Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவே என்னிடம் நெருங்காதே 
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. 

(நிலவே) 

மலரே என்னிடம் மயங்காதே 
நீ மயங்கும் வகையில் நான் இல்லை 

(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம் 
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ 
கோடையில் ஒரு நாள் மழை வரலாம் 
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ 
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் 
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை வந்ததும் பருவம் வந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
பெண்மை என்பதால் நாணம் வந்ததா
நாணம் வந்ததால் பெண்மை ஆனதா
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா பாசம் என்பதா
கருணை என்பதா? உரிமை என்பதா
  • கருத்துக்கள உறவுகள்

         பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
         கருணை எனது கோயில்
         கலைகள் எனது காதல் ( இசை )  

...

         பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
         கருணை எனது கோயில் கலைகள் எனது காதல்

         கருணை உனது கோயில் கலைகள் உனது காதல்

 

 

 

        இதயம் எனது ஊராகும்
         இளமை எனது தேராகும் ( இசை )

         இதயம் எனது ஊராகும்
         இளமை எனது தேராகும்
         மான்கள் எனது உறவாகும்
         மானம் எனது உயிராகும்

 

         மான்கள் உனது உறவாகும்
         மானம் உனது உயிராகும்

         தென்றல் என்னைத் தொடலாம் 
         குளிர் திங்கள் என்னை சுடலாம்
         மலர்கள் முத்தம் தரலாம் 
         அதில் மயக்கம் கூட வரலாம்  ( இசை )

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

***

பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
  தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
  என் அருகே நீ இருந்தால்
  இரவு பகல் தேவை இல்லை

  தனிமையிலே என் இதயம் துடிக்குதே
  தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

- 1

 ஓ வான் நிலவு ஏளனமாய்
  எனைப் பார்த்து சிரிக்கிறதே
  ஊதுபத்தி போல் எனது
  உயரம் இங்கே குறைகிறதே
  ஆறுகளாய் விழி கலங்கும்
  ஆறுதலாய் நீ இல்லையே
  வேறெதுவும் புரியாமல்
  வேர் வரையும் உன் கனவே
  என்னவளே... என் உலகம் உறையுதே
  கண்களிலே... உன் கனவாய் நிறையுதே

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட
குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா
ஹ… குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை
திருமண வீடென்று தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட
ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ… பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்
ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே - இல்லறம் கண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாட்டிரங்க்கல் கொண்டு
நலமாக வாழியவே

உல்லரம் கண்டு பெண் கழுத்தில்
விழுவதென்ன மூன்று முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்க்கியவள் என்னும் முடிச்சு
கணவனுக்கு உடமை என்னும் இரண்டு முடிச்சு
மூன்று கடவுளுக்கு பயந்தவளன காட்டும் முடிச்சு

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை   கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா        
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்
கடமை அது கடமை கடமை அது கடமை
  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

பெண் தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

ஆண் கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது

பெண் உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

ஆண் தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் என்று

  

 

ஆண் நானும் நின்றேன் சோலை ஓரம்

பெண் நீயும் வந்தாய் மாலை நேரம்

ஆண் பார்வை நாங்கும் பேசும் ஜாலம்

பெண் பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்

 

ஆண் காதல் தேவியே நீ என் ஜோதியே

 

பெண் ஊஞ்சல் போலே எண்ணம் கோடி

நெஞ்சில் ஆடும் உன்னை நாடி

ஆண் கண்ணே நீயும் கேளாயோ

 

பெண் அன்பே நீயும் எங்கே வந்தாய்

யாரை கண்டு இங்கே நின்றாய்

ஆண் உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா

பெண் கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

ஆண் தேவன் கோவில் தீபம் ஒன்று

பெண் ராகம் பாடும் நேரம் என்று

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் 
ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் 
ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா ஆ... ஆஆஅ...
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா.

