Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் சீக்கிரம் கல்யாணம், பண்ணிக்கணும் தெரியுமா?

Featured Replies

லேட்டா கல்யாணம் கட்டினா பிள்ளை பெறுவதை பற்றி யோசிக்க கூடாது. வயது முதிர்ந்த பெற்றோரால் பிள்ளைகளின் அனைத்துப் பிரச்சனைகளையும் விளங்கிக்கொள்ள முடியாது. பிள்ளைகள் ஒரு உலகத்திலும் பெற்றோர் வேறு ஒரு உலகத்திலும் இருப்பர். ஆங்கிலத்தில் இதற்கு generation gap என்று பெயர்

  • கருத்துக்கள உறவுகள்

20 வயதில கலியாணம் செய்த உங்களிடம் சில கேள்விகள்..

1. உங்களின் உயர்கல்வித் தகமை என்ன..?!

  BA , NVQ Level 5 Foundation Degree in Childcare. 

1. உங்கள் தகைமை என்ன என்று கூற முடியுமா நெடுக்ஸ் ??????

2. உங்களின் வேலை அனுபவம் என்ன..??!

  இரண்டு ஆண்டுகள் Post office Counter Clerk , இரண்டு ஆண்டுகள் Nursery nurse, ஒரு  ஆண்டு maneger, கடந்த ஐந்து ஆண்டுகள் Shop Maneger

2. உங்களின் வேலை அனுபவம் என்ன நெடுக்ஸ் ????

3. உங்கள் (தனிப்பட்ட) ஆண்டு வருமானம் என்ன..??!

முட்டாள்களிடம் கூட ஆண்டு வருமானத்தை இப்படிப் பந்தியில் வைத்து எவரும் கேட்க மாட்டார்கள். உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

என்னை நீங்கள் சந்திக்க முடிந்து, நீங்கள்தான் நெடுக்ஸ்  என நம்பினால் நான் கூறக்கூடும்.

3. உங்கள் வருட வேண்டாம். மாத வருமானமாவது கூற முடிந்தால் கூறுங்கள்.

4. உங்களின் சிறப்பு தகமைகள் என்ன..??!

என்னிடம் எத்தனையோ சிறப்புத் தகைமைகள் இருக்கின்றன. அதை யாழ் களத்தில் தான் பட்டியலிட வேண்டும் என்று இல்லை. என்னை தெரியும் என்று கூறும் நீங்களே என்னைப்பற்றி யாரிடமாவது விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. உங்கள் ,சிறப்புத் தகைமைகளை அறிந்து கொள்ளலாமா ??????

5. நீங்கள் குடும்பத்துக்கு அப்பால் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் என்ன..??????!

கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் சிறுவர்களுக்கு ஊதியம்  வாங்காமல் தமிழ் கற்பிக்கின்றேன். கடந்த பத்து ஆண்டுகளாக என்னால் முடிந்த அரசியல் வேலைத்திட்டங்களுக்கான பங்களிப்பைச் செய்து வருகிறேன். போரினால் பாதிக்கபட்ட மக்களுக்காக எத்தனையோ செய்துள்ளேன். அதையும் பட்டியலிட விரும்பவில்லை. நேரில் வந்தால் காட்டலாம்.

5. நீங்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் ஏதாவது கூற முடியுமா ??? யாழில் கட்டுரை எழுதுவதைக் குறிப்பிடவில்லை.

6. நீங்கள் சொந்தமாக உங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த அசையாத.. அசையும் சொத்துக்களை வைச்சிருக்கீங்களா..??! (கணவரின் உழைப்பில் வந்தவை அல்ல..!!)

என் சுய சம்பாத்தியத்தில் என்னிடம் அசையும் அசையாச் சொத்துக்கள் இருக்கின்றன

6 . உங்களிடம் ஏதும் இருக்கிறதா நெடுக்ஸ் ?????

(இந்த 6 கேள்விக்கும் பதில் சொல்லுங்க.. மிகுதியை சமூகத்திற்கு நாங்கள் சொல்லுறம்..) :D:icon_idea:

7.உங்களால் உங்கள் பெற்றோருக்கு அல்லது சகோதரர்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட்டுள்ளதா ????

இத்தனைக்கும் நீங்களும் பதில் கூற வேண்டும் நெடுக்ஸ் :icon_idea: :icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் நீங்களும் பதில் கூற வேண்டும் நெடுக்ஸ் :icon_idea: :icon_idea:

1. 0.3/1

2. 0.3/1

3. 0.0/1

4. 0.0/1

5. 0.3/1

6.0.0/1

ஆக மொத்தத்தில்.. 20 வயசில கலியாணம் செய்த நீங்க.. ஒரு சராசரி மனிதனுக்குரிய.. 6 புள்ளிகளில்.. 0.9 தான் பெற்றுள்ளீர்கள்..!

உங்கட வயசுக்கு.. ஒரு சாரசரி மனிதன் குறைந்தது 2.0 புள்ளிகளாவது எடுத்திருக்கனும்..!!

இல்லையே..???! இதுதான் மனித வாழ்கையில்.. பிந்தங்கல் என்பது..!

