Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 'வைக்கோல் பட்டறை நாய்' போன்றவர்கள் – மகிந்த கிளிநொச்சியில் தாக்கு

Featured Replies

Mahi%20kili_CI.jpg

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து,  இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றிஇ முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விடுவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் 'வைக்கோல் பட்டறை நாயைப் போன்று' மக்களுக்குரிய நலத் திட்டங்களைத் தாங்களும் செய்யாமல் மத்திய அரசையும் செய்யவிடாமல் தடுத்திருப்பதாக அவர் சாடியிருக்கிறார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112519/language/ta-IN/article.aspx

புலம்பெயர் பார்வையில் கூட்டமைப்பு துரோகிகள் ஆனால் மகின் ஏன் இப்படி சொல்லுறார் இடைச்சல் என்று யாரவாது தேசியவாதிகள் வந்து விளக்கம் தருவினம் தானே பொறுப்பம் . :(

அஞ்சரன் உங்கள் பிரச்சனை புலம்பெயர் என்று திட்டுவதும் , தேசியம், துரோகி என்று ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொள்வது மட்டும் தான். இங்கு யாழ்களத்தில் எந்த தலைப்பு என்று கூட கவலைப்படாமல் உங்களுக்குள் வசைபாடி விட்டால். உங்களைப்பொறுத்தவரை அது பரம திருப்தி. ஆனால் மகிந்தவின் பிரச்சனை அதுவல்லவே. நீங்கள் வசைபாடுபவரின் சந்ததி, உங்களை வசை பாடுபவரின் சந்ததி என ஒட்டு மொத்த தமிழரும் நிரந்தர கொத்தடிமைகள் என்ற நிலையை ஏற்படுத்தினாலேயே அவருக்கு திருப்தி ஏற்படும். அதுவே அவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பை வசை பாடுவதற்கு காரணம். புரிந்தததா?

Edited by tulpen

அஞ்சரன் உங்கள் பிரச்சனை புலம்பெயர் என்று திட்டுவதும் , தேசியம், துரோகி என்று ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொள்வது மட்டும் தான். இங்கு யாழ்களத்தில் எந்த தலைப்பு என்று கூட கவலைப்படாமல் உங்களுக்குள் வசைபாடி விட்டால். உங்களைப்பொறுத்தவரை அது பரம திருப்தி. ஆனால் மகிந்தவின் பிரச்சனை அதுவல்லவே. நீங்கள் வசைபாடுபவரின் சந்ததி, உங்களை வசை பாடுபவரின் சந்ததி என ஒட்டு மொத்த தமிழரும் நிரந்தர கொத்தடிமைகள் என்ற நிலையை ஏற்படுத்தினாலேயே அவருக்கு திருப்தி ஏற்படும். அதுவே அவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பை வசை பாடுவதற்கு காரணம். புரிந்தததா?

நாங்களே கூட்டமைப்பை ஏற்றுக்கொள்வது இல்லை எப்படி இலங்கை அரசு ஏற்கும் அதை முதலில் தெளிவு படுத்துங்கள அண்ணே ..

 

இங்கு எங்களுக்கு அனைவரும் துரோகி யாரு எமக்காக கதைப்பது..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே கூட்டமைப்பை ஏற்றுக்கொள்வது இல்லை எப்படி இலங்கை அரசு ஏற்கும் அதை முதலில் தெளிவு படுத்துங்கள அண்ணே ..

 

இங்கு எங்களுக்கு அனைவரும் துரோகி யாரு எமக்காக கதைப்பது..

நீங்கள் சேர்க்காததுக்கு ஏன் மற்றவை எல்லாரையும் சேர்க்கிறீங்கள்? :lol:

 

ஆனானப்பட்ட ஒபாமாவையே அமெரிக்காவில் பாதிபேர் ஏற்றுக்கொள்ளவில்லை. :wub: அதற்காக அவர் ஜனாதிபதி இல்லையா? அரசியலில் இருந்தால்.. சரியோ, தவறோ.. விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

UPFAயின் யாழ் மாவட்ட கூட்டம் மகிந்த தலைமையில் யாழில் இடம்பெற்றது:-

 

இதனை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் என அறிவித்த மஹிந்த தனது சாதனை பட்டியல்களை வாசித்தார்:-

Flash%20news1_CI.jpg

ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மஹிந்த தனது சாதனை பட்டியல்களை வாசிக்கும் நிகழ்வாகியிருந்த நிலையில் மீள்குடியமர்வு உள்ளிட்ட எந்தவொரு முக்கிய விடயத்தை பற்றியும் பேசாது ஆமாம் சாமிகளது கூட்டமாகியிருந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  தெரியவருகிறது.

வழமையாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பேசுகின்ற கூட்டமைப்பு தலைகள் இன்று புறக்கணித்து விட்டதால் அது வெறுமனே பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியின் பங்காளிகள் கூட்டமாகியிருந்தது.

ஈபிடிபி மற்றும் முஸ்லீம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் அதே கட்சிகளது மாகாணசபை உறுப்பினர்களாலும் மண்டபம் நிரம்பியிருந்தது.

இவர்களுடன் கொழும்பிலிருந்து மஹிந்தவுடன் அழைத்து செல்லப்பட்ட அமைச்சர்கள் குழாமும் சேர மஹிந்த தனது சாதனை பட்டியல்களை வாசிக்க அனைவரும் ஆமாம் போடும் இடமாக அவ்விடம் மாறியிருந்தது.

எனினும் சமுர்த்தி நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் உள்ளக வீதிகள் முப்பது வருடங்கள் கடந்தும் கண்டுகொள்ளப்படாமை பற்றி பேசப்பட்டிருந்தது. எனினும் அவை குறித்த பொருட்படுத்தாத மஹிந்த இவை சிறிய விடயங்களென கூறிவிட்டு வெளியேறி விட்டார்.

முன்னதாக மஹிந்தவின் வடக்கு விஜயத்தின் போதான பொது நிகழ்வுகளை கூட்டமைப்பு பகிஸ்கரித்தாலும் அபிவிருத்திகுழு கூட்டத்தில் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறு அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் அறிக்கை சமர்ப்பித்துமிருந்தன. எனினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் தலைமையில் வடமாகாணசபை உறுப்பினர்களென அனைவருமே கூட்டத்தை பகிஸ்கரித்தமை அவரை சீற்றமடைய வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

குறிப்பாக மஹிந்தவை வரவேற்று கையாட்ட வேண்டுமெனவும் தவறின் சமுர்த்தி நிவாரணம் நிறுத்தப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார். அத்துடன் நிறுத்தப்பட்ட பயனாளிகளிற்கும் மீள வழங்கப்படுமென உறுதி மொழி தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவை பற்றி மஹிந்த அலட்டிக் கொள்ளவில்லை என்ற நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/112545/Default.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.