Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை என்பது அழகல்ல..,நிறம்...!

ஆங்கிலம் என்பது அறிவல்ல..,மொழி..!

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான்.

எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.எதிர் பார்த்தால் ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

 

தொடருங்கள்... யாயினி!

 

 

உங்களுடன்,அவ்வப்போது இந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து செல்லும் அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் ஆழமாக நேசிக்காதே ....

துன்பப்படுவாய்...!!

எதையும் ஆழமாக யோசிக்காதே....

குழம்பி விடுவாய்..!!

எதையும் எங்கும் யாசிக்காதே...

அவமானப் படுவாய்..!!

 

100 க்கு 100% உண்மை யாயினி.

உங்களது, பல்சுவைப் பக்கம்,

வலு... சுவராசியமாக, இருக்கிறது.

இதனை... தேடி எடுப்பதற்கும், பொறுமை வேண்டும்.

அது  உங்களிடம்,  நிறையவே.... உள்ளது. பாராட்டுக்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

54879_414300758603745_1023213017_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

396546_353412251359263_1609602900_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உறவுகளுக்கு ஞாயிறு காலை வணக்கங்களும் மற்றும் அனைவருக்கும் இனிய நாளாகவும் அமைய வாழ்த்துக்கள்!

 

208332_202023166498173_4497174_n.jpg?oh=

198679_239113449455811_6657083_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10313631_836793376372838_697919792945910

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1868 இல் ஆபிரிக்க தேசங்களில் இருந்து அடிமைகளாகக் கூடிவரப்பட்ட பணியாளர்களினால் கட்டப்பட்ட லண்டன் King's Cross St. Pancras ரயில் ஸ்டேஷன் 2007 ம் ஆண்டு மீள் புனர் நிர்மாணத்துடன் சர்வதேச ரயில் பயணத்திற்காக திறக்கப்பட்டது... பணியில் ஈடுபட்ட பணியாளர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பமே இது..சில விடையங்கள்,படங்கள் நட்புக்களிடமிருந்து பகிர்ந்து கொள்வது.

 

10686916_336359593211594_477828655790945

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்வி என்பது பகுத்தறிவை வளர்ப்பதற்காகத் தான்

மனித நேயத்தைத் தொலைப்பதற்காக அல்ல...

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் விட்டால் திரும்ப பெற முடியாதவை..

உயிரும்,நேரமும்,சொற்களும்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானாக உயரும் வயது

விடாமல் துரத்தும் காலம்

தடுக்க முடியாத நேரம்

கடக்கத் துடிக்கம் இளமை

காலைத் தடுக்கும் சமுகம்

தொட வேண்டிய இலக்கு

இத்தனை போராட்டம் தான்

வாழ்க்கை..!!!

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கினிலே இனிமை வேண்டும்...!

 

கடும் அலை மோதலிலும் -- அசையாது

கரும் பாறை.

 

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது

மயில் தோகை.

 

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது

நெடு ம‌ர‌ம்.

 

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது

மலர் கூட்டம்.

 

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது

குருவிக் கூடு.

 

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது

சிலந்தி வலை.

 

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்

சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் கிடக்கும் காகிதமாய் யாரையும் நினைக்காதே நாளை அது பட்டமாக பறந்தால் நீ கூட சற்று நிமிர்ந்து பார்ப்பாய்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் ஐந்து சபைகள்.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச சபைகள் உள்ளன.அவை முறையே

சிற்றம்பலம்,பொன்னம்பலம்,பேரம்பலம்,நிருத்தசபை,ராஜசபை என்று அளைக்கப்படுகிறது.

 

சிற்றம்பலம்:நடராஜர் ஆடுகின்ற இடமான சித்சபையை சிற்றம்பலம் என்பர்.இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, அவரது தேவி சிவகாமி எப்போதும் கண்டு மகிழ்கிறாள். இதற்கு "தப்ர சபா" என்றும் பெயர் உண்டு. இச்சபைக்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் பொன் வேய்தான்.

 

இதில் உள்ள படிகளை "பஞ்சாட்சரப்படிகள்" (நமசிவாய படிகள்)என்பர்.

 

பொன்னம்பலம்: சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்னும் கனகசபை. இங்கு தான் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இவ்விடத்தில் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜையும்,ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடக்கிறது.

 

பேரம்பலம்:பேரம்பலத்திற்கு தேவசபை என்று பெயருண்டு. வினாயகர், முருகன், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்வர்.இச்சபைக்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.

 

நிருத்தசபை:நிருத்தசபை நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே உள்ளது.இங்கு அவர் ஊர்த்துவதாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 

ராஜசபை: இங்குள்ள ஆயிரங்கால் மண்டபமே ராசசபை,ஆனி,மார்கழியில் நடக்கும் விழாவில் தேரில் பவனி வரும் நடராஜர்,ராசசபைக்கு எழுந்தருள்வது வளக்கம்.ஆருத்ராதரிசனம் இங்கு தான் நடக்கும்.சிவகாமியம்மன் முன்னால்,நடராஜர் முன்னும் பின்னும் நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு "அனுக்கிரக தரிசனம்" என்று அளைப்பர்.

 

404424_330551510312004_481254488_n.jpg?o

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் வாழும் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மற்றும் இணைய வெளி உறவுகளும் ஒன்றிணைந்து  முகடு' என்னும் சஞ்சிகையை வெளியீட்டு வைத்துள்ளனர்.. முகடு இன்று தனது  முதலாவது ஓலையை எடுத்து வைத்திருக்கிறது.

 

 

10603950_921956157833353_831779779119302

 

முகடு பல்லாண்டு நிலைத்து நிற்க நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான திங்கள் காலை  வணக்கங்கள்..என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.!

 

393867_314892505211238_1788503363_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நன்றி தெரிவித்தல் நாள் அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தல் நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

 

10671286_843359015697915_728983409749659

 

Saying grace before carving a turkey at Thanksgiving dinner, Pennsylvania, U.S., 1942

 

Thanksgiving_grace_1942.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

303564_342411639179381_1125837105_n.jpg?

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்பர்களின் வார்த்தைகள் உங்கள்

மனதில் பதிவாவதற்கு இடமளிக்காதீர்கள்;

குறை கூறுவதற்காகவே சிலர்

பிறவி எடுத்திருக்கிறார்கள்;

அதைப்பற்றிக் கவலைப்படாமல்

முன்னேறிக் கொண்டே இருங்கள்...!

 

முள்ளும் ஒரு நாள் மலராகும்

விமர்சனம் கூட விருதாகும்!!

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெரிவித்தல் நாள் இப்படித் தான் ஆரம்பித்தது..

 

அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும்.

தோற்றம்

சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.

தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.

நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத்தொடங்கி வைக்கிறான்... வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.- சாமுவேல் ஜான்சன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.