Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தியில் முதன்மை..."*
'தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா....
எல்லோரும் யோசிக்காமல் "ராஜா ராஜா சோழனு..." பதில் சொல்லிடுவாங்க.
ஆனா, ராஜா ராஜா சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!
தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...
கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜா ராஜா சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.
'ராஜா ராஜா!' என்றழைக்க...
ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...
தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.
இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.
ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.
விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.
யாருக்கும் பதில் தெரியவில்லை.
பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.
கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.
சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.
எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.
இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.
எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...
அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.
அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...
என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.
அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.
இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...
எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.
ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."
என்று கண்ணீர் மல்கி...
பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...
இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல... 
இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

படித்ததில் வியந்தது.



Image may contain: sky, cloud and outdoor
  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Google's 18th Birthday

Google 18th birth day!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MucGBqBKwsS.jpg

 
Tomorrow · Toronto · Rain Showers
6 AM63°XEPcmzPjdlP.png
7 AM61°XEPcmzPjdlP.png
7:12 AM61°
8 AM61°U2dVjnKWXEb.png
9 AM61°U2dVjnKWXEb.png
10 AM59°U2dVjnKWXEb.png
11 AM59°ioLeEDJSnu5.png
12 PM61°ioLeEDJSnu5.png
1 PM61°
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் இளம் காட்டூனிஸ்ட் அஸ்வின் சுதர்சன் திடீர் மறைவு!

29 செப்டம்பர் 2016
Bookmark and Share
 

 

ஈழத்தின் இளம் காட்டூனிஸ்ட் அஸ்வின் சுதர்சன் திடீர் மறைவு!



ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சனின் திடீர் மறைவு அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக அஸ்வின் சுதர்சன் திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார். 

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சன் சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 

யாழ்ப்பாணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் ஊடகப் பணியாற்றிய அஸ்வின் சுதர்சன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதையும் வென்றவராவார். 

மேற்கு நாடு ஒன்றில் அடைக்கலம் புகும்பொருட்டு பயணிக்கும்போது உக்ரேன் நாட்டில் ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டு திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக இதய நாள் 

செப்டம்பர் 29, 2016,,,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

கனேடிய இராணுவப் பயிற்சிகளில் அதி உயர் விருது பெறும் இலங்கைத் தமிழன்!

Ca.thamil Cathamil September 29, 2016Canada

இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரினால் அண்மையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய கெடட் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருது அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கெடட் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

மணி டன்ஸ்டன் – மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தி முன்னர் வெளியாகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது….canada-tamil

canada-tamil01

canada-tamil02

canada-tamil03

Www.canadamirror.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் தீவிபத்து (படங்கள் இணைப்பு)

 
வவுனியா வைரப்புளியங்குளத்தில் இன்று (30.09.2016) மாலை 4.40மணியளவில் தீவிபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
வவுனியா வைரப்புளியங்குளம் கணிதக்கல்லூரிக்கு அருகே காணப்பட்ட காணியில் காணப்பட்ட மரக்குற்றிகளை உரிமையாளர் எரித்த போது தீ பரவடையத்தொடக்கியது. தீ மின்சார வயருக்கு அருகே செல்லும் ஏன் அச்சத்தினால் உடனடியாக பொதுமகன் ஒருவர் மின்சாரசபைக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சாரசபை உத்தியோகத்தர் மின்சாரத்தினை துண்டித்ததுடன். வீட்டின் உரிமையாளர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
DSC_0064
DSC_0066 DSC_0067 DSC_0068 DSC_0069 DSC_0070 DSC_0071 DSC_0072 DSC_0074 DSC_0076 DSC_0077 DSC_0078 DSC_0079 DSC_0080
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நவராத்திரி ஆரம்பம்...1ஆம் நாள்!

