Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லி வல்லி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'கல்லி வல்லி' என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடியபோது கிட்டிய சுவாரசியமான வலைப்பதிவு கீழே.. :):rolleyes:

 

கல்லி வல்லி..!

 

உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கிய பாடியா, ஒரு சிந்தி. துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும், குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபை (Diera Dubai)யிலும் கராமா (Karama)விலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர் கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.

உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன் சிலர் "செலவு எவ்வளவு ஆகும்?" என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொலைக்காட்சி பெட்டி வேண்டும் என்றார். எல்லாம் பேசி முடித்து ஒத்துக் கொண்டபின் அவர் போய் விட்டார். அந்த தொலைக்காட்சிப் பெட்டியில் LOT(Line Output Transformer) என்ற சாதனம் பழுதாகி இருந்தது. அந்த உதிரிப் பாகம் அவர்களிடம் இல்லாததால் வெளியிலிருந்து வாங்கிவர நேரிட்டது. சற்று விலை கூடுதலான உதிரிப் பாகமும் கூட.

உமரின் பணியகம், மதியம் 1 லிருந்து 4 மணிவரை உணவருந்துவதற்காக மூடப்பட்டிருக்கும். உமர் மதிய உணவிற்குச் சென்றுவிட்டார். சில பணியாளர்கள் பணிமனையிலேயே உணவருந்திவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

உமர் வழக்கம்போல் மதிய இடைவேளைக்குப் பின் அலுவலகம் திரும்பினார். அலுவலக கட்டிடத்தை நெருங்கும்போது சாலையில் தொலைக்காட்சி பெட்டியொன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். சற்று உற்றுப் பார்த்தபோதுதான் 'அவசரமாக வேண்டும்' என்று கொடுத்துவிட்டுப் போன அதே தொலைக் காட்சிப் பெட்டி என்று தெரிந்தது. உமருக்கு ஒன்றும் புரியவில்லை. அலுவலகத்தினுள் சென்றவுடன் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட்ட நபர் தலை கலைந்தவராக வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார். என்னவென்று வினவியபோது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சுமார் இரண்டரை மணியளவில் அந்த தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் வந்திருக்கிறார். வெளிக் கதவு சாத்தப் பட்டிருக்கவே அதைத் திறக்கும்படிக் கூறி, தன்னுடைய தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்வதற்காக வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டியை செப்பனிட்ட ஊழியர், அது செப்பனிடப்பட்டுவிட்டதாகவும், நான்கு மணிக்கு மீண்டும் பணியகம் திறக்கும்போது வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். தொலைக் காட்சிப் பெட்டியைக் கொடுத்த அந்த நபர் தாம் வீட்டிற்குப் போகும் வழியில் தொலைக் காட்சிப் பெட்டியைப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த ஊழியர், அது 'மதிய உணவு இடைவேளை' என்றும் மேலும் பொறுப்பாளர் 4 மணிக்குத் திரும்புவார் என்றும் அந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாகியிருக்கிறதென்ற விபரம் தனக்குத் தெரியாததால் 4 மணிக்கு வரும்படியும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த நபர் தான் இல்லம் போய்த் திரும்ப நேரம் பிடிக்கும் என்றும் தன்னிடம் தற்போது பணம் இல்லாததையும், வீட்டிலிருந்துதான் எடுத்துவர வேண்டும் என்றும் தொலைக் காட்சிப் பெட்டியைத் தரும்படியும் கூறியிருக்கிறார். ஊழியர் மறுக்கவே வாய்ச் சண்டை முற்றி, இறுதியில் அந்த நபர் ஊழியரின் கழுத்தைப் பிடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் அந்த தொலைக் காட்சிப் பெட்டியை வெளியே எடுத்து வந்து சாலையில் எறிந்து விட்டார்.

 

 

  Arab_l_tnb.png               TV%2BBroken.jpg

 

 

தொலைக் காட்சிப் பெட்டியை செப்பனிட்ட அந்த ஊழியர் பம்பாய்காரர். நேரே 'பர்துபை' காவல் நிலையம் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். விபரங்களைக் கூறி, தன் கழுத்தில் ஏற்பட்ட நகக் காயங்களையும் காட்டியிருக்கிறார். அந்த நபரை விசாரிப்பதாக் கூறி ஊழியரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மருத்துவ மனையிலிருந்து அந்த ஊழியர் திரும்பி வந்திருந்தபோதுதான் உமர் அலுவலகம் திரும்பியிருக்கிறார். பெரிய காயங்கள் ஏதுமில்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

சுமார் ஐந்து மணியிருக்கும். ஒரு போலீஸ்காரர் அலுவலகத்தினுள் நுழைவதைக் கண்ட உமருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதுதான் அந்த வாடிக்கையாளர், துபை போலீஸ்காரர் என்று உமருக்கு தெரிய வந்தது. 'போலீஸ்காரர் சமாச்சாரம்தான் நமக்குத் தெரியுமே. அவர்களுடைய பொல்லாப்பு, சங்லிப்பின்னல் மாதிரி போகுமே. ஏன் இந்த ஊழியர் இந்தச் வம்பை வாங்கிக் கட்டிக்கொண்டாரோ? பேசாமல் தொலைக் காட்சிப் பெட்டியை அவரிடம் தந்திருக்கலாமே' என்று உமர் எண்ணினார்.

