Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை

Featured Replies

சின்னக்குட்டி

உங்கள் நம்பிக்கை வீணாகிவிட்டது. 75டொலர் கட்டி நன்றாக இரசித்துவிட்டுத்தான் அவரின் ஊருக்கு உபதேசம்.

:):lol::lol::lol::lol:

  • Replies 65
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீங்க

:lol::lol:

ஈழவன் என்ன பெருமையோ ஜயோ எவ்வளவு பெருமை பட வேன்டிய விசயம் இருக்கிறது

1அவர் ஒருதெற்காசியன்

2பாரத புதல்வன்

3தென் இந்தியன்

4தமிழன்(சிலர் மலையாலம் என்று சொல்லுவார்கள் அப்படி சொல்லுபவர்கள் இனவெறியர்கள்)

5ஒரு தமிழன் ஒபராகவுசில் தமிழ் பாட்டுடன் கிந்திபாட்டு பாரதமொழி பாட்டு எல்லாம் பாடுகிறார் என்றால் அவர் ஒரு லேசு பட்டவர் இல்லை அவரை பாராட்டினது ஈழதமிழனின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபட வேண்டிய விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

கள அன்புகளே ஜேசுதாசின் நிகழ்ச்சியை ஏன் தமிழ் விரோத நிகழ்வாக்க ஒரு சிலர் முயலுகிறீர்கள். கலைஞன், விளையாட்டு வீரன் யாராக இருந்தாலும் (சிங்கள இனத்தை சேர்ந்திருந்தாலும்) அவர்களின் திறமைகளை பாராட்டுவதில், பெருமைப்படுவதில் பிழை எதுவுமிருப்பதாக எனக்கு தெரியவில்லை.

  • தொடங்கியவர்

வணக்கம் ரிஷி

இந்த வர்த்தக நிகழ்வுக்கு விருப்பமானர்வர்கள் போகலாம் என்ற தெரிவு இருந்தது. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைச் சாடுபவர்கள் இன்னொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு போய்க்கொண்டோ அல்லது அதே பொழுது போக்கு நிகழ்ச்சிக்குப் போய்த் தான் இந்தக் குற்றச்சாட்டை சொல்லுகின்றார்கள்.

என் கருத்தில் எமது தேசிய நிகழ்விற்குப் போகாமல் தனியே பொழுதுபோக்கிற்கு மட்டுமே தம் நேரத்தை செலவிடுபவர்கள் குறித்து தான் எனக்கு ஆதங்கம் உண்டு.

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோ, ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா இதில் நாங்கள் பெருமைப்பட எதுவும் இல்லையேன நான் நினைக்கின்றேன்.

சரியாக சொன்னீர்கள் ஈழ்வன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஈழவன்

பெருமைப்படுவதும் படாததும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். இந்த பிரசித்திபெற்ற இடத்தில் நடந்த பெருமைக்குரிய நிகழ்வு இது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

மெல்பனிலும் சிட்னியிலும் நடந்த இரு நிழவிலும் தமிழீழ முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போயிருந்தார்கள். மெல்பன் நிழச்சியில் திரட்டப்பட்ட முழுமையான வருமானம் 25000 டொலருடன் அங்கு வத ஈழ அபிமானி கொடுத்த 25000 டொல்லருமாக முழுமையாக 50000 டொலர் அங்கமிழந்தவர் நலனுக்கான வெண்புறா அமைப்புக்கு அளிக்கபப்ட்டது. இதன் மூலம் விழாவிற்கு வந்த இந்தியகளின் பணமும் தாயகம் போயிரிக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடமாக திட்டமிட்டு அவர்களுக்கு முன் பணம் கொடுத்து செய்த வர்த்தக நிகழ்ச்சி இது. உடனே ரத்து செய்தால் வரும் இழப்பை நானோ நீங்களோ அவர்களுக்கு கொடுக்கமுடியாது.