Sahana Sahana's photo.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person

 

அக்டோபர் 01 ⇨ சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச முதியோர் தினம், ஐ.நா சபையின் ஆதரவில் அக்டோபர் 01ம் நாளில் 1991ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1990 டிசம்பர் 14ம் திகதிய ஐ. நா பொதுச்சபைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முதியோரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்களை கௌரவப்படுத்தி மதிக்க வேண்டிய அவசியத்தையும் இத்தினம் சிறப்பிக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 60 வயதினைக் கடந்த 600 மில்லியன் மக்கள் (பத்தில் ஒருவர்) வாழ்கின்றனர் எனவும், 2025ம் ஆண்டளவில் இத்தொகை 2 மடங்கால் அதிகரிக்கும் எனவும், 2050ம்ஆண்டளவில் இவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக (ஐந்தில் ஒருவர்) அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானோர் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளினைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய சமூகத்தில் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும் முதியோரை அரவணைத்து செயலாற்ற வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் உலக சிறுவர், முதியோர் தினமாகக் காணப்படுவதோடு நவராத்திரி ஆரம்ப நாளாகவும் இருக்கின்றது. அந்தவகையில் உலகெங்கும் வாழும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Image may contain: one or more people and closeup
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 1: 1869 ஆம் ஆண்டு இதேநாளில்தான் உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

Image may contain: text

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அஞ்சல் துறை…!

 

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…!
 
  • மகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.
5933242_f520.jpg
  • இந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்ளன.
gan.jpg
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.
1174.jpg
  • மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.
%24(KGrHqYOKjYE3S2WuwSpBN7)kbk6(!~~_12.JPG
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.
srilanka%2Bgandhi.JPG
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.
International-Day-of-Non-Violence.jpg
***
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசப்பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் இன்று...

 
images_1475410148624.jpg

1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
இதே 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்ற இடத்தில்  பிறந்தார்.

13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார்.

18 வயதில் இங்கிலாந்து சென்ற
காந்தியடிகள் பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் கல்வியை படித்தார்.

1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்கா பயணம் ஆனார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு மற்றும்
ஒரு நாள் இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, வெள்ளையர் இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வு ஆகியன இரண்டுமே அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில்
போராட்டத்தில் குதிக்க தூண்டுகோலாய் இருந்தன.

தென் ஆப்ரிக்காவில் கறுப்பின மற்றும் அங்கு குடியேறிய இந்திய மக்கள் படும் இன்னலுக்கும் தீர்வுகாண பல அஹிம்சை முறையிலான போராட்டங்களை முன்னெடுத்தார்.

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

ரவ்லத் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்தும் மற்றும் இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தும் ஒத்துழையாமை இயக்கத்தினை தொடங்கினார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸின் பெரும் தலைவராக உருவெடுத்தார்.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது.அதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் தண்டி யாத்திரையை தொடங்கினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார்.

காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட பிரிட்டிஷ் அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி  இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்குவதாக அறிவித்தது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி புது தில்லியில் நாதுராம் கோட்சேவால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று அவரை சிறிது நேரமாவது நினைவில் கொள்வோமாக....

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


 

vv_01.jpg


அக்டோபர் 2. காந்தி ஜயந்தி .

நினைவுகள் மலர்கின்றன!

1946 பிப்ரவரி. காந்தியின் கடைசி ( 20 -ஆவது?) தமிழ்நாட்டுப் பயணம். தி.நகரில் வெங்கடநாராயணா ரோடில் இருந்த கணேஷ் & கோ வீட்டில் தங்கினது, ஹிந்தி பிரசார் சபையின் வெள்ளிவிழா , மாலைப் பிரார்த்தனைக் கூட்டங்கள், தாயுடன் கூட்டத்திற்குச் சென்றது, அவரைப் பார்த்தது ...யாவும் நிழலாய் மலர்கின்றன. (எனக்கு ஐந்து வயது அப்போது)

பிறகு அவர் மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு, பழனிக்குச் சென்றது ...”கோபு” விகடனிலும், “சாவி” கல்கியிலும் எழுதிய கட்டுரைகள்.... 

