Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு வருடங்களின் பின் விருட்சங்கள் வெளியே வந்துள்ளமை வரவேற்க தக்கது ஆனால் புலம்பெயர் நாட்டில் இன்னும் வெளியே வரவில்லை இன்னும் பல பிரிவினைகளும் சண்டைகளும் தான் மிச்சம் மீதியாய் உள்ளது.. 
சினிமா பாடலுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட எழுச்சிப்பாடலுக்கு கிடைப்பதில்லை முக்கியமாக பல ஊடகங்கள் அவற்றினை அங்கீகரிப்பதில்லை ஆனால் சில ஊடகங்கள் அவற்றினை அங்கிகரிக்கின்றது வரவேற்க தக்கது எனவே எமது விருட்சம் ஒற்றுமையும் தன்நம்பிக்கையும் தான் விரைவில் அதை எதிர்பார்க்கின்றோம்... 
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

ஒரு பாடலை தாங்கள் தங்களின் பக்கத்தில் பதிவு செய்யவே பலர் சொல்லும் காரணம் "நாங்கள் நாட்டுக்கு போறனாங்கள்" அதை விடுங்கோ மாவீரதினம் அதுக்கு போறியள் அங்கயும் போய் செல்பி எடுக்கிறியள் புனிதர்களுக்காய் கொண்டாடப்படும் தினம் அது என்பதையும் மறந்துவிட்டியளோ ???

இன்று தாயகத்தில் ஆங்காங்கே உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அவர்கள் மனதில் உள்ள கோபம் உங்களுக்கு எங்கே ????
இதை விட நிறைய பேசலாம் நாளை எனக்கும் ஒரு பெயர் வரும் அதை நான் கணக்கில் இடப்போவதில்லை ஆனால் நம் ஒற்றுமை தான் முக்கியம் அப்போது தான் நாம் நம் இலக்கினை அடையமுடியும் 

அன்புடன் 
செல்வா முகுந்தன்

  • Replies 3.9k
  • Views 331.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: night, sky and outdoor
ஈழப்பிரியன் தமிழ் 
1
விசுவமடுவில் உள்ள ஒரு நண்பனின் பதிவு 

எங்கெல்லாமோ தீபம் ஏற்ற தயாராகு கின்றார்கள் ஆனால் பல் ஆயிரம் வீரர்கள் துயிலிம் இல்லமாம் #விசுவமடு மாவீர் துயிலும் மட்டும் ஆயுதம் ஏந்திய சிங்கள இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பின் மத்தியின் அமைதி கொண்டு காணப்பட அமைதியாய் நிற்கிறேன்...
எம்மை நினைவுகூர யாரும் இல்லையோ எண்று மாவீரர்கள் கேட்பது போல் ஒரு உணர்வு என் மூழையை தட்டுகிறது 
எங்கிருந்தோ தனி ஒரு வீரன் வீறு நடை போட்டு வந்து தன் உயிரையும் துச்சமென மதித்து இராணுவ பாதுகாப்பையும் மீறி மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு செல்லுகின்றான்
நானும் ஒரு உண்மையான வீரனை கண் எதிரே கண்ட திருப்தியில் மாவீரர் பாதம் பணிகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலங்களில் கனடாவில் வைத்திய தேவைகளை பெறுவதில் நிறைய கால தாமதங்கள்...இது பொய்யல்ல புலம்பலும் அல்ல...ஒரு சத்திரசிகிச்சை நிபுணரை சந்திப்பதற்கு நீண்ட காத்திருப்பு....சீ எண்டு போகுது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ளதாக தேடப்படும் 20 வயதான கஸ்துாரி கருணாநந்தன் என்ற பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவர் இறுதியாக நேற்றைய தினம் (நவம்பரம் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) Markham வீதி Tuxedo Court பகுதியிவ் மாலை 3:30 மணியளவில் காணப்பட்டதாக கூறும் காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இவரை இலகுவாக அடையாளம் காண உதவியாக இவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர் இவர் குறித்த விபரம் அறிந்தவர்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறும் கோரியுள்ளனர்.

The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing woman. 

Kasturi Karunananthan, 20, was last seen on Sunday, November 27, 2016, at 3:30 p.m., in the Markham Road and Tuxedo Court area. 

She is described as 5’8", 180 lbs., with wavy, red, shoulder-length hair. She was last seen wearing aqua pants, a blue jacket with white stripes on the arms, and black shoes. She has piercings below her right eye and in her nose. 

Police are concerned for her safety.

Call @416-808-4300
Crime Stoppers anonymously @ 416-222-TIPS (8477)
Online @ www.222tips.com
Text TOR and your message to CRIMES (274637).

Image may contain: 1 person , closeup
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

November 29, 2016
69 Views
1 Min Read
November 29, 2016
 

home_3096009f

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.

kalai_3096011a.png

மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

இன்று கலைவாணர் பிறந்த நாள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
thai1.jpg
தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகாலம் மன்னராக வீற்றிருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த மாதம் இயற்கை எய்தினார். புதிதாக இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் மன்னராக முடிசூடவுள்ளார். இந்த நிகழ்வுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு முடிசூட்டும் வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் இந்த நடைமுறை உள்ளது.

