Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

281980_10150744624145720_54172_n.jpg?oh=

  • Replies 3.9k
  • Views 331.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10653546_834589873248455_834823813700877

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் நாள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948  டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின்  பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூ யார்க்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.அமைதிக்கான நோபல் பரிசு  மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்பிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

 

இயற்பியல்,வேதியல்,இலக்கியம், மருத்துவம், அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்பிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபெல் நினைவு பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

 

 

நோபல் பரிசு
The Nobel Prize

 

220px-Nobel_Prize.png


இன்றைய சிறப்பு நாளுக்கு உரிய தகவலாக இவை பகிரப்படுகின்றன....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆல்ஃபிரட் நோபெல் நினைவு தினம்..

 

220px-AlfredNobel_adjusted.jpg

 

ஆல்ஃபிரட் நோபெல் (இந்த ஒலிக்கோப்பு பற்றி Alfred Bernhard Nobel(பிறப்பு சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். - See more at: http://www.canadamirror.com/canada/35201.html#sthash.8MAq14Vv.dpuf

ramesh-labelle.jpg

http://youtu.be/YU-Z2-OiGDk

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பிரியா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10428695_865513670149193_192053262237777

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1456644_890567880983987_4444229339303888

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.

1462878_682534545113697_2053604158_n.jpg

 

11.12.14.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நூற்றி முப்பத்தி இரண்டாவது பிறந்த தினத்தில் பாரதியாரையும் நினைவு கூருவோம்.

 

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.

 

இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்ப மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

 

1425740_682543525112799_1635124046_n.jpg995571_682543638446121_505150542_n.jpg?o1477956_682543751779443_1295920499_n.jpg1463758_682535555113596_1893019873_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10858644_914595935219207_117667911808801

 

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ?

-பாரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10850184_10152589732287992_3090140565271

 

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”

000

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”

000

“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ”

000

“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”

000

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”

000

“திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்

பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்

சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம்;-கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று;

சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;

எட்டுத் திசையும் இடிய-மழை

எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை

ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்

மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை

வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்

செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன

தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!

கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!”

000

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

000

“சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்”

000

“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபலநற் பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;

ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;

ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.

திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;

“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.

பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

000

“தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,

பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்று சொன்னாய்

வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!

மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே

பாவை தெரியு தடி!

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே

வேதனை செய்கு தடீ!

வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா

வந்து தழுவுது பார்!

மோனத் திருக்குதடீ! இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே,

நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்

நரகத் துழலுவதோ?

கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;

அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்

அங்கு வருதற் கில்லை;

கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்

கூடிக் கிடக்கு தங்கே;

நடுமை யரசி யவள்-எதற் காகவோ

நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்

கொஞ்சிக் குலவி யங்கே

ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை

ஆயிரங் கோடி முறை

நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்

நல்ல களி யெய்தியே

பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி!”

000

“ஓடி விளையாடு பாப்பா!-நீ

ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!

கூடி விளையாடு பாப்பா!-ஒரு

குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு-நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்

கூட்டி விளையாடு பாப்பா!

எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா!

வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது

மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு

கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு-என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன

தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா!

மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்

சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ

திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா!

அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்

தொழுது படித்திடடி பாப்பா!

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்

வாழும் குமரிமுனை பாப்பா!

கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்

கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல

வீரர் பிறந்ததிந்த நாடு;

சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு

நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடையநெஞ்சு வேணும்;-இது

வாழும் முறைமையடி பாப்பா!”

000

“காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்

கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்

பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்

கீத மிசக்குதடா நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்

தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10846482_891237440917031_508597169724095

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வெண் பனி..

 

 

10515082_315948181939870_738447606601688

 

10620310_315948185273203_593911891103063

 

10841821_315948188606536_636251643587857

 

10847454_315948281939860_759256974669270

 

1490827_315948298606525_7473935151989265

 

10368955_315948368606518_704056348645631

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரிந்து கொண்டால் கோபம் கூட

அன்பாய்த் தெரியும்,

புரியவில்லை என்றால் - அந்த அன்பும் கூட

அர்த்தமற்றதாய்த் தெரியும்!..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1170771_622277341146377_91284945_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரின் குணநலன்களுடன்

இன்னுமொரு தலைவர் தமிழ்நாட்டுக்குக்

கிடைத்தால் நன்றாக இருக்கும்....!

