Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்.....

உதாசீனம்

செய்பவர்களிடம்

அதீத அன்பையும்

நட்பையும் பகீராதீர்கள்...!!!

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரை இலைத் தண்ணீர் போல் எதிலும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் நோதல் இல்லாது வாழலாம்.

 

 

 

10386993_767289143304903_444372769146422


 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்..பிறர் செய்த தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகின்றான்!!!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும்
பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும்
இதனால் ஒரு சொற்  தொடர் உருவாயிற்று.அது என்ன சொற்  தொடர் ..........????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10362863_894556907223002_463792056735918

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி இலவுகாத்த கிளி என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி இலவுகாத்த கிளி என்று நினைக்கிறேன்.

 

ஆம் நீங்கள் சொல்வது சரி அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம்.26.09.2014..

 

 

பின்.குறிப்பு.சிலவேளைகளில் எனது பதிவுகள் ஐபாட் மூலமாக இடப்படுவதனால் அந்த நேரங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன..புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்..பிறர் செய்த தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகின்றான்!!!

 

சூப்பர்... யாயினி :D.

உங்களது... பதிவுகளை, தொடர்ந்து படித்து வருகின்றேன் :) .

அனைத்தும்...... அழகு. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய நற்காலை வணக்கம் உறவுகளே......!! இன்று புரட்டாதி இரண்டாம் சனிக்கிழமை.

 

10665723_861563747190275_874185055877853


 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day)  உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்ரம்பர் 27ம் நாளில் 1980ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979 இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஜக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவினக் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

 

 

தலை மன்னார்....உலக சுற்றுலா நாள்..(world Tourism Day)

10347247_702111616517224_480870429603680

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

- அறிஞர் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

242648_212806135419876_2951942_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள்
எனக்கு இல்லை.
- தோழர் அம்பேத்கர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ManikkaVeenai Enthum (Devi Navarathiri song) by P.Suseela

 

http://www.youtube.com/watch?v=nSB6nbzHKUk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்... யாயினி :D.

உங்களது... பதிவுகளை, தொடர்ந்து படித்து வருகின்றேன் :) .

அனைத்தும்...... அழகு. :rolleyes:

 

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூகிள் தளம் தனது 16வது ஆண்டுக்குள் கால் பதிக்கிறது..27.09.2014.கேக்கிற எல்லாத்தையும் முடிந்தவரைக்கு தேடிக் கொடுக்கும் கூகிள் இன்னும் பல ஆண்டு வெற்றி நடை போடனும்.

 

10411996_816135765086984_764043869548131

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகழ்பெற்ற விஞ்ஞானி சர்அய்சக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒரே ஒரு முறைதான் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியது இதுதான்:

காற்று வரவில்லை. தயவுசெய்து கதவுகளைத் திறந்துவிடுங்கள். ரேயான் இழை மூங்கிலில் இருந்து எடுக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் மொட்டவிழ்ந்து புன்னகைக்கும் இனிய ஞாயிறு "காலை வணக்கம்"! ...அனைவருக்கும் நன்மை பயக்கும் நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

375844_472432006123953_795558873_n.jpg?o

 

 

 

530824_483729274994226_991250305_n.jpg?o

 

425662_483730048327482_765996342_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்...

 

1. பணிவு

 

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

 

2. கருணை

 

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

--> 3. பழகும் தன்மை

 

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

 

4. அரவணைக்கும் குணம்

 

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

 

5. இணைந்து பணியாற்றும் தன்மை

 

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

 

6. முடிவெடுக்கும் திறன்

 

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10487175_602844733162882_851143276962572

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா தலையணைகளும் ஒரு காதல் கதை, ஒரு துரோகத்தின் வலி, ஓர் பிரிவு என சில பாரங்களில் நனைந்தே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10300430_1692778597614013_66651543484590

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்...! ஒருவனைப் பாராட்ட நேர்ந்தால் பலர் அறிய பாராட்டுங்கள்..தேவையான இடங்களில் நன்றியினையும் பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

 

 

 

 

 

 

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.