இதில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய கள உறவு ஒருவர் கூட 75 டொலரில் பார்க்க வந்தார் யாரென்று கண்டுபிடியுங்களேன்./

திரு கானபிரபா, பணம், ஈழம் என்று கருத்துகளை சொல்கின்றீர்கள். நான் ஒன்றும் ஈழக்கோரிக்கைகளுகோ அல்லது ஈழப்பிரச்சனைகளுக்கோ எதிரானவன் அல்ல... இருந்தாலும்... நாமும் அரசியல் நடத்துகின்றோமா என ஒரு சந்தேகம் மனதில் வருகின்றது... முக்கியமாக உங்கள் கருத்தை பார்க்கும் போது....

நான் ஈழத்தில் இருந்த காலத்தில், தமிழக சினிமாவிற்கு தடை இருந்ததோ அல்லது பார்ப்பத்தற்கு தடை இருந்ததாகவோ ஞாபகம். பார்த்தால் தொலைக்காட்சி முதல் பறி முதல் போனதாகவும் ஞாபகம்... அப்படி இருந்த நாம்....இன்று அந்த சினிமா நட்ச்சத்திரங்களையும், சினிமாவை அடித்தளமாகவும் வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி நமது ஈழத்துக்கு பணம் சேகரிக்கின்றோம்....

அப்படி பணம் சேகரிப்பத்ற்கு வேறு வழி இல்லையா? இப்படி நிகழ்சி நடத்தித்தான் சேகரிக்கணுமா? ஈழ அபிமானி 25000 டொலர் கொடுத்ததாக சொன்னீர்கள்... அவர் நிகழ்சி நடக்காமல் இருந்திருந்தால் கொடுத்திருக்கமாட்டார? அப்படி நிகழ்சியில் தான் பணம் கொடுப்பார் என்றால் அவரது பணம் எதற்கும் உதவாது.... புரிந்துகொள்ளுங்கள்....

நீங்கள் பயந்து கொண்டு சென்றதாக கூறினீர்கள்... கே ஜே அவர்கள் தவறாகப்பாடினாலும் என்று.... அவர் பாடல் வரிகளைத்தான் தவறாகப்பாடி இருந்தார் என்றால் அதில் என்ன தவறு..அவர் கவிஞர் இல்லையே... அவரின் திறமை அது இல்லையே...பாடல் வரிகளுக்கும் சங்கீத ஞானத்துக்கும் என்ன தொடர்பு? பாடல் வரிகளை தவறாக பாடினால் அவரது சங்கீத ஞானத்தில் தவறு காண்பதா? அவர் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்து பாடல் வரிகளை தவறாக சொல்லி இருந்தால் அதில் தவறு இருக்கலாம்... இசையை ரசித்துக் கேட்கும் போது, பாடல் வரிகளில் பிழை சரி பார்க்கத்தேவையில்லை... பார்க்கக்கூடிய மன நிலையும் நமக்கு இருக்காது... வேறு எண்ணத்தில் இருந்தால் (இசையை ரசிக்காது) ஒன்று என்ன 1000 பிழைகளை இசை நிகழ்ச்சிகளில் காணலாம்...

நேற்று நடந்த தியாகி திலீபன் நினைவு நிகழ்வுக்கு புத்தனோ, ஜமுனாவோ வரவில்லை. கந்தப்பு பற்றி நோ கொமன்ற்ஸ்.

அண்ணா, உங்களுக்கும் போட்டியில் வென்றமைக்கு சான்றிதழ் கிடைத்ததா? :lol: 8)

  • தொடங்கியவர்

வணக்கம் சும்மா

இந்த நிழ்கழ்ச்சி நடத்தித் தான் ஈழத்துக்கு நிதி சேகரிக்க வேண்டுமா என்று கேட்டீர்கள். திரும்ப திரும்ப ஒரே விஷ்யத்தை நானும் சொல்கிறேன். இது சிட்னியில் நடந்த வர்த்தக நிகழ்ச்சி, மெல்பனில் உள்ள வர்த்தகர்கள் பொறுப்பேற்று நடத்தியதில் பெற்ற வருமானம் ஈழத்துக்குப் போயிருக்கிறது,. தாயகக் கலைஞர்களை கொண்டும் நிகழ்ச்சி நடாத்துவதுண்டு, நானும் தவறாது போவதுண்டு,

ஜேசுதாஸ் பாடல் பாடும் போது அவரின் குரலிலினிமையோடு வார்த்தைகளும் சரியாக வரவேண்டும் என்பது என் போன்ற ரசிகனின் விருப்பமும் சுதந்திரமும் கூட.