 

10170842_514415285368157_668532284894157

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் சாப்பிடும் உணவில் மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் மற்றும் நார்ச் சத்து மற்றும் நீர் சத்து ஆகியன நிறைவாகவும் அதனதன் அளவிலும் இருக்க வேண்டும்.

1. மாவுச் சத்து நம் உழைப்பிற்கு வேண்டிய உடனடி சக்தியை அளிக்கும். நம் உழைப்பின் அளவைப் பொறுத்து இதன் அளவு இருக்க வேண்டும்.

2. புரதச் சத்து நம் உடல் கட்டுமானம் மற்றும் நொதிகள் (enzymes) மற்றும் ஹார்மோன்கள் உருவாக அவசியம் வேண்டும். ஒரு நாளைக்கு நம் உடல் எடையின் எத்தனை கிலோவோ அந்த அளவில் கிராம்களாக புரதம் எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்க 60 கிலோ எடை இருப்பின் நீங்கள் தினமும் 60 கிராம் புரதம் எடுக்க வெண்டும்.

3. கொழுப்பு நம் உடலின் பாதுகாப்பிற்கு அவசியம் வேண்டும். அதிலும் நல்ல கொழுப்பு அவசியம் வேண்டும். நம் உடலில் நல்ல கொழுப்பிருந்தால்தான் நாம் மிருதுவாக (மென்மையாக) இருப்போம். நம் உடலின் இரத்த குழாய் மற்றும் நரம்பு ஆரோக்கியம் நல்ல கொழுப்பைச் சார்ந்துள்ளன.

4 மற்றும் 5. உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் நம் உணவில் அவசியம் வேண்டும். இவை நம் உணவை செரிக்கவும், செரித்தபின்னர் அவற்றை கிரகிக்கவும் தேவைப்படுகிறது. உயிர் மற்றும் தாதுக்கள் இல்லாத உண்வை நம் உடல் செரிக்க முடியாது. அப்பைடி உயிர் மற்றும் தாதுச் சத்துக்களற்ற உணவை சாப்பிடுவது வீணான செயலாகும். உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் கிரைகள், காய்கறிகள் மர்றும் பழங்களில் கிடைக்கின்றன.

6. நார்ச் சத்துக்கள் நம் உடலை, குடலை, இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன.

7. நீர் சத்து நம் உடலுக்கு அவசியம் வேண்டும். காரணம் ந உடல் 70 சதவீதம் நீரால் அமைந்துள்ளது. நம் உடல் செரிமானம் உள்ளிட்ட இயக்கங்கள் யாவையும் நீர் என்ற கள அமைப்பில் இயங்குகின்றன.

இந்த ஏழு பகுதிகளும் நம் அன்றாட உணவில் இருக்குமாயின் நமக்கு நீரழிவு வராது.

 

1799156_10152479952748663_78061174438354

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10565134_1513363492267660_58193439757366

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1490827_315948298606525_7473935151989265

 

 

கனடாவுக்கு சினோ கொட்டினால்த்தான் வடிவு.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10849727_613704018755524_627320438377136

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா- டிசம்பர் 13,2014 ஒரு அரிதான ஒழுங்கு முறையிலான திகதி. ஒரு ஆண்டு நிறைவை நினைவு கூரும்போது மிகவும் இலகுவாக இருக்கும். 12/13/14.

சனிக்கிழமை டிசம்பர் 13,2014 குறைந்தது 20வருடங்களிற்கும் ஒரு கடைசி வரிசைமுறையிலான திகதி {ஜனவரி2,2034 }அடுத்த 89-வருடங்களிற்கும் {ஜனவரி2 2103.} ஆகின்றது.

அடுத்த 12/13/14-ஐ நினைவு கூர விரும்பினால் 100-வருடங்கள் காத்திருக்க வேண்டும்.{ டிசம்பர் 13,2114}.

இன்றய நாளில் நினைவு கூரும் நோக்குடன் அமெரிக்க லாஸ் வகாஸ் தேவாலயத்தில் 120 சோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த திகதியை ஒரு அதிஷ்ட திகதியாக பலர் எண்ணுகின்றனர். லாட்டரி பிரியர்கள் ஒரு மேலதிக அதிஸ்டத்தை இன்று எதிர்பார்க்கின்றனர். இந்த இலக்கங்களை தங்கள் தெரிவாக கொள்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10406865_862838423766488_913165840146857

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.