Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவதை இளம் தேவி

உன்னைச் சுற்றும் ஆவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லாம்

எந்தன் பெயர் சொல்லாதோ

பூ வசந்தமே நீ மறந்ததேன்

ஆற்று மணல் மேடெங்கும்

நான் வரைந்த கோலங்கள்

தேவமுல்லையே காணவில்லையே

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை

ஒரு வானம்பாடி தேகம் வாடி

பாடும் சோகம் கோடி

  • Replies 6.9k
  • Views 544.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - ஆறு

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே................

பாட்டை ஓடவிட்டு நிற்பாட்டி நிற்பாட்டி காதல் கவிதைகளை வாசிச்சு பாருங்கள்

3:43 நிமிடக் கவிதை..........

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு அது ஆழமில்லை அது சேரும்கடலும் ஆழமில்லை

ஆழம் எது ஐயா இந்த பொம்பள மனசு தாய்யா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொம்பளைங்க காதலைத்தான் நம்பி விடாதே....

நம்பி விடாதே.....நம்பியதால் வெம்பி மனம் நொந்து விடாதே...நொந்து விடாதே.....

அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையைக்காட்டி....அண்ணான்னு சொல்லி நடப்ப ஆளையும் மாத்தி....

ஆம்பிள எல்லாம் அகிம்சாவாதி....பொம்பிள எல்லாம் தீவிரவாதி....(பொம்பிளைங்க காதலைத்தான்....)

பெண்ணாலே பயித்தியமா போனவருண்டு....இங்கஆண்களால

http://www.youtube.com/watch?v=S6RaV4MHdlE

மனம் விரும்புதே உன்னை... உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா

நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா

உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....

மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று

ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று

நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!

நீ வா! நீ வா! என் காதலா...!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)

படம் : வாழ்க்கைப்படகு

இசை : எம். எஸ்.விஸ்வநாதன்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர் : PB ஸ்ரீனிவாஸ்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதல் என்பதா

இளமை பொங்கி விட்டதா

இதயம் சிந்தி விட்டதா

சொல் மனமே..

நேற்று....

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை

கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை

கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை

காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை

நேற்று....

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்

வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்

காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்

வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்

நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

நேற்று....

http://youtu.be/2RlHInE93-E

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா

தடைக் கல்லும் உனக்கொரு படிக்கல்லபா

வெற்றிக் கொடி கட்டு

மலைகளை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படைஎடுபடையப்பா

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்

வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் (2)

மனதில் உள்ள கவிதை கோடு மாருமோ

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என்ன் பாட்டும் உன்ன் பாட்டும் ஒன்றல்லவோ

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

கால டேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

மலையின் மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் டேவன் காவியம்

நீனளோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்...சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன

பதினாறு பாட சுகமானது

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன

பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை

கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள்......

இடையாட வளையாட சலங்கைகள் ஆட

இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு....

http://youtu.be/BPHw-ldzgwU

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு

அன்புச்செல்வம் நெஞ்சில் வந்து தங்கும் வீடு

கண்ணில் கண்ணாக கவிதை பூவாக

வாழ்வில் வாழ்வோமே வா ஆ ஆ

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா

என் கனவு நீ தானடி

இதயமே தெரியுமா

உனக்காகவே நானடி

விழி விழி மூட மறுக்கின்றது

இதழ் சொல்ல துடிக்கின்றது ...................

.............காதலே .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா

உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

கவிதையே தெரியுமா ….)

F-

குறும்பில் வளர்ந்த உறவே

என் அறையில் நுழைந்த திமிரே

M-

மனதை பறித்த கொலுசே

என் மடியில் விழுந்த பரிசே

F-

ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து

என்னை தாலாட்டுதே

M-

வானம் காணாத வேன்னிலவோன்று மோக பாலூட்டுதே

F-

நாணம் பொய் நீட்டுதே ஹே ஹே

M-

கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி

கவிதையே தெரியுமா….

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லான (2)

M-

உயிரில் இறங்கி வரவ ? உன் உடலில் கரைந்து விடவா ?

F-

உறக்கம் திறக்கும் திருடா

என் கனவில் பதுங்கி இருடா

M-

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?

F-

இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவ ?

M-

வேர்வை குடை தேடவா …. ஹா ஹா……

M-

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி

F-

இதயமே தெரியுமா

உனக்காகவே நானட

M

இமை மூட மறுக்கின்றதே

M&F

காதலே

M&F

இதழ் சொல்ல துடிக்கின்றதே

M&F

காதலே

http://youtu.be/LOjh5BlB2_4

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

...............கனவு காணும் ......................

