Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு இதம் தரும் அருமையான   பாடல்  நன்றி 

தொடருங்கள்  யாயினி 

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

800px-Clock_Tower_-_Palace_of_Westminste

1859-பிக் பென் (Big Ben) மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

மனதுக்கு இதம் தரும் அருமையான   பாடல்  நன்றி 

தொடருங்கள்  யாயினி 

வருகைக்கு மிக்க நன்றிகள் நிலாக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் முகத்தில் முழிச்சேனோ?

"என்னைப் பார் யோகம் வரும்" என்று கழுதை கூறும் வாசகம் படித்திருப்பீர்கள். காலையில் விழித்தவுடன் யார் முகத்தில் முழித்தால் யோகம் வரும்? கழுதையா, நரியா, அல்லது கண்ணாடியில் உங்கள் முகமா? சத்குரு என்ன சொல்கிறார் பாருங்கள்...

கேள்வி: “நான் இன்று காலையில் இன்னார் முகத்தில் முதலில் விழித்தேன். அதனால்தான் எதுவும் இன்று சரியாக விளங்கவில்லை” என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போன்ற நம்பிக்கையில் ஏதாவது பொருள் இருக்கிறதா, சத்குரு?”

கிருஷ்ண தேவராயர் ஒருநாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அரண்மனை நந்தவனத்தில் உலாவச் சென்றார். பக்கத்து நாட்டு மன்னன் இவர் மேல் போர் தொடுக்க திட்டம் தீட்டியிருந்தான். எனவே மிகவும் யோசனையுடன் நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பார்த்துவிட்டு யாரோ அவசரமாக ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டதைப் பார்த்தார். இதைக் கவனித்த கிருஷ்ண தேவராயர், “யாரது?” என்று சத்தமாகக் கேட்டார். 

உடனே மரத்தின் மறைவிலிருந்து அரண்மனை சலவைத் தொழிலாளி தயங்கித் தயங்கி வெளிவந்தார். “ஓ, காலங்காத்தால உன் முகத்தில விழிச்சிட்டனே, இன்னிக்கு எனக்கு என்னாகப் போகுதோ,” என்று உறுமியவாறு அரண்மனைக்கு கலவரமாகத் திரும்பினார். 

அன்று காலை உணவு சாப்பிட்டவுடன் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அன்று நடந்த முக்கியமான மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவரால் சரியாகப் பங்கு கொள்ளமுடிய வில்லை. 

அவருடைய கோபம் சலவைத் தொழிலாளி மேல் திரும்பிற்று. இந்த மாதிரி மோசமான முகம் நம் நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று சொல்லி அந்த சலவைத் தொழிலாளிக்கு மரண தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். 

அந்த சலவைத் தொழிலாளி பதறிப்போய் தெனாலி இராமனிடம் நடந்ததை எல்லாம் கூறினார்.

‘இது என்ன முட்டாள்தனம்‘ என்று நினைத்து அரண்மனைக்கு சென்ற தெனாலிராமன் மன்னரைப் பார்த்தவுடனே துணியை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றார். உடனே மன்னர், “என்ன முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 

அதற்கு தெனாலிராமனோ, “இல்லை அபசகுனமான முகம் பார்க்க கூடாது என்றுதான் நான் முகத்தை மறைத்து கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னார். “இங்கே எங்கே அபசகுனமான முகம் இருக்கிறது?” என்று கேட்டார் மன்னர். 

“இல்லை, ஒரு சலவைத் தொழிலாளியைப் பார்த்ததால் உங்களுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. அவருக்கோ உங்கள் முகம் பார்த்ததால் உயிரே போகப்போகிறது. எது பெரிய அபசகுனமான முகம் பாருங்கள். அதனால்தான் நான் முகத்தை மறைத்துக் கொண்டு போகிறேன்,” என்று சொன்னார்.

நம் வாழ்க்கையில் நம்மால் எவற்றையெல்லாம் நன்றாக நடத்தி கொள்ளத் தெரியவில்லையோ அதற்கு எல்லாமே இன்னொருவர் மேல் பழி போட வேண்டும் என்னும் ஆசை நமக்கு இருக்கிறது. நம் முகம் மிகவும் மங்களமானதாக இருந்தால் காலையில் எழுந்தவுடன் முதன்முதலில் நம் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாமே. 

