Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்த வருடம் முடியும் வரை தற்காலிகமாக வழங்குகிறார்கள்.

 

தகவலுக்கு மிகவும் நன்றி ஏராளன்..

 

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🖐️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோ கோம் கோத்தா மாதிரித் தான் இங்கயும் செய்ய போறன்.🤭.யாழ் வந்து இன்றும் இரண்டு. முன்று மணி நேரம் வேலை செய்ய இல்ல...😑இப்ப தான் வந்திச்சு..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*
*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!
உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று *செல்வம்!*
இரண்டு *இளமை!*
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...
காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!
உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
சாட்சாத் *சரஸ்வதி தேவி* யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் பெண்கள் கொண்டாட்டம்/Dinner with Tamil celebrities in UK parliament

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்! # Today WorldBookDay 
 
புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.
 
புத்தகம்
‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.
 
அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
 
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
 
புத்தக தினம்
‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!
 
புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்... மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!
 
 
World Book Day 2021: Top Quotes That Can Encourage One To Pick Up A Book

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று வாங்கிய புத்தகங்கள் ...

1.சுருட்டு புகைத்துக் கொண்டு இருந்தார் தோழர் சேகுவேரா-சக்கரவர்த்தி
2.எஸ்.பி.பி.பாடகன் சங்கதி-கானா பிரபா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 · 
 
01)ஆனைவிழுந்தான் - வவுனியா
02) ஆனைவிழுந்தான் - கிளிநொச்சி
03) ஆனைவிழுந்தான் - வல்லிபுரம்(யாழ்)
04) ஆனைவிழுந்தான் - இளவாலை(யாழ்)
05)ஆனைவிழுந்தான்பாளி-நாவற்குழி(யாழ்)
06)ஆனைவிழுந்தான் - பளை(யாழ்)
07)ஆனைவிழுந்தான் - புத்தளம்
(ஆனைவிழுந்தாவ)
அழகிய வெள்ளலைகள் ஓசை நயம் கூட்டி ஆசையுடன் ஓடியோடி வந்து மெல்லெனத் தாலாட்டும் மாங்கனித்தீவு எங்கள் தீவு!
எங்கள் தாய்நிலத்தில் எம் முந்தையர் தமிழின் அழகிய தடங்களை ஆழமாகவே பதித்துச் சென்றுள்ளனர்.
ஊர்கள்,சிற்றூர்கள்,மலைகள்,கடல்கள்,
மரங்கள் ஆகியவற்றின் அர்த்தம் பொதிந்த தூய தமிழ்ப்பெயர்கள் மூலம் அழகிய அந்தத் தடங்கள் புலப்படுகின்றன.
ஊர்ப்பெயர்களூடே அவர்கள் பதித்துச் சென்ற பொற்தடங்களில் முதலாவதாக வல்லிபுரம் எனும் தொல்லூரையும் அதன் சிற்றூரான ஆனைவிழுந்தானின் அமைவிடத்தையும் பார்ப்போம்.
தெற்காசியாவின் தென் திசையில் இலங்கும் மாங்கனித்தீவில் #மானுடநாகரிக_வளர்ச்சியின் தொட்டிலாக #வல்லிபுரம் பகுதி இருந்துள்ளது.
யாழ் வடமராட்சியின் வல்லிபுரத்திலிருந்து தான் மாங்கனித்தீவின் ஏனைய பகுதிகளுக்கு மனிதன் பரவலடைந்தான் என வரலாற்றாய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
அந்த தகவல்களை வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட #செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
அந்த செப்பேடுகள் செப்பிடும் அரிய தகவல்கள் வல்லிபுரம் எனும் தொல்லூரின் தொன்மையையும் சிறப்பினையும் மென்மேலும் விளக்குகின்றன.
இத்தகைய சிறப்புடைய வல்லிபுரம் எனும் தொல்லூரின் சிற்றூர் அல்லது குறிச்சிதான் #ஆனைவிழுந்தான் ஆகும்.
வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு செல்லும் வழியில் அல்லது இந்தக் கோவிலுக்கு முன்னால் "#கொப்புக்கள்_கொண்ட_பனைகள்" உள்ள பகுதிதான் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள #ஆனைவிழுந்தான் ஆகும்.
அஃதே,
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இளவாலையிலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் வவுனியா மாவட்டத்தின் தெற்கு பகுதியிலும் #ஆனைவிழுந்தான் எனும் ஊர்கள் உண்டு.
"ஆனையும் தமிழூர்களும் - 01" எனும் சென்ற பதிவில் "ஆனைவிழுந்தான்" என்ற பெயருக்கான #நதிமூலம்_ரிஷிமூலம்தனை #ஆராயுமாறு_ஆசிரியப்_பெருந்தகை
இரகுவரன் பாலகிருஷ்ணன் அவர்கள் அறிவுரை சொன்னார்.
குருவின் அறிவுரைக்கு அமைய தேடல் கொண்ட போது கிடைத்த பதில் ஒன்றையும் கீழே பதிவு செய்கின்றேன் வாசியுங்கள்.
"ஆதிகாலத்தில் விளைந்த நெல் வயல்களை யானைகள் அழித்து வந்தமையால்,அவற்றை தடுக்க யானை வரும் வழிகளில் பெரிய பெரிய பள்ளங்களை வெட்டிவிடுவார்களாம் அவை எதிர்பாராமல் பள்ளங்களில் விழுந்து விடுமாம், அடுத்தடுத்து வீழ்ந்து போவதால் யானைகளின்
வருகை குறைந்துவிட்டன பயிர்களும் பாதுகாக்கப்பட்டன
என்றும், அதன் காரணமாக
ஆனை விழுந்தான் என்று பெயர் வந்தது" என்ற தகவல் கிடைத்தது!
இவ் அரிய சுவாரசியமான தகவலை தந்தவர் வவுனியாவைச் சேர்ந்த நந்தா இராஜேஷ்வரன் Nantha Rajeswaran அவர்கள் ஆவார்.
நன்றி! 🖌
No photo description available.
 