அவர் உமரை நெருங்கி "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். உமரும் பதிலளித்தார். உமரிடம் அந்த தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வளவு செலவாயிற்று என்றார். 350 திர்ஹம் என்றார். பணப் பையை திறந்து பணத்தைத் தந்துவிட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. நான் ஏதோ ஒரு மன நிலையில் அப்படி நடந்து கொண்டேன். என் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்க மாலையில் டி.வி. வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்படி நான் நடந்து கொள்ள வேண்டியதாயிற்று" என்று சொல்லிவிட்டு, அந்தப் பணியாளரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். உமர், "சார் உங்கள் டி. வி.?" என்று வினவியபோது "கல்லி வல்லி (விட்டுத் தொலை)" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் உமர் அறிய வந்த செய்திகள் உமரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அந்த ஊழியர் மேலதிகாரியிடம் புகார் செய்த பின்னர் பணியிலிருந்து திரும்பிய அந்த போலீஸ்காரரை அந்த அதிகாரி மீண்டும் வரவழைத்து அவரைக் கடிந்துகொண்டு உடனே தொலைக் காட்சிப் பெட்டியைச் செப்பனிட ஆகும் தொகையை செலுத்திவிடுமாறு கூறியிருக்கிறார். இவைகளை கேள்வியுற்ற உமர் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார். நம் நாட்டில் போலீஸ்காரர்களை வேறு விதமாகவே பார்த்துப் பழகிய உமருக்கு அது ஒரு புது அனுபவமாகவே இருந்தது.

முதலாளி விசுவாசத்தோடும், துணிச்சலோடும் நடந்துகொண்ட அந்த இந்தியரையும், மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்ட அந்தப் போலீஸ்காரரையும் நாம் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும்.

 

மனிதம் மாய்ந்துவிடவில்லை!

 

நன்றி:தென்றல் வலைப்பூ

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியிலும் கல்லி வல்லி என்னும் சொல் சர்வ சாதாரணமாய் பாவிப்பதுண்டு. பறவாயில்லை எனும் அர்த்தத்தில். வீதிகளில் வாகனங்களில் பிரச்சனையாய் நிக்கும் நேரங்களில் போலிசார் உதவிகள் செய்வார்கள். குற்றவாளியாய்க் காணும் பட்சத்தில் அவர்களை அந்நியனாய்ப் பார்க்கலாம்...!  :)

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சுவி.

 

இந்த கல்லி வல்லி வார்தையை தினந்தோறும் இங்கே கேட்பதால், தமிழகம் சென்றாலும் சில நேரத்தில் உரையாடலின் போது எம்மை அறியாமல், "கல்லி வல்லி"  "இன்ஸா அல்லா" போன்ற வார்த்தைகள் தெறித்து விழுவதுண்டு. மற்றவர்கள் விநோதமாக நோக்குகையில் நமக்கு சங்கடமாக இருக்கும்.

அதே மாதிரி பர்ஸ்ஸில் இரு நாட்டு கரன்ஸிகளும் வைத்திருப்பதால் கடைகளில் கரன்ஸியை மாற்றிக் கொடுத்து திரும்பப் பெற்றதும் உண்டு.

 

சாலை போக்குவரத்தும் அப்படியே... வாகனங்கள் இங்கே இடது கை பக்கம், தமிழகத்திலோ வலது கை பக்கம்..

 

பழக்க தோஷத்தால் அதிகாலை 4.30 மணிக்கே முழிப்பு தட்டிவிடும்(ஏனெனில் இங்கே காலை ஆறு மணிக்கே பாலைவனம் சென்றால்தான் வெயில் சுட்டெரிக்கு முன் திட்டப்பகுதிகளை பார்வையிட்டு அலுவலகம் திரும்ப இயலும்)

மொத்தத்தில் ஊர் சென்றால் செட்டாகி நிதானத்திற்கு வர இரு நாட்களாவது ஆகும். :)

மற்ற புலம் பெயர் ஆட்கள், தங்கள் தாயகத்திற்கு சென்றால் எப்படி? :o

 

எம்மைப் போன்றேதானா?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தாயகத்துக்குச் சென்றால்... வழக்கமான நிலைக்கு உடல் திரும்ப 2,3 நாட்களாவது எடுக்கும்.

 

முன்பு ஊரில் இருக்கும் போது நுளம்புகள் அதிகமாக இருந்ததாக தெரியவில்லை. இப்போ உள்ள நுளம்புகள், பெரிய உருவமாகவும், கடித்தால் பெரிதாக தடித்து விடுவதால்... அநேக இரவு தூக்கம் இல்லாமல் கழியும்.

 

தபால் கந்தோர் போன்றவற்றில்... நாம் வரிசையில் நிற்கும் போது...  வரிசையை குழப்பி, இடையில் வந்து பூருகின்றவர்களை கண்டால்... தூக்கிப் போட்டு, மிதிக்க வேணும் போல் இருக்கும்.

 

வாகனத்தில்... என்ன இழவுக்கு, நெடுக ஹோர்ன் அடிக்கிறாங்கள் என்று ஆத்திரமாக வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒவ்வொரு 20 கி. மீ  க்கு ஒருக்கால் ஹோர்ன் அடித்துக் கொள்வேன். அப்பதான் அது வழியில் எங்காவது கழன்டு விழுந்தால் தேடி எடுப்பது சுலபம்....! :lol:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒவ்வொரு 20 கி. மீ  க்கு ஒருக்கால் ஹோர்ன் அடித்துக் கொள்வேன். அப்பதான் அது வழியில் எங்காவது கழன்டு விழுந்தால் தேடி எடுப்பது சுலபம்....! :lol:  :)

 

நான் என்னமோ ஏதோவென நினைத்துவிட்டேன்.. :o  ரொம்ப சாக்கிரதைதான்..! :lol: :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.