தமிழ்நாட்டின் முடிசூடும் வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளன. அதுகுறித்து காண்போம்:

தாய்லாந்தில் மன்னர் ஆட்சி

ஆசிய பகுதியில் தொடர்ந்து மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடு தாய்லாந்து ஆகும். அங்கு எழுபது ஆண்டுகாலம் மன்னராக இருந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி காலமானார். அவரையடுத்து, இளவரசர் மஹா வஜ்ர அலங்காரன் தாய்லாந்தின் புதிய அரசராக பதவியேற்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (29.11.2016) ஒப்புதல் அளித்ததுள்ளது. நாடாளுமன்றத் தலைவர் அடுத்த சில நாட்களில் இளவரசர் மஹா வஜ்ர அலங்காரனை சந்தித்து, அரியணையேற முறைப்படி கேட்டுக் கொள்வார்
PrimeMinister1.jpg
அரசர் பூமிபால் அதுல்யதேஜுடன்  தாய்லாந்து பிரதமர் சந்திப்பு
 
தாய்லாந்து மக்களுக்கு மன்னனே இறைவன். புத்தமதத்துக்கு மாறினாலும், அங்கு பழங்கால தென்னிந்திய பண்பாடு நீடிக்கிறது. பிரதமர், இராணுவ தளபதி, நீதிபதிகள் என்று எல்லோரும் மன்னருக்கு முன்பாக மண்டியிட்டுதான் பேசுவார்கள். எல்லா அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிலும் மன்னர் மற்றும் மகாராணியின் புகைப்படங்கள் இருக்கும். காலையில் அதனை வணங்கிவிட்டுதான் பணிகளை தொடங்குகிறார்கள்.

தினமும் மாலை 6 மணிக்கு மன்னரை வாழ்த்தும் பாடல் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலிக்கும். அப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எல்லா மக்களும் தமது வேலைகளை நிறுத்தி, எழுந்து நின்று மன்னரை வாழ்த்தி பாடுகிறார்கள். மன்னரை விமர்சிப்பது தாய்லாந்து நாட்டில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தாய்லாந்து மன்னரும் தமிழும்

தாய்லாந்து நாட்டின் முதன்மை இதிகாசம் 'ராமாகியான்'. இது தமிழ் கம்ப ராமாயணத்தின் தாய்லாந்து வடிவம் ஆகும். அந்நாட்டின் முன்னாள் தலைநகரம் 'அயோத்தியா'. இப்போதைய தலைநகர் பாங்காக்கின் உண்மை பெயர் 'குரங்கு தீபம்'. அங்கு முடிசூடிக்கொள்ளும் மன்னர்கள் எல்லோரும் தம்மை ராமன் என்றே கூறிக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு பழங்கால மன்னனின் பெயர் 'ஸ்ரீ சூரியவம்ச ராமன் மாகா தர்ம ராஜாதிராஜன்'.

இப்போதைய மன்னர் வம்சம் 1782 ஆம் ஆண்டில் தொடங்கிய சாக்ரி வம்சம் ஆகும். இதன் முதல் மன்னர் முதலாம் ராமன் (Rama I) என்று அழைக்கப்பட்டார். மறைந்த பூமிபால் அதுல்யதேஜ் ஒன்பதாம் ராமன் (Rama IX) ஆகும். அடுத்து முடிசூடவுள்ள மஹா வஜ்ர அலங்காரன் பத்தாம் ராமன் (Rama X) என்று அழைக்கப்படுவார்.

முடிசூடலும் தமிழும்

தாய்லாந்து மன்னரின் முடிசூடல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் முடிசூட்டல் நிகழ்வினை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.
Thai3.jpg
மன்னர் முடிசூடலுக்காக நடராஜர் சிலை முன்பு ஹோமம். 1925 ஏழாவது ராமன் முடிசூடல்
 
சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஐந்து ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னார் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது.
 
 
தாய்லாந்து அரசரின் அரண்மணையில் இந்த பாடல்கள் பழங்கால தமிழ் கிரந்த எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த தமிழ் மந்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருப்பாவை பாடல்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக;

"தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே" 

- எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,

"பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள் 
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே"

- எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
209816.jpg
1950 ஆம் ஆண்டில் முடிசூடலின் போது புத்தர் கோவிலில் இறைவனுக்கு முன்பாக அமர வைக்கப்பட்ட அரசர் பூமிபால் அதுல்யதேஜ் (சிதம்பரம் கோவில் முடிசூடலிலும் நடராஜருக்கு முன்பாக மன்னர் அமரவைக்கப்படுகிறார்)
 
அதாவது, தமிழ் மன்னர்கள் சிதம்பரம் கோவிலில் முடிசூட்டிக்கொண்ட முறைக்கு இணையாக, தாய்லாந்து மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். அதுவும் தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் ஒலிக்க - அதன் பொருளோ, மொழியோ தெரியாமலேயே - தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழா நடக்கிறது.

தேவாரம், திருவாசம், திருவெம்பாவை பாடல்கள் காதில் விழுந்த பின்னரே, மனிதராக இருக்கும் மன்னர், இறைவனாக அவதாரமெடுக்கிறார் என்பது தாய்லாந்து நாட்டின் நம்பிக்கை ஆகும்.