 
இணையத்தில் படித்ததிலிருந்து.............
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

arv loshan news

பறை அடித்து விரட்டிடுவோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Beautiful 🙂
May be an image of flower
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rj.chandru report.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உருவான குறும் படம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களுக்காக கதறி அழுத டி.ஆர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arv.loshan

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம்
எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு..
நீங்கள் கடத்தல்
வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்
குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம்
வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய
நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம்
அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்
செல்லலாம் என்று எண்ணுகிறேன்..
ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்
தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான்.
அன்பே.. குடும்பச்
செலவுக்காக
வேறு ஏதாவது வழி செய்து கொள்.
பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.
அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப்
புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப்
போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.
அன்புள்ள கணவருக்கு..
யாரோ ஒரு கூட்டத்தினர்
பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம்
கொல்லைப் புறத்தைத்
தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..
இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக்
கட்டிகள் எதுவும் இல்லையே..?
கைதி திரும்பவும்
மனைவிக்கு எழுதினான்.
அன்பே.. அவர்கள்
காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய
கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்
தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில்
தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை..
இப்போ து நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தொழிளாலர் தினம்...அனைவருக்கும் தொழிளாலர் தின வாழ்த்துக்கள்!

1.05.2022
May be an image of 1 person and text that says 'இனிய உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்'
 
 
 
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 · 
 
May be an image of 1 person and standing
 
 
 
#இலங்கை #பரீட்சைகள் #திணைக்களத்தின் #புதிய பரீட்சை #ஆணையாளராக (பாடசாலைகளும் பெறுபேறுகளும்) பதவி உயர்ந்தார் எம் கல்லூரியின் (#புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி) பழையமாணவியும் நம் கல்லூரியின் முன்நாள் ஆசிரியரும் வன்னி மண்ணின் புதல்வியுமான
#திருமதி. #மைக்கல் #திலகராஜா #ஜீவராணிபுனிதா அம்மையார் அவர்கள்.
வாழ்த்துக்கள்
 
Ms.
இலங்கை நாட்டின் முதலாவது தமிழ்பேசும் பரீட்சை ஆணையாளர் என்பதில் புதுக்குடியிருப்பு மண் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமாகாணம் பெருமையடைகிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோபோ முலம் தக்காளி உற்பத்தி;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல் வாழத்துக்கள்✍️GIF may contain Happy Mothers Day, Happy Mothers Day2022, Mothers Day, Happy Mom Day, mom, mum, mother, mama, Wonder Woman, flowers, Flower Petals, Love You Mom, Tang916, ma, smile, Love You, Miss You Mom, Mom Day, Have A Great Day Mom and Best Mom Ever

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri lanka-The End..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rj.chandru...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் மற்றும் முதியோர் இல்லம்..

😑🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.