இதோ முதலில் ஒரு கட்டுரை. படங்கள் : “ராவுஜி” ( நாரதர் சீனிவாச ராவ்.)
 

vv_05.jpg

 

vv_06.jpg

 

vv_07.jpg

 

vv_08.jpg

 

vv_09.jpg

 

vv_10.jpg

 

vv_02.jpg

 

vv_03.jpg

 

vv_04.jpg


[ நன்றி : விகடன் ]

மகாத்மா காந்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் சந்தித்தாரா??

 
முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் பல முறை கூறிவிட்டது. இந்த நிலையில் கவர்னர் அப்போலோ சென்று முதல்வரை சந்தித்தாக சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சில கருத்துகளை  மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு வைத்தியரின் அலுவலக வெளிப்புறத்தில் சுட்டுக் கொண்டு வந்த படங்கள்..நாம் சமைக்கும் மரக்கறிவகைகளில் சிலவற்றை சாடிகளில் நட்டு அழகாக கார் பார்க்கிங் அருகில் வைத்திருக்கிறார்கள்..:)

Sahana Sahana's photo.
Sahana Sahana's photo.
  • கருத்துக்கள உறவுகள்

நான் நுவரேலியா சென்று பார்த்து வந்தேன் மலையக மரக்கறி அழகும் சுவையும் tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 4 ⇨ உலக விலங்குகள் தினம்

 
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசிஎன்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் அக்டோபர்4ம் திகதி உலக விலங்குகள் தினமாககொண்டாடப்படுகின்றது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின்புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாககொண்டாடப்பட்டதுபின்னர் இது உலகளவில்கொண்டாடப்பட்டு வருகிறது.

 
 
விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரானகொடுமைகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினைஉலக மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின்நோக்கமாகும்.

 
அந்தவகையில், விலங்குகள் தொடர்பான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…!

 
Y ஆபிரிக்க யானைகளின் காதுகள்ஆசிய யானைகளின்காதுகளைவிடவும் 
பெரிதானதாகும்.

 
1.jpg
 
Y இரவு நேரத்தில்மனிதர்களினை விடவும் 6 மடங்கு சிறப்பானபார்வைத் திறன் புலிகளுக்கு உண்டாம்.

 
Y சிங்கத்தின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும்கேட்கக்கூடியதாம்.

 
2.jpg
 
Y ஒட்டகச்சிவிங்கிகள் நின்றுகொண்டே குட்டிகளைபிரசவிக்கின்றனகுட்டிகள் பிறந்த அரைமணி நேரத்திலேயேநிற்கக் கற்றுக்கொள்வதுடன்பிறந்த பத்து மணிநேரத்திலேயே  தனது தாயுடன் நடக்கக்கற்றுக்கொள்கின்றது.    

 
Y உலகில் 210 வகையான ஆடு இனங்கள் உள்ளன.
 
6.jpg


Y 24 மணி நேரத்தில்நீர்யானை 250 லீற்றருக்கும்(56 கலன்கள்அதிகமான நீரினை அருந்துகின்றனவாம்ஆபிரிக்காவில் பல பேரைக் கொல்லும் முதன்மை வனவிலங்காக நீர்யானை விளங்குகின்றது.
 
3.jpg
 
 
Y காண்டாமிருகங்களின் கண்பார்வை சக்திகுறைவானதாயினும் அவற்றின் மோப்ப சக்தி மற்றும் கேட்கும்சக்தி அபாரமானதாகும்.

 
4.jpg
 
 
Y ஒட்டகங்களின் உடல் வெப்பநிலை பகல் வேளையில் அதிகரித்துச் சென்று, இரவு வேளையில் குளிர் நிலையினை அடைகின்றது. 