இந்த மாதிரி முட்டாள்தனத்தை விட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கின்ற நன்மை, தீமை இரண்டுக்குமே நாம் தான் முழுமையான பொறுப்பு என்பதை பார்த்துக் கொள்ளலாமே. 

நமக்கு நடந்த தவறுக்கு பிறர்மேலே பழிபோட நினைப்பது மிகவும் மோசமான ஒரு மனநிலை. இந்த மனநிலை தாண்டி வந்தால்தான் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும் முன்னேற்றமாகப் போவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Happy Sunday :)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.


இலங்கை ஈழ யுத்தத்தில்  நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்காலில் 40,000க்கும் மேற்பட்ட  தமிழ மக்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் அவர்களை இழந்து உயிருடன் இருக்கும் அவர்களது  உறவுகளுக்கு அதுவே ஆராத்துயரம். இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கட்டு கொல்லப்பட்டனர். இளம் தமிழ் சிறார்களும் வயது வரம்பின்றி கொல்லப்பட்டனர். 

இந்தப் போர் கொடுமையையும் அது விட்டுச் சென்ற சோகத்தையும் நினைவுறுத்தும் வகையில் தமிழகத்தின் தஞ்சாவூரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பட்டது. முள்ளிவாய்க்கால்முற்றவளாகம் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்தில் அமைந்துள்ளது.  1.75 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது.  இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டு  2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் திகதியன்று இம்முற்றம் திறந்து வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் இனப்படுகொலையை நினைவுறுத்தும் ஒரு இடம். போரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் வலியை உணர்த்தும் ஒரு நினைவாலயம்!

இந்த நினைவாலயத்தின் விழியப்பதிவை  வழங்குவதில் தமிழ் மரபு அறக்கட்டளை பெருமை கொள்கின்றோம்.


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இந்தப் பதிவை செய்ய உதவிய தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் டாக்டர்.கந்தன் அவர்களுக்கும், டாக்டர் இரா.காமராசு அவர்களுக்கும்  தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

13256472_172739719794318_516193531171845

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இனிய காலை வணக்கம் .....Happy Victoria Day!

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி ”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13227193_301543593510420_344713393356039

13 hours ago, தமிழ் சிறி said:

13256472_172739719794318_516193531171845

 

பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லாமல் சொல்கிறீங்கள் போல் உள்ளது...பறவா இல்ல......இப்போ நாமும் யாரு என்னத்தைச் சொன்னாலும் சாதரண புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகரப் பழகிக் கொள்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்...!

பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் , கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!

கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!

கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!

திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!

ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்... 
அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம்.... 
கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை... 
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

# கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!

ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

# எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய 
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் :

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்

நாலு பேருக்கு நன்றி ”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11377242_116741331990648_326701820408074

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13260099_10153716782147992_6597535800877ஸ்காபுரோவில் (Midland Avenue & Lawrence Avenue East) காணாமல் போனதாக கடந்த இரண்டு தினங்களாக தேடப்பட்டுவந்த 84 வயதான தமிழ் முதியவரான ஜெயரட்ணம் பொன்னுசாமி இன்று காலை 9:30 மணியளவில்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

A missing Scarborough senior(Jayaratnam Punnusamy - age 84) was found dead on Tuesday morning after police stepped up their search for him. Foul play is not suspected.

  • கருத்துக்கள உறவுகள்
On 23.5.2016 at 4:02 PM, யாயினி said:

பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லாமல் சொல்கிறீங்கள் போல் உள்ளது...பறவா இல்ல......இப்போ நாமும் யாரு என்னத்தைச் சொன்னாலும் சாதரண புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகரப் பழகிக் கொள்கிறோம்.

"யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..." என்ற தலைப்பில், இந்தச் செய்தியையும் பதிந்தால், பொருத்தமாக இருக்குமே என்று தான் அந்தத் தகவலை பதிந்தேன். சத்தியமாக... நீங்கள் நினைக்குமாப் போல், எனக்கு வேறு ஒரு உள்நோக்கமும் இருக்கவில்லை. (கவலை)

அத்துடன்... பொழுது போகாமல் ஒருவர்,  கம்பியை வைத்து வளைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது... கண்டு பிடிக்கப் பட்டது தான் அந்த ஊசி. அதற்கு அவர் காப்புரிமை பெறாததால், பெரும் பணத்தை இழந்தார் என்பது கூடுதல் தகவல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

"யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..." என்ற தலைப்பில், இந்தச் செய்தியையும் பதிந்தால், பொருத்தமாக இருக்குமே என்று தான் அந்தத் தகவலை பதிந்தேன். சத்தியமாக... நீங்கள் நினைக்குமாப் போல், எனக்கு வேறு ஒரு உள்நோக்கமும் இருக்கவில்லை. (கவலை)

அத்துடன்... பொழுது போகாமல் ஒருவர்,  கம்பியை வைத்து வளைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது... கண்டு பிடிக்கப் பட்டது தான் அந்த ஊசி. அதற்கு அவர் காப்புரிமை பெறாததால், பெரும் பணத்தை இழந்தார் என்பது கூடுதல் தகவல்.

ஆ பறவா இல்ல...நான் தப்பாக ஒண்டுமே நினைக்க இல்லயே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.?

சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்.

சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..)

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்.

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை!

1530383_649046231827041_299746180_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது(முழுவதுமாக படியுங்கள் உங்களுக்கும் பிடிக்கும் )
-------------------------------------------
ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன். 
பிறரின் பார்வையில் 
என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், 
நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் 
மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது.

கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் 
மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த பின், 
பணத்திற்கு சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாதிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது.

அது 
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , 
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். 
அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே
நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை
முற்றிலும் வேறு திசையில்
திரும்பிவிடுகிறது என்
வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம்
அனைவரின் மனதில் இருக்கும்
அன்பை உணரசெய்யும் சக்தியை
கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் 
எல்லா சந்தோசங்களும் 
வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாதித்த பணம் எதையும்
இங்கு கொண்டுவர முடியாது.
நான் மகிழ்ந்திருந்த என்
நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன்
இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள்
உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு எந்த
எல்லைகளுமில்லை. 
எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ 
அங்கு செல்லுங்கள்.

தொட நினைக்கும் உயரத்தை 
தொட முயற்சியுங்கள். 
நீங்கள் வெற்றியடைவது உங்கள் 
எண்ணத்திலும் கைகளிலும்தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், 
ஆனால் அந்த
பணத்தின் மூலம் உங்கள் வலியை, 
உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு 
செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும்
பொருட்கள் தொலைந்துவிட்டால் 
மீண்டும் வாங்கிவிடலாம்.

ஆனால் நீங்கள்
தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று
உண்டென்றால் அது உங்கள்
வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ
ஆரம்பியுங்கள்.

நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
எனும் நாடகத்தின் திரை 
எப்போது வேண்டுமானாலும் 
இறக்கப்படலாம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, 
மனைவிக்கு, நண்பர்களுக்கு,
அன்பை வாரி வழங்குங்கள்.
உங்களை நீங்கள் சந்தோசமாக
வைத்து கொள்ளுங்கள்.

அனைவரையும் மனமார
நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேதைகளின் நகைச்சுவை..!

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.'' ?
 

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அடிக்கடி சொல்கின்ற ஒரு விடயம்..... நமக்கு முந்தைய தலைமுறை ஒன்றில் இருந்து 100 மீட்டர் ஓடியபிறகு கைமாற்றும் ஓட்டப்பந்தயத்தின் கோலைப் எடுத்துக்கொண்டு நாம் 100 மீட்டரரில் இருந்துதான் ஓடவே ஆரம்பிப்போம்.... நாம் 500 மீட்டர் கடந்து கோலை பரிமாறினால் அடுத்ததலைமுறை 500 மீட்டரரில் இருந்துதான் ஓடவே ஆரம்பிக்கும்....

அப்படித்தான் ராஜா 1000 மீட்டர்கள் ஓடிய பின் பரிமாறிய கோலைக் கொண்டுத்தான் அடுத்து வந்த தலைமுறை 1000 மீட்டரரில் தொடங்கி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது... 
ஆரம்பித்தது என்னவோ ராஜாதான்.....

