Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் ஸ்ரீலங்கா ஒருநாள் போட்டி தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

கலிசை முந்திய சங்கா
 

சர்வதேச ஒருநாள் கிரிகெட் போட்டியில் அதிக அரைச்சதம் கடந்த வீரர்கள் வரிசையில் குமார் சங்கக்கார இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


நேற்றைய தினம் இந்தியாவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிகெட் போட்டியில் 61 ஓட்டங்களை பெற்று தனது 87 ஆவது அரைச்சதத்தை கடந்த போதே இவர் இந்த சாதனையை படைத்தார்.

அதிகூடிய அரைச்சதம் கடந்தவர்கள் :-

சச்சின்         - 96
சங்ககார       - 87
கலிஸ்         - 86
டிராவிட்       - 83
இன்சமாம்      - 83
பொண்டிங்      - 82
ஜெயவர்த்தன   - 74

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=157623617211361915#sthash.osBQ61x5.dpuf

  • தொடங்கியவர்

இலங்கையின் தொடர் தோல்வி: கழற்றிவிடப்பட்ட சங்கா
 

 

இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டியில் ஆடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் அந்த அணி மோசமாக தோற்று தொடரை இழந்தது.

இதைத் தொடர்ந்து கடைசி 2 போட்டிக்கான இலங்கை அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணப் போட்டி நெருங்கும் நேரத்தில் தொடர் தோல்வியால் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது முன்னணி துடுப்பாட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, தமிகா பிரசாத் ,சுரஜ் ரந்தீவ், உபுல் தரங்கா ஆகிய 4 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக திரிமானே, சண்டிமால், ஷமிந்தா எரங்கா, அஜந்தா மெண்டீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர்.

ஆனால் சங்கக்காரா, பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக அணி மேலாளர் சொய்சா தெரிவித்துள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=167383625911364506#sthash.Ydo39fK7.dpuf

  • தொடங்கியவர்

இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை ?
 

 

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4ஆவது ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

இதுவரை இடம்பெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
கட்டாக்கில் இடம்பெற்ற முதல் போட்டியில் 169 ஓட்டங்களாலும் அகமதாபாத்தில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தாலும், ஐதராபாத்தில் இடம்பெற்ற 3ஆவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தாலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதேவேளை நாளை இடம்பெறவுள்ள போட்டியில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இலங்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கக்கார, ரந்தீவ், உபுல் தரங்க, தம்மிக்க பிரசாத் ஆகியோர் நீக்கப்பட்டு சந்திமல், மெண்டிஸ், திரிமன்னே, எரங்க, ஆகியோருக்கு இறுதி 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இரு அணிகளும் நாளை மோதுவது 148ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 147 போட்டிகளில் இந்திய அணி 81 போட்டிகளிலும் இலங்கை அணி 54 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிவடைய, 11 போட்டிகளுக்கு  முடிவு எட்டப்படவில்லை.

கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கைவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து டோனி குணமடையாததால் அணிக்கு திரும்பவில்லை.

ரொபின் உத்தப்பா, ரோகித்சர்மா, கரண் சர்மா, வினய்குமார், கேதர் ஜாதவ் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தவான், ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அமித் மிஸ்ரா, விர்த்திமான் சகா, முரளி விஜய் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ரகானேயுடன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அணிக்கு இது மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளதால் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கை அணி தனது தரப்படுத்தல் நிலையை ஸ்திரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

ஈடனில் அசத்துமா இந்தியா * இன்று இலங்கையுடன் 4வது மோதல்
நவம்பர் 12, 2014.

 

கோல்கட்டா: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில்,  இந்தியா அசத்தும்பட்சத்தில் தொடர்ந்து நான்காவது வெற்றியை பெறலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே தொடரை இந்தியா 3–0 என கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

 

ரோகித் வாய்ப்பு:

இந்திய அணியின் ‘பேட்டிங்’ பலமாக உள்ளது.  ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால்,  ரகானேவுடன் இணைந்து ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கலாம். சகா நீக்கப்பட்டதால், ராபின் உத்தப்பா ‘விக்கெட் கீப்பராக’ செயல்படலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் விராத் கோஹ்லி, ராயுடு, ரெய்னா இருப்பதால் வலுவான ஸ்கோரை எட்டுவது உறுதி.

