Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச காணாமற் போனோர் தினம் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச காணாமற் போனோர் தினம் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:-
30 ஆகஸ்ட் 2014

 

tamil-activists_CI.jpg

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 
 
கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. 
 
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபைஇ மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செயற்படுகின்றன. 
 
இந்தவகையில் சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் நடந்த இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். 

குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பின்னர் ஒன்ரறை லட்சம் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. இவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். 

இலங்கையில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் ஒர் உபாயமாக காணாமல் போகச் செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது. 

காணாமல் போகின்றவர்கள் மரணமற்றவர்கள் என்பதைப் போல தொடர்ந்து தேடப்படுகின்றார்கள். அவர்களது குடும்பங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். 

இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது. 

இலங்கையின் இனப்பிரச்சினையின் ஒடுக்குமுறையின் தீவிரத்தை காணாமல்; போகச் செய்தல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. 

காணாமல் போனவர்கள் மீள வேண்டும் என பிரார்த்திப்பதுடன் அவர்களுக்கான போராட்டத்தில் ஒரு மக்கள் ஊடகமாக குளோபல் தமிழ் செய்திகளும் பங்களிக்கும். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111068/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில்... அதிகம் காணாமல் போனவர்களில், ஈழத் தமிழர்களும் முதன்மையானவர்கள்.

 

காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற எஞ்சிய சில  நம்பிக்கையுடன்,,,,
அவரை இன்னும்...  தேடிக் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளான.....

மனைவி, கணவன், தந்தை, தாய், மகன், மகள், சகோதரன், சகோதரி.... என்று,

இவர்கள் படும் வேதனை எழுத்தில் வடிக்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...topic=145151=

 

இன்றைய தினத்திற்கு, தீபச் செல்வனின்....  நெஞ்சை உருக்கும் கவிதை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் காணமல் போனதினம் இன்று

சர்வதேசத்தால் நினைவுகூறப்படுகிறது...

 

மிருகங்கள்

ஊர்வன

தவழ்வன

மரம் செடிகள்

இவற்றிற்கும்  நினைவுகூறலும்

தடுத்தலும் உண்டு..

 

தமிழர் மட்டும்

இவற்றிற்குள் இல்லை..... :(  :(  :(

சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்தவிற்கும் கோத்தா மற்றும் படையினருக்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் வீதி மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை தடை விதித்தமைக்குப் பல தரப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
 

vavuniya_kanamal_ponor.1.png

முன்னதாக வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது அரசியல் பிரமுகர்களின் உரைகள் உட்பட பல்வெறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணசபை அமைச்சர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ மதபிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

vavuniya_kanamal_ponor.2.png

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் காவல்துறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் எனக் கூறினர். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக எமது காரியமொன்றிற்காகச் செல்லப்போகின்றோம் என தெரிவித்து நடந்து சென்றனர்.
 

vavuniya_kanamal_ponor.3.png

இவருடன் அரசியல் பிரமுகர்கள் காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் சென்ற சமயம் நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன்போது ஊர்வலமாகச சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் பொலிஸாரை கடந்து சென்றனர். எனினும் ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
 

vavuniya_kanamal_ponor.4.png
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் எக்காரணம் கொண்டும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தொவித்தனர். இதனால் மீண்டும் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்துத் தடைப்பட்டுக்கொண்டது.

vavuniya_kanamal_ponor.5.png
இவ்வாறு வீதியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். நீண்ட இழுபறிகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டன் பின்னர் அனைவரும் கலைந்து செனறிருந்தனர்.

vavuniya_kanamal_ponor.6.png
 

 http://www.pathivu.com/news/33519/57//d,article_full.aspx
 

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோரின் ஊர்வலம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது:- மகஜர் கையளிப்பு தோல்வியில்..
30 ஆகஸ்ட் 2014
lg-share-en.gif
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

Missins%20protest1_CI.jpg

சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்திற்கு பொலிஸார் தடை விதித்தமையால் மகஜர் கையளிக்கும் நிகழ்வு தோல்வியில் முடிவடைந்தது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது அரசியல் பிரமுகர்களின் உரைகள் உட்பட பல்வெறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ன.

இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன். வினோ நோகதாரலிங்கம், எம். சுமந்திரன், எஸ். சரவணபவன், வட மாகாணசபை அமைச்சர்களான ப. சத்தியலிங்கம், பா. டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் இ. இந்திரராஜா, எம். தியாகராஜா, து. ரவிகரன், சி. சிவமோகன், அனந்தி சசிதரன், சிராய்வா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ உட்பட பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் பொலிஸார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் எனக் கூறினர்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக எமது கரியமொன்றிற்காக செல்லப்போகின்றோம் என தொவித்து நடந்து சென்றனர்.

இவருடன் அரசியல் பிரமுகர்கள் காணாமல் போனோரின் உறவுகள்மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் சென்ற சமயம் நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது ஊhவலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் பொலிஸாரை கடந்து சென்றனர்.

எனினும் ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.

இதனையடுத்து மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் எக் காரணம் கொண்டும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தொவித்தனா. இதனால் மீண்டும் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து தடைப்பட்டுக்கொண்டது.

இவ்வாறு வீதியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இவ்வாறான நிலையில் பொலிஸாருடன் பேச்சுக்களை நடத்திய செபமாலை அடிகளார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து ஒருமைப்பாட்டுக்கு வந்து வீதியில் இருந்தவர்களிடம் இங்கு பல்வேறானவர்கள் நுழைந்துள்ளனர். எவ்விதமான பாரதூரமான நிகழ்வுகள் ஏறபடுவதற்கான வாய்ப்புகள் வரலாம் என்பதனாலும் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் உட்பட யாரும் அற்ற நிலை காணப்படுவதனாலும் நாம் சமர்ப்பிக்கவுள்ள மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனா.

எனினும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் முன்னின்று நிகழ்வினை நடத்துவதற்கு செயற்பட்ட பலரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து ஏ9 வீதியில் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டன் பின்னர் அனைவரும் கலைந்து செனறிருந்தனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111081/language/ta-IN/-----.aspx

 

பிற்குறிப்பு: தேனும் பாலும் ஓடும் போது மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது மனசுக்கு கயிட்டமாக  ஈக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில்.. வசந்தம் வீசுகின்றது,
கிழக்கில்... ஒளி பாய்கின்றது என்று, சொல்பவர்களின் கவனத்திற்கு...
 

உங்கள்..... குடும்பத்தில், ஒருவன் செத்திருந்தால்.....

ஈமக் கிரியையையும், அந்தியேட்டியும், திவசமும் செய்யலாம்.
ஆனால்... காணாமல் போனவர்களுக்கு, எதுவும் செய்ய முடியாது.
இன்றோ...நாளையோ... வருவான் என்று, அரை உயிருடன்...

வாழ்க்கையை நகர்த்திச் செல்லும்... இந்த மனிதருக்கு கிடைத்த பரிசு,

மீண்டும்.... ஸ்ரீலங்கா பொலிசாரின் அடக்குமுறை.

 

இதற்குத்தான்..... புலி தமிழருக்கு, அத்தியாவசிய தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.