Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!
Saturday, August 23, 2014, 11:00 [iST]
 
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசினர். மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் தாயகமான வடகிழக்கு பகுதியில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

எனி இதை வைச்சு 6 மாதம் செய்தியாளர்கள் மாநாட்டை நடத்திட்டு.. 7ம் மாசம்.. மோடி கைய விரிச்சிட்டார் என்று பழைய பல்லவி பாடச் சரி. அதுக்குள்ள சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் வந்திடும்.. அப்புறம் என்ன.. அதைச் சாட்டி.. கூட்டமைப்பு.. குறட்டை விட காலம் போயிடும்..! பதவிகள் தொடர்ந்திடும். இதுதானே எங்களுக்கு தெரிந்த அதி உச்ச ராஜதந்திர அரசியல். கடந்த 5 வருசமா இதைத்தானே செய்யுறம். பின்ன.. வேற என்னத்தை செய்ய முடியும்..!!!

 

(மன்மோகனை முந்தி எத்தனை தரம் சந்திச்சம். ஹிந்தியா என்ன வெட்டியா வீழ்த்தினது. போர்க்குற்றவிசாரணைக்கே ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள் வரிசையில் உட்கார்ந்திருக்கிறது. அதனையே மாற்ற முடியல்ல... ???! ) :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

modi.jpg

  • கருத்துக்கள உறவுகள்

modi.jpg

 

அடுத்த பிரதமர் விஜய் என்று சொல்லவாறீயளோ டமிழரசு?கத்தி படத்தை சும்மா கத்தாமல் போய் பார்ப்போம்...:D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பிரதமர் விஜய் என்று சொல்லவாறீயளோ டமிழரசு?கத்தி படத்தை சும்மா கத்தாமல் போய் பார்ப்போம்... :D

என்னத்த சொன்னாலும் புலம் பெயர் தேசங்களில் அதுதான் நடக்கப்போகுது புத்தன் ... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.