Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை 2016 வரை நடத்த வேண்டிய தேவை சட்டத்தில் இல்லை: எம்.ஏ சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழுகின்றன. ஆயினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை சட்டத்தில் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிகாலம் 2016ஆம் ஆண்டே நிறைவடையவுள்ளது. இந்நிலையிலே பல எதிர்பார்ப்புகளை குழப்புவதற்காகவோ இன்றேல், வேறு எதற்காகவோ, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா புதியதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

18ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ஒருவர் 3ஆவது தடவையாகவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்தப் புதிய கருத்தாகும்.

18ஆம் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய இரண்டாம் பதவிக் காலத்தை ஆரம்பித்து விட்ட காரணத்தினாலே, அவர் ஆரம்பித்த வேளையிலே, அது அவருடைய இரண்டாம் பதவிக்காலத்தின் இறுதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் அவர், இம்முறையுள்ள தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சட்ட பிரச்சினையை முன்னாள் பிரதம நீதியரசர் கிளப்பியிருக்கின்றார்.

அவரது கருத்தை ஆராய்ந்து பார்த்தால், சட்டத்தின் பிரகாரம் அது நீதியானதாகவே காணப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாத காலத்தில் 18ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்தும் தற்போது இச்சட்டம் காணப்படுவதன் காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

இருந்தும் இப்படியானதொரு கருத்தை 3 வருடங்களுக்கு பிறகு முன்வைத்ததற்கான காரணம் என்ன என்ற சந்தேகமும் எம்மில் எழுந்துள்ளது.

இதை இந்நேரத்தில் தெரிவிப்பது யாருடைய தேவையாக இருக்கும். கட்சிக்குள் பிரச்சினையொன்று இருக்கின்றதா? தற்போதுள்ள ஜனாதிபதி பதவியில் உள்ளவரை நீக்கிவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும் வேறொருவரை தேர்தலில் போட்டியிட வைப்பதா? இல்லையேல், ஜாதிக ஹெல உரிமையில் உள்ளவர்கள், சரத் என் சில்வாவை இவ்வாறு கூறுமாறு தூண்டி விட்டனரா? அதுவும் இல்லையாயின் குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுத்த வாய்ப்பு போதும், வேறு யாராவது போட்டியிடலாம் என்ற எண்ணம் இருக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

என்னவாக இருந்தாலும் யுத்தத்தை நாமே முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று கூறிய காலத்தில் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருந்த புகழ் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் வந்தால் மீண்டும் வெற்றியடைய முடியுமா?, என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு காரணத்தை வைத்தாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்ற வழிமுறைகளையும் தேடிக்கொண்டு இருப்பது இதனூடாக நன்றாகவே தெரிகிறது” என்றுள்ளார்.

http://4tamilmedia.com/newses/srilanka/25564-2016

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தில் இல்லை. ஆனால் மகிந்தவுக்கு தேவை இருக்கே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.