Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1157398_733299856703832_1037567303_n.jpg

 

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சனநாயகத்தினை ஊக்குவிக்கும் "அனைத்துலக மக்களாட்சி நாள்"
"International Day of Democracy"

 

10636094_653262438105206_714458565013556

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசி சாதித்தவன் சொல்லும் பொய்க்கு முன் சாதிக்காதவன் சொல்லும் உண்மையை பெரும்பாலானோர் நம்புவதில்லை...இந்தப் பொய்களால் ஏற்படும் வாழ் நாள் வலிகளை  ஜீரணிப்பது தான் மரண வலி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோலைக்குயிலே காலைக்கதிரே...

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Yennamo Yedho Puthiya Ulagai Full Song

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள், தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெறி திருமணம்

மாங்கல்ய மந்திரங்கள் எதுவும் ஓதப்படாமல், அதற்குப் பதிலாக திருக்குறள் சொல்லி நடத்தப்பட்ட திருமணமொன்று கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் 15.09.2014 திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் ஐயர் இல்லை. சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் ஓதப்படவில்லை.
இருப்பினும், திருக்குறள்கள் சொல்லப்பட்டன. சுப முகூர்த்தத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டி திருமணம் முழுமை பெற்றது.
சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான இறைபிள்ளை அபிராமி என்பவருக்குமே இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை கிளிநொச்சி தமிழ் சங்க தலைவரும் மணமகளின் தந்தையுமான வே.இறைபிள்ளை தலைமையேற்று நடத்தியதுடன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆசியுரையினையும் வழங்கினார்.
இந்த திருமண நிகழ்வில், திருவள்ளுவருடைய திருவுருவப்படம் வைக்கப்பட்டு திருக்குறள் ஓதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

10703863_726921054010838_922414086154876

 

10696294_726921064010837_266751131060472

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1546378_698817793485372_961902437_n.jpg?1450181_682544821779336_673540797_n.jpg?

 


10382735_767418063292011_777735385935248

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.வல்லமை தாராயோ, - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி, சிவசக்தி - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன் - இவைஅருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

 

பாரதி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அடடா யாயினியின் இக் கலைக்களஞ்சியத்தை பார்க்க இத்தனைநாள் தவறி விட்டேன். இன்றுதான் பார்க்கக் கிடைத்தது. பாராட்டுக்கள். சோதனைகள் வாழ்வின் முடிவல்ல. சாதனையின் ஆரம்பம். வீழாமல் இருப்பதல்ல வெற்றி. வீழும் போது எழுவதுதான் வெற்றி. உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடா யாயினியின் இக் கலைக்களஞ்சியத்தை பார்க்க இத்தனைநாள் தவறி விட்டேன். இன்றுதான் பார்க்கக் கிடைத்தது. பாராட்டுக்கள். சோதனைகள் வாழ்வின் முடிவல்ல. சாதனையின் ஆரம்பம். வீழாமல் இருப்பதல்ல வெற்றி. வீழும் போது எழுவதுதான் வெற்றி. உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

 

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி கண்மணியக்கா..நானும் மனிதப்பிறவி தானே..எனக்குள்ளும் சொல்லிக் கொள்ள முடியாத வேதனைகள,சோதனைகள் என்று நிறைய இருக்கும் தானே..சிலரை நம்பித் தொலைத்த விட்ட நாட்கள்.....எல்லாவற்றையும் விட நாம் நல்லவர்கள் என்று நம்பியவர்களே  நாக்கினால் கொட்டி விட்டுப் போன வார்த்தைகள் என்று நிறைய,நிறைய அனுபவிக்க வேண்டியதாக போய் விட்டது..அது உயிர் உள்ளவரைக்கும் மறக்கப்பட கூடிய வார்த்தைகளும் அல்ல..அதனால் சில வேளைகளில் இருந்துட்டு இப்படித் தான் மனம் குளம்பிடும். :( மனிதப் பிறவி எடுப்பதே பாவம்..

 

10683524_371135413038522_833924619360995

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை எழுந்தால் மாலை தூங்கச் செல்வதற்குள் நிறைய,நிறைய அனுபவங்களைப் பெறலாம்..அந்த வகையில் நானும் கணணியை விட்டு தூரவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் ... யாராவது பெண்களுக்கு அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்றால் மொழி பெயர்ப்பு சம்பந்தமான உதவி ஏதாச்சும் தேவைப்பட்டால் செல்வது வழக்கம்.அந்த வகையில் இன்று ஒரு பெண்மணியை ஒரு அலுவலகத்திற்கு கூட்டிப் போய்டு வந்தேன்..அவருக்கு கூட்டிப் போன விடையம் ஒரு 10 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது...3 பஸ் எடுத்து போய் வந்ததிற்கு பத்து டொலர்களை எடுத்து நீட்டினார் இந்தாரும் என்னோடு வந்தனீர் தானே என்று...நான் பறவா இல்ல அன்ரி எனக்கு காசு வேண்டாம்  வைச்சுக் கொள்ளுங்கோ என்று திரும்ப கொடுத்து  விட்டு, இவ்வளவு நாளும் யாரை கூட்டிப் போய் கொண்டு இருந்தனீங்கள் என்று கேட்டேன்...அய்யோ ஐம்பது,நூறு,நூற்றி ஐம்பது என்று மற்றவர்களுக்கு குடுத்து என்னால முடியாமல் போச்சு அதனால் தானே உம்மை கேட்டேன். பாபா நல்ல ஒரு பிள்ளையை காட்டி விட்டு இருக்கிறார் என்றா...ஆண்டாவா இப்படியும் சனங்களா என்று நினைத்துக் கொண்டு வீட்டை வந்து சேர்ந்தேன்.பணத்தோடு சாகும் மனிதர்களுக்கு பாபா உதவுறார் என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் சேவைகளும் வியாபாரங்களாகிவிட்டது. இங்கிலாந்தில் நம்மவர்கள் எவராவது சமூகசேவை, பண்பாட்டை வளர்க்கின்றோம், மொழியை வளர்க்கின்றோம் என்று ஏதாவது தொண்டு நிறுவனங்களை உருவாக்கினால், அவர்கள் தமிழர்களையே வைத்தே தம்மைச் செழிக்கவைக்க உழைக்கப்போகின்றார்கள் என்று நினைக்கவேண்டியுள்ளது.