 
5.JPG
 
***
(குறிப்பு è நேற்றைய தினமே இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்த போதிலும் முடியாமல் போய்விட்டது)
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன் வெளியானது

October 4, 2016 வெளியானது2016-10-04T21:07:

wp-1475595197248.jpg2016 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை

9d701c1ccedd118f34a0189ab6c8b02e?s=50&d=
Posted on October 4, 2016
fotorcreated
 
 
 
 
 
 
 
 

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலப்பகுதியிலும் 17 சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் நிலையில் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம்செய்துள்ள சுவிஸர்லாந்து அரசாங்கத்தின் நீதி மற்றும் காவற்துறை அமைச்சருடன் வந்துள்ள சுவிஸர்லாந்து ஊடகவியலாளர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,

‘அனைத்தும் சுமுகமான நிலைமைக்கு வந்துவிட்டதாக நான் கூறவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் கூறியது. எனினும் அது இன்னமும் நீக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு பின்னரும் கூட தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பில் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமை முன்னர் இருந்ததை விட மிகவும் மேம்பட்டுள்ளது. ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

எனினும் யுத்தத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என என்னால் கூற முடியாது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்படாவிடின், நபர்களைக் கைதுசெய்து நீண்டகாலம் தடுத்துவைத்து கடுமையான முறையில் வழக்குகள் பதிவுசெய்யப்படும். ஏற்கனவே உள்ள அரசியல் கைதிகள் விடயத்திலும் இதுவே நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் வாழும் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்படாது, அனைவரையும் சமமாக அங்கீகரிக்கும் நிலையை அரசியல் சாசனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நாம் இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்தோம். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்காவிடின் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருக்காது.

ஆகவே இந்த அரசாங்கமும் எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று தான். எனினும் அனைத்து மக்களுக்கான சமத்துவத்தையே நாம் கோருகின்றோம். ஒரு சமயத்திற்கு விசேட சலுகை, ஒரு மொழிக்கு விசேட சலுகை, ஒரு இனத்திற்கு விசேட சலுகை என்பதல்ல சமத்துவம் இருக்க வேண்டும் அதனையே கோருகின்றோம்.

வெளிநாட்டில் தஞ்சம் கோரியவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருவார்களா என நீங்கள் கேட்ட கேள்விக்கு சாதகமான பதிலை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்னைத் தடுக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சாதாரண சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவந்தால் அவர்களை தடுத்து வைத்து, 15 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள்? 20 வருடங்களுக்கு என்ன செய்தீர்கள்? 5 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள் என விசாரணை செய்வார்கள். பாரபட்சம் காட்டப்பட்டமையே அவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முன்னுரிமை அளித்தது.

ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். முதன்மையாக பயங்கரவாத தடைச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.

வேறு ஒரு முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் இருக்க வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் அனைவரும் நாட்டிற்கு வரலாம். அவர்கள் வரவேண்டும். அவர்களை நாங்கள் வரவேற்போம் என குறிப்பிட்டார்.

வடக்கில் தொடரும் நில அபகரிப்பு, அதிகரித்த இராணுவ பிரசன்னம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் வட பகுதியில் நிலைகொண்டுள்ளனர். உங்கள் நாட்டில் ஜேர்மன் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தது போல் ஆக்கிரமிப்பு படைகளாக அவர்கள் நிலைகொண்டுள்ளனர்.

கொழும்பில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களால் சில விஸ்தரிப்புக்கள் கட்டுப்பாட்டுக்கள் இருக்கின்றன. எனினும் ஏன் அவர்கள் தொடர்ந்தும் காணிகளை கையகப்படுத்த வேண்டும்? பாதுகாப்பை அவர்கள் வழங்குவதாயின் ஐந்து ஏக்கர் காணியை எடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுங்கள், ஏன் 4 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை ஒரு பகுதியிலும் மற்றுமொரு பகுதியில் 200 ஏக்கர் காணியையும் ஒரு பகுதியில் 1702 ஏக்கர் காணியையும் வைத்திருக்க வேண்டும்? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

5.10.16

Image may contain: 12 people , text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நயினை மைந்தன் தேசிய ரீதியில் தமிழ் மொழி. பிரிவு முதலிடம் . 
....................................................................................