 

உமேஷ் நம்பிக்கை:

உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ மிரட்டலாம். ஐதராபாத்தில் நடந்த 3வது போட்டியில், 4 விக்கெட் கைப்பற்றிய இவர், இன்றும் சாதிக்கலாம். ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஸ்டூவர்ட் பின்னி வாய்ப்பு பெறுவார். ‘சுழலில்’ அஷ்வின், அக்சர் படேல் இணைந்து அசத்தலாம்.

 

கிடைக்குமா ஆறுதல்:

ஏற்கனவே தொடரை இழந்ததால், இலங்கை அணியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுபவ சங்ககராவுடன், உபுல் தரங்கா, தம்மிகா பிரசாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக இடம் பெற்ற திரிமான்னே, சண்டிமால் ‘பேட்டிங்’ பலத்தை அதிகரிக்க காத்திருக்கின்றனர். ஐதராபாத்தில் சதம் அடித்த ஜெயவர்தனா நம்பிக்கை தருகிறார். குசல் பெரேரா, தில்ஷன் ஜோடி சிறந்த துவக்கம் கொடுத்தால் நல்லது. கேப்டன் மாத்யூஸ், ‘மிடில்–ஆர்டரில்’ கைகொடுக்கலாம்.

 

மெண்டிஸ் வருகை:

சுராஜ் ரந்திவ் (3 விக்.,) நீக்கப்பட்டு, அஜந்தா மெண்டிஸ் சேர்க்கப்பட்டது ‘சுழலின்’ பலத்தை அதிகரித்துள்ளது. இவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம். வேகப்பந்துவீச்சில் திசாரா பெரேரா, குலசேகரா எழுச்சி கண்டால் நல்லது.

 

ஈடன் கார்டனில் இதுவரை...

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இந்தியா–இலங்கை அணிகள் இதுவரை 4 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 2 (1991, 2009), இலங்கை (1996) ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு (2007) முடிவு இல்லை.

* கடந்த 2009ல் முதலில் ‘பேட்டிங்’ செய்த இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு எதிராக ஈடன் கார்டனில் தனது சிறந்த ஸ்கோரை பெற்றது. சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து, ஈடன் கார்டனில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வெற்றி பெற்றது.

*  இங்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினும் (496ரன்கள்), அதிக விக்கெட் கைப்பற்றியவர்களில் ஹர்பஜன் சிங்கும் (46 விக்.,) முதலிடத்தில் உள்ளனர்.

 

150வது ஆண்டு விழா

கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் சூழலில், இன்றைய நான்காவது போட்டி நடப்பது கூடுதல் சிறப்பு.

வரலாற்று சிறப்பு இம்மைதானத்தில் பல்வேறு மறக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன

* கடந்த 1996 உலக கோப்பை தொடர் அரையிறுதியில் (இந்தியா–இலங்கை), ரசிகர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட, போட்டியில் இலங்கை அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* 2001ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் லட்சுமண் 281, டிராவிட் 180 ரன்கள் எடுத்து, இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங், இரு இன்னிங்சிலும் சேர்த்து 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

* கடந்த 2011 உலக கோப்பை தொடரின் போது, 1.10 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட இம்மைதானத்தின் இருக்கை எண்ணிக்கை  67 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

* ஈடன் கார்டன் மைதானத்தின் நினைவாக, தபால் தலை வெளியிடப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415809661/IndiasrilankaODIkolkata.html

 

  • தொடங்கியவர்

இந்தியத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது : சங்கா
 

 

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் எனக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவுள்ளது என்று இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்காரவுக்கு இறுதி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள சங்கக்கார இதுபற்றி கூறுகையில்,

ஒரு தொடரின் பாதியில் இருந்து, குறிப்பாக அணி தோல்வியடைந்து கொண்டிருக்கும் போது யாரும் விலக விரும்பமாட்டார்கள்.

