Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்! படங்கள்

Featured Replies

அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக  இன்று  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில்  ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது.

colombo%20news-2.jpg

கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்.
 

colombo%20news-1.jpg
இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.colombo%20news-3.jpgபின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
colombo%20news-4.jpg

ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

colombo%20news-6.jpg

எனினும் இதுவரை அது தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளவில்லை.

colombo%20news-5.jpg

குறைந்த பட்சம் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவோ, பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 

colombo%20news-7.jpg

இந்நிலையில் குற்றச்சாட்டுகளின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று மாலை  ஆர்பாட்டம் நடை பெற்றது.

colombo%20news-8.jpg
colombo%20news-9.jpg
colombo%20news-10.jpg
colombo%20news-11.jpg
colombo%20news-12.jpg

  http://www.pathivu.com/news/34216/57//d,article_full.aspx

10714422_464953053644650_162608149923712

10646713_464953090311313_849961906188728

10678785_464953133644642_208811889471466

படங்கள்: twitter

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் கீழ் உள்ள இணைப்புகளுக்கு சென்று ஜெயக்குமாரியின் விடுதலைக்கு உதவுங்கள்-

Jeyakumari_CI.jpg

200 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களினால் நேற்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மற்றுமொரு குழுவினரால் அதே இடத்தில் வேறொரு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

 
 கடந்த மார்ச் மாதமளவில் கிளிநொச்சி பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு தனது  வீட்டில் இடமளித்ததாக தெரிவித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஜெயக்குமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
 அவர் கைது செய்யப்பட்டு 200 நாட்கள் பூர்த்தியாகும் நிலையில் அவரை விடுதலை  செய்யுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் நேற்று மாலை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு  முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் அசாத்சாலி,  மனித உரிமை செயற்பாட்டாளர் வண. சத்திவேல் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 இந்நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற  20 பேர் வரையிலான குழுவொன்று அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
 
 இதன்போது பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து இரு தரப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையே நின்று அங்கு ஏற்படவிருந்த பிரச்சினைகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
 

Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ 

 
- Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on. 
 
- Here are some pix/articles from yesterday's protest. It went off relatively well, but of course there was a counter pro-govt protest alongside. Pix  
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.