Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10349973_775082129216811_683973647293659

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 19 வயது இளம்பெண், தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒருவரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பேனாக் கத்தியைப் பயன்படுத்துகிறாள். அந்தக் கத்தி, அம் மனிதனைக் கொன்று விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு முன்னர் 7 கொடிய வருடங்களை அவள் சிறையில் சித்திரவதைகளோடு கழிக்கிறாள்.

 

அந்தப் பெண் ரிஹானா ஜப்பாரி(Reyhaneh Jabbari). கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை, மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அநீதியிழைக்கப்பட்ட அந்தப் பெண், மரணிக்கும் தினத்துக்கு முன்னர் தனது தாய் ஷோலேக்கு அனுப்பியிருந்த கடிதம் இது. (நன்றி - JENYDOLLY)

 

 

 

ஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.

நீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.

அன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.

என் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.

என்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.

இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் சொல்.

இந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.

மென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.உங்களாலயே உங்களாலயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது..!!!

காலம் பொன் போன்றது. அதன் முக்கியத்துவத்தை அறிய 8 வழிகள் உள்ளன. இதோ...

1. ஒரு ஆண்டின் மதிப்பு என்னவென்றுதேர்வில் தோல்வி அடைந்த மாணவனை கேளுங்கள்.

2. ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவத்துக்கு ஆளான ஒரு தாயைக் கேளுங்கள்.

3.ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

4. ஒரு நாளின் மதிப்பு என்னவென்று தெரிய, அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேளுங்கள்.

5. ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று ரெயில் நிலையத்தில் சுற்றத்தாருக்காகக் காத்திருக்கும் மனிதரை கேளுங்கள்.

6. ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரெயிலைத் தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.

7. ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

8. ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

 

ஆஹா... அருமை, யாயினி.

நேரம் பொன்னாது, என்பதை... குறிப்பிட்டு காட்ட, இதைவிட....சிறந்த எடுத்துக் காட்டு, இருக்க முடியாது.

இனிமேல்... தமிழ் நிகழ்ச்சிகள்.. நடத்துபவர்கள், முக்கியமாக பின் பற்ற வேண்டிய விடயம் இது. :rolleyes:  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண் மூடிய துயர வரலாறு

இரா. வினோத்

6_2180385f.jpg

 

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு

இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை.

தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர்.

7_2180386a.jpg

 

கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

நடைப்பயணத்தின்போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.

 

7_2180387a.jpg

 

இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலை களை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

11_2180395a.jpg

 

மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள்.

 

9_2180393a.jpg

இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங் கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப் பட்டார்கள்.

 

10_2180394a.jpg

 

 

இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.

12_2180396a.jpg

 

இலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர் களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர் களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார்.

இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத் திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின.

13_2180398a.jpg

 

வளர வளரக் கவாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர் என்ற காரணத் தாலும் சாதியாலும் ஒவ்வொரு கணமும் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக ச் சிலுவை சுமப்பதுபோல இலங்கையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடம் இலங்கை அரசியலில் இன்னமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது.

14_2180399a.jpg

 

 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/article6551343.ece

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு காலை வணக்கங்கள்..நேரம் மாறி விட்டது.இந்தப் பக்கமும் 32 பக்கங்களைத் தாண்டி விட்டது..!!!

 

10703761_792640777463861_357944945274408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் !!!

 

220px-Tamilselvan.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10390078_1000948439930621_90384009946639

 
 
‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’

அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை,கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை.

அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ்ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட்.

‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும்அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள்,

‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள்.

‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும்

தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும்,மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச்

சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன்சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார்.

திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன.ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார்.

‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான்.

உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார். ‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது.

உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன்நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குள் வந்ததும் நேரடியாக யாயினியின் பக்கத்தை திருப்பி செல்பவர்களுக்கு,பதுளையில் இயர்க்கை அனர்த்தினால் அவதியுறும் மக்களுக்கான உதவி கோரல்.இதுவரை இந்தப் பகுதியைப் பார்வையிடாதவர்கள் உங்களால் முடிந்ததை கீள் இணைக்கபட்டுள்ள பகுதிக்கு சென்று பங்களிப்பு செய்வீர்கள் என்று நம்புகின்றேன்..

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148152-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனைக் கஷ்ட காலத்திலும்

அறிந்து கொள்ளலாம்..!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10628246_738649769505433_415497266908945

 

 

சுத்தமாக கை கழுவதற்கு 6 படி நிலைகள்..........

முதலில் கையில் சோப்பு போட்டு, உள்ளங் கைகள் இரண்டையும் தேய்க்க வேண்டும். அடுத்து ஒரு கையின் விரல்களின் இடுக்குகளை மற்றொரு கையால் உள் புறமும், அடுத்து வெளிப் புறமும் தேய்க்க வேண்டும். பின்பு விரல்களின் நுனி களை குவித்து மற்றொரு உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். அடுத்து கட்டை விரலை மட்டும் மாறி மாறி தேய்க்க வேண்டும். கடைசியாக மணிக்கட் டிற்கு மேல் இருந்து தேய்த்துக் கழுவ வேண்டும்.

இதுபோல, கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், உணவு அருந்துவதற்கு முன்பும், குழந்தை களுக்கு உணவு ஊட்டு வதற்கு முன்பும், விளை யாடிய பின்பும் கை கழுவ வேண்டும். கை கழுவுவது போல கழிப்பறையை பயன்படுத்துவதும் அவசிய மானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15169_340844516063091_590467362961112787

 

 

காகமும் நரியும் கதைக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்...

"பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது, , இச்சிலையை வடித்திருப்பவர் இந்திய கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் கொர்ரியா. இவர் பத்மபூஷண் விருது பெற்றவர், 1983ல் இச்சிலையைச் செய்திருக்கிறார்.,ஒரு கதையைக் கௌரவப்படுத்த இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது"

 

- எஸ்.ராமகிருஷ்ணன்

 

படித்ததிலிருந்து......................

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

15169_340844516063091_590467362961112787

 

 

காகமும் நரியும் கதைக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்...

"பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது, , இச்சிலையை வடித்திருப்பவர் இந்திய கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் கொர்ரியா. இவர் பத்மபூஷண் விருது பெற்றவர், 1983ல் இச்சிலையைச் செய்திருக்கிறார்.,ஒரு கதையைக் கௌரவப்படுத்த இதை விடச் சிறந்த வழி என்ன இருக்கிறது"

 

- எஸ்.ராமகிருஷ்ணன்

 

படித்ததிலிருந்து......................

 

 

காகம் நரிக்கதைக்கு வெள்ளைக்காரன் சிலை வைச்சு அழகு பாக்கிறான்.....எங்கடையள் என்னடாவெண்டால் நக்கலடிச்சு கேவலப்படுத்துறதிலையே கண்ணாயிருக்குதுகள்.
 
தகவலுக்கு நன்றி யாயினி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

காகம் நரிக்கதைக்கு வெள்ளைக்காரன் சிலை வைச்சு அழகு பாக்கிறான்.....எங்கடையள் என்னடாவெண்டால் நக்கலடிச்சு கேவலப்படுத்துறதிலையே கண்ணாயிருக்குதுகள்.
 
தகவலுக்கு நன்றி யாயினி.

 

 

கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை..ஏமாற்றத்திற்கு உதாரணமாகவும் இந்த விடையத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறன்.சில விடையங்களை நட்புக்கள் மத்தியில் கூட சொல்லவோ,எழுதவோ முடியாத நிலைகள் கூட தற்போதைய காலத்தில் ஏற்பட்டு இருக்கிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பிரதானமாக இயங்கும் சி.பி 24 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தினர்.இலங்கையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தை குறிப்பிட்டு  (ரீ லயன்) என்ற இடத்தில் 3 பேர் இறந்ததாகவும்,35 பேரைக் காணவில்லை என்று எழுத்தோட்டத்தில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்று எமக்கு தெரிந்தாலும் அதைப் பார்க்கும் வேற்று இனத்தவர்களை எவ்வாறு புரிய வைப்பது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கம்..அனைவருக்கும் நல்ல பொழுதாகட்டும்..!!

 

291634_3875337956466_1043431920_o.jpg

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10801621_387101748112470_136492194682339

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிமையுனும்,தூய்மையுடனும் உனது

கருத்துக்களை விடாமல் பற்றிநில்

அப்படிச் செய்தால், இன்று உனது

பாதையில் என்ன தான் தடைகள்

இருந்தாலும்,நாளை உலகம்

உனக்கு செவிசாய்த்தே

ஆகவேண்டும்..-விவேகானந்தர்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • 1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை ( லைக்கா என்னும் நாயை) விண் கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
  • லைக்கா  என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குத்ர்யாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்ணிக் 2  விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3,1957 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

  •  

     

    விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியளாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.

    லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

 

இது தான் லைக்கா...Laika1.jpg

 

உருமேனிய அஞ்சல் தலையில் லைக்கா:Posta_Romana_-_1959_-_Laika_120_B.jpg

 

 

ஸ்புட்னிக் 2 விண் கலத்தில் லைக்கா:Sputnik2_vsm.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10622792_10152652831333908_1412194695720

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

582209_10150972199832473_420195129_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதுளையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு அமைப்புக்களால் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று(03.11.2014) யாழின் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களிடம் நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. இவ் அமைப்பில் உள்ள அனைவரும் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது முக்கிய அம்சமாகும். இவர்களது சேவைக்கு பாராட்டுக்கள்.

 

10710745_362449477251378_629211512743427

 

10801929_481988718608958_338707037524408

 

10314556_481988818608948_876887912973356

 

10644854_481988881942275_386461072718985

 

10509678_481988905275606_709878242668461

 

10599404_481988968608933_590134607254367

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

#‎WorldTradeCentre‬ Reopens for Business after 13 Years.

 

10750007_882201318459851_567074981150051

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழின் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உளவியல்துறை மாணவர்களின் பதுளை மக்களுக்கான பல்வேறு விதமான பங்களிப்புக்கள் இன்று நடைபெற்றது அதிலிருந்து சில பகுதிகள்...

 

1902043_1547540225461299_892653454340040

 

247149_1547540232127965_6826307202810258

 

10628106_1547540228794632_91291800773723

 

10268564_1547540245461297_37736820202045

 

10419551_1547540215461300_21531230620191

 

1487329_1547540235461298_610117224522403

 

10437419_1547540218794633_37246126311755

 

10334324_1547540252127963_65011387744911

 

10636127_1547540255461296_75969988131039

 

10422398_1547540412127947_11347793105824

 

1966885_1547540435461278_339116880457786

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.

10649984_497679830375036_407717113329525

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10600446_825304710840997_891958029348323

 

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

" நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்

எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இதைத் தான் கண்ணதாசனும் " நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.