Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.
சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.
கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.
துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.
வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.
சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.
கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.
நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.
காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.
என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?
அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...
*இவள் தான் மனைவி.
  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Tree House Library
❤
May be an image of tree and outdoors
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
வ.உ.சிதம்பரம்..!
 
233484711_4521035024593632_7321155323105
 
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.
சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..
ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!
வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.
வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!
அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!
இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.
சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!
வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.. "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!
ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்.. "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)
வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது.. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!
உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!
பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!
1806-ல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857-ல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம் என்ன?
இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!
தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!
- ஹேமவந்தனா ரவீந்திரதாஸ்
படித்ததில் பிடித்தது...
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/bala.billabrothers/videos/970549790377925/

 

 

அப்புடி என்னதான் இந்த குரங்குப்பிள்ளை சொல்லி இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
228143513_390775569143386_15400154519426
 
 
225760282_390775655810044_77993092326234
 
 
235028094_390775805810029_43229396436355
 
 
235033582_390776055810004_60959022373548
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியை நோட்டம் விடும் மட்டுறுத்தினர்மார் கவனத்திற்கு...நான் ஏதாவது பதிவிடும் போது இறுதியில் இரண்டு கோடு வருகிறது அதை ஒரு முறை சரி செய்து விடவும்...நான் ஒன்றும் செய்ததாக நினைவில்லை..ஏதேேh அப்படி வருது...🤔✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இள்று அனைத்துலக இடதுகை பாவனையாளர்கள் தினம்.இந்த இடக்கைப் பிரச்சைனாயால் போற இடத்தில வலது கையால் ஒழுங்காக ஒன்றும் செய்ய இயலாது அவஸ்த்தைப் படுபவர்களில் நானும் ஒருத்தி.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் மாலைத்திருவிழா 13.08.2021 நேரலை
 
 

காலை உற்சவம்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, யாயினி said:

இள்று அனைத்துலக இடதுகை பாவனையாளர்கள் தினம்.இந்த இடக்கைப் பிரச்சைனாயால் போற இடத்தில வலது கையால் ஒழுங்காக ஒன்றும் செய்ய இயலாது அவஸ்த்தைப் படுபவர்களில் நானும் ஒருத்தி.
 

நானும் இடது கை பழக்கம்தான் 😎

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, யாயினி said:

இள்று அனைத்துலக இடதுகை பாவனையாளர்கள் தினம்.இந்த இடக்கைப் பிரச்சைனாயால் போற இடத்தில வலது கையால் ஒழுங்காக ஒன்றும் செய்ய இயலாது அவஸ்த்தைப் படுபவர்களில் நானும் ஒருத்தி.
 

நான் கூட இடது கை பழக்கமே, ஆனால் அதை விரும்புவதால் சங்கடமாக நினைப்பதில்லை.. இந்த இடது கை பழக்கத்தால் badminton, table tennis  போன்றவற்றை விளையாடும் பொழுது அதிகம் பயன் கிடைப்பதால் இடது கை பழக்கத்தை விரும்புகிறேன்.. 

நான் பேனையால் எழுதுவது வலதுகையால்- நர்சரியில் மாற்றிவிட்டார்கள் ஆனால் இப்பொழுது போனிலேயே எழுதுவது, electronic signature, etc etc வந்தபின் அந்த குறை நீங்கிவிட்டதான ஒரு சிறு மனதிருப்தி😊

https://www.google.com.au/amp/s/www.telegraph.co.uk/news/2021/08/13/left-handers-day-2021-what-history-facts-why-celebrate-celebrities/amp/

large.446F30E0-C06A-4055-89F0-142A7F7F8111.jpeg.8fee51002f96409ee0a2f1a14b60f06f.jpeg

Lefties பற்றி படித்ததில் பிடித்தது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் கூட இடது கை பழக்கமே, ஆனால் அதை விரும்புவதால் சங்கடமாக நினைப்பதில்லை.. இந்த இடது கை பழக்கத்தால் badminton, table tennis  போன்றவற்றை விளையாடும் பொழுது அதிகம் பயன் கிடைப்பதால் இடது கை பழக்கத்தை விரும்புகிறேன்.. 

