர்க்குற்ற விசாரணை மூலம்.. எமது தேசம் எதிர்கொள்ளும் இனப்படுகொலையை வெளிக்கொணரலாம் என்பது மிகை எதிர்நோக்கல்.

போர்க்குற்றவிசாரணை என்பது அதனை ஆதாரப்படுத்தப் பயன்படுத்தக் கூடிய ஒரு காரணி மட்டுமே. அதனை மையமாக வைத்து அல்ல.. இனப்படுகொலை என்பது உச்சரிக்கப்படுகிறது. தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கிறது என்பதை இந்தியாவில் இந்திரா காந்தி அரசு பகிரங்கமாவே அறிவித்து ஏற்றுக் கொண்டிருந்தது. இன்றைய தமிழக அரசும்.. அதனை குறிப்பிட்டு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. அவங்க எல்லாம் பேசக் கூடியதை.. மிஸ்டர் ஹரி ஆனந்தசங்கரி.... சம்பந்தன்.. சுமந்திரன்  வகையறாக்கள் மட்டும் பேச முடியாது.. ! இதை எல்லாம் நீங்க எழுத நாங்கள் கேட்கனுன்னு தலைவிதி.

Australian author Trevor Grant documents genocide of Eezham Tamils in new book

[TamilNet, Friday, 22 August 2014, 21:36 GMT]

While there is a general climate of silence in the Western establishments to recognize the oppression of the Eezham Tamil nation by the unitary Sri Lankan state as genocide, Australian writer and veteran journalist Trevor Grant is perspicuously unsparing in criticizing these establishments for their silence and complicity in the genocide. In his recently released book “Sri Lanka’s Secrets: How The Rajapaksa Regime Gets Away With Murder”, Mr. Grant besides documenting the various forms in which genocide is being perpetrated by the Sri Lankan state on the Tamils, also blasts the world establishments for their hand in this crime. Speaking to TamilNet, Mr. Grant said “This book condemns not only this latest potent strain of Sinhalese chauvinism in power in Colombo but also those in the halls of power in Canberra, Westminster, Washington and Delhi who give the green light to the genocide.”

Sri_Lankas_Secret_by_Trevor_Grant_107668

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37353

‘Collective trauma inflicted on Tamil nation is part of structural genocide’

[TamilNet, Thursday, 14 August 2014, 08:47 GMT]

In a presentation at the Annual Convention of the American Psychological Association (APA) on 8 August, independent journalist and human rights activist Nirmanusan Balasundaram, talking about “visible and latent factors” of decades of oppression of the Eezham Tamil nation by the Sri Lankan state, explained how collective trauma inflicted on the Tamil nation is a part of structural genocide. Further talking about how militarization, demographic changes in the Tamil homeland, and abuse of Tamil women by occupying Sri Lankan forces were part of that process, he argued that “it is vital for major stakeholders of conflict to identify and address causes of psychological and collective trauma of the Tamil people.”
 
Nirmanusan_presentation_01_107610_445.jp
 
Nirmanusan Balasundaram addresses the APA in Washington DC
 
British writer blasts UK's unscrupulous arms-deals

[TamilNet, Wednesday, 23 July 2014, 14:19 GMT]

“The killing fields of Sri Lanka have received all too little attention in the British media, with up to 70,000 Tamil civilians massacred at the end of the 2009 civil war: but this does not serve as a deterrent for British arms sellers,” writes Owen Jones, a British columnist and author in an opinion piece in The Guardian on Wednesday. Further providing examples of states that have had a history of persecuting nations or suppressing basic civil rights, he laments that “our arms trade serves as a reminder that Britain's claim to be a promoter of democracy is a myth.”

Britain's historical support for genocidal Sri Lanka was also the subject of a recent report authored by British activist Phil Miller.

During the genocidal onslaught on Eezham Tamils in 2009, the British Permanent Representative to the UN at that time, Sir John Sawers, stopped any UN Security Council discussion about the crisis. Sawers, 58, has since been the head of Britain's overseas intelligence agency MI6.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37310

India should call for genocide investigation, referendum: Jayalalithaa tells Modi

[TamilNet, Wednesday, 04 June 2014, 07:01 GMT]