திருவெம்பாவை - திருப்பாவை விழா

முடிசூடலின் போது மட்டுமின்றி, மற்றுமொரு திருவிழாவிலும் இப்பாடல்கள் ஒலிக்கின்றன. திருவெம்பாவை - திருப்பாவை திருவிழா என்பது சிவபெருமானையும் விஷ்ணுவையும் தாய்லாந்துக்கு அழைத்துவந்து ஊஞ்சலில் வைத்து ஆட்டும் திருவிழா ஆகும்.
Thai2.jpg
 பாங்காக்: திருவெம்பாவை - திருப்பாவை ஊஞ்சல்
 

ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவுக்காக, ஒரு மாபெரும் ஊஞ்சல் பாங்காக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அது அந்த நாட்டின் ஒரு பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.

கண்டுகொள்ளாத தமிழகம்

உலகின் எல்லா நாடுகளும் தமது பண்பாட்டு பாரம்பரிய தொடர்புகளை போற்றுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் திராவிட ஆட்சியாளர்கள் இதுபோன்ற தமிழ் பண்பாட்டு சிறப்புகளை தேடுவதோ, அடையாளம் காண்பதோ, கொண்டாடுவதோ இல்லை என்பது வேதனையான விடயம் ஆகும்.

ஆதாரம்:

1. Siamese state ceremonies, by Horace Geoffrey Quaritch Wales, 1931

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, 1986 

3. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, 2001

http://arulgreen.blogspot.com/2016/11/Tamil-and-the-King-of-Thailand.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூ பூக்கும் ஓசை.....

சில மலர்களின் அணிவரிசை...  சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட பயணங்களில் எடுத்த பூக்களின் புகைப்படங்கள்....  இதோ உங்கள் ரசனைக்கு.... கூடவே படித்ததில் பிடித்த சில வாசகங்களும் உங்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

IMG_8632.JPG
 
ஒரு நண்பனை இழப்பதை விட ஒரு நகைச்சுவையை இழக்கலாம்!
 
IMG_8745.JPG


மனிதன் வீழ்வது தோல்வியல்ல.... வீழ்ந்த இடத்தில் நின்றுவிடுவதே தோல்வி....
 
IMG_8753.JPG
 
கடவுள் எவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ, அதை மனிதன் பிரித்து விடாமல் இருக்க வேண்டும்...
 
IMG_9117.JPG

கிரீடங்களை விட கனிந்த இதயங்கள் மேலானவை.
 
IMG_9118.JPG

இயற்கை, நேரம், பொறுமை – இவை மூன்று தான் மிகச் சிறந்த மருத்துவர்கள்......
 
IMG_9134.JPG

ஒரு நீண்ட வாழ்க்கை சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த வாழ்க்கை நீண்டு நிற்கக் கூடியது...
 
IMG_9422.JPG

மனித இதயத்திலேயே புனிதமான விஷயம் உண்மையாக இருப்பது தான்...
 
IMG_9634.JPG

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்..... மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்! 
 
IMG_9635.JPG

கடுமையாக உழைக்கும் ஒரு மனிதனின் தூக்கம் இனிமையானது.
 
IMG_9637.JPG

நல்லது என்பது ஒரே ஒரு விஷயம் தான் – அது அறிவு. கெட்டது என்பதும் ஒரே ஒரு விஷயம் தான் – அது அறியாமை!
 
 
நட்புடன்
 
வெங்கட்.
 
புது தில்லி.

 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
No automatic alt text available.
110px-Red_ribbon.png December 1 #WorldAidsDay

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்கை எய்தினார். ஆழ்ந்த இரங்கல்கள்

Image may contain: 1 person , eyeglasses and outdoor

15268077_10210626886364815_4463769964771639334_n.jpg?oh=d5d19def6d34285b3604e40f61b1d122&oe=58B4F5EC

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"E" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தாமல் ஆங்கில நாவல் எழுதியவர்....!

 

உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......



 
√ பேரரசர் கலிகுலா ஒரு தடவை உரோமன் கடல் தெய்வத்திற்கெதிராக[Poseidon - பொசிடொன்] போர்ப்பிரகடனம் செய்து, அம்புகள் மூலம் எழுந்தமானமாக தாக்குமாறு தமது போர்வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்.

 
√ உலகப் புகழ்பெற்ற டச்சு நாட்டினைச் சேர்ந்த சித்திரக்கலைஞர் வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது வாழ்நாளில் தன்னுடைய சித்திரங்களில் ஒன்றினையே விற்பனை செய்தாராம்.

 
Vincent-Van-Gogh-9515695-1-402.jpg
 
 
√ முதலாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் கண்டிப்பான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில், செல்வந்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தட்டையான தொப்பியினை அணியவேண்டும் என்பதே அந்த சட்டமாகும்.

 
 1714ம் ஆண்டு இங்கிலாந்து மன்னனாக முடிசூடிக்கொண்டவர் 1வது ஜோர்ஜ் ஆவார். ஆனால் இவரது மனைவி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக வரவேயில்லையாம். மகாராணியாக இருக்கவேண்டிய மனைவி 32ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாராம்.