நான் பேனையால் எழுதுவது வலதுகையால்- நர்சரியில் மாற்றிவிட்டார்கள் ஆனால் இப்பொழுது போனிலேயே எழுதுவது, electronic signature, etc etc வந்தபின் அந்த குறை நீங்கிவிட்டதான ஒரு சிறு மனதிருப்தி😊

https://www.google.com.au/amp/s/www.telegraph.co.uk/news/2021/08/13/left-handers-day-2021-what-history-facts-why-celebrate-celebrities/amp/

large.446F30E0-C06A-4055-89F0-142A7F7F8111.jpeg.8fee51002f96409ee0a2f1a14b60f06f.jpeg

Lefties பற்றி படித்ததில் பிடித்தது.. 

பொது இடங்களில் எல்லோரும் மற்றவர்களது நிலையை புரிந்து கொள்ள மாட்டார்கள் இல்லயா..தவிர்க்க முடியாத சூழ் நிலையால் வெளியில் சாப்பிடும் போது வலதுகையால் கரண்டி பிடிப்பது என்பது செய்ய முடியாத ஒன்று.இடக்கையால் சாப்பிடுவதை பார்த்துட்டு திடீர் என்று யாராவது  இது என்ன பழக்கம்.... என்று கேட்டு சத்தம் போட்டால் எப்படி இருக்கும்...சோ ...அந்த சமயங்களில் அந்தரமாக இருக்கும்..😀🤭

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைக்கல் கொலினின் வீணையடி நீ எனக்கு | அன்னலட்சுமி இராஜதுரை | Aug 2021

 

வீடு பத்திரிகையிலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4h  · 
 
கடற் சூரியன் என்னும் Sun Sea கப்பல் 492 இலங்கைத் தமிழர்களுடன் கனடாவின் British Columbia மாகாணத்தை வந்தடைந்த 11ஆவது வருட நிறைவு நாள் இன்று .....
May be an image of outdoors
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் நாள் மாலை உற்சவம்
Nallur Kandaswamy Kovil 2nd Day Evening Festival
234739886_391612839059659_17101494703355
 
 
229025880_391613029059640_68462977722582
 
 
229647147_391612995726310_36816458923782
 
 
234362552_391612915726318_87065820767857
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொதிக்கும் பூமி: 142 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணா வெப்ப நிலை

14 ஆகஸ்ட் 2021
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத் தீ

பட மூலாதாரம்,SOURCE REUTERS

 
படக்குறிப்பு,

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத் தீ

இந்த ஆண்டு (2021) ஜூலை மாதம் தான் இதுவரை உலகம் பதிவு செய்த மிக வெப்பமான மாதம் என அமெரிக்க மத்திய அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை முகமை கூறியுள்ளது.

நிலம் மற்றும் கடல் பரப்பின் ஒருங்கிணைந்த வெப்பநிலை கடந்த 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப நிலையான 15.8 டிகிரி செல்சியஸை விட 0.93 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.

142 ஆண்டுகளாகத் தான் உலகில் வெப்பநிலை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே தட்ப வெப்பநிலைகளை பதிவு செய்யத் தொடங்கிய காலம் முதல் 2021 ஜூலை தான் வரலாறு காணாத அதிகபட்ச வெப்ப நிலை.

இதற்கு முன்பு 2016 ஜூலைதான் அதிக வெப்பமான மாதமாகப் பதிவானது. அது 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சமன் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இது பருவநிலை மாற்றத்தின் நீண்ட கால தாக்கம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தொடர்ந்து வெப்பமடையும் சுற்றுச்சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தொடர்ந்து வெப்பமடையும் சுற்றுச்சூழல்

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த விரும்பத்தகாத ஜூலை மாத வெப்பநிலை நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது.

"ஏற்கனவே பருவநிலை மாற்றம் பூமிக்கு ஏற்படுத்தி இருக்கும் சிக்கலை, இன்னும் தீவிரமாக்குகிறது இந்த புதிய அதிகபட்ச வெப்பநிலை"

கடந்த 2016ஆம் ஆண்டு இருந்த வெப்ப நிலையை விட இந்த 2021 ஜூலை மாதத்தில் நிலம் மற்றும் கடல் பரப்பின் வெப்ப நிலை 0.01 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது.