‪#‎HBD_இசைஞானி‬ <3  13344677_10208128673669060_2388627709659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13394144_10154249228499553_9033554060431

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13335866_10208148834333064_461445525948213403394_10208148837493143_793593774045013404024_10208148843253287_3367595683821

இன்று சுற்றுச் சூழல் தினமாம்.......!!...

மஞ்சப்பையையயும் , (துணிப்பை),,தூக்குச் சட்டியையும் தூக்குவதை நாம் மலிவாக நினைக்கும் வரை
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க முடியாது....!.
அதுவரை நம் சுற்றுப்புறச் சூழலைக் காக்கவும் முடியாது..................!!......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

06.06.2016.திகதி.மாதம்.ஆண்டு..

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப்ரோல்கா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 

 
 

ப்ரோல்கா (brolga) அல்லது ஆஸ்திரேலியக் கொக்கு எனப்படும் நாட்டியப் பறவைகள் பற்றி தெரியுமா உங்களுக்குஇனப்பெருக்கக் காலங்களில் இணையுடன் சேர்ந்து மிக அழகாக நளினமாக இவை ஆடும் நடனச்சடங்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் அபரிமிதமாய்க் காணப்படும் ப்ரோல்காஅம்மாநிலத்தின்அடையாளப்பறவை என்ற சிறப்போடு அம்மாநிலத்தின் அரசுமுத்திரையிலும் இடம்பெற்றுள்ளதுஆஸ்திரேலியாவின்தனித்துவமிக்கப் பறவையினங்களுள் ஒன்றான ப்ரோல்கா பற்றி அறிவோமா இப்போது?


 
 
 
brolgas-8631c.jpg
 
பொதுவாக இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவைகள் இப்படி தங்கள் திறமைகளைக் காட்டி இணைப்பறவைகளைஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதுண்டுஆனால் ப்ரோல்கா பறவைகளோ ஒரு முறை சோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும்தொடர்வதாக அறியப்படுகிறதுஅவ்வாறு இருக்கையில் இணையைக் கவர இந்த ஆட்டமெல்லாம் தேவையில்லைதானேஆனாலும் ஒவ்வொரு பருவத்தின்போதும் ப்ரோல்கா சோடிகள் இந்த சடங்கைப் பின்பற்றத் தவறுவதே இல்லைதவிரவும்இந்த அழகிய நாட்டியத்துக்கு இன்ன காரணம், இன்ன பருவம், இன்ன காலம் என்ற கணக்கெல்லாம் கிடையாதாம்இனப்பெருக்கக் காலம் மட்டுமல்லாது ப்ரோல்காக்கள் உற்சாகமனநிலையில் இருக்கும் பொழுதெல்லாம் துள்ளலுடன்நாட்டியமாடுகின்றனவாம்.


அமைதியாக நின்றுகொண்டிருக்கும் பறவைக்கூட்டம் தங்கள் ஆட்டத்தை ஆரம்பிப்பதே ஒரு அழகுக்காட்சிமுதலில் ஒருபறவை ஒரு புல்லை வாயால் கவ்வி அதைக் காற்றில் பறக்கவிட்டு பிறகுஎக்கிப்பிடிக்கும்தரையிலிருந்து ஒரு  மீட்டரோஅதற்கும் மேலோ உந்தியெழும்பி பாராசூட் போல இறக்கைகளைக் காற்றில் அளைந்தபடி மெதுவாகத் தரையிறங்கும்பிறகு மெல்ல மெல்ல இறக்கைகளை விரித்தும்மடக்கியும்குனிந்தும்வளைந்தும்நடந்தும்தலையை இடவலம்அசைத்தும் என பலவிதமாய் அபிநயிக்கும்.

 
 
 
brolga5.jpg
 
சில சமயம் ஒரு பறவை மட்டும் தன் இணையின் முன் ஆடும்உடன் இணைப்பறவை இணைந்துகொள்ளும்கொஞ்சம்கொஞ்சமாக குழுவின் மற்றப் பறவைகளும் ஆட ஆரம்பிக்கஒரு பெரிய நாட்டியக்கச்சேரியே ஆரம்பமாகிவிடும்.  இணைப்பறவைகள் ஒன்றுக்கொன்று அலகால் முத்தமிட்டுக் கொஞ்சுவதும் துரத்தி விளையாடுவதும் தலையைப் பின்னுக்குசாய்த்து மெலிதாய் கொம்பூதுவது போல் ஒலியெழுப்புவதும் ஆட்டத்தினூடே அமைந்த அம்சங்கள்.