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன.....

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

...............கனவு காணும் ......................

காலங்கள் மாறும்....

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்..

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள்தொடர்கதை

உணர்வுகள் சிறு கதை

ஒரு கதை இன்று முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே............

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே... (இசை)

உன் நெஞ்சிலே பாரம்..

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்..

எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே... (இசை)

வாழ்வென்பதோ கீதம்..

வளர்;கின்றதோ நாணம்..

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே..

இனியெல்லாம் சுகமே..

http://youtu.be/52lDnAYzCUk

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சுகம் சுகமே ஏய்

தொடத்தொடத்தானே

சொந்தம் வரும் பின்னே

தொடும் முன்னே

என் கண்ணா

இந்தப்பக்கம் வா

  • கருத்துக்கள உறவுகள்

வா வா அன்பே அன்பே

காதல் நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம் உன் எண்ணம்

எல்லாமே என் சொந்தம்

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்

காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி

ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

நீயின்றி ஏது பூவைத்த மானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்

கானல் அல்ல காதல் என்னும் காவியம்

அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்

பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே

சூடாமல் போனால் வாடாதோமானே

இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

பூமாலை வாங்கி வந்தான்

பூக்கள் இல்லையே தினம் தினம்

செவி இல்லைஇங்கு இசை எதற்கு .

.விழியில்லை இங்கு விளக்கு எதற்கு ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - வீடு

பாடல்: விளக்கு ஒன்று

படம்: அடைக்கலம்

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

இன்பத்து பால் ஓடுகையில்

மனைவி ஆகிறாள் தாய்

தன இதய பாலை ஓடுகையில்

அன்னை ஆகிறாள் தாய்

அள்ளி எடுத்து கொஞ்சுகையில்

பிள்ளை ஆகிறாள் தாய்

துன்பத்தில் தலை கோதுகையில்

தோழி ஆகிறாள் தாய்

தர்மத்தை நிலை நாடுகையில்

தலைவி ஆகிறாள் தாய்

நாடுவைதியம் புரிகையில்

பாடி ஆகிறாள் தாய்

ஒத் வேலைகாரி வடிவத்தில்

கடவுள் ஆகிறாள் தாய்

காலம் எலாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்

அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்

அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்

தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்

ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்

பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்

கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்

ஒஹ்ஹ்ஹ

ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்

காலம் எல்லாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர் பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - பெண்

படம் : ஊட்டி வரை உறவு

குரல் : பி.சுசீலா

பாடல் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.வி.

நடிகை : கே.ஆர்.விஜயா

தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது

வாசலில் நின்றது, வாழவா என்றது

(தேடினேன்.....)

என் மனத்தில் ஒன்றைப் பற்றி

நான் நினைத்ததெல்லாம் வெற்றி

நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்

மணம் பரப்பும் சுற்றி

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ...

(தேடினேன்....)

இனி கலக்கம் என்றும் இல்லை

இதில் விளக்கம் சொல்வதுமில்லை

இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு

மயக்கம் உண்டு நெஞ்சே

பெண் என்றால் தெய்வ மாளிகை

திறந்து கொள்ளாதோ...ஓஹோ...

ஓஹோ. ஓஹோஹோ

http://www.youtube.com/watch?v=8dhDt0Q7e8w&feature=player_embedded

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

ப்ரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிரது

உன்னை எழுதும் போது தான் மொழிகல் இனிக்கிறது

(பெண்ணே நீயும்...)

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை

உந்தன் மேனி என்று உனக்கு தெரியும

சீன சுவரை போேஸ் எந்தன் காதல் கூட

இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியும

பூங்க என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்

தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க தெரியும்

காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் செல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது

எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

(பெண்ணே நீயும்...)

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்

உன்னை பார்த பின்னால் மழை வந்ததெய்

பூக்கள் தேடி தானெய் பட்டாம் பூசி பறக்கும்

உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததெய்

மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்க்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்

உன்னை பார்த பூவெல்லாம் கையெழுது கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்

நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய்

(பெண்ணே நீயும்...)

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன்)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

(கம்பன்)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

தீ இல்லை புகைஇல்லை

ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே

நூலில்லை தரையில்லை

ஒருகாதல் நெய்கிறாய் மடலிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.