புவியின் வட அரைகோளத்தின் நில பரப்பின் வெப்பநிலை சராசரியாக பதிவாவதை விட 1.54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக பதிவாகியுள்ளது. இது 2012ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஜூலை தான் ஆசிய கண்டத்தின் மிக வெப்பமான மாதமாகவும், ஐரோப்பிய கண்டத்துக்கு இரண்டாவது அதிகபட்ச வெப்பம் பதிவான மாதமாகவும் இருக்கிறது. ஜூலை 2018 தான் ஐரோப்பிய கண்டத்தில் அதிகபட்ச வெப்பமாக பதிவாகியுள்ளது என்பது நினைகூரத்தக்கது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்ட வெப்ப நிலை வரைபடம்

பட மூலாதாரம்,SOURCE NOAA

 
படக்குறிப்பு,

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்ட வெப்ப நிலை வரைபடம்

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்ட செய்தி அறிக்கையில், கடந்த 2021 ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வானிலை மாறுபாடுகளை குறிப்பிடும் வரைபடம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அதில் இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட புயல்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பருவநிலை மாற்றம் பூமியின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்துவதாக சமீபத்தில் தான் ஐ.நா அமைப்பின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில மாற்றங்களை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது அல்லது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

"அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மனித இனத்துக்கான அபாய சங்கு" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரஸ் கூறினார்

"நாம் இப்போது ஒருங்கிணைந்து செயல்பட்டால், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அழிவை தவிர்க்கலாம். நாம் தாமதப்படுத்தவோ, குறைகூறிக் கொண்டிருப்பதற்கோ நேரமில்லை என்பதை இன்றைய அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது" என கூறினார்.

கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் (1970-களிலிருந்து) பூமியின் நிலப் பரப்பு வெப்பநிலை அதிவேகமாக உயர்ந்திருக்கிறது என அவ்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகிறார்கள்.

பிபிசி.கொம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21-6117ad13838b6.webp
செஞ்சோலை சிறார்களின் நினைவஞ்சலி
இறப்பு - 14 AUG 2006

15ம் ஆண்டு நினைவஞ்சலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தடுப்பு}சிகளைப் போடுங்கள் என கேட்கிறார்களா? இல்லை போடாமல் வாருங்கள் எங்களிடம் புதைப்பதற்கு இடம் இருக்கிறது என விளம்பரம் செய்கிறார்களா? எல்லாம் பார்க்கின்ற பார்வையில் இருக்கிறது...
 
May be an image of text that says 'MEMORIAL WINDSOR GARDENS O 1100 NOT VACCINATED YET YOU MAY BE HERE SOON'
 
 
 
இதை என்னவென்று சொல்வது......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 Kitchen holiday👋

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் எங்கு எப்போது வாழ்ந்தது? - Amphibious Phiomicetus Anubis எனும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

28 ஆகஸ்ட் 2021
நான்கு கால் கொண்ட திமிங்கலம்

பட மூலாதாரம்,DR ROBERT W. BOESSENECKER

 
படக்குறிப்பு,

நான்கு கால் கொண்ட திமிங்கலம்

நான்கு கால்களைக் கொண்ட திமிங்கல புதிய உயிரினத்தை எகிப்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அது சுமார் கடந்த 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்ஃபிபியஸ் ஃபியோமெசிடஸ் அனுபிஸ் (amphibious Phiomicetus anubis) என்கிற உயிரினத்தின் புதை படிமங்கள் எகிப்து நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த உயிரினத்தின் தலை அனுபிஸ் உயிரினத்தை ஒத்து இருக்கிறது. அந்த உயிரினத்துக்கு எகிப்தின் பழங்கால குள்ளநரி தலை கொண்ட மரண கடவுளைத் தொடர்ந்து அந்த உயிரினத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டது.