 
 
பொதுவாக நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் இரைதேடி வாழ்ந்தாலும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தருணங்களில்அதற்கேற்ற இடங்களை நோக்கிப் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றனஆழமில்லா நீரோட்டமிக்க இடங்களையும்சதுப்பு நிலங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு கூடுகட்டும் முயற்சியில் ஆணும் பெண்ணும் இணைந்தே ஈடுபடுகின்றனகுச்சிகள்வேரோடு பிடுங்கப்பட்ட புற்கள்நாணல்நீர்த்தாவரங்கள் இவற்றால் உருவாக்கிய கூட்டில் பெண்பறவைமுட்டைகளை இடும்நீருக்கு நடுவே ஒரு பெரிய குப்பைமேடு போல் காட்சியளிக்கும் அக்கூட்டின் விட்டம் கிட்டத்தட்டஒன்றரை மீட்டர் இருக்கும்.




 
brolga%2Bnest.jpg
 
 
சோம்பல் மிகுந்த சில ப்ரோல்காக்கள்அன்னப்பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தபின் கைவிட்ட கூடுகளையேதங்கள் கூடுகளாக்கி முட்டையிடுமாம்அதனினும் சோம்பல் மிக்கவையோ கூடெல்லாம் எதற்கு என்று வெறும்தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்குமாம்உற்சாகத்துள்ளல் எல்லாம் நடனத்துக்கு மட்டும்தான் போலும்.  முறையாய்க் கூடு கட்டுவதென்றால் உடல் வளையமறுக்கிறதே.. சொகுசுகள்தான்.

 
 
இவை பொதுவாக இரண்டு முட்டைகள் இடும் என்றாலும் அரிதாக மூன்று இடுவதும் உண்டுமுட்டைகள் பழுப்பு வெள்ளைநிறத்தில் இருக்கும்ஆணும் பெண்ணும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும்ஒரு மாதத்துக்குப் பிறகு குஞ்சுகள்வெளிவரும்முட்டையிலிருந்து வெளிவந்த சிலமணி நேரத்திலேயே ப்ரோல்கா குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளைப் போலமிகுந்த சுறுசுறுப்புடன் தாய் தந்தையுடன் இரைதேட புறப்பட்டுவிடுகின்றனகிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு தாய்தந்தைபிள்ளைகள் என்ற அந்த குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும்.

 
 
ப்ரோல்கா குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொள்ள கிட்டத்தட்ட நூறு நாட்களாகும்தரையில் கூடுகட்டி வாழும் ஒருபறவையின் குஞ்சு பறக்கக்கற்றுக்கொள்ள இவ்வளவு காலமெடுப்பது ப்ரோல்கா இனத்தில் மட்டும்தான்பறக்க இயலாதகுஞ்சுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் ப்ரோல்காக்களின் பெரும் பிரச்சனைஅந்தமாதிரியானசந்தர்ப்பங்களில் ப்ரோல்காக்களின் நடனமே அவற்றைக் காப்பாற்றுகிறது என்பதுதான் வியப்பு.. குழுவாய் பலப்ரோல்காக்கள் ஒன்றிணைந்து தரையிலிருந்து எழும்பியும் தாழ்ந்தும் இறக்கைகளை விரித்தும் அசைத்தும் குதித்தும்குனிந்தும் பல்வாறாக உடலசைத்து சிறகசைத்து ஆடும் நடனத்தைக் கண்டு நரிகள் மயங்கிவிடுமா என்கிறீர்களா? இல்லை.. இல்லை நரிகள் மிரண்டோடிவிடுமாம். நரிகள் அறியுமா ப்ரோல்காக்கள் நடனமாடுகின்றன என்பதைஅவைதங்களைத் தாக்க ஆயத்தமாவதாக எண்ணிக்கொண்டு எடுக்குமாம் ஓட்டம்.  




 
brolgas-8631%2B%25281%2529.jpg
 
 


1.5 மீ உயரமும் இறக்கையை விரித்தால் 2.4 மீ நீளமும் உடைய ஒல்லியான உயரமான நீர்ப்பறவைதான் ப்ரோல்காமென்சிறகுகளகற்ற வழுக்கைத் தலையும்நீண்ட பசுஞ்சாம்பல்நிற அலகும் குச்சி போன்ற சாம்பல்நிறக் கால்களும் கொண்ட இப்பறவையினத்தில் ஆண்பெண் பேதம் காண்பதரிதுநூற்றுக்கணக்கானஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் குழுக்களாக வாழ்பவை இவைகுழுவாக இருந்தாலும் குழுவுக்குள் குடும்பங்கள் தனித்து இயங்கும்.
 