 
√ மிகச்சிறந்த போர்வீரனாக விளங்கிய இங்கிலாந்தினைச் சேர்ந்த தளபதி அட்மிரல் நெல்சனின் உயரம் 1.6 மீற்றர்கள்தானாம், அதாவது 5 அடி 2 அங்குலம்.

 
√ ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட் அவர்கள் எழுதிய "கட்ஸ்வை" என்கின்ற ஆங்கில நாவல் 50000 சொற்களைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த நாவலில் "E"  என்கின்ற எழுத்து ஒரு தடவைகூட பயன்படுத்தவிலையாம்.

 
 √ உகண்டா நாட்டினை ஆட்சிசெய்த கொடுங்கோலன் சர்வாதிகாரி இடி   ஆமின், பதவிக்கு வரும்முன் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேவகனாக பணிபுரிந்தவனாம்.

 
Idi-Amin-Dada-9183487-1-402.jpg
 

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்

 

இன்குலாப்: மானுடம் பாடிய கவிஞன்


(டிச. 01, 2016, இன்று மரணித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப் அவர்களுக்கு இறுதி அஞ்சலி) 


மு.சிவகுருநாதன் 
 
%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%258D.jpg
 
 

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது”, 

(பேரா. அ.மார்க்ஸ் முகநூலில்…) 

“பொன்னேரி சிவந்ததடா - இருள்பொசுங்கும்
பொழுதொன்று விடிந்ததடா 
என்று குரல் எழுப்பிக் கொடிய அடக்குமுறை நிலவிய அவசரநிலைக் காலம் உட்பட ,வாழ்நாள் முழுவதும் சொந்த வாழ்க்கையைப் பெரிதாக எண்ணாமல்,பொதுவாழ்க்கையையே பெரிதும் நேசித்த புரட்சியாளர், சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர் தோழர் இன்குலாப்”, 

(பேரா. சே.கோச்சடை முகநூலில்…) 

“இன்குலாப் எழுதும் கவிதைகள், கவிதைகளே அல்ல என்று யாரோ ஒருவர் கூறிவிட்டாராம். போகட்டும். இன்குலாபே ஒரு கவிதைதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை போலும்”, 

(எஸ்.வி.ராஜதுரை, ‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை, விடியல் வெளியீடு, ஆகஸ்ட் 2012) 

       சில மாதங்களுக்குமுன்பு குடந்தையில் அ.மார்க்ஸ் உடனான சந்திப்பில் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராசேந்திரன் உடல்நலம் குறித்த பேச்சு வந்தது. ராசேந்திரனுக்கு ஒரு விழா எடுப்போம். அதற்கு இன்குலாப்பை அழைத்து வருவோம், என்றார் மார்க்ஸ். அவருடைய உடல்நலம் ஒத்துழைக்குமா என்ற சந்தேகத்தைச் சொன்னபோது, ராசேந்திரன் இன்குலாப் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர். இன்றும் அவரை வழிக்காட்டியாக எற்பவர். இதைவிட வேறு மகிழ்ச்சி அவருக்கு இருக்கமுடியாது, என்றும் சொன்னார். விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் இன்று இன்குலாப் நம்மிடம் இல்லை. 

     “மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, என்னும் புகழ்மிக்க பாடலை எழுதியவர் இன்குலாப். அதைப் பட்டி தொட்டியெல்லாம் கணிரென்று தனது குரலால் கொண்டு சேர்த்த பேரா.கே.ஏ.குணசேகரன் ஆகிய இருவரும் இன்று நம்மிடம் இல்லை. காலம் நம்மிடமிருந்து இவர்களைப் பிரித்துவிட்டது. ஆனால் இவர்களது படைப்புகள் என்றும் நிலைக்கும். அப்பாடலைக் கீழேத் தருகிறேன். 

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா 

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா 

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும் 

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது 

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க — டேய் 

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”, (இன்குலாப்) 

        “சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற்பெயரைக் கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை”, என்று பேரா. அ.மார்க்ஸ் முகநூல் பதிவில் குறிப்பிடுகிறார். 

      “தனது இரண்டு ஆண் மக்களின் படிப்பு குறித்தோ அவர்களது எதிர்காலம் குறித்தோ எந்த அக்கரையும் அவரால் எடுக்க முடியவில்லை. ஆண்மக்களில் ஒருவனுக்கு செல்வன் என்னும் இனிய தமிழ்ப் பெயரையும்ம் மற்றவனுக்கு ‘இன்குலாப்’ என்னும் புரட்சிப் பெயரையும் சூட்டிய அவர் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்த பிற பேராசிரியர்களைப் போலத் தனது சொந்தப் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரவில்லை. போதாதற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறந்த பெண் குழந்தை வேறு. கடன் தொல்லை. மாத ஊதியத்துடன் பிடிப்புகள் போக, சம்பள தினங்களில் வெறுங்கையுடன்தான் வீட்டுக்குத் திரும்புவார்.. எனினும் அவரது இல்லம் ‘திறந்த வீடாக’ இருந்தது. உடல் நோவும் மன வேதனையும் ஓர் புறமிருந்தாலும், வந்தவர்க்கெல்லாம் அருஞ்சுவை உணவு வழங்கி வந்த அவரது துணையாரின் ஈகைப்பண்பு பாடலுக்குரியது”, என்று எஸ்.வி.ராஜதுரை பதிவு செய்கிறார். (‘’சாட்சி சொல்ல ஒரு மரம்’ தொகுப்பிலுள்ள ‘இன்குலாப் என்னும் மோகனப் புன்னகை’ கட்டுரை) 

