Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

Featured Replies

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்தனர் கன்னட மக்கள் !

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும்.

இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரையை இந்தி வெறியர்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றனர் . இது தமிழர்களிடம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களிடமும் இவ்வாறான மிரட்டல் பரப்புரையை செய்து வருகின்றனர் இந்தி ஆதரவாளர்கள். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் மட்டுமே உள்ளனர் , மற்றவர்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்தித் திணிப்புக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தேசிய இன மக்கள் போராடி வருகின்றனர். இதை திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய ஊடகங்கள்.

பெங்களூரில் இந்தித் திணிப்பை கைவிடுமாறு வலியுறித்தியும், அனைத்து தேசிய மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான சம உரிமையை வழங்க வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியுறித்தியும் ஆயிரக்கணக்கான கன்னட மக்கள் பேரணியாக சென்றுள்ளனர். கன்னட பாதுகாப்பு இயக்கம் இந்த பேரணியை ஒழுங்கு செய்துள்ளது. இவர்கள் பேரணியாக சென்று கர்நாடகா ஆளுநரிடம் இந்தித் திணிப்பை இந்திய அரசு கைவிட வேண்டும் என்பதற்கு மனு கொடுத்துள்ளனர். இந்தியாவில் அனைத்து மனிதர்களும் சமம் என்றால் அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப் பட வேண்டும் போன்ற முழக்கங்களை முன்வைத்து இப்பேரணி நடைபெற்றது.

இப்படியான பேரணிகள், போராட்டங்கள் பெருந்திரள் மக்கள் போராட்டமாக இந்தியாவெங்கும் நடைபெற வேண்டும் . அப்போது தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகள் இந்தியின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றப்படும். வெல்லட்டும் மக்கள் போராட்டம். ஒழியட்டும் இந்தியின் ஆதிக்கம் !

இராஜ்குமார் பழனிசாமி

(Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=928906127124238&id=100000145796525&ref=bookmark)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

.... இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும்.

இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரையை இந்தி வெறியர்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றனர் . இது தமிழர்களிடம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களிடமும் இவ்வாறான மிரட்டல் பரப்புரையை செய்து வருகின்றனர் இந்தி ஆதரவாளர்கள். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் மட்டுமே உள்ளனர் , மற்றவர்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்தித் திணிப்புக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தேசிய இன மக்கள் போராடி வருகின்றனர். இதை திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய ஊடகங்கள்....

(Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=928906127124238&id=100000145796525&ref=bookmark)

 

இது உண்மைதான்.

 

இந்தியும் அதன் கிளை மொழிகள் பேசுவோர் அனைவரையும் சேர்த்து 40 விழுக்காடு கூட தாண்டாத ஒரு அந்நிய மொழியை மீதமுள்ள 60 விழுக்காடுகளுக்கும் மேலுள்ள மற்ற மொழி பேசும் மக்கள் ஏன் கற்க வேண்டும்? :o:wub:

 

இந்தியா என்ற செயற்கை கட்டமைப்பை இணைப்பது மொழியல்ல, மதம் சார்ந்த ஒரு பாதுகாப்பு உணர்வுதான். எப்பொழுது தம்மால் தனித்து நிலைக்க முடியும் என்ற நிலையோ, இரண்டாம் குடிமக்களாக வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலை வந்தால் அந்த கட்டமைப்பு உடைந்துவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறிவிட்டுது நவீண இலத்திரணியல் ஊடகங்களின் தாக்கம் மக்களை விழிப்புனர்வு நிலைக்கு இட்டு சென்றுள்ளது.சமீபத்தில் சதுரங்கவேட்டை சினிமாவில் பாம்புக்கு காது கேட்காதென்ற விடயம் சொல்லப்படும் முறை ஒரு உதாரணம். இவற்றை விடுங்க ரயிலே வராத தண்டவாளத்தில் படுத்து தலீவரு மக்களை ஏமாற்றி அரசியல் தற்போது கல்லெறி வேண்டும். ஆக மொத்தத்தில்  இந்தி வெறியர்கள் ஒரு குஜராத்தியின் ஆளுமையில் தென்மாநிலங்களில் குளிர்காய நினைப்பது படுமுட்டாள்தனமானது.தற்போதைய காலகட்டத்தில் மாநிலங்கள் தாண்டி இந்தி எதிர்புணர்வு அரசியல் கொழுந்துவிட்டெரியும் சூழலே காணப்படுகிறது.

  • தொடங்கியவர்

படங்கள்

 

10670277_928905703790947_201159805889259

 

10689603_928905730457611_703724289893429

 

10492577_928905750457609_827365927614946

 

995080_928905697124281_77101705209164955

 

10678473_928905627124288_744635291374803

 

10626615_928905690457615_661944984453324

 

10646907_928905693790948_124478525715735

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க

வெல்க

(தோளில் நமது துண்டை  போட்டிருக்கிறார்கள் :icon_idea: )

நல்லதொரு நிகழ்வு...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.