குரலினிமை மட்டும் பார்க்க நினைப்பது உங்கள் சுதந்திரம். ஓவொறு நிகழ்ச்சிக்கும் போகும் ரசிகர்கள் ஒவ்வ்ருவிதம். மற்றவர்கள் கருத்தாக என் கருத்தை எழுத முடியாது தானே.

  • தொடங்கியவர்

வணக்கம் சும்மா

இந்த நிழ்கழ்ச்சி நடத்தித் தான் ஈழத்துக்கு நிதி சேகரிக்க வேண்டுமா என்று கேட்டீர்கள். திரும்ப திரும்ப ஒரே விஷ்யத்தை நானும் சொல்கிறேன். இது சிட்னியில் நடந்த வர்த்தக நிகழ்ச்சி, மெல்பனில் உள்ள வர்த்தகர்கள் பொறுப்பேற்று நடத்தியதில் பெற்ற வருமானம் ஈழத்துக்குப் போயிருக்கிறது,. தாயகக் கலைஞர்களை கொண்டும் நிகழ்ச்சி நடாத்துவதுண்டு, நானும் தவறாது போவதுண்டு,

ஜேசுதாஸ் பாடல் பாடும் போது அவரின் குரலிலினிமையோடு வார்த்தைகளும் சரியாக வரவேண்டும் என்பது என் போன்ற ரசிகனின் விருப்பமும் சுதந்திரமும் கூட.

குரலினிமை மட்டும் பார்க்க நினைப்பது உங்கள் சுதந்திரம். ஓவொரு நிகழ்ச்சிக்கும் போகும் ரசிகர்கள் ஒவ்வொருவிதம். மற்றவர்கள் கருத்தாக என் கருத்தை எழுத முடியாது தானே.

  • தொடங்கியவர்

அண்ணா, உங்களுக்கும் போட்டியில் வென்றமைக்கு சான்றிதழ் கிடைத்ததா?

தூயா

செஸ் மற்றும், உதைபந்தாட்டப் போட்டிகளில் நான் பங்கேற்கவில்லை, உங்களுக்கு கிடைத்ததா?:-)

  • தொடங்கியவர்

நான் ஈழத்தில் இருந்த காலத்தில்இ தமிழக சினிமாவிற்கு தடை இருந்ததோ அல்லது பார்ப்பத்தற்கு தடை இருந்ததாகவோ ஞாபகம். பார்த்தால் தொலைக்காட்சி முதல் பறி முதல் போனதாகவும் ஞாபகம்... அப்படி இருந்த நாம்....இன்று அந்த சினிமா நட்ச்சத்திரங்களையும்இ சினிமாவை அடித்தளமாகவும் வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி நமது ஈழத்துக்கு பணம் சேகரிக்கின்றோம்....

நான் ஈழத்தில் இருந்த காலத்தில், தமிழக சினிமாவிற்கு தடை இருந்ததோ அல்லது பார்ப்பத்தற்கு தடை இருந்ததாகவோ ஞாபகம். பார்த்தால் தொலைக்காட்சி முதல் பறி முதல் போனதாகவும் ஞாபகம்... அப்படி இருந்த நாம்....இன்று அந்த சினிமா நட்ச்சத்திரங்களையும், சினிமாவை அடித்தளமாகவும் வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி நமது ஈழத்துக்கு பணம் சேகரிக்கின்றோம்....