 
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் (இருபது லட்சம்வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் கொக்கு இனமான ப்ரோல்கா, ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அரிய பறவை என்பது அதன் சிறப்புபார்ப்பதற்கு சாரஸ்கொக்கைப் போன்ற உருவ அமைப்பும் நிறமும் குழுவாக வாழுந்தன்மையும் கொண்டிருந்தாலும் ப்ரோல்காவுக்கும் சாரஸ்கொக்குக்கும் நிறைய வேறுபாடுகள்  உண்டுதொலைவிலிருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போலவே தோன்றினாலும்கூர்ந்து கவனித்தால் வேறுபாடு புலப்படும்அதனாலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும்சாரஸ் கொக்குகளின் இருப்பு  1967 வரையிலும் அறியப்படவே இல்லை.  அவற்றையும் ப்ரோல்கா என்றே மக்கள்நினைத்திருந்தார்களாம்.

 
 
sarus%2Bcrane%2B2.jpg
 
sarus-crane%2B4.jpg
 
 


ப்ரோல்காவுக்கும் சாரஸ் கொக்குக்குமான முக்கிய வேறுபாடுகள் என்றால் தலையும் கால்களும்தான்ப்ரோல்காவுக்குதலையின் சிறுபகுதி மட்டுமே சிவப்பாக இருக்கும்சாரஸ் கொக்குக்கு தலையிலிருந்து கழுத்து வரை சிவந்திருக்கும்ப்ரோல்காவின் கால்களின் நிறம் சாம்பல் அல்லது கருப்புசாரஸ் கொக்குக்கோ சிவப்புஅல்லது இளஞ்சிவப்பு நிறக்கால்கள்.



 
ப்ரோல்காக்கள் ஆழமில்லாத நீர்நிலைப் பகுதிகள்சதுப்பு நிலப்பகுதிகள் போன்ற இடங்களையே வாழுமிடமாகத்தேர்ந்தெடுக்கின்றனஅங்குதான் அவற்றின் உணவான கடல் பாசிகள்நீர்த்தாவரங்கள்நிலத்தாவரங்கள்கிழங்குகள்இவற்றோடு புழு பூச்சிகள்தவளை எலி போன்ற சிற்றுயிரிகளுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லைதங்களுடைய நீண்ட கூரியஅலகால் மண்ணைக் குத்திக் கிளறி மண்ணுக்குள்ளிருக்கும் கிழங்குவேர்கள் போன்றவற்றைத் தின்னும்உப்புநீர் சதுப்புநிலங்களில் வாழும் பறவைகள் அங்குள்ள உவர்நீரைக் குடிக்கநேர்ந்தால் அவற்றின் கண்ணருகில் உள்ள சுரப்பிகள்அதிகப்படியான உப்பை வெளியேற்றிவிடுமாம்.

 
 
மற்ற ஆஸ்திரேலிய விலங்குகள் பறவைகளைப் போலவே ப்ரோல்காவும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே மிகுந்தசெல்வாக்குடைய பறவைஅவர்களுடைய நடனங்களுள் ப்ரோல்கா நடனமும் ஒன்றுப்ரோல்காக்களைப் போலவேஅவர்கள் குழுவாய் இணைந்து தரையிலிருந்து எம்பிக்குதித்தும் கைகளைக் காற்றில் அளைந்தும் ஆடுவது அழகுப்ரோல்கா பற்றியும் பூர்வகுடிகளிடம் கதை ஏதாவது இருக்கவேண்டுமே.. இதோ இருக்கிறது.
 