அணி தோல்விகளை சந்திக்கும் போது, ஒன்றாக இணைந்து விளையாடி வெற்றியைப்பெற வேண்டும் என்று தான் எப்போதும் விரும்புகிறோம்.
அணி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது  விலகுவது கண்டிப்பாக பிரச்சினையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

  • தொடங்கியவர்

இலங்கைக்கு 405 ரன்கள் இலக்கு

 

கோல்கட்டா: கோல்கட்டா நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா, 5 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்து, இலங்கை அணிக்கு 405 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹி்த் சர்மா, 264 ரன்கள் எடுத்து, கடைசி பந்தில் அவுட் ஆனார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1114186

  • தொடங்கியவர்

ரோகித் சர்மா உலக சாதனை: இந்திய அணி 404 ரன்கள் குவிப்பு
நவம்பர் 12, 2014.

 

கோல்கட்டா: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டைசதம் அடித்து அசத்தினார். இவரின் அதிரடி கைகொடுக்க இந்திய அணி 404 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

 

இந்திய அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அஷ்வின் நீக்கப்பட்டு ரோகித் சர்மா, கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. குலசேகரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரகானே (24), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த அம்பதி ராயுடு (8), எரங்கா பந்தில் போல்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, குலசேகரா வீசிய 30வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரோகித், ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

 

மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதம் விளாசினார். இவர் 66 ரனகளில் ஆட்டமிழந்தார். ரெய்னா (11) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய ரோகித் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுதத வீரர் ஆனார். ரோகித் 264 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்திருந்தது. உத்தப்பா (11) அவுட்டாகாமல் இருந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415809661/IndiasrilankaODIkolkata.html

  • தொடங்கியவர்

ரோகித் சர்மாவின் 264 ரன்களுக்கும் குறைவாக எடுத்து இலங்கை தோல்வி
 

 

கொல்கத்தாவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் 251 ரன்களுக்கு இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

இதன் மூலம் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இலங்கை அணி 43.1 ஓவர்களில் ரோஹித் சர்மா எடுத்த சாதனை 264 ரன்களுக்கும் குறைவாக 251 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியில் மீண்டும் கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 75 ரன்களை எடுத்தார். திரிமன்ன 59 ரன்களையும் திசர பெரேரா 29 ரன்களையும் முன்னதாக தில்ஷன் 34 ரன்களையும் எடுத்தனர்.

 

இந்திய அணியில் தவால் குல்கர்னி 10 ஓவர்கள் வீசி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஸ்டுவர்ட் பின்னியின் பந்துகள் ஸ்விங் ஆகியது. இதனால் அவர் தில்ஷன், சந்திமால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த இலங்கை 48/4 என்று சரிவு கண்டது. முன்னதாக ஜெயவர்தனேயை உமேஷ் யாதவ் எல்.பி. செய்தார். பந்து லெக்ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்து அவுட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றே ரீப்ளேயில் தெரிந்தது.

மேத்யூஸ், திரிமன்ன இணைந்து 5வது விக்கெட்டுக்காக 118 ரன்களையும் திரிமன்ன, பெரேரா இணைந்து 6வது விக்கெட்டுக்காக 52 ரன்களையும் சேர்த்ததே இலங்கை அணியின் சொல்லிக்கொள்ளும் தருணங்கள்.

 

ஒரு வீரர் எடுத்த ரன்களை எடுக்க முடியாமல் ஒரு அணி ஆல் அவுட் ஆனது ஒரு புறமிருக்க. 2000ஆம் ஆண்டில் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் சனத் ஜெயசூரியா இந்தியாவுக்கு எதிராக 161 பந்துகளில் 189 ரன்களை விளாச இலங்கை 299 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி கங்குலி தலைமையில் படுமோசமாக 54 ரன்களில் சுருண்டதையும் நாம் மறக்கலாகாது. 26.3 ஓவர்களில் இந்தியா 54 ரன்களில் சுருண்டது. ராபின் சிங் மட்டுமே 11 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கம் வந்தடைந்தார். சமிந்தா வாஸ் 5 விக்கெட்டுகளையும், முரளிதரன் 6 ஓவர்களில் 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்களை எடுக்க முடியாமல் இலங்கையின் 10 விக்கெட்டுகள் 251 ரன்களுக்கு மடிந்தது ஒரு புறம் இருந்தாலும், மேற்கூறிய ஷார்ஜா போட்டியில், அதுவும் இறுதிப் போட்டியில் ஜெயசூரியா சந்தித்த 161 பந்துகளை ஒட்டு மொத்த இந்திய அணியும் சந்திக்காமல் 159 பந்துகளில் 54 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டதையும் நாம் மறக்க இயலாது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-264-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6595711.ece