  • கருத்துக்கள உறவுகள்

                   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
                  ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

பெண்     :   புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
                   மலர்க் கண்கள் நான்கும் முடி கொள்ளு காதல் யோகம்

ஆண்      :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

பெண்     :   ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

                     (இசை)                         சரணம் - 1

பெண்     :   சந்தனக் காடு நான் உன் செந்தமிழ் ஏடு

ஆண்      :   மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

பெண்     :   மேகத்துக்குள் மின்னல் போலே நின்றயே
                   மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே

ஆண்      :   தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் போலே நீயும் வந்தாயே
                   தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனனோ

பெண்     :   விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே

ஆண்      :   கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே

பெண்     :   லலா லா லலா லா

ஆ & பெ :   லலா லா லலா லா

ஆண்      :   சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

பெண்     :   ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)

நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா

  • கருத்துக்கள உறவுகள்

         நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது ( இசை )

         நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
         அதன் கோல வடிவங்களில்
         பல கோடி நினைவு வந்தது
         ஐவகை அம்புகள் கை வழி ஏந்திட
         மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட

         நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது ( இசை )

 

ஆண் கனவு ஏன் வந்தது காதல் தான் வந்தது
         கனவு ஏன் வந்தது காதல் தான் வந்தது
         பருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது

         நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ
         அதன் கோல வடிவங்களில்
         பல கோடி நினைவு வந்ததோ

         நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ

 
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது -
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
கனவு ஏன் வந்தது
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது
பள்ளிக்கொள்ளாதது
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ -
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ
பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை
பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க
வெட்கம் உண்டாகுமோ
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களென்று காட்சி நீ தந்தது
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாறு என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது
 

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...

  • கருத்துக்கள உறவுகள்

    சிலையோடு விளையாட வா
    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண

   

    சிலையோடு விளையாட வா
    இன்ப கலையோடு உறவாடி
    நிலையான சுவை காண
    சிலையோடு விளையாட வா

   

இசை                    சரணம் - 1

   

 

தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    தளிர் போலும் முகம் வேண்டுமா
    இல்லை மலர் போலும் விழி போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
   

 

உன்னை மறவாத மனம் போதுமா
    மாறாத சுகம் வேண்டுமா
    உன்னை மறவாத மனம் போதுமா
    வண்ண மயிலோடு விளையாடும்
   

முகில் போல வா
    வண்ண மயிலோடு விளையாடும்
    முகில் போல வா
    அன்பு மழையோடு வா காதல் கடலாட வா

விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது)

மனதில் வடித்து வைத்த சிலைகள் -அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக் கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது)

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்
(விழியே கதை எழுது)

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான்
நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
  • கருத்துக்கள உறவுகள்

                  நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
                 அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
                 இளம் பூங்கொடியே இது தாய் மடியே

 

      :           நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
                 அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
                 அணைத்தேன் உனையே இது தாய் மடியே

ஆண்      :  நிலவே முகம் காட்டு

                    

 

பெண்     :  பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
                 இனிதான தென்றல் உன்னையே
                 ஊரும் குறை சொல்லலாமா

ஆண்      :  காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
                 இரவில்லாமல் பகலும் ஏதம்மா
                 நான் உன் பிள்ளை தானம்மா

பெண்     :  நானும் கண்ட கனவு நூறய்யா
                 எனது தாயும் நீங்கள் தானய்யா
                 இனி உன் துணை நானய்யா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய் சொல்லும் உறவை வைத்தே உலகம் சொந்தம்
தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம்
(தாய்..)
17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே
பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்
கடலோர உப்பங்கழியும் காதோடு பேசும் அலையும்
500 மயில் போனாலும் தேடி வரும்
(தாய்..)

கிராமம் தன் மடியில கட்டி வளர்த்தது உன்னை
கிராமத்தை மடியில கட்டி போவது என்ன
சாதி தாண்டியே நட்பும் உறவும் மலர்ந்தது அங்கே
சமயாத பெண்கள் பார்த்து மயங்கியது அங்கே
உப்பு மேட்டிலே ஆடி முடித்து சாய்ந்ததும் அங்கே
ஆகாயம் இருட்டில் போர்த்தி தூங்கியது அங்கே
கையோடு அள்ளிய தண்ணீ விரலோடு கசிவது போல
கண்ணோடு நினைவுகள் எல்லாம் கசிகிறதே

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
காற்றும் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை..அவனே தானறிவான்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான்
வா..ஆ

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடு நீ தான்
மண்ணோடு நீ தான்
கண்ணோடு நீ தான்
வா..

மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

  • கருத்துக்கள உறவுகள்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

 

போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

 

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

 

 

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

 

நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

  • கருத்துக்கள உறவுகள்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

 

போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

 

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

 

 

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

 

நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.