வணக்கம் சும்மா

ஈழத்தில் அப்போது நானும் இருந்தேன். சினிமாப்படங்களுக்கு தணிக்கை தான் இருந்தது, தடை இல்லை, சும்மா சும்மா பிழையாக அவர்கள் மேல் பழி போடாதீர்கள். தேசியத் தலைவரே பாரதிராஜாவிடம் ஈழப்பிரச்சனை பற்றி படம் பண்ணக்கேட்டதாக பேட்டி கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. எமது தலைமையிடம் நல்ல தெளிவான பார்வையுண்டு. நல்ல திறமையான கலைஞர்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்களை அரவணைப்பது நமது தேசியத் தலைமையின் பண்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒபராகவுசில் கலைநிகழ்ச்சி நடத்தி போட்டான் என்று பெருமையாக பேசும் நிலையில் புல தமிழன் இருக்கிறான் இதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறான் இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் ஜேசுதாசுக்கும் அவ்ரோடு வந்த கலைஞர்களுக்கும்,நிகழ்சியை ஒழுங்கு செய்த அமைப்பாளர்க்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கும் ஏன் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்று ? இதன் மூலம் ஈழதமிழருக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்குது அது தான் நிகழ்ச்சியை புறகணித்து இருக்கிறார் என்ற தோற்பாடு நடத்தியவர்களுக்கும் அதில் பங்குகொள்ள வந்த கலைஞர்களுக்கும் விளங்கியிருக்கும் அதன் மூலம் ஏனைய இந்திய சகோதரர்களுக்கும் புரிந்திருக்கும்,நாங்கள் போய் ஆரவாரம் செய்து விசில் அடிப்பதன் மூலம் அவர்களின் மனதில் அவர்களுக்கோ அவர்களின் இனத்தவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் அவர்களின் நாட்டில் உள்ளவர்களும் சந்தோசமாக் உள்ளனர் என்ற நிலைப்பாட்டே நாங்களே உருவாக்கிவிட்டுள்ளோம்.

நிகழ்ச்சியை தான் நடத்தினோம் ஒரு 10 நிமிடம் எமது போராட்டத்தை பற்றியோ மாவீரர்களை பற்றியோ கதைத்தார்களா?

25 எம்மவருக்கு பாடசாலைகளில் கருத்தரங்கு வைப்பதன் மூலம் நாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாது. 2000 பேர் அதிலும் இந்திய சகோதரர்களும் கலந்த நிகழ்ச்சியில் இதற்காக ஒரு 10 நிமிடம் செலவழித்து வைத்திருந்தாலும் அது சிறந்த பரப்புரையாக இருந்திருக்கும்.

விழாமலரில் ஆவது ஒரு பகுதியை இதற்காக பாவித்திருக்கலாம்.தமிழன் ஒப்ராகவுசில் நிகழ்சி நடத்தினது தான் பெருமை என்றால் நான் மேற்கூறியவற்றை வாசிக்காம பெருமையை பற்றி வாசிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு வர்த்தக நிகழ்ச்சி என்று மீண்டும் சொல்கின்றேன். 1 ஆண்டும் மேலாக அவர்களால் ஒழுங்கு செய்தது, பலரும் ரிக்கற்றை வாங்கியும் விட்டார்கள். 10 நிமிடம் ஒதுக்காதது குறித்து நீங்கள் தான் ஒழுங்கமைப்பாளரிடம் கேட்கவேண்டும்.

வர்த்தக நிகழ்ச்சியில் இதையெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள் முழுக்க முழுக்க தேசிய உணர்வோடு நடந்த திலீபன் நிகழ்ச்சிக்கு வராமல் ஏன் புறக்கணித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் பாரதிராஜாவை கூப்பிட்டு ஈழபிரச்சினையை பற்றிய படம் எடுத்து பிரச்சாரம் செய்யும் கண்ணோட்டத்தில் தான் கூறியுள்ளார்.நாங்கள் ஜேசுதாஸின் கச்சேரியில் 4 மணித்தியாலம் நடந்த பாட்டு கச்சேரியில் ஒரு பத்து நிமிடமாவது ஈழ பிரச்சினை சம்பந்தமாக சிட்னியில் பேசினோமா,ஒரு தாயக பாடலையாவது,பாடும் படி கேட்டொமா இது ஒரு வர்த்தக் ரீதியான நிகழ்ச்சி என்பது தெறியும் இருந்து இப்படியான நிகழ்ச்சியில் எமது பிரச்சினையை கூறலாம் தானே?2000 மேற்பட்ட தமிழர்கள் பங்கு பற்றிய இன் நிகழ்ச்சியில் ஏனைய தெனிந்தியர்களும் பங்கு பற்றி இருந்தார்கள்,இந் நிலையில் எமது போராட்டத்தை பற்றி பிரச்சாரம் செய்திருக்கலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் விரோத நிகழ்வாக கூறவில்லை,இங்கு போகாமல் இருந்திருந்தால் ரோம்ப நல்லம் போய் இருந்தால் சர்ந்தப்பத்தை பாவித்து எமது போராட்டத்தை பற்றி கூறி இருக்கலாமே,புலத்தில் இருப்பவர்களின் கடமை பிரச்சாரமே தவிர களத்தில் புலிகள் பார்த்து கொள்வார்கள் என்று கவிஞ்ர் புதுவை இரத்தினம் கூறியிருந்தார்.கடந்த ஆண்டு எமது கலை நிகழ்ச்சியில் நித்தியசிறி வந்திருந்தா அதில் அவர் பாடிய எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற பாடலை பாடும் படி கேட்டதற்கு தனக்கு தெறியாது என்று கூறினார்,நிகழ்ழ்சியை ஒழுங்கு படுத்தியவர்கள் ஏன் முதலே இவரிடம் இதை பற்றி சொல்லவில்லை

:wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா புத்தா... நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்... இன்டைக்கு ஆர்ப்பாட்டம் என்டு அடிக்கின்றார்கள் கொல்லுகின்றார்கள்.. யாரும் கேட்கினமில்லை...கேளுங்கப்பா என்று பாவம் ஒன்றும் அறியாத சின்னப்பிள்ளையில இருந்து வயது முதிர்ந்தவர் வரை ஒரு 4 மணி நேரம் செய்கின்றார்கள்.. பிறகு பார்த்தா... நாளைக்கு 4 மணி நேரம்... இப்படி கலை நிகழ்ச்சிக்கு போகின்றார்கள்...போய் நல்ல கூத்து அடிக்கின்றார்கள்....எவனய்யா நம்புவான் நீங்கள் சொல்லுவது உண்மை என்று... என்ன இது எல்லாம்.. போனால் போங்கள்..அது தப்பு இல்லை... இப்படி நிகழ்ச்சிகளுக்கு போங்கள்...அதனுள்..ஈழ விடுதலையை நுழைக்காதீர்கள்....

அண்ணா கான பிரபா... திரு பிரபாகரன் அவர்கள், திரு பாரதிராஜ வை அழைத்து ஒன்றும் கானப்பாட்டு பாட்டு எடுக்க கேட்கலை...அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...

  • தொடங்கியவர்

சும்மா

நல்லாத் தான் குழப்பிக் கதைக்கிறியள். தாயகத்தில் படங்களைத் தடை செய்தவை எண்டு சொன்னியள். அதுக்கு நான் சொன்ன காரணம் தான் எமது தலைவர் கூட நல்ல கலைஞர்களை இனம் கண்டு பாராட்டுகிறார் சொன்று சொன்ன உதாரணம்.

மற்றப்படி மீண்டும் சொல்கிறேன், சிட்னியில் நடந்தது ஒரு வர்த்தக நிகழ்ச்சி, அதற்கு வந்தவர்கள் பல ஈழ அபிமானிகளும் (தலைவர்கள் உட்பட) அதே நேரத்தில் தாயகம் சாந்த நிகழ்வுக்கு செல்பவர்களும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கோ! யாரும் முடிந்த நிகழ்ச்சிக்காக கதைத்து ஒரு பிரியோசமும் இல்லை. ஆனால் நாளைக்கு ஒரு இப்படி நடக்கும்பட்சத்தில் என்னென்ன ஆலோசனைகளைக் கொடுக்க விரும்புகின்றீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

( அடுத்த வருடம், நானும் அந்த மேடையில், வந்து பாடலாம் என யோசித்திருக்கேன். அது தான் :wink: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா

நல்லாத் தான் குழப்பிக் கதைக்கிறியள். தாயகத்தில் படங்களைத் தடை செய்தவை எண்டு சொன்னியள். அதுக்கு நான் சொன்ன காரணம் தான் எமது தலைவர் கூட நல்ல கலைஞர்களை இனம் கண்டு பாராட்டுகிறார் சொன்று சொன்ன உதாரணம்.