  • தொடங்கியவர்

சங்கா, மஹெலவை கூட்டங்களில் சேர்க்கக்கூடாது: சனத்
சனிக்கிழமை, 15 நவம்பர்

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் கூட்டங்களில் பேசிய முக்கிய விடயங்களை ஊடங்களுக்கு கூறியுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் குமார் சங்ககார, தான் ஓய்வை எதிர்பார்க்கவில்லை எனவும் அணி தோல்வியில் செல்லும் வேளையில் தொடரின் இடை நடுவே விலகுவது தனக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.

 

மஹேல ஜெயவர்தன தான் உலகக்கிண்ணதுக்;கு முன்னராக ஆரம்ப துடுப்பாட்ட வீராக விளையாட விரும்புவதாகவும் மத்திய வரிசை அனுபவம் இல்லாமல் இருப்பதால் தன்னை மத்தியவரிசையில் துடுப்பாடுமாறு தெரிவுக் குழுவினர் கோருவதாகவும் ஊடங்களுக்கு தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்தே சனத் ஜெயசூரிய குறித்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அணித்தலைவர், பயிற்றுவிப்பாளர் ஆகியோருடன் நடந்த கூட்டத்துக்;கு சிரேஷ்ட வீரர்கள் என்ற அடிப்படையில் அவர்களை அழைத்ததாகவும் கூறியுள்ள சனத், எதிர்வரும் காலங்களில் இவர்களை கூட்டங்களில் சேர்க்காமல் விட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

அத்துடன் இவர்கள் இருவரும் செய்துள்ள விடயம் பிழையான முன் மாதிரியாக அமைந்துள்ளது.   நாங்கள் பேசிய விடயங்களை, ஊடங்களில் கூறினால் எங்களுக்கு அது பெரிய சங்கடமான நிலையை  உருவாக்கும்.   துடுப்பாட்ட வீரர்கள் எங்கே துடுபாட வேண்டும் என தீர்மானிப்பது தெரிவுக்குழுவினரே தவிர வீரர்கள் அல்ல.

வீரர்கள் எங்கள் வேலையை செய்தால் நாங்கள் ஏன் என சனத் ஜெயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சங்ககார, தம்மிக்க பிரசாத் ஆகியோரை இறுதி இரண்டு போட்டிகளில் இணைக்காமல் ஓய்வு வழங்குவது என, அணி அறிவிக்கும் போதே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

இதை நான் அவருடன் பேசும் போதும் அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என தெரிவித்த சனத் ஜெயசூரிய, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடானா தொடர் வருகின்றது. சிரேஷ்ட வீரர்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/133396-2014-11-15-06-21-21.html

  • தொடங்கியவர்

5-வது ஒருநாள் போட்டியில் ரெய்னா இல்லை: 5-0 வெற்றியை நோக்கி இந்திய அணி
 

 

ராஞ்சியில் நாளை (ஞாயிறு) நடைபெறும் இலங்கைக்கு எதிரான 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 5-0 என்ற வெற்றி முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

வரும் நாட்களில் இந்திய அணி நிறைய கடினமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவிருப்பதை அடுத்து சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரெய்னாவுக்க்கு பதிலாக வளரும் அதிரடி வீரர் கேதர் ஜாதவ் நாளை அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 போட்டிகளில் வென்று விட்டோம் என்று அலட்சியம் கூடாது என்றும் 5-0 என்ற வெல்ல போராட வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி அணியினரிடத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

 

இலங்கை அணி பீல்டிங்கிலும் சோடை போய் வருகிறது 4-வது போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு 4 ரன்களில் திசரா பெரெரா கோட்டை விட்ட கேட்ச் மற்றும் பிற கேட்ச்கள் தவறவிடப்பட்டதால் அவர் உலக சாதனை செய்ய முடிந்தது.