       இசை மற்றும் நல்லத் திரைப்படங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு, ஜானிகான்கான் தெருவின் இரைச்சல், அழுக்குக்கும் இடையில் அவரிடம் வலுப்பெற்ற சூழலியல் அக்கறை, ஜன்னலுக்கு வெளியிருந்த அசோக மரம், அதில் இருக்கும் பறவைகள், அம்மரம் வெட்டப்பட்டபோது அவருடைய மனவேதனையை வெளிப்படுத்திய ‘சாளரம்’ இதழில் எழுதிய கவிதை ஆகியவற்றை எஸ்.வி.ஆர். பெருமை பொங்க வெளிப்படுத்துகிறார். அறுபதாம் வயதில் அற்புதமான நாடகாசிரியராக மலர்ந்ததையும் குறிப்பிடுகிறார். (மேலே குறிப்பிட்ட அதே நூல்.) 

      “என்னுடைய முதல் நூல் 'எதுகவிதை' யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரை நான் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள் பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 

     அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்” என்று அ.மார்க்ஸ் தனது முகநூல் அஞ்சலிப் பதிவில் எழுதுகிறார். 

      இன்குலாப்பின் ‘ஶ்ரீ இராஜராஜேச்வரியம்’ கவிதைக்காக தூற்றப்பட்டது, அவரது கவிதை பாடநூல்களிலிருந்து நீக்கப்பட்டது, இராஜராஜனுக்கு மு.கருணாநிதி சிலையெடுத்த நிகழ்வில் அக்கவிதையை உ.ராசேந்திரனுடன் விநியோகித்தது, போலீசின் கைகளில் சிக்காமல் சைக்களில் தப்பிவந்தது ஆகியவற்றை அ.மார்க்ஸ் தனது தீராநதிக் கட்டுரையில் விரிவாக எழுதியிருப்பார். (அ.மார்க்ஸ், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, ஜூன் 2016) 

      நக்சலியத்தின் குறுங்குழு ஒன்றில் செயல்பட்டாலும் மானுடம் பாடிய கவிஞன் இன்குலாப். இலக்கிய வடிவங்களை மக்களுக்காக பயன்படுத்திய மகத்தான கலைஞன். தமிழ் தேசியத்தை இறுதியில் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். 

      “தமிழகத்திலிருந்த ஒட்டுமொத்த நக்சலைட் இயக்கத்தை எடுத்துக் கொண்டால், புரட்சிக்கனல் வீசும் கவிதைகளை, சமூக மாற்றத்துக்கான உள் உந்துதல் தரும் கவிதைகளை எழுதுவதில் ஈடிணையற்றவராக இருந்த ஒரே கவிஞர் இன்குலாப்தான்”, என்று எஸ்.வி.ஆர். சொல்வது மிகப்பொருத்தமானது. 

      எஸ்.வி.ஆர். மேலும் சொல்கிறார். “சாதி ஒழிப்பை, தலித் மக்களின் உரிமையை, விடுதலையைத் தனது திட்டத்தின் மையப் பகுதியாகக் கொள்ளாத எந்தப் புரட்சிகர இயக்கத்தாலும் இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க முடியாது என்னும் கருத்தை எனக்குத் தெரிய 1980 களிலிருந்தே சொல்லி வந்தவர்”. 

      இன்குலாப்பிற்கு செவ்வணக்கம். 

     அஞ்சலியாக அவரது கவிதை வரிகள் சில. 



“கடந்த ஆயிரம் ஆண்டுகளை 

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது 

மகுடங்கள் துருப்பிடித்திருக்கலாம் 

உறைவாள்கள் முனை முறிந்திருக்கலாம் 

சபைத் தலைவர்களைத் திருவுளத் தேர்வுசெய்யும் 

குடங்கள் ஓவாய் உடைந்திருக்கலாம் 

ஓலைகளைச் செல்லரித்திருக்கலாம் 

தஞ்சையிலிருந்து காந்தளூர் செல்லும் 

சாலைகளில் குளம்பொலிகள் கேட்காதிருக்கலாம். 

அலைமோதும் துறைதோறும் 

புலிக்கொடிகள் புரளாதிருக்கலாம் 

இருந்தாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளை 

அப்படி ஒன்றும் கைகழுவ முடியாது. 

……………………………………………………………………………………………….. 

ஆயிரம் ஆண்டுகள் ஒடுங்கிக் கிடந்த 

பெருமூச்சும் கண்ணீரும் என்னுள் பீறிடுகின்றன. 

ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின் 

காலில் கட்டிய சதங்கை 

இந்தப் பெரிய கோயில் முற்றத்தில் 

அழுது கொண்டிருக்கிறது இன்னும் 

இதனுடைய ஒவ்வொரு கல்லிலும் 

என் சகோதரர் தசைகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. 

வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும் 

நான் கூசி நிற்கிறேன். 