மற்றப்படி மீண்டும் சொல்கிறேன், சிட்னியில் நடந்தது ஒரு வர்த்தக நிகழ்ச்சி, அதற்கு வந்தவர்கள் பல ஈழ அபிமானிகளும் (தலைவர்கள் உட்பட) அதே நேரத்தில் தாயகம் சாந்த நிகழ்வுக்கு செல்பவர்களும் கூட.

அண்ணா ஞான பிரபா... ஆஆஅ கான பிரபா... முதலில் நான் சொன்னதை கொஞ்சம் சரியாக படித்து விட்டு நான் குழப்பி பேசுகின்றேனா இல்லையா என்று சொல்லுங்கள். நான் சொன்னது... நமக்கு ஈழத்தில் இருக்கும் போது, சினிமா தடை இருந்தது... ஆனால் இப்பொழுது நாம் அவர்களை வைத்து பணம் தீட்டிக்கொண்டு ஈழ விடுதலை பேசுகின்றோம்.....அதைத்தான் சொல்ல வந்தேன்.... அது அரசியலா என்று நக்கலாக கேட்டிருந்தேன்... அவ்வளவும் தான்...

தலைவர் பாராட்டினார் இல்லை என்று சொல்ல வில்லை... திறமைசாலிகளை இனம் கண்டு பாராட்டுவது ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு.... அதன் அர்த்ததை நீங்கள் மாற்றி தப்பாக நினைக்க வேண்டாம்...

அது சரி அது என்ன வர்த்தக நிகழ்சி என்று எல்லோரும் திரும்ப திரும்ப சொல்லுகின்றீர்கள்... பிறகு ஏன் ஈழ விடுதலை பற்றியும் சேர்ந்த பணம் பற்றியும் பேசுகின்றீர்கள்? வர்த்தகரீதி என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் நன்மை கருதி, வளர்ச்சி கருது முன்னெடுக்கபடும் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகள்... அப்படி இருக்கும் இடது, அதை பற்றி ஏன் நாம் யாழில் கருத்துகள் பகிர்ந்து கொள்ளணும்? அது ஒரு விளம்பர முறையாகாதா? அப்படியானால் யாழ் என்ன விளம்பரம் செய்வதற்காக இருக்கின்ற ஒரு தளமா? நான் என்ன விளம்பரம் பார்க்கவா இங்க வாறன்?

அந்த நிகழ்ச்சி உங்கள் வியாபாரமாக இருந்தால்.. தனி மடல் அனுபுங்கள் சிறந்த விளம்பர முறைகள் சொல்லித்தருகின்றேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி விடுங்கோ! யாரும் முடிந்த நிகழ்ச்சிக்காக கதைத்து ஒரு பிரியோசமும் இல்லை. ஆனால் நாளைக்கு ஒரு இப்படி நடக்கும்பட்சத்தில் என்னென்ன ஆலோசனைகளைக் கொடுக்க விரும்புகின்றீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

( அடுத்த வருடம், நானும் அந்த மேடையில், வந்து பாடலாம் என யோசித்திருக்கேன். அது தான் :wink: )

தூயவா.... இது வர்த்தக ரீதியான நிகழ்ச்சி என்று அண்ணன் கான பிரபா சொல்லி இருக்கின்றார்... ஆகவே... நீங்கள் கலந்து கொள்வதாக இருந்தால்... முதலே எவ்வளவு சம்பளம் என்று பேசி தீர்மானிப்பது நல்லது... அதுதான் எனது அறிவுரை....

வர்த்தக ரீதியான நிகழ்ச்சி இல்லை என்றால்.. அறிவுரைகள் சொல்லலாம்.. எனக்கும் அறிவுரை சொல்லுற வயது தான்... 48... ஜமுனாட்ட ஒருத்தரும் சொல்லிடாதிங்க....

  • தொடங்கியவர்

ஐயா சிம்மா ஆ சும்மா

இது என் வர்த்தக நிகழ்ச்சி அல்ல, அந்த வர்த்த நிகழ்ச்சிக்க்கு நானும் போயிருந்தேன் அது பற்றிய விமர்சனம் தான் அது. நீங்கள் படம் பார்த்துவிட்டு விமர்சிப்பீர்களே அது போலத் தான்.