தற்போது இருக்கும் திமிங்கலங்களின் மூதாதையர்கள், மான் போன்ற பாலூட்டிகளில் இருந்து வந்தவை. இந்த உயிரினங்கள் கடந்த 10 மில்லியன் ஆண்டுகளில் நிலத்தில் வாழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தோரோயாமாக 600 கிலோ எடை மற்றும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் (10 அடி) நீளம் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம் தன் இரையை வேட்டையாட வலுவான தாடைகளைப் பெற்றிருந்தது என 'தி ப்ரொசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி' என்கிற சஞ்சிகையில் கடந்த புதன்கிழமை பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த திமிங்கலத்தால் நிலத்தில் நடக்கவும், நீரில் நீந்தவும் முடிந்து இருக்கிறது.

திமிங்கலம் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

திமிங்கலம் கோப்புப் படம்

அந்த உயிரினத்தில் ஒரு பகுதி எலும்புக் கூடுகள், எகிப்து நாட்டில் இருக்கும் ஃபயூம் டிப்ரஷன் என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை மன்சோரா பல்கலைக்கழகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். தற்போது பாலைவனமாக இருக்கும் எகிப்தின் மேற்குப் பகுதிகள், ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு இருந்தது. அப்பகுதி புதை படிவங்கள் அதிகம் கிடைக்கும் இடமாக இருக்கிறது.

"ஃபியோமெசிடஸ் அனுபிஸ் என்பது ஒரு முக்கியமான புதிய திமிங்கல இனம், இந்த கண்டுபிடிப்பு எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் முக்கியமானது" என இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆசிரியரான அப்துல்லா கோஹர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

இதை விட ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், இப்படி கால்கள் கொண்ட திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது தான். ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ் உயிரினம், நிலத்திலும் நீரிலும் வாழ்ந்த திமிங்கலங்களில் ஆரம்ப காலத்தவையாக கருதப்படுகிறது.

திமிங்கலங்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்காசியாவில் பரிணாம வளர்ச்சி கண்டு உருவானதாக கருதப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு வரலாற்றுக்கு முந்தைய கால உயிரினங்களைக் குறித்து ஆராயும் ஒரு அணி பெரு நாட்டில் விரல்கள் ஒட்டிய நிலையில் இருக்கும் நான்கு கால்கள் கொண்ட, 43 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதை படிவத்தை கண்டு பிடித்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

bbc.com
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

26 ஆகஸ்ட் 2021

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்

பட மூலாதாரம்,WFP/TSIORY ANDRIANTSOARANA

 
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி மடகாஸ்கர் உலகின் முதல் "பருவநிலை மாற்றப் பஞ்சத்தை" எதிர்கொள்ளும் விளிம்பில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக மழையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமான பசி பட்டினியாலும், உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சி, மடகாஸ்கர் நாட்டின் தெற்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விவசாய சமூகங்களை கடுமையாக பாதித்துவிட்டது, இதனால் அவர்கள் பூச்சிகளை வேட்டையாடி உண்டு உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

"இந்த பஞ்சம் போன்ற நிலைமைகள், பருவநிலையால் ஏற்படுகின்றன" என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் ஷெல்லி தக்ரல் கூறினார்.

தற்போது சர்வதேச அளவில் 30,000 பேர் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பின்மையின் உச்ச நிலையில் (ஐந்தாவது நிலை) இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. மடகாஸ்கரில் அறுவடைக்கு முந்தைய பாரம்பரிய காத்திருப்பு காலத்தில் (பயிரை நடவு செய்த பின் அறுவடைக்கு காத்திருக்கும் காலம்) நுழைய இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கவலை நிலவுகிறது.

"இதுவரை காணப்படாத நிலை இது. இந்த மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள்," என ஷெல்லி தக்ரல் கூறினார்.

அம்போசாரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான ஃபாண்டியோவாவில் வாழும் குடும்பத்தினர், சமீபத்தில் அவர்கள் உண்ணும் வெட்டுக்கிளிகளை, பார்வையிட வந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட குழுவிடம் காட்டினர்.

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

பட மூலாதாரம்,WFP/TSIORY ANDRIANTSOARANA

 
படக்குறிப்பு,

பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் மக்கள்

"என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்கிறேன், ஆனால் கிட்டத்தட்ட தண்ணீரே இல்லை" என நான்கு குழந்தைகளின் தாயான டமரியா கூறினார்.

