Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில அனாமதேய இணையத்தளங்கள் மீது மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் சட்டநடவடிக்கை

Featured Replies

kirupakaran1.jpg
 
மே 2009ன் பின்னர், சில ஊடகங்கள் இணையதளங்கள், தாம் நினைத்தவாறு, ஊடகத்துறையில் தமது அனுபவத்திற்கு ஏற்றவாறு, மிகவும் பண்பற்ற முறையில், பல பிரமுகர்கள், தனி நபர்கள், வியாபார ஸ்தாபனங்கள், ஆலயங்கள் ஆகியவை பற்றி, பல அனாமதேயமாகவும், சில பொய்யான பெயர்களுடனும் வெளியிட்டு வருவது தெரிந்ததே.
 
 இவ்வடிப்படையில், 1990ம் ஆண்டு முதல், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும், தமிழர் மனிதர் உரிமை மையமும், கடந்த 24 வருடங்களாக சர்வதேசத்தில் மனிதர் உரிமை செயற்பாட்டாளராக திகழும், இதன் பொதுச் செயலாளரான, திரு. ச. வி. கிருபாகரன் பற்றி, சில மோசமான விசமத்தனமான விமர்சனங்களை மிக அண்மைக்காலத்தில் சில இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
 
 இப்படியான பல செயற்திட்டங்களை, முன்பு பல வருடங்களாக, சிறிலங்கா அரசு ஆதரவு கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள், தமிழர் மனிதர் உரிமைகள் மையம், அதனது பொதுச் செயலாளரான கிருபாகரன் பற்றியும் வெளியிட்டிருந்தனர். இறுதியில்,ஐ.நா. ஊடகப்பிரிவின் தலையிட்டினால், கொழும்பு ஊடகங்கள் கிருபாகரனிடம் மன்னிப்பும் கோரினர்.
 
 மிக அண்மையில் ச. வி.கிருபாகரனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், ஏதேச்சையான விசமத்தனமான குற்றச்சாட்டுகளை, கட்டுரை செய்தி வடிவில் வெளியிட்ட சில இணையதளங்கள் மீது, சட்ட நடவடிக்கைக்கான வேலை திட்டங்கள் கிருபாகரனும், தமிழர் மனிதர் உரிமைகள் மையமும் ஆரம்பித்துள்ளனர்.
 
 ஏற்கனவே பிரான்ஸிலிருந்து இயக்கப்படும் ஓர் இணையதளம் மீது, சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து இயங்கும் இன்னுமொரு இணையதளம் மீது சட்ட நடவடிக்கைக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
 கிருபாகரன் பற்றிய அவதூறான கட்டுரையை, வெளியிட்ட ஒரு இணையதளம், சில மணி நேரத்தின் பின்னர் கட்டுரையை வாபஸ் பெற்றிருந்தாலும், இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய சட்டத்தில் இடம் உள்ளது.
 
 தமிழர் மனிதர் உரிமை மையமும், இதன் பொதுச் செயலாளரான கிருபாகரனும், கடந்த 24 வருடங்களாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காரணிகளினால் பதிக்கப்பட்ட- இறந்தவர், கைது செய்யப்பட்டோர், சித்திரவதை செய்யப்பட்டோர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோர், போன்றோரின் விபரங்களை, சர்வதேசத்திற்கும் ஐ.நா.மனித உரிமை பிரிவிற்கும் வழங்கி வந்துள்ளார்கள் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. இதை தெரியாதோர் யாரும் இருப்பின், இவற்றை சிறிலங்கா அரசிடமே வினாவி அறிந்து கொள்ளலாம்.
 
 கிருபாகரனின் இச் செயற்பாட்டை, இந் நாளில் தமது பெயருக்கும் புகழுக்கும் ஐ. நா. மனித உரிமை சபையில், தமது “வரவை” பதிவு செய்வோர் சிலர், தமது புகழ் பாடும் செயற்பாட்டிற்கு, கிருபாகரன் ஓர் தடைக்கலாக இருப்பதாக எண்ணுகின்றனர்.
 
 இச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வரும் கட்டத்தில், பல லட்சம் யூரோ அபராதத்துடன் கூடிய, சில வருட சிறை தண்டனையும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சட்ட நடவடிக்கையில், இந்த இணையதளத்தினால் ஏற்கனவே பதிப்பிற்குள்ளான,சில கல்விமான்கள், முக்கிய ஸ்தாபனங்களின்
பிரதிநிதிகள் போன்ற பலர் சாட்சியமளிக்கவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சில அனாமதேய இணையத்தளங்கள் மீது மனித உரிமை செயற்பாட்டாளர் கிருபாகரன் சட்டநடவடிக்கை

 

நல்லவிடயம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தனக்கு வந்த பிறகு எடுக்கும் முடிவு..!

 

இதற்க்கு முன்னா் பலா் அனாமதேயமாக விமா்சிக்கப்பட்டிருந்தமை பற்றி யாரும் அக்கறைப்படவில்லை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.