யாழில் இதுபோன்ற விளம்பரங்களை பார்க்க நீங்கள் வராததையிட்டு மகிழ்ச்சி, இதை விட இன்னும் பல நூறு பதிவுகள் வேறு களப் பிரிவிலும் உள்ளன. நீங்கள் வந்திருப்பது பொழுது போக்கு என்ற களப்பிரிவு. ஈழத்தில் என்றுமே தமிழ்ப்படங்களுக்கு தடை இருந்ததில்லை, தணிக்கை தான் இருந்தது. உங்கள் கருத்துக்கு பொருந்தவேண்டும் என்பதற்காக இல்லாதையும் சொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயோ... என்னப்பா இந்த ஆள்....ஜமுனா ஒருக்கா என்ன என்று கேளுங்கள் எனக்காக.....

தம்பி ( அட நான் ஜயா என்றால்.. அவர் தம்பி தானே) நான் திரும்பவும் சொல்லுறன்.. நான் சொன்னதை திரும்ப வடிவா பாருங்க.... நான் முதலில் சொல்லும் போது தடை இருந்ததாக ஞாபகம் என்று தான் சொன்னேன்... நீங்கள் அதற்கு பதில் தரும் போது நீங்களும் அந்த காலத்தின் ஈழத்தில் இருந்ததாக கூறினீர்கள்....அது நீங்கள் அதனை உண்மை என்று ஒத்துக்கொண்டது போல இருந்ததால்... நானும் அது உண்மை என்று நினைத்தன்... இப்ப இப்படி தணிக்கை தன் இருந்தது என்று சொல்கின்றீர்கள்....

தம்பி பிரபா... நான் சொல்ல வந்தது வேறயப்பன்... நான் சொல்ல வந்தது.. இப்படியான கலை நிகழ்ச்சிகளுடன் ஈழப்பிரச்சனையை ஒன்று படுத்தாதீர்கள்... ஏனெனில், எம் மக்கள் பலர்... பல இடங்களில் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி, சிங்களவர்கள் எமது உறவுகளை வெட்டுகின்றார்கள், கற்பழிக்கின்றார்கள், கடத்துகின்றார்கள்... யாரவது கேழுங்கப்பா என்று உலக நாடுகளிடம் கேட்கின்றார்கள்... நீங்கள் இருக்கும் நாட்டிலும் அப்படி ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும்.....அப்படி ஆர்ப்பாட்டம் செய்யும் நாம் அடுத்த நாளே இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கு போகின்றோம்...( நீங்கள் தான் சொன்னீர்கள் பல ஈழ ஆதரவாளர்களும் தலைவர்களும் வந்ததாக) இப்படி இருக்க....வேற்று நாட்டுக்காரர்கள் எப்படி நாம் சொல்லுவதை நம்புவார்கள்? உண்மையில் நாம் எமது சகோதரி ஒருத்தி கற்பழிக்கப்படுகின்றாள் என்று கவலைப்படுக்கொன்டிருந்தால் ( அப்படித்தானே ஆர்ப்பாட்டங்களில சொல்லீனம்) அதற்கு ஒரு முடிவு கட்டும் வரை இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மனம் விடாது.. ஆக நான் சொல்ல வந்த விடயம் என்ன என்றால் ஒன்றில் ஈழ விடுதலை மட்டும் பேசுங்கள்... இல்லை என்றால் இப்படியான நிகழ்சி பற்றிப்பேசுங்கள்....இரண்டையும

  • தொடங்கியவர்

அண்ணை சும்மா

தணிக்கை பற்றி முதலிலேயே சொல்லியிருந்தேன் முதல்லை இருந்து கருத்துக்களை வாசித்துவிட்டு வாங்கோ ராசா. ஈழ விடுதலை பற்றி பேச்சு வந்து உம்மைப் போல் இன்னும் சிலர் வந்து இந்த நிகழ்ச்சியில் அது பற்றி கேள்வி எழுப்பியதால் தான். முதலிலை ஒழுங்கா ஒவ்வொரு கருத்தையும் வாச்சித்து விட்டு எழுதுங்கோ

