Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - இறுதி பாகம்

Featured Replies

அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது:

பங்கு பற்றியது - சி*5 & தூயவன்

(திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து)

தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா?

இராவணன்: தூயவன்

தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா?

சின்னப்பு: கேளுமோய்

தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது?

சின்னப்பு: மப்பு

தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது?

சின்னப்பு: பத்து

தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது?

சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது

தூயவன்: யாழில் தற்போது வேண்டியது?

சின்னப்பு: கூரான அரிவாள்

தூயவன்: யாழின் பலம்?

சின்னப்பு: தமிழ்

தூயவன்: யாழின் -?

சின்னப்பு: மாற்றுக்கருத்தாளர்கள்

தூயவன்: யாழில் சேர்க்கப்பட வேண்டியது?

சின்னப்பு: ஒரு ஒன் லைன் க-- கடை

தூய்வன்: யாழில் இருந்து எறியப்பட வேண்டியது?

சின்னப்பு: றோயல் பமிலியின் எதிரிகள்

தூயவன்: யாழின் பிள்ளை?

சின்னப்பு: நான்

தூயவன்: யாழின் தொல்லை?

சின்னப்பு: நீ

தூயவன்: சின்னப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ

சின்னப்பு: என்னலேய்

இராவணன்: அடங்குங்க!

----------------------------------------------------------------------------------------------------------

நம்முள் பலருக்கு பலரை தெரியாமல் இருந்ததால். ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்கும் போட்டி நடந்தது.

கண்டுபிடிக்கப்பட்டவர்களும், அவர்களை கண்டு பிடிக்க உதவிய அடையாளங்களும்:

1. புத்தன் - காவி

2. கானா பிரபா அண்ணா - மைக்

3. அஜீவன் அண்ணா - விடியோ கமேரா

4. குளக்காட்டான் - புகைப்படக்கருவி

5. சுண்டல் - பெண்கள் கூட்டம் பக்கமே இருந்ததால்

6. சாத்திரி - வரன் பார்க்கவா என கேட்டு

7. சி*5 - போத்தல்

8. சின்னாச்சி - சி*5 அர்ச்சனை குடுக்கும் போது

9. முகம்ஸ் - ஒட்டகப்பால் கையில்

10. இராவணன் அண்ணா - கையில் அரிவாள்

அனைவரும் கண்டு பிடிக்கப்பட, அழகாக சேலையில் நுழைந்த பெண் மட்டும் யார் என்று தெரியாமல் அனைவரும் மண்டையை போட்டு குளப்பி கொண்டிருந்தார்கள்.

யார் என்று கேட்டு பார்ட்தால் அது தான் "ஜமுனா". ஆங்க எதிர் பார்த்தது ஸ்லீவ்லஸ் உடையில் ஜமுனாவை....இதை கெட்டு முதலில் மயக்கம் பொட்டது "நாரதர்"

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து புத்தனின் தத்துபித்து:

யாழில்:

இலகுவானது - மற்றவர் குறையை கண்டுபிடித்தல்

கடினமானது - எங்கட பிழையை உணர்தல்

இலகுவானது - ஒரு செய்தியை பார்த்ததும் யோசிக்காமல் கருத்து வைத்தல்

கடினமானது - எதையும் 2 தடவை யோசிச்சு கருத்து வைத்தல்

இலகு - உண்மையில் எம்மில் அன்பு செலுத்துபவர்களை நோகடிப்பது

கடினம் - நோகடித்த மனதை, ஆற வைப்பது

இலகு - மன்னித்து மறப்பது

கடினம் - மன்னிப்பு கேட்பது

இலகு - கண்டபாட்டுக்கு அறிக்கை விடுவது

கடினம் - அதை பின்பற்றுவது

இலகு - யாரும் எதுவும் உருப்படியான ஒரு விடயம் செய்வோம் என்றால் ஓம் என்பது

கடினம் - அந்த ஓமை நிஜமாக்குவது

இலகு - ஆளுக்கு 10 பாவனைப்பெயரில் வருவது

கடினம் - எந்த பெயரில் வந்தாலும் ஒரே போல கதைப்பதை தவிர்ப்பது

இலகு - ஒருத்தரை தனிப்பட்ட முறையில் தாக்குவது

கடினம் - போன ஆள் திரும்பி வருவது

இலகு - பாடல்களை கேட்பது

கடினம் - மற்றவர்களுக்கு உங்களிடம் உள்ள பாடலை குடுப்பது

இலகு - "கள உறவே என அழைப்பது"