இப்படியானவர்கள் நிறைந்துள்ள புலம்பெயர் நாடுகளில் யாயினியைப் போன்றவர்களும் இருக்கின்றார்கள் என்பது பெருமையான விடயம்.

சில நேரம் நானும் பணம் கொடுத்து தான் மொழிபெயர்ப்பு அலுவலை பார்த்தேன்.

அதே நேரம் சில நேரங்களில் யார் என்றே தெரியாத சில அக்காமார் நான் உதவி என கேட்ட போது உதவி செய்திருக்கிறார்கள். பணமும் வேண்டாம் என கூறியிருக்கிறார்கள்.

அவர்களில் சிலர் இப்பொழுது என் நண்பர்களாக உள்ளார்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் !!!!!!!....

 

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்.
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்.
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்.
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்.
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்.
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை மேதை லால்குடி ஜெயராமன்....

லால்குடி ஜெயராமன் செப்ரம்பர் 17,1930 தமிழ் நாட்டை சேர்ந்த கர்னாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்.இவர்  வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்

10712706_10154603590090717_3910370880466

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமண வீட்டில்

செருப்பைத் தொலைத்தவன்

எழுதிய கவிதை....!!!

''உள்ளே ஒரு ஜோடி

சேர்ந்து விட்டது''

''வெளியே ஒரு ஜோடி

தொலைந்து விட்டது.''?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் தாங்கும் மனம்...

எழுத்தாளர் மு.வரதராசனார், சென்னை பச்சையப்பா கல்லூரி பேராசிரியராக இருந்தபோது, ஒரு மாணவனை அதட்டியதால், அவன் முகம் வாடிப் போனது.

வகுப்பு முடிந்ததும், அந்த மாணவனை தனியாக அழைத்த மு.வ., ""ஏன் பாடத்தைக் கவனிக்காமல் கலக்கமாக இருந்தாய்!'' என்றார்.
"தாங்கள் அதட்டி பேச்சியது என்னை வாட்டிவிட்டது'' என்றான் மாணவன்.

மு.வ. அவன் முதுகை தட்டிக் கொடுத்து, ""உன் மனம் இவ்வளவு மென்மையாக இருக்கிறதே! இதற்கெல்லாம் வருத்தப் படலாமா! இவ்வுலகில் நீ வளரும்போது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்க நேரிடும். உன் மனம் மென்மையாக இருந்தால் மிகவும் துன்பப்படுவாய். எதற்கும் கவலைப்படாத மனதை வளர்த்துக் கொள். எதையும் தாங்கும் மனம் தான் வேண்டும்'' என்று அறிவுரை வழங்கினார்....

 

 

 

**மனிதர்களின் சொல்லை மட்டுமல்ல அவர்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,ஏமாற்றும் போக்கு ஆகியவற்றையும் தாங்கி கொள்ள வேண்டும் என்ற பொருள் பட மு.வரதராசானாரின் அறிவுரை அமைந்தாக இருக்கும் போலும்.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமசாமி, ஈ.வெ.இரா., பெரியார் (அ) தந்தை பெரியார், வைக்கம் வீரர

 

   

10675521_725596987477378_769251924368623220px-Thanthai_Periyar.jpgYoung_Periyar.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
LALGUDI G.JAYARAMAN playing MAHAGANAPATHIM
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
506.jpg
 
உணவு சாப்பிட முடியாமல் தவித்த தங்க மீனுக்கு மெல்போர்ன் டாக்டர்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 10 வயதான இந்த தங்க மீனுக்கு 45 நிமிடம் அறுவை சிகிச்சை நடந்தது. தண்ணீரில் வாடிய இந்த தங்க மீன் இப்போது மறுவாழ்வு பெற்று தண்ணீரில் நீந்தி மகிழ்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் வரை இந்த தங்க மீன் உயிர்வாழும் என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தவற்றில் பிடித்தவற்றை  இந்தப்  பக்கத்தை திருப்பி செல்பவர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்..   காலண்டர் பிறந்த கதை..

ணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.

 

ன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே  1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.
 
ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.
 
மாதங்களின் பெயர் வரலாறு:

 

ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.
 
பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.
 
மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.
 
ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 
மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
 
ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது
 
ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது
 
ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
 
செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
 
அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.
 
நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.
 
டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.
 
இந்திய தேசியக் காலண்டர்
 
கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.
 
தமிழ்க் காலண்டர்:
 
சூரியனை அடிப்படையாகக் கொண்டு  உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு
 
இஸ்லாமியக் காலண்டர்:
 
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது
 
ஜூலியன் காலண்டர்
 
கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி  ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

548903_364404463627651_824898999_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றொறன்டோ பல்கலைக்கழகம் கனடா தரத்தில் முதல் இடத்திலும் உலகத் தரத்தில் 20 ஆவது  இடத்திலும் இடம் பிடித்திருப்பதாக அறியப்படுகிறது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.