Tamil Nadu Chief Minister Selvi Jayalalithaa, in a memorandum submitted to Indian Prime Minister Narendra Modi has firmly reiterated the stand expressed in four Tamil Nadu State Asssembly resolutions, demanding the Indian government to move a UN resolution demanding investigations on Tamil genocide and a UN referendum on Tamil Eelam among the Tamils in the island as well as among those living outside the island. Selvi Jayalalithaa, who didn’t attend the swearing-in ceremony due to the controversial invitation extended to SL president Mahinda Rajapaksa, met Mr Narendra Modi at New Delhi presenting him the demands of Tamil Nadu in the 25 point memorandum where the genocide investigation and UN referendum on Tamil Eelam was the second point of the agenda.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37246

அண்மையில் இங்கிலாந்தில்.. இருந்தும் அவுஸில் இருந்தும்.. சிறீலங்காவில் தமிழினப் படுகொலைகள் பற்றிய நூல்கள் வெள்ளைக்காரர்களால்.. ஆதரங்களோடு எழுதி வெளிவந்துள்ள நிலையில்.. கஸ்ஸு புஸ்ஸு இங்கிலீசு பேசும் கனடிய தமிழர்களில் ஒருவரான.. ஹரி ஆனந்தசங்கரிக்கு அதை உச்சரிக்கவே சிக்கலா இருக்காமில்ல..! யாருக்கு அண்ணே கதையளக்கிறீங்க..???! :):rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபண்ணா.. உங்களுக்கு தெரியல்லை என்பதற்காக.. நெடுக்ஸிற்கும் தெரியாது என்று அர்த்தமா..??! எப்ப இருந்து.. இந்த தியறி எழுத தொடங்கினனீங்க.

மோடியை பற்றி எழுதனுன்னா.. மோடியின் அரசியல் நடவடிக்கைகளை அருகில் இருந்து பார்த்தவன் மட்டும் தான் எழுத முடியும் என்றில்லை. மோடியின் நடவடிக்கைகள் தொடர்பில் வரும் செய்திகளை.. தொடர்ந்து அவதானிப்பவனும் எழுத முடியும்.

ஹரி ஆனந்தசங்கரிக்கு இங்கு தலைப்பிடப்பட்டு இப்ப கிட்டத்தட்ட 8.. 9 மாதம் ஆகுது. நன்கு திட்டமிட்டுத்தான் தேர்தலை நோக்காகக் கொண்டு தலைப்பிடப்பட்ட செய்திகளோடு அந்தத் தலைப்பு  திறக்கப்பட்டிருந்தது.. நிறைய விடயங்கள் பகிரப்பட்டிருந்தன. காணொளிகளும் இடம்பெற்றிருந்தன.

நீங்கள்  அவதானிக்காமல் இருந்ததற்கு எங்களைக் குறைசொல்லி என்ன பிரயோசனம். இதே இன்னொருவில்.. ஹரி ஆனந்தசங்கரி பற்றி எழுதி இருந்தால் வாசிப்பதும் இன்றி வேரும் விழுதிலும் ஒட்டி இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் விமர்சனங்களுக்கு அப்பால் இருக்க முடியாது. அதுவும் மக்கள் இவர்கள் தொடர்பில் மறை விமர்சனங்களையும் சந்தேகங்களையும் கொண்டுள்ள வகையில்.. எமது கேள்விகள்.. மக்களின் எண்ணங்களை தெளிவாக பிரதிபலிப்பதும்.. அவற்றிற்கு விளக்கம் தேடுவதுமாக உள்ளதே அன்றி.. ஹரி ஆனந்தசங்கரி என்ற தனிநபர் பற்றி அறிய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. மக்கள் பிரதிநிதி.. தமிழ் மக்களின் ரட்சகர்கள் என்று இவர்கள் வேடம் போட வரும் போது தான்.. தமிழ் மக்கள் என்ற வகையில் இவர்களைப் பற்றி அறிய வேண்டி ஏற்படுகிறது. அந்த வகையில் அமைந்த தேடல் ஏற்படுத்திய சந்தேகங்களும் கேள்விகளுமே எங்கள் கருத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு பதில் தர வேண்டிய தரப்புக்கள் அதற்குப் பதில் தேடாமல்.. வழமையான கருத்தாளர்கள் மீது நொட்டிச்சாட்டுச் சொல்லும்.. அவதூறு செய்யும் கருத்துக்களைப் பதிவது..என்பது.. இவர்கள் எதனையோ மறைத்து மக்களிடம் தாங்கள் நினைப்பதை திணிக்க முயல்கிறார்கள் என்றே பொருள்படும்..! அது ஜனநாயக உலகில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. :icon_idea::)

விடுதலைப்புலிகளைக் கூட மீளாய்வு செய்யும் கட்டுரைகளை இணைக்கும் நீங்கள்.. ஹரி ஆனந்த சங்கரி பற்றிய கேள்விகளை எழுப்புவதை இட்டு கடுப்பாவது ஏனோ..????! :lol:

நான் வாசிக்காமல் எதையும் யாழில் ஒட்டுவதில்லை. நான் ஒட்டுவதை நீங்கள் வாசிப்பதில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்கின்றேன்!