கடினம் - அந்த சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்வது

இப்படியே போய் கொண்டிருந்த புத்தன்..அருகே வந்த இராவணன் அண்ணாவை பார்த்து...

இலகு - வெட்டுவது

கடினம் - கருத்தை எழுதுவது

அதற்கு இராவணன் அண்ண ,

இலகு - உம்மை தூக்கி கடலில் எறிவது

கடினம் - நீர் நீந்தி கரை சேர்வது

மதன் அண்ணா ஓடி போய் ஆளுக்கொரு இளரீர் குடுத்து சாந்த படுத்துகின்றார்...

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து பாட்டுக்கு பாட்டு:

முதலில் சின்னப்புவும், சின்னாச்சியும் வருகின்றனர். இடையில் பிரச்சனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் தொகுத்து வழங்க மதன் அண்ணாவும், நீதிபதிகளாக மோகன் அண்ணாவும், சண்முகி மாமியும்.

மதன்: வணக்கம் சின்னா நீர் ஆரம்பியும்

சி*5 : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு அதை குப்புன்னு

மதன்: நன்றி போதும் போதும் இதற்கே மேல் பாடி என்னையும் வெட்டு வாங்க வைக்காதீர்கள். சின்னாச்சி நீங்கள் இப்பொழுது ...ஆ என்ன எழுத்த சொல்வது சரி :கு" இல் பாடுங்கள்

சின்னாச்சி: என்னை மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்தில கேட்டாங்க

சி*5: ஏன்டி இப்படி பொய் சொல்கிறார். உன்ட தம்பி பிளான் போட்டு என்னை கவுத்தவன்.

மதன்: சின்னப்பு குடும்ப பிரச்சனைகளை பின்னர் வைத்துக்கொள்ளலாம். சின்னாச்சி பிழையான எழுத்தில் ஆரம்பித்ததால் அடுத்த போட்டியாளர் முகத்தார். உங்களுடைய விருப்பமான பாடலை பாடுங்கள்

முகம்ஸ்: ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி

மதன்: நன்றி முகத்தார். நீங்கள் நன்றியுள்ள மனிதர். எங்கூ போனாலும் ஒட்டகத்தை கட்டிக்கிறிங்க..சீ நினைக்கிறிங்க. சின்னப்பு நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "ஏ"

சின்னப்பு: ஏ நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு கிட்ட வந்து ஒட்டிக்கிட்டா

நிலமை மோசமாவதை உணர்ந்த மதன் அண்ணா, இரவணன் அண்ணாவை பார்த்து,

"திருப்பாச்சி அரிவாள தூக்கி கிட்டு வாடா வாடா" என பாட.

இராவணன் அண்ணா வருவதை பார்த்து பயந்து முகத்தாரும், சின்னப்புவும் ஓடியதால் நிகழ்ச்சி அத்துடன் முடிந்தது.

----------------------------------------------------------------------------------------------------------

உணவு நேரம்:

போதிய அளவு உணவு இருந்தும், இடம் இருந்தும்... அன்னதானம் போல் குடுத்தால் தான் சாப்பிடுவோம் என அடம். அதில் அந்த அழகான சேலை உடுத்த பெண்ணும் அடக்கம். இப்ப தெரியுமே அது யார் என்று... "ஜமுனா" தான்.