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று .நயினாதீவு 5 ம் வட் டாரத்தைச் சேர்ந்த 
சோமசுந்தரம் கோகுலதாசன் [குலம்] அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி தேசிய ரீதியில்முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இம்முறை அண்ணளவாக 170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

தேசிய ரீதியில்முதலிடம் பிடித்து சாதனை படைத்த அபிசிகனை தொடர்புகொண்டபோது, தான் இந்த பெறுபேற்றினை பெற்றுகொள்ள தனக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கும், பெற்றோர் மற்றும் சகோதரனுக்கும் தன்னுடன் பரீட்சையில் தோற்றிய சக வகுப்பு தோழர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து இந்த சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

Nainai M Kumaran's photo.

 

 

 

 

 

 

நயினை மண் தந்த மற்றுமோர் புதல்வி தமிழ் மொழி பிரிவு.
மாவட்ட ரீதியில் முதலிடம்.தேசிய ரீதியில் இரண்டாம் இடம்

வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற 
நயினை மண் தந்த மாணவி. நயினாதீவு 3ம் வட்டாரம் உமாசங்கர் லதா தம்பதியினரின் செல்வ புதல்வி உ. ஐெயனி 194 புள்ளிகள் பெற்று. யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடமும் தேசிய ரீசியில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார் இவரை அம்பாளின் நல் அருளுடன் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.

 

Image may contain: 1 person

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்றது கிடையாது கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்.

05 அக்டோபர் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்றது கிடையாது கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்.

 

 

தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்றது கிடையாது கிளிநொச்சியில் முதலிடம் பெற்ற மாணவன்.

 

பாடசாலையிலும் வீட்டிலும் மாத்திரமே கல்வி கல்வி கற்றேன், இதனை தவிர வீட்டிற்கு அயலில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவ்வவ் போது கற்றுக்கொள்வேன் என கிளிநொச்சி மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்ற மாணவன் யுகதீபன் நுகாந் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற நுகாந் 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

 

 

மாயவனூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நுகாந்தின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்.தாய் வீட்டுப்பணி, நுகாந் வீட்டுக்கு மூத்த  பையன் அவனுக்கு கீழ் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் உள்ளனா.

வழமை போன்று பாடசாலைக்கு செல்வது அங்கு வகுப்பாசிரியர் தேவராசா நிகேதரனின் கற்பித்தல் மற்றும் அவரால் பாடசாலைகளில் மாலை நான்கு முப்பது மணி வரை நடத்தப்படும் மேலதிக வகுப்பு இதுவே நுகாந்தின் கற்றல். இதனை தவிர தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டுக்கு நேரம் கிடைக்கும் போது சென்று கற்றுக்கொள்வது. மேலும் இரவு ஒன்பது மணிவரை படிப்பது. அதனை தவிர பல வேளைகளில் அதிகாலை ஜந்து மணிக்கு எழுந்து கற்பது. இதனை தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த நிலையில் குறித்த மாணவன் இந்த தடவை  மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதிபர் பங்கையற்செல்வனின் ஊக்கமும் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்தழைப்பு என்பன நுகாந்தை சாதிக்க வைத்திருக்கிறது.

 

தான் வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்ற இலட்சத்தில்  இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

நுகாந்த கல்வி கற்கும் பாடசாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வரை தகரங்களினால் அமைக்கப்பட்ட  நெற்களஞ்சியசாலையிலேயே இயங்கியது. என்பது குறிப்பிடதக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அற்புதமான நாள் 6-10-2016

( 6 1 0 2 0 1 6)

என்பதை முன்னிருந்தும்
பின்னிருந்தும் பாருங்கள் ஒன்று போலவே தெரியும்.....
#Happy_teacher's #day 
Good morning ....☁️☁️

அனைத்து ஆசிரியர்களுக்கும் உலக ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!06.10.2016

 

¤ ¤

No automatic alt text available.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.