அடிமைச்சூடு பொறிக்கப்பட்ட 

என் முதுகுப் புண் இன்னும் ஆறவில்லை 

இதன் விழிகொள்ளாப் பிரும்மாண்டத்தின் கீழ் 

சிறிய தேசங்கள் சிதறிக் கிடக்கின்றன. 

…………………………………………………………………………………………………………….. 

அடக்கப்படும் நமது பெருமூச்சு 

பற்றி கொள்ளட்டும் 

தேவடியாளாக்கப்பட்ட நம் தாய்மார்களின் 

ஒவ்வொரு மார்பகமும் பந்தங்களாய் மூளட்டும் 

மகுடங்களின் மாயையில் மக்களை மூடும் 

சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் 

சாம்பலாகட்டும் உண்மைச் சரித்திர விழிப்பில் 

சொல்வோம் ஆயிரம் ஆண்டுகளாக 

அழுகை மொழி மாற்றிக் கொண்டதில்லை. 

ஆத்திரமும் கூடத்தான் 

தண்ணீர் நிறம் மாற்றிக் கொண்டதில்லை; 

ரத்தமும் கூடத்தான்” - கவிஞர் இன்குலாப் 

(இக்கவிதை அ.மார்க்ஸின் ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு, நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)


நன்றி: அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆர்., சே.கோச்சடை. 

வாசித்ததிலிருந்து........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பார்க்க வழியில்லை பார்வைகள் போச்சு” அனுராதா சிறிராம் பாடிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்...

சுவிற்சலாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரின் வரிகளில், ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உணர்வுகளை உருக்கும் வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி அனுராதா சிறிராம் அவர்களினால் முள்ளிவாய்க்காலில் இறக்கப்பட்ட எம்மவர்களுக்காக ” பார்க்க வழியில்லை பார்வைகள் போச்சு, கேட்க வழியில்லை கேள்விகள் இல்லை “ எனும் அருமையான பாடல் வெளிவந்துள்ளது.

 
 

  •  
 
 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த இந்தியக் கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதிய ஈழப்பாடல்கள் குறித்த சிறு பார்வை

வாலை ஆட்டாதே இந்திய அரசே
வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே

‘தமிழீழ எழுச்சிப் பாடல்கள்’ இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய ‘கானம் ரத்த கானம்’ எனும் பாடலின் வரிகள் அவை. ஒரு இந்தியக்குடிமகன் ஈழப்போராட்டத்தை எவ்விதம் நேசித்தான் என்பதற்கு இதனிலும் சான்று தேவையோ? அந்தப் பாடலின் முதற் பல்லவியில் கவிஞர் இன்குலாப் அவர்கள் இப்படிச் சொல்கிறார்.

ஈழத்தில் இருந்து நீளும் கரங்களை
தோழமை கொள்வதெம் பிறப்புரிமை
கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் அடங்கும்
பாழும் கழுகுக்கு பாசமா புரியும்

இந்தியப்படையினர் ஈழத்தில் கால்பதித்த காலம் உலாவந்த பாடலிது. இந்தப் பாடல் ஒரு காலத்தில் கேட்கும்போதேல்லாம் திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் பாடலாக இருந்தது. இன்குலாப் எனும் பெயருக்கு 'புரட்சி' என்பதே அரத்தமாகும். இன்குலாப் அவர்களது இயற்பெயர் சாகுல் ஹமீது என்பதாகும். தன் வாழ்வின் இறுதிவரைக்கும் ஈழத்தமிழர்களை நேசித்த நெஞ்சம் அவருடையது.

இன்குலாப் அவர்கள் எழுதிய இந்த வரிகள் போருணர்வின் வெளிப்படையாய் அமைந்தது.

போர் விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பலெம் அலைக்கு மேலேனில்
கடலே எதிரிக்கு சமாதி

மேலே சொல்லிய பாடல் தமிழகப் பிரபல பாடகர் மனோ பாடியது. 

‘எழு கடல்களும் பாடட்டும் 
இன்னும் எட்டாத வானம் கேட்கட்டும்’ எனும் பாடலின் வரிகள் அவை.
அப்பாடலின் முதற்சரனத்தில் இன்குலாப் அவர்கள் இப்படி வரைகின்றார்.

ஆயிரம் பறவைகள் எங்கள்
கானக மரங்களில் கூடு கட்டலாம்
அலைகள் உலக சமத்துவம் பாடி
எங்கள் கரைகளில் முட்டலாம்
போர் விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பலெம் அலைக்கு மேலேனில்
கடலே எதிரிக்கு சமாதி

இந்தப் பாடல்கள் எல்லாம் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் அதிகமாக பேசப்பட்ட பாடல்கள் ஆகும். இந்திய தேசத்தினை மையமாக்கி ஈழ விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இந்தியக் கவிஞர்களினால் போற்றப்பட்டு பாடப்பட்டது. சில முரண்பாட்டுச் சிக்கல்கள் இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் தோன்றிய பின்னரும், சில துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னரும் தமிழகக் கவிஞர்கள் புலிகளின் போராட்டத்தை தொடராதரவுக்கு உட்படுத்தினர். அவர்களில் இன்குலாப் அவர்களும் தவிர்க்கப்பட முடியாதவர். முள்ளிவாய்க்கால் அவலங்கள் பதிவாக்குவது வரைக்கும் இவரின் கவிதைகள் நீண்டு வந்தது.
இது இன்குலாப் அவர்கள் ‘கானம் ரத்த கானம்' பாடலில் எழுதிய வரிகள்..