வணக்கம் கானாபிரபா அண்ணா,

சரி நீங்கள் சொலவதை ஏற்று கொண்டால் அதை ஒரு வர்த்தகரீதியில் என்று பார்த்தாலும் புத்தன்,கந்தப்பு சொல்கின்ற மாதிரி நம்மவர் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கலாம் தானே இதனால் ஒப்ராகவுசில் நம்மவர் ஒருவரையும் கொளரவித்த மாதிரி இருக்கும் இப்படி நாங்கள் இந்திய கலைஞர்களை மட்டும் செய்வது தான் பிழை என்று நான் சொல்ல வாரேன் இதனால் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,

சிட்னியில் ஒரு வானோலி அறிவிப்பாளர் ஒரு இசை நிகழ்ச்சியின் போது தென் இந்தியாவில் இருந்து வந்த பாடகரை பார்த்து நம்ம தலைவரின் பாடலை படிக்கும் படி கேட்டார்,உடனே அந்த பாடகர் ரஜனியின் பாடலை பாடினார்,அப்ப அந்த அறிவிப்பாளர் இல்லை நம்ம தலைவர் என்றார் அப்ப அவர் கமலின் பாடலை பாடினார்,உடனே குறுகிட்ட அந்த அறிவிப்பாளர் நம்ம தலைவர் விஜயின் பாடலை படிக்கும்படி கூறினார்,இது சிட்னியில் நடந்த ஒரு துன்பியல் சம்பவம் நீங்களும் கேள்விபட்டிருக்க கூடும்.இவ்வாறு வைப்பதனால் தானே இந்த பிரச்சினை ஆகவே ஜேசுதாசை ஒரு ஈழத்து பாடலை பாட சொல்லி இருக்கலாம் அல்லது நம் கலைஞ்ரை கொளரவித்து இருக்கலாம்,இவ்வாறு நாங்கள் பிழை விடும் சந்தர்பத்தில் நம்ம தலைவர் விஜஜ் என்று சொன்ன மாதிரி தான் இருக்கும்.

:evil: :evil: :evil: :evil:

வணக்கம் கானாபிரபா அண்ணா,

சரி நீங்கள் சொலவதை ஏற்று கொண்டால் அதை ஒரு வர்த்தகரீதியில் என்று பார்த்தாலும் புத்தன்,கந்தப்பு சொல்கின்ற மாதிரி நம்மவர் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கலாம் தானே இதனால் ஒப்ராகவுசில் நம்மவர் ஒருவரையும் கொளரவித்த மாதிரி இருக்கும் இப்படி நாங்கள் இந்திய கலைஞர்களை மட்டும் செய்வது தான் பிழை என்று நான் சொல்ல வாரேன் இதனால் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,

சிட்னியில் ஒரு வானோலி அறிவிப்பாளர் ஒரு இசை நிகழ்ச்சியின் போது தென் இந்தியாவில் இருந்து வந்த பாடகரை பார்த்து நம்ம தலைவரின் பாடலை படிக்கும் படி கேட்டார்,உடனே அந்த பாடகர் ரஜனியின் பாடலை பாடினார்,அப்ப அந்த அறிவிப்பாளர் இல்லை நம்ம தலைவர் என்றார் அப்ப அவர் கமலின் பாடலை பாடினார்,உடனே குறுகிட்ட அந்த அறிவிப்பாளர் நம்ம தலைவர் விஜயின் பாடலை படிக்கும்படி கூறினார்,இது சிட்னியில் நடந்த ஒரு துன்பியல் சம்பவம் நீங்களும் கேள்விபட்டிருக்க கூடும்.இவ்வாறு வைப்பதனால் தானே இந்த பிரச்சினை ஆகவே ஜேசுதாசை ஒரு ஈழத்து பாடலை பாட சொல்லி இருக்கலாம் அல்லது நம் கலைஞ்ரை கொளரவித்து இருக்கலாம்,இவ்வாறு நாங்கள் பிழை விடும் சந்தர்பத்தில் நம்ம தலைவர் விஜஜ் என்று சொன்ன மாதிரி தான் இருக்கும்.

:evil: :evil: :evil: :evil:

யாழ்களத்துக்கு சில சிட்னி அறிவிப்பாளர்கள் வருவதாக அறிந்தேன் இப்ப கூட இத்தலைப்பில் இருவர் எழுதினார்கள் அதில் ஒருவராக கூட இருக்கலாம் அவ்வறிவிப்பாளர்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.