சரி என்று வரிசையில் நில்லுங்கள் என்றால் சின்னாவும் சாத்திரியும் முட்டி மோதி அடிபட்டு (அப்படி என்றால் தான் ருசியாக இருக்குமாம்) விழுந்து யாரோ ஒருவரில் பல் செற் கூட கீழே விழுந்துவிட்டது. (அது சாத்திரியுடையதா சின்னப்புவினுடையதா என்பது தான் கேள்வி"

பல்லை பார்த்து பயந்த்கு சுட்டி அலற.... சுட்டியை சாந்தபடுத்த பொன்னம்மாக்காவும், சின்னாச்சியும் கஸ்டபட்டார்கள்.

கடைசி வரை லொலி பொப்புடன் நின்று விட்டு, தனக்கு கடலை கிடைக்கவில்லை என நிலா அழுது ஒரே அடம்.

பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் முன்னால் இருந்த ஒரு கடையில போய் நிறை லொலி பொப் வாங்கி வந்து வசம்பண்ணா நிலமையை சமாளித்தார்.

எதற்கும் வாய் திறக்காத அருவி, சாப்பாட்டுக்கும் வாயை திறக்கவே மாட்டன் என்ட, பிறகு மோகன் அண்ணா தான் "தம்பி பரவாயில்லை சாப்பிடுங்கோ" என்று சொல்லி அருவியை சாப்பிட வைத்தது.

ஆதி தானும் உணவு பரிமாறுவேன் என வெளிக்கிட்டு, அவல் சட்டியுள் விழுந்து...இது தெரியாமல் சுஜேந்தன் அவலுடன் சேர்த்து ஆதியையும் வெளியே கொட்ட.. இது தேவையென தன் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் என ஆரம்பிக்க...சஜேவன் வந்து "எரியும் வீட்டுக்கு எண்ணெயை ஊத்த"...கலவரம்

----------------------------------------------------------------------------------------------------------

சாப்பாட்டின் பின்னர் ரசிகையின் எள்ளுச்சம்பல் செய்முறைக்கு போட்டியோ போட்டி.

"அடப்பவிகளா இப்ப தெரியுது எத்தனை பேர் என் செய்முறையை உண்மையாக யாழில் படித்தீர்கள் என்று" என முனுமுனுத்ததும் நன்றாகவே கேட்டது.

இலக்கியனின் சோள மா மஸ்கற்றும் பெரும் பெயரை பெற்றது.

நாரதர் அண்ணா பக்கம் சனம் கொன்சம் குறைவாய் இருந்தது..காரணம் அவரின் "கம கமக்கும் எலி பொறியல்"

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து குறிப்பிட்டு சொல்லணும் என்றால் "தாயக பறவைகள்". இதை யார் நடத்துவது என்று அறிய, பெண்கள் இருந்த பக்கம் பார்த்து "தாயக பறவைகள்" என கூப்பிடுவதும். அதில் வரும் ஆக்கங்கள் பற்றி சொல்வதுமாக சில சகோதரர்கள் ...

பெண்கள் அவ்வளவு எளிதில் இதற்கெல்லாம் பிடிபடுவார்களா?

இராவணன் அண்ணாவை போய் அழைத்துவர, சகோதரங்கள் "எஸ்கேப்"

----------------------------------------------------------------------------------------------------------

இறுதியா நன்றியுரை சொல்ல "ரிஸிக்" . ஏன் என்றால் யாழில் வாழ்த்து சொல்லியே பிரபலமானவர் ஆச்சே...

இதோ :

"வணக்கம், நான் தான் ரிஸிக்..இங்கு வந்த எல்லாருக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியை ஆரம்பித்த தூயாக்கும், கூட நின்று நடத்திய தூயவனுக்கும் வாழ்த்து, வந்த உங்களுக்கு வாழ்த்து, சாப்பிட்டவங்களுக்கும் வாழ்த்து, நிர்வாக குழுக்கு வாழ்த்து, ஓபரா கவுஸுக்கும் வாழ்த்து, இதை கட்டினவனுக்கும் வாழ்த்து...எங்கட கருத்த வெட்டினவனுக்கும் வாழ்த்து " என வாய் தடுமாறி சொல்லிவிட்டு, நிர்வாக குழு பார்த்த பார்வையில் ஓடிவிடுகின்றார்.