 
brolga%2B2.jpg

 
முன்பொரு காலத்தில் நடந்த கதை இதுமனிதர்கள் குழுக்களாய் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஆண்களுடைய வேலைபறவைகள் மிருகங்களை வேட்டையாடி உணவாய்க் கொண்டுவருவதுபெண்களுடைய வேலை கிழங்குகளையும்பழங்களையும் சேகரிப்பதுஅந்தக் குழுவில் செம்மயிர் கொண்ட இரு குழந்தைகள் மிகுந்த நட்புடனும் பாசத்துடனும்ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தனர்இளைஞனும் இளம்பெண்ணுமாய் அவர்கள் இளமைப்பருவத்தைஅடைந்தபோது இருவரும் பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டதுஇளைஞன் ஆண்களுடன் வேட்டைக்கும் இளம்பெண்பெண்களுடன் காய்கனிகள் சேகரிக்கவுமாய்ப் பிரிந்தனர்பிரிவு அவர்களை வாட்டியதுஒருவரை ஒருவர் காதலிப்பதைஅப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.

 
 
ஒரு திருவிழா வந்ததுசெம்மயிர்க்கொண்ட அந்த இளைஞன் கூட்டத்தின் நடுவில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும்நடனமாடினான்அவன் சுழன்றாடும்போது அவனுடைய செம்மயிர்த்தலை பிரகாசித்ததுபலரும் அதைக் கண்டு வியந்தனர்அவன் ஆடி முடித்ததும் அவனுடைய தோழி ஆடினாள்அவளும் மிக அழகாகவும் நளினமாகவும் சுற்றிச்சுழன்று ஆடினாள்அவளுடைய செம்மயிர்க்கூந்தல் விரிந்து ஜொலித்ததுபார்த்தவர்கள் இவர்கள் இருவரும் மிகப் பொருத்தமானசோடியென்று எண்ணும்படியாக அவர்களுடைய நடனம் இருந்ததுதிருவிழாவுக்குப் பின் அவர்கள் மறுபடியும் தங்கள்பணிகளில் ஈடுபட்டனர்.

 
 
ஒருநாள் வேட்டைக்குப் போன இளைஞன் இருப்பிடத்துக்குத் திரும்பவில்லைஅவன் திரும்பி வராததற்கு ஒவ்வொருவரும்ஒரு காரணம் சொன்னார்கள்போன இடத்தில் பாம்பு கடித்து இறந்திருப்பான் என்றனர் சிலர்வழிதெரியாமல் காட்டில்சிக்கி காணாமல் போயிருப்பான் என்றனர் சிலர்வேறு காதலி கிடைத்து அவளுடன் போயிருப்பான் என்றனர் சிலர்திரும்பிவர முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றனர் சிலர்உண்மையில் என்ன நடந்தது என்றுஎவருக்கும் தெரியவில்லைஅந்தப் பெண் பெரிதும் மனமுடைந்துபோனாள்நித்தமும் அவன் வருகையை எதிர்பார்த்துஏமாறினாள்வேட்டைக்குச் செல்பவர்களிடம் அவனைத் தேடிக்கண்டுபிடித்துத்தருமாறு வேண்டினாள்எதற்கும்பலனில்லாமல் போகவே ஒருநாள் தானே அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பிச்சென்றுவிட்டாள்அதன்பின் அவளும்என்னவானாள் என்று எவருக்கும் தெரியவில்லை.


 
 
brolga%2B6.jpg
(படங்கள் உதவி - இணைய தளங்கள்)
 
வெகுநாட்கள் கழித்து ஏரிக்கரையில்  செந்தலைப் பறவை சோடியொன்று மிக அழகாக நடனமாடிக்கொண்டிருப்பதைஊர்மக்கள் பார்த்தார்கள்அந்தப் பறவைகள் காதல் மேலிட தங்கள் செந்தலைகளை மேலும் கீழும் அசைத்தும்சுற்றிச்சுழன்றும் ஆடிய நடனம் அவர்களை வியப்புறச் செய்ததுகாணாமல் போன இளைஞனும் இளம்பெண்ணும்தான் அதுஎன்று அவர்கள் நம்பினர்உண்மைக்காதல் காதலர்களை இணைத்துவைத்துவிட்டது என்று சொல்லி மகிழ்ந்தார்கள். என்னவொரு அழகான காதல் கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.