இதனை தவிர்க்க திருமணத்தை பின்போடுதல் நன்று. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய அக்கா.. கோவில் அர்ச்சனை தட்டம் வாங்கவும் அவரிட்ட காசு கேட்டு ஓடினது தெரியும். ஆனால் அக்காக்கு தெரியாது. :lol::D  உப்படி வாழுறது என்றால் 16 வயசில கட்டி.. அடிமாடாய் வாழலாம் தானே. அதெல்லாம் வாழ்கையா..???! 

வெளிநாடுகளில் எம்மவர்கள்.. பெட்டையள 18 வயசில கட்டிட்டு வந்து.. பிள்ளை பெறும்.. வளர்க்கும் இயந்திரமாக பாவிப்பதையும் காண்கிறோம்.  அதுகள் உள்ளுக்க படுற வேதனைகள்.. எவருக்கும் தெரியாது. :icon_idea:

உங்கள் அக்காவுக்கு நடந்ததை வைத்து மற்றவர் வாழ்வையும் எடைபோடுவது தவறு நெடுக்ஸ். பதினெட்டு வயதில் கட்டினால் உடனேயே குழந்தை பெருக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அத்துடன் குழந்தை பெற்றால் குழந்தையை வளர்க்கக் கஸ்ரப்படவும் வேண்டும் என்றும் இல்லை.யாரோ உங்களுக்கு தவறாக தரவுகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரியுது.

1. 0.3/1

2. 0.3/1

3. 0.0/1

4. 0.0/1

5. 0.3/1

6.0.0/1

ஆக மொத்தத்தில்.. 20 வயசில கலியாணம் செய்த நீங்க.. ஒரு சராசரி மனிதனுக்குரிய.. 6 புள்ளிகளில்.. 0.9 தான் பெற்றுள்ளீர்கள்..!

உங்கட வயசுக்கு.. ஒரு சாரசரி மனிதன் குறைந்தது 2.0 புள்ளிகளாவது எடுத்திருக்கனும்..!!

இல்லையே..???! இதுதான் மனித வாழ்கையில்.. பிந்தங்கல் என்பது..!

இதனை தவிர்க்க திருமணத்தை பின்போடுதல் நன்று. :):lol:

நான் என் தரவுகள் முழுவதையும் கூறவே இல்லையே. நேரில் பதில் கூற முடியாது கணக்கு எழுதி என்னை முட்டாளாக்கப் பார்க்கிறீர்களே தவிர உங்களால் உங்களைப் பற்றிய எதையும் துணிந்து கூறவே முடியவில்லை. இதிலிருந்து எல்லாமே தெரிகிறது நெடுக்ஸ் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அக்காவுக்கு நடந்ததை வைத்து மற்றவர் வாழ்வையும் எடைபோடுவது தவறு நெடுக்ஸ். பதினெட்டு வயதில் கட்டினால் உடனேயே குழந்தை பெருக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அத்துடன் குழந்தை பெற்றால் குழந்தையை வளர்க்கக் கஸ்ரப்படவும் வேண்டும் என்றும் இல்லை.யாரோ உங்களுக்கு தவறாக தரவுகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரியுது.

குழந்தை பெற்றிட்டா அது தானா வளருமா..??! சைல்ட் கெயர் பற்றி படிச்சிருக்கிற நீங்க. இப்படிச் சொல்வது வியப்பாக உள்ளது. வேலைக்குப் போகும் பெண்கள்.. கல்வி கற்கும் பெண்கள்.. திருமணத்தை பின்போடுவது மட்டுமன்றி.. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி திருமணத்துக்குப் பின் வேலையை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை கூடிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால்.. நாட்டுக்கும் சமூகத்திற்கு எவ்வளவு இழப்பு என்று தெரியுமா..????! :icon_idea::)

Japanese women are more likely to have a university degree than men, and the number of women in employment has been rising steadily for 10 years - but, for a range of reasons, a woman who has had children still has a hard time getting a good job.

http://www.bbc.co.uk/news/magazine-21880124

The maternity trap: 'Hidden disgrace' of up to 50,000 women being forced out of their jobs every year after taking baby leave.

http://www.dailymail.co.uk/news/article-2402554/Up-50-000-women-forced-jobs-taking-maternity-leave-year.html

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

இது எங்க அம்மா.. குட்டிலையே எங்களுக்கு சொல்லித் தந்திட்டா. :lol:

இருந்தாலும்.. மீள நினைவு படுத்தி.. அம்மாவையும் நினைக்க வைச்சதற்கு நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பெற்றிட்டா அது தானா வளருமா..??! சைல்ட் கெயர் பற்றி படிச்சிருக்கிற நீங்க. இப்படிச் சொல்வது வியப்பாக உள்ளது. வேலைக்குப் போகும் பெண்கள்.. கல்வி கற்கும் பெண்கள்.. திருமணத்தை பின்போடுவது மட்டுமன்றி.. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி திருமணத்துக்குப் பின் வேலையை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை கூடிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால்.. நாட்டுக்கும் சமூகத்திற்கு எவ்வளவு இழப்பு என்று தெரியுமா..????! :icon_idea::)