இறுதியாக பேச வந்த மோகன் அண்ணா:

"வணக்கம், நல்லதொரு நிகழ்ச்சியை செய்த தூயாவிற்கும் (அப்புறமா உம்மை கவனிச்சுக்கிறேன் தூயா), அவருடன் சேர்ந்து பாடுபட்ட சகோதரங்களுக்கும் மிக்க நன்றி. (அடுத்து வாங்கி கட்ட போறவங்க)

சில நாட்களாக யாழில் குளப்பங்கள். சில பகுதிகளில் இருந்த அரட்டை இப்பொழுது களம் முழுதும் பரவி வருகின்றது என பல முறைப்பாடுகள். இதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் ..."

என்று எங்கள பார்த்தால்.... எல்லாரும் ஆளாலுக்கு அரட்டை..

மோகன் அண்ணா இராவணன் அண்ணாவை பரிதாபமாக பார்க்க...இராவணன் அண்ணா மதன் அண்ணாவை பார்க்க..

"விளங்கினா போல தான்"

---------------------------------------------------------------------------------------------------------

இத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகின்றது.

உங்கள் அனைவரையும் விழாவில் இணைத்திருக்கின்றேன். சிலர் பெயர் அதிகம் பாவித்துள்ளேன். காரணம் எனக்கு அவர்களை அதிகம் தெரிந்தது தான். ஏன் எனில் நான் பிழையாக எழுதினாலும் மன்னிப்பார்கள்.

இது யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படவில்லை. பிழைகளை மன்னித்து பொருத்தருளவும்.

நன்றி

வணக்கம்

தூயா

[b]அடுத்த நாள் நடந்த நொந்- வெஜ் சாப்பாட்டு ஒன்று கூடல் படங்கள்:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=4357&start=945

எடுத்தவர்: எங்க குளம்ஸ்

  • Replies 85
  • Views 8.6k
  • Created
  • Last Reply

தூயா :lol: அடிக்கடி இப்படி பல ஆக்கங்களை இணையுங்க....

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

  • தொடங்கியவர்

தூயா :lol: அடிக்கடி இப்படி பல ஆக்கங்களை இணையுங்க....

எடுத்த புகைப்படங்களை சீக்கிரம் அனுப்பி வையுங்கள் குளம்ஸ் ;)

  • தொடங்கியவர்

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

ஓம்.

கொலுவைப்பது பற்றி சரியாக தெரியவில்லை

ஆனால் நாங்கள் 9ஆம் நாளும், ஆயுத பூசையும் பெரிதாக செய்வம்

அப்பாடா நல்லமுறையாக நடாத்தி முடிச்சிட்டீங்க கேள்வி பதில் இலகு கடினம் எல்லாம் அருமை. சூப்பரோ சூப்பர். எப்படி பபா இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க. (நடந்ததை தானே எழுதினீங்க என ) :P

மீண்டும் ஓர் நிகழ்வுடன் சந்திப்பம் :P :arrow:

நன்றி நிலா..இந்த விழா எம்மை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்... :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் தத்து பித்துவும், தூயவன் சின்னப்புவின் திருவிளையாடலும் மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் தூயா

  • தொடங்கியவர்

புத்தனின் தத்து பித்துவும், தூயவன் சின்னப்புவின் திருவிளையாடலும் மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் தூயா

மிக்க நன்றி கந்தப்பு :lol:

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

.என்ன லக்கி, நீங்களும் நானும்தான் சீப் கெஸ்ட் , மறந்துட்டிங்களா....

நீங்க ஓப்ரா ஹவுஸ் முன்னாடி அழுத போது நான் கெர்சீப் கொடுத்தேன் நினைவில்லையா?

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

ஈழத்தில் என்று திருத்திகொள்ளுங்கள்

  • தொடங்கியவர்

லக்கி அழுததிலேயே எல்லாரும் நில்லுங்க...என்னை மாட்டிவிடுறது தானே குறிக்கோள்!

அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது:

அடுத்து பாட்டுக்கு பாட்டு:

முதலில் சின்னப்புவும், சின்னாச்சியும் வருகின்றனர். இடையில் பிரச்சனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் தொகுத்து வழங்க மதன் அண்ணாவும், நீதிபதிகளாக மோகன் அண்ணாவும், சண்முகி மாமியும்.

மதன்: வணக்கம் சின்னா நீர் ஆரம்பியும்

சி*5 : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு அதை குப்புன்னு

மதன்: நன்றி போதும் போதும் இதற்கே மேல் பாடி என்னையும் வெட்டு வாங்க வைக்காதீர்கள். சின்னாச்சி நீங்கள் இப்பொழுது ...ஆ என்ன எழுத்த சொல்வது சரி :கு" இல் பாடுங்கள்

சின்னாச்சி: என்னை மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்தில கேட்டாங்க

சி*5: ஏன்டி இப்படி பொய் சொல்கிறார். உன்ட தம்பி பிளான் போட்டு என்னை கவுத்தவன்.

.

சி*5 நீங்களும் இப்படித்தான் கவுந்திங்களா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.

கொலுவைப்பது பற்றி சரியாக தெரியவில்லை

ஆனால் நாங்கள் 9ஆம் நாளும், ஆயுத பூசையும் பெரிதாக செய்வம்

ஈழத்தில் கொலுசு வைப்பதில்லை லக்கிலுக்கு

லக்கி அழுததிலேயே எல்லாரும் நில்லுங்க...என்னை மாட்டிவிடுறது தானே குறிக்கோள்!

அப்ப என்ன லக்கி அழவில்லையென்று சொல்லுறீங்களா? :wink: :wink: :wink:

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

கொலு வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் நவராத்திரி சிறப்பாகவே கொண்டாடப்படும், அனைவராலும்.

இதைப்பற்றிய கானபிரபா, மலைநாடான் ஆகியோரின் வலைப்பதிவுகளை படித்தால் ஈழத்தில் நடக்கும் நவராத்திரி பற்றிய விளக்கம் கிடைக்ககூடும்.

தூயா நவராத்திரி கொண்டாட்டம் நல்லாவே இருக்கிறது. அதனை இங்கு அனைவருடனும் பகிர்ந்ததற்கு நன்றி :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்குப்பிறகு யாழில் மீண்டும் அருவி.

எடுத்த புகைப்படங்களை சீக்கிரம் அனுப்பி வையுங்கள் குளம்ஸ் ;)

dsc000111nz8.th.jpg

untitledgp4.jpg

நித்திரை தூக்கதிலை படம் எடுத்து சரிவரேல்லை தூயா :?

மிச்ச சாப்பாடெல்லம் படம் பிடிக்க முடியலை சுண்டல் சுண்டலை எல்லாருக்கும் முதல் துக்கிகொண்டு போட்டார், அவலை ஆதி அவதியா துக்கி போட்டார் :lol:

  • தொடங்கியவர்

கனகாலத்துக்குப்பிறகு யாழில் மீண்டும் அருவி.

கந்தப்பு, ஒருவர் தன்னும் திரும்பி வந்து கருத்து தந்துள்ளாரே,,இதுவே நவராத்திரிக்கு போதுமே :lol:

அருவி, மிக்க நன்றி ;)

  • தொடங்கியவர்

படங்களுக்கு நன்றி குளம்ஸ்:lol: பரவாயில்லை தலைகீழாக் என்றாலும் படம் வந்ததே :lol:

அசைவ பிரியர்களுக்கும் சி*5 க்கும் தூயா ஏற்பாடு பண்ணிய விருந்தின் படம் நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதிக்க எதிர் பாருங்க :idea: :P

  • தொடங்கியவர்

அசத்துறிங்க குளம்ஸ் :lol: இதை நான் என்னுடையதிலும் போட்டு விடுகின்றேன்

link எடுத்து போடலாமா?

அசத்துறிங்க குளம்ஸ் :lol: இதை நான் என்னுடையதிலும் போட்டு விடுகின்றேன்

link எடுத்து போடலாமா?

தாரளமா தூயா

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
  • தொடங்கியவர்

ஏன் சிரிக்கிறிங்கள்??? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.