ஈழம் வெல்வது புலிகளின் உரிமை
ஏற்றுக்கொள்வது எங்களின் கடமை

புரட்சி

Image may contain: 1 person , sunglasses, eyeglasses and closeup
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்பவர்களுக்கு நன்றி.யாயினி என்னாச்சும் புலம்பி வைச்சு இருக்கும். நமக்கேன் சோலி என்று விட்டு சென்றால் அதற்கும் நன்றி என்பதை விட வேறை ஒன்றும் சொல்லத் தோன்ற இல்லை.......????Thank you for your suport????

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கவிஞர்  இன்குலாப் அவர்களின்  .....  ஈழப்பாடல்கள் பற்றிய பார்வைக் குறிப்பை..
ஒரே கட்டுரையில்... அறியத் தந்தமைக்கு நன்றி யாயினி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

????இனிய சனி காலை வணக்கங்கள்....????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்..:)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாம் இன்றைய நாளில் நான் முன்பு எழுதிய ஒரு கவிதைப் பதிவு இது
முறிந்தது 
முள்ளந்தண்டு 
மட்டும்தானே 
என் உள்ளமில்லையே 
உடல்தானே 
உணர்வற்றுக்கிடக்கிறது 
என் உணர்வுகளில்லையே 
குருதி என்னுள் 
உறையும்போதும் 
உறுதி என்னுள் நிலைத்திருக்கும் 
நான் ஊனமில்லை என்றுணர்த்த 
#மன்னார் பெனில்#

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோலண்ட் ஹில்:
(Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.

ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார்.

இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது.

எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது. தபாலதிபர் நாயகமாக (Postamaster general ) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது.

குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

Image may contain: one or more people

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

Luksimi-Sivaneswaralingam-1கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் முதல் தடவையாக முழுப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்ற செய்தி அறிந்திருப்பீர்கள்.

இந்தப் பெருமையைப் பெறுபவர் ரொறன்ரோவில் பிறந்து வளர்ந்த கனடிய தமிழ் பாடகியான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

இந்தப் பாடல் ஒலிபதிவு குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களை வலைத்தளம் ஊடாக இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தன.  ஒருவகையில் இந்தச் செய்தியை கனடியத் தமிழர்கள் மாத்திரமல்லாது புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழர்களும் ஒரு கொண்டாட்டமாகவே எடுத்துக் கொண்டனர்.

 

தமிழகத்தின் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளும் அதன் மூலம் வெளிவரும் புதிய குரல்கள் பின்னணிப் பாடகர்களாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் நிகழ்வுகளும் நாளாந்தம் எங்கள் வரவேற்பறைவரை வந்து ‌சேதி சொல்லும் காலம் இது. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை அண்மைக் காலத்தில் இவ்வாறான புதிய திறமைகளுக்கு சந்தர்ப்பம்        வ‌ழங்கும் இசையமைப்பாளர்களில் டி.இமான் பிரதானமானவர்.

 

ஆனாலும் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்திற்கு கிடைத்த இந்தப் பாடலுக்கான சந்தர்ப்பம் பாடல் போட்டி நிகழ்ச்சி மூலம் கிடைத்ததல்ல. பல்வேறு வகையிலான(genres) இசைத் தி‌றமைகளை வெளிப்படுத்தும் பாடல்களை youtube  மற்றும் instagram ஊடக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டவர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். அவ்வாறானதொரு பாடல் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் கனடாவில் தனது இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த இசையமைப்பாளர் டி.இமானை சந்திக்கச் சென்ற‌போது லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தை அடையாளம் கண்டு அவர் பகிர்ந்துகொள்ளும் பாடல்களை தான் ஏற்கனவே கேட்டிருப்பதாகவும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்  டி.இமான். தனது கனடியப் பயணத்தின் முடிவில் வெவ்வேறு வகையிலான(genres) குரல் பதிவுகளை தனக்கு அனுப்பி வைக்குமாறும் தகுந்த சந்தர்ப்பத்தில் தொடர்புகொள்வதாகவும் உறுதி வழங்கியிருந்தார்.

 

Luksimi-Sivaneswaralingamஇக் கட்டுரை கடந்த ஓகஸ்ட் மாதம் இகுருவி பத்திரிகையில் வெளிவந்தது

 

ஆனாலும் அந்தச் சந்தர்ப்பம் விரைவில் கை கூடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். திடீரென வந்தது அந்த அழைப்பு. 13 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீற்றர் தாண்டிய விமானப் பயணத்தின் பின்னர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரலில் இமானின் புதிய மெட்டு ஒலிப்பதிவானது.