Japanese women are more likely to have a university degree than men, and the number of women in employment has been rising steadily for 10 years - but, for a range of reasons, a woman who has had children still has a hard time getting a good job.

http://www.bbc.co.uk/news/magazine-21880124

The maternity trap: 'Hidden disgrace' of up to 50,000 women being forced out of their jobs every year after taking baby leave.

http://www.dailymail.co.uk/news/article-2402554/Up-50-000-women-forced-jobs-taking-maternity-leave-year.html

நான் 22 வயதில் முதலாவது குழந்தையையும் 26 வயதில் இரண்டாவது குழந்தையையும்  29 இல் கடைசிக் குழந்தையையும் பெற்றேன். முதல் குழந்தை பிறந்து ஆறு  மாதங்களில் இருந்து  வேலை செய்ய ஆரம்பித்தேன். இரண்டாவது குழந்தை பெற்றதும் ஒரு ஆண்டுகளின் பின்னர் வேலை செய்ய ஆரம்பித்தேன்.  மூன்றாவது குழந்தை பிறந்ததும் இரண்டு ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தேன். இத்தனைக்கும் என் பெற்றோரை வீட்டில் வைத்து வேலை வாங்காது நானும் என்  கணவருமே எம் குழந்தைகளை வளர்த்தோம். இப்படித்தான் பலர். ஒருபக்கம் குழந்தை வளர்ப்பது சிரமம் எனினும் அதில் ஏற்படும் மகிழ்வு உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.

பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மட்டுமே பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போடுவதும் பிள்ளை வளர்க்க முடியவில்லை எனச் சாட்டுச் சொல்வதும்.

ஆனாலும் உங்களைப் போல் சிலரும் வேண்டும்தான். அப்பத்தான் சனத்தொகை கொஞ்சம் மட்டுப்படும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் 22 வயதில் முதலாவது குழந்தையையும் 26 வயதில் இரண்டாவது குழந்தையையும்  29 இல் கடைசிக் குழந்தையையும் பெற்றேன். முதல் குழந்தை பிறந்து ஆறு  மாதங்களில் இருந்து  வேலை செய்ய ஆரம்பித்தேன். இரண்டாவது குழந்தை பெற்றதும் ஒரு ஆண்டுகளின் பின்னர் வேலை செய்ய ஆரம்பித்தேன்.  மூன்றாவது குழந்தை பிறந்ததும் இரண்டு ஆண்டுகள் வரை வீட்டில் இருந்தேன். இத்தனைக்கும் என் பெற்றோரை வீட்டில் வைத்து வேலை வாங்காது நானும் என்  கணவருமே எம் குழந்தைகளை வளர்த்தோம். இப்படித்தான் பலர். ஒருபக்கம் குழந்தை வளர்ப்பது சிரமம் எனினும் அதில் ஏற்படும் மகிழ்வு உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.

நாங்கள் அறிய நிறைய தமிழ் பெண்கள்.. குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வேலைக்குப் போகாமல்.. வீட்டில் இருந்து பெனிபிட் எடுத்துக் கொண்டு வாழ்வதையே காண முடிகிறது. அதேபோல் முஸ்லீம் பெண்களும்.

வெள்ளையினப் பெண்கள்  தான் பல சிரமங்களோடு வேலைக்குப் போகிறார்கள். உங்களைப் போல.. எத்தனை சதவீதம் பேர் தமிழர்களில் இருக்கினம்..???!

மேலும் நீங்கள் கூட வேலையை விட்டு.. தொட்டு தான் போயுள்ளீர்கள். இப்போ உங்களை எனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தி இருந்தால்.. என் பாடு.. அந்தக் காலங்களில்.. இன்னொரு ஆளைத் தேடுவதிலும் கழிஞ்சிருக்கும். அதுமட்டுமன்றி அந்த வெற்றிடத்தை நிரப்ப.. ஆளெடுப்பு.. பயிற்சிகள்.. என்று காலமும் வீணாகி.. பணமும் கூடிய செலவாகி இருக்கும். அந்த இடத்தை ஒரு திருமணம் ஆகாத ஒரு ஆணால் நிரப்பி இருந்தால்..???! ஒரு முகாமையாளராக என்ன சொல்லுறீங்க..??! :lol::icon_idea:

நீங்கள் முதலாளியாக இருந்தால் இந்தக் காரணங்களை கிஞ்சித்தும் நினைக்கக்கூடாது.. :huh: நவீன உலகில் இவை பாலின அடிப்படையிலான‌ பாகுபாடு காண்பித்தல் (Gender Discrimination) எனக் கொள்ளப்படும்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அவ சிவனே என்டு வீட்டில அசையாமல் இருந்த ஒரு சொத்தையும்  தண்ணியை ஊத்தி அசைச்சுப் போட்டா ...!

இப்ப அசையும் சொத்தெண்டு இருக்கிறது  தோட்டத்தில நிக்கிற நாலைந்து றோசாச் செடிதான்...!  :)

அதைவிட பிள்ளைகளும் மனிசனும் அசையும் சொத்துக்களாய்  இருக்கினம் அண்ணா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.