ஹரி ஆனந்தசங்கரியைப் பற்றி நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்தவர்கள் எவருக்கும் உங்களின் அவரைப் பற்றிய புரிதல் குறைவு என்பது புரியும். பிரித்தானியாவில் இருப்பதால் அவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காது. எனவே அவரைப் பற்றி யாழில் வந்த கருத்துக்களையும், அவரது தந்தையின் அரசியலையும் வைத்து நீங்கள் வரைந்த சித்திரத்தை அரசியல் விமர்சனம் என்ற ரீதியில் விளக்கிக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அதில் அநேகம் அவரது தந்ததையாரின் செயற்பாடுகளை வைத்துச் செய்யும் ஊகம்தான்.

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எதுவுமில்லை.

நீங்கள் வாசிச்சு ஒட்டுறீங்களோ வாசிக்காமல் ஒட்டுறீங்களோ.. உங்களின் "அவதூறுக் கோட்பாடுகள்" தான் அவற்றில் நிறைந்திருக்கின்றன. ஏனெனில் நீங்கள் ஒட்டும் புலிகள் மீளாய்வு கட்டுரைகள் எதுவும்.. தாயகத்தில் இருந்து.. புலிகளோடு தொடர்புகொண்டு எழுதப்பட்டவை அல்ல. இல்லாத புலிகளை வைச்சே மீளாய்வு செய்யுறப்போ.. இருக்கிற ஹரி ஆனந்தசங்கரி பற்றி அந்த நாட்டில் இருந்து வரும்.. செய்திகளின் அறிக்கைகளின் செயற்பாடுகளின் அடிப்படையில்.. மக்கள் சந்தேகங்களை கிளப்புவது.. எந்த வகையில் தவறாகும்.

நான் உங்களின் சிலரைத் தூக்கிப்பிடிக்கும் சில கட்டுரைகளை வாசிப்பதில்லை. காரணம்.. அதில் என்ன இருக்கும் என்று ஊகிக்க முடியும்.

இதில நீங்க ஒன்னுமே புதிசாச் சொல்லேல்ல. ஹரி ஆனந்த சங்கரி மீது பிறிதொரு திரியில்.. நாங்கள் வைத்த 5 கேள்விக் கோரிக்கைகளும்.. கனடாவில் இருந்து மக்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில்.. பெறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் எழுப்படுகிறது என்று தெளிவாகக் கூறி உள்ளோம்.

மேலும்.. இவரை ஆனந்தசங்கரியின் நிலையில் வைத்து இன்னும் கருத்துச் சொல்லேல்ல. ஆனந்தசங்கரி போல.. இவர் ஆகமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது தான் கேள்வி. இன்று இவருக்காக வக்காளத்து அறிக்கைகளை சம்பந்தன் விடுகிறார் என்றால்.. சுமந்திரன் இவருக்கு அறிவுரை சொல்கிறார் என்றால்.. நாளை இவரும் ஆனந்தசங்கரி போல ஆக்கப்படமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.. இது தான் வினா..??! அதற்கு தெளிவான பதிலை வைக்க முடியாதப்போ.. மக்கள் சிந்திக்கவே செய்வார்கள். மக்களின் சிந்தனையை கட்டிப்போட்டு விட்டு.. வாக்குப் போடு என்பது உங்களுக்கு புதிதற்றதாக இருக்கலாம்.. ஆனால் அது ஜனநாயகம் அல்ல..! கனடா போன்ற ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டில் அதனை பின்பற்றனும்.. என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள் தானே..!

உங்களுக்கு இதில ஆர்வம் குறைவு என்பதற்காக எல்லோரும் அப்படி என்றில்லை. உங்களுக்கு ஆர்வமுள்ள சிலவற்றில் எங்களுக்கு அறவே ஆர்வமில்லை. அதுக்காக... நீங்கள் சொல்வது நியாயம் என்றில்லை. அதிலும் "அவதூறுகள்" நிறைய இருக்கலாம்..!! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.