"இதைத் தான் நானும் என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம், ஏனென்றால் நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை, நாங்கள் விதைத்ததை அறுவடை செய்ய மழை இல்லை," என கூறினார் டமரியா.

"கற்றாழை இலைகளைத் தவிர இன்று எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை" என மூன்று குழந்தைகளின் தாயான போலே, உலர்ந்த பூமியில் அமர்ந்த படி கூறினார்.

அண்டை வீட்டாரைப் போலவே, தனது கணவரும் சமீபத்தில் பசியால் இறந்துவிட்டதாக அவர் கூறினார், அவர் உணவளிக்க மேலும் இரண்டு குழந்தைகள் இருந்தன.

"நான் என்ன சொல்ல முடியும்? நாங்கள் உயிர்வாழ மீண்டும் மீண்டும் கற்றாழை இலைகளைத் தேடுவதே எங்கள் வாழ்கையாக இருக்கிறது." என்கிறார் போலே.

நீர் மேலாண்மை

வறாட்சியில் மடகாஸ்கர்

பட மூலாதாரம்,OCHA/REUTERS

 
படக்குறிப்பு,

வறாட்சியில் மடகாஸ்கர்

மடகாஸ்கர் அடிக்கடி வறட்சியை அனுபவித்தாலும், எல் நினோவால் ஏற்படும் வானிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றாலும், காலநிலை மாற்றம் தற்போதைய பிரச்சனையுடன் நேரடியாக இணைக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

"சமீபத்தைய ஐபிசிசி அறிக்கையில், மடகாஸ்கரில் ஈரப்பதம் குறைவதை எங்களால் பார்க்க முடிந்தது. பருவநிலை மாற்றம் தொடர்ந்தால் அது அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

"பல வழிகளில் மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள இது வலுவான வாதமாக பார்க்கலாம்" என்கிறார் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மடகாஸ்கன் விஞ்ஞானி மற்றும் முனைவர் ரோண்ட்ரோ பரிமலாலா.

கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் அதே வளிமண்டல தரவைப் பார்த்து, பருவநிலை அபாய மையத்தின் இயக்குநர், க்றிஸ் ஃபங்க், "வளிமண்டல வெப்பமடைதல்" உடனான தொடர்பை உறுதிப்படுத்தினார், மேலும் மடகாஸ்கர் அதிகாரிகள் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

"குறுகிய காலத்தில் நிறைய செய்ய வேண்டும், அது செய்ய முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சாதாரண மழையை விட எப்போது அதிக மழை பொழிய உள்ளது என கணிக்க முடியும், விவசாயிகள் தங்கள் பயிர் உற்பத்தியை அதிகரிக்க அத்தகவலைப் பயன்படுத்தலாம். பருவநிலை மாற்றத்தின் போது நாங்கள் சக்தியற்றவர்கள் அல்ல ," என்று கூறினார்.

தற்போது நிலவும் இந்த வறட்சியின் தாக்கம், தெற்கு மடகாஸ்கரில் உள்ள பெரிய நகரங்களிலும் உணரப்படுகிறது. பல குழந்தைகள் உணவுக்காக தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

"சந்தையில் விலை மூன்று அல்லது நான்கு மடங்கு உயர்கின்றன. உணவு வாங்குவதற்கு மக்கள் தங்கள் நிலங்களை விற்று பணம் பெறுகிறார்கள்," என டொலானாரோவில் இருக்கும் 'சீட்' என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் சினா எண்டோர் கூறினார்.

அவருடைய சக ஊழியர் லோம்பா ஹசோவானா, அவரும் இன்னும் பலரும் தங்கள் மரவள்ளிக் கிழங்கு வயல்களில் தூங்கச் சென்று உணவுக்காக ஆசைப்படும் மக்களிடமிருந்து தங்கள் பயிர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறினார்.

"நீங்கள் உங்கள் உயிரைப் பணையம் வைக்கலாம். எனக்கு இது மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் எனக்கும் என் குடும்பத்திற்கும் உணவளிப்பது பற்றி நான் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்: "இப்போது வானிலை பற்றி எல்லாம் கணிக்க முடியாத நிலை இருக்கிறது. நாளை என்ன நடக்கும்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி குறி " என்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01/09/2021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.