இயக்குனர் லக்ஷ்மணின் இயக்கத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா தயாரிக்க ஜெயம் ரவி, ஹன்சிக்கா  மற்றும் அரவிந் சுவாமி இணைந்து நடிக்கும் “போகன்” என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடல் சென்னையில் ஒலிப்பதிவாகியுள்ளது. பிரபலமான பாடலாசிரியர் தாமரை  இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் ‌செய்தியாகும். லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் இசையமைப்பாளர் இமானுக்காக பாடியுள்ள இந்தப் பாடல் ஒரு பெண் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு (romantic solo) தனிப்பாடலாகும். இதன் மூலம் இசையமைப்பாளர் இமானுக்காக இலங்கைத் தமிழர் ஒருவர் முழுமையான தனிப்பாடல் ஒன்றை முதல் தடவையாக பாடியுள்ள அங்கீகாரத்தை லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பெறுகின்றார்.

கனடாவின் பல மெல்லிசை மேடைகளில் நீங்கள் கண்ட ஒரு இளம் பாடகிதான் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இசை இவருக்கு புதிதல்ல. தனது நான்கு வயது முதல் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்ற லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் western classical துறையில் தனது  இளங்கலை பட்டத்தைப் பெற்றவர். தற்போது Wilfred Laurier பல்கலைக்கழகத்தில் இசை கற்பிப்பதற்கான முதுகலைக் கல்வியை தொடர்கின்றார்.  இதுதவிர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் கர்நாடக சங்கீதத்தில் பட்டம் பெற்றவர்.

சிறு வயது முதல் மெல்லிசைப் பாடல்களை பாட ஆரம்பித்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞராவார். பரதநாட்டியத்தை கற்பிப்பதுடன் வீணை மற்றும் பியாணோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் சிறப்பாக கையாளும் திறமை கொண்டவர் இவர்.

கனடாவின் TVI தொலைக்காட்சியின் இரண்டாவது வருட SuperStar பாடல் போட்டி நிகழ்ச்சியில் முதல் ஜந்து போட்டியாளர்களில் ஒருவராக தெரிவான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அதே SuperStar போட்டி நிகழ்ச்சியில் நான்காவது வருடத்தில் போட்டியாளர்களுக்கான குரல் பயிற்சியாளராக கடமையாற்றியவர். IBC வானொலி நடத்திய இன்னிசைக் குரல் நிகழ்ச்சியில் கனடாவில் வெற்றிபெற்று பின்னர் உலகளாவிய ரீதியில் எட்டு நாடுகளைக் கொண்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றவர். கனடாவில் நடைபெற்ற கானக்குயில், இசைக்குயில் மற்றும் CMR வானொலியின் Star Search போட்டிகளிலும் கலந்துகொண்ட லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவற்றிலும் வெற்றிகளை தனதாக்கியவர்.

ஏற்கனவே பல்வேறு பாடல்கள் இவரது குரலில் பதிவாகியுள்ளன. ரமேஸ் மகாலிங்கம், அஜித், கபிலேஸ்வர்  மற்றும் Steve Cliffe அகியோர் உட்பட பலரது இசையில் பாடிய அனுபவம் உள்ளவர்  லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இதுதவிர மாவீரர் தினத்திற்காக கனடாவில் வெளியான இரண்டு இசைத்தட்டுக்களிலும் பாடியுள்ளார்.  இதுபோன்ற ஒளிப்பதிவுகள் , மேடை நிகழ்ச்சிகளில் தான் பாடிய அனுபவங்கள், மற்றும் இசைச்துறையில் தனது கல்வி உட்பட தனக்கு இசை கற்பித்த ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர் ஆதரவு தற்போது தென்னி ந்திய திரைப்படத்தில் பாடும் சந்தர்ப்பத்தையும் அதற்கான நம்பிக்கையை தந்துள்ளதை எங்களுடனான உரையாடலில் சுட்டிக்காட்டினார் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பாடிய பாடல் உட்பட ”போகன்” திரைப்படப் பாடல்கள் உலகளாவிய ரீதியில் செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வாழ்த்துக்கள் லக்ஷ்மி

உங்கள் குரல் தென்னிந்தியத் திரையெங்கிலும் ஒலிக்கட்டும்.

இது ஒரு ஆரம்பமே!

http://ekuruvi.com/luksimi-sivaneswaralingam-2/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்இரண்டு வகையான தோல்விகள் உண்டு. முதல் தோல்வி பயம் காரணமாக ஒரு செயலை செய்யாமலே ,எங்கே செய்தால் தோல்வி வந்து விடுமோ, என்று பயந்து நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும் மக்கள் சந்திக்கும் தோல்வி.

இரண்டாவது தோல்வி, துணிவுடன் ஒரு செயலை செய்து அந்த செயல் கொடுத்த தோல்வி. இந்த வகை தோல்வியில் நீங்கள் கற்றது அதிகம் இருக்கும் , அடுத்தடுத்த முறை தவறு செய்து தோல்வியில் முடிந்தாலும், திரும்ப முயற்சி செய்ய தெம்பு வரும்.

இதே "முயற்சி திருவினையாக்கும்" என்ற சொற்பதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமீழ மண்ணிற்காக தன் உயிரை கொடூத்த முதல் பெண் மாவீரர் மாலதியின் தற்தையார்..

.கண்ணீர் அஞ்சலிகள் அய்யா!

 
செ.கு.பாலசந்தர் தம்பி பாலு's photo.
செ.கு.பாலசந்தர் தம்பி பாலு's photo.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பனி விழும் மலர் வனம்...2744.png❄️2744.png❄️2744.png❄️??❄️??

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.