Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைவனின் நீதி உங்களை அழிக்கும், இல்லையேல் நான் எரிப்பேன்! – ஆணைக்குழு முன் சாபமிட்ட தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனின் நீதி உங்களை அழிக்கும், இல்லையேல் நான் எரிப்பேன்! – ஆணைக்குழு முன் சாபமிட்ட தாய் photo.png

[Monday 2014-09-29 08:00]
mulangavil-witness-mother-200-news.jpg

காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தனது பிள்ளை தொடர்பில் முறைப்பாடு கொடுக்க வந்த வயதான தாயிடம் ஆடு வேண்டுமா என்று ஆணைக்குழுவினர் கேட்டதால், அந்த தாய் சாபமிட்டுவிட்டு சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2ம் நாள் அமர்வு முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், காணாமல்போன தன் மகன் தொடர்பாக சாட்சியம் அளிக்க வந்திருந்தார். அரசாங்க உதவிகள் கிடைத்துள்ளதா? என ஜனாதிபதி ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியது.

  

இதற்கு அந்தத் தாய், தனக்கு எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை. என பதிலளித்தார். அதன் பின்னர் உங்களால் என்ன சுயதொழில் செய்ய முடியும்? என ஆணைக்குழு கேள்வி எழுப்பியதுடன், ஆடு வளர்க்க முடியுமா? என கேட்டனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த, குறித்த தாய், ஆணைக்குழுவையும், ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும், ஈபி.டி.பி மற்றும் புலனாய்வாளர்களையும் மிக மோசமாகத் திட்டித் தீர்த்தார். அத்துடன், என்னுடைய பிள்ளையை கொன்று விட்டார்கள், என் பிள்ளையின் உயிருக்கு 2 ஆடு சமமாகுமா? என கேள்வி எழுப்பியதுடன், இறைவனின் நீதி ஒன்று இருக்கின்றது. அது உங்களை அழிக்கும். இல்லையேல் கண்ணகி மதுரையை எரித்தால்போல் நான் உங்களை எரிப்பேன் என சாபமிட்டுச் சென்றுள்ளார்.

 

mulangavil-witness-mother-290914-seithy.

http://www.seithy.com/breifNews.php?newsID=117710&category=TamilNews&language=tamil

https://www.facebook.com/video/video.php?v=1621712148055741&set=vb.100006509131245&type=2&theater

 

யாழ் உறவுகளே, இதை சரியான முறையில்  போட்டு விடுங்கோ

Edited by நிழலி
வீடியோ இணைப்பு திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தனித் தாயின் உள்ளக்குமுறல் அல்ல. இது தான் ஈழத்தாய்கள் எல்லோரினதும்.. பொதுக்குரல்..!!

 

சர்வதேசத்தை இந்தக் குரல் போய் சேர வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புப் போர் செய்த கணவான்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக உள்ளனர்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவேண்டுகோள்:

 

இந்தத் தாயின் பாதுகாப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட உறுப்பினர்கள் உறுதி செய்வதோடு.. அந்த அம்மாவின் வறுமை போக்க வழி செய்து கொடுக்க வேண்டும்.அவரின் இந்த சாட்சியத்தை.. ஐநா மனித உரிமை பேரவை முன் சமர்ப்பிக்க சரியான நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும்..!!!

  • கருத்துக்கள உறவுகள்

பலரதும் உள்ளக்குமுறல் இது தான்....

 

சொல்லமுடியாதநிலை

இதை வைத்து மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என கதைவிடுவோர் சிலர்..

எல்லோரும் எரிவார்கள்

எரிக்கப்படுவார்

நம்புகின்றோம் தாயே...

இவ்வாறு எத்தினை தாய்கள் கதறியபடி ஈழத்தில் செய்தியை வந்தால் மட்டும் நாமும் சேர்த்து இயலாமையை கொட்டிவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவது வழமையா ஆகி போயிட்டு தாயே ..

 

எம் கண்ணீருக்கு துணிவா எவரும் செயலில் இறங்காதவரை இவ்வாறான ஓலங்கள் ஒலித்துகொண்டே இருக்கும் உடையவன் இல்லாவிட்டால் இனத்தின் நிலை இதுவே .. :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.