இவர் மட்டுமல்ல இந்தத் தொடரில் சதம் அடித்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு இலங்கை தொடக்கத்தில் கேட்ச் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் இந்தத் தொடரில் உமேஷ் யாதவ் சிறப்பாக விளங்குகிறார். அவர் இதுவரை 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் ஆஸ்திரேலியா தொடர் முதல் உலகக் கோப்பை வரை தேவை என்பதால் நாளைய போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேபோல் தொடர்ந்து சரியாக ஆடாமலேயே இந்திய அணியில் இடம்பெற்று வரும் ஜடேஜாவுக்கு சரியான சவால் கொடுக்கும் அக்சர் படேல் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை நல்ல சிக்கன விகிதத்தில் கைப்பற்றியுள்ளார்.

 

தவால் குல்கர்னி கடந்த போட்டியில் அருமையாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் டெஸ்ட் மேட்ச் பவுலர். ஆனாலும் இவரை இன்னும் சரியான முறையில் தோனி பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது.

தோனிக்காக ராஞ்சிக்கு இந்தப் போட்டி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்தத் தொடரில் இல்லை.

ராஞ்சியில் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒரு போட்டியில் இந்தியா வென்றுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா 296 ரன்கள் இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

 

http://tamil.thehindu.com/sports/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-50-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article6603053.ece

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டி இன்று: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை..?
 

 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம், ஜார்க்கண்ட் மாநிலம் ரஞ்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில், இந்தியா 4-0 என வெற்றி பெற்றுள்ளது. இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை முழுமையாக வென்ற பெருமையைப் பெறும்.

இதுவரையிலும் இலங்கை அணி எந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு சவால் அளிக்கவில்லை. அதிலும், கொல்கத்தாவில் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் ரோஹித் சர்மா 264 ஓட்டங்களை அடித்து உலக சாதனை படைக்க, இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 100 பந்துகளில் சதம் அடித்த ரோஹித், அடுத்த 73 பந்துகளில் 164
ஒட்டங்களை குவித்தார்.

 

இதில் இருந்தே இலங்கையின் பந்து வீச்சும், களத்தடுப்பும் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை அறியலாம். மலிங்க, ஹேரத் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தங்கள் அணி பந்து வீச்சில் தடுமாறுவதை, இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் ஒப்புக் கொண்டார். ரோஹித் மட்டுமல்ல தொடக்க வீரர் ரஹானே, விராட் கோலி, அம்பாதி ராயுடுவும் சிறப்பாகவே செயல்படுகின்றனர். இந்த ஆட்டத்திலும் இது தொடரும் என நம்பலாம். இந்திய அணிக்கு பந்து வீச்சில் உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். வழக்கம் போல விராட் கோலி, கடைசி ஆட்டத்தில் சில பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடலாம்.

 

இந்தியா ஏற்கெனவே தொடரை வென்று விட்டதால், கடைசி ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார். ரெய்னாவுக்குப் பதிலாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கேதார் ஜாதவ் முதல் முறையாக இந்திய அணியில் ஆடும் வாய்ப்பைப் பெறலாம்.

இப்போட்டி நடைபெறவுள்ள ரஞ்சி, டோனியின் சொந்த ஊர். ஆனால், முதல் முறையாக அவர் இல்லாமல் ரஞ்சியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. டோனி இல்லாததால் ஐந்தாவது ஆட்டத்தைக் காண ரசிகர்களின் வருகையும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் மனோஜ் குமார் கூறுகையில், "இதுவரையிலும் 40 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. சலுகை டிக்கெட்டுகளையும் கணக்கில் கொண்டால் மட்டுமே, 20 ஆயிரம் பேர் வரை மைதானத்துக்கு வர வாய்ப்புள்ளது' என்றார்.

 

முதல் 4 ஆட்டங்களில் முறையே 169 ஓட்டங்கள்;, 6 விக்கெட், 6 விக்கெட், 153 ஓட்டங்கள்; வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றிகளை பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தொடரை முழுமையாக (5-0) வென்று இலங்கையை ‘வயிட்வாஷ்’ செய்ய வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய அணி முதல் முறையாக (1982-ம் ஆண்டு) இலங்கையுடன் மோதிய நேரடி ஒரு நாள் தொடரில் (3-0) அந்த அணியை ‘வயிட் வாஷ்’ ஆக்கியிருந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை அணியை  ‘வயிட் வாஷ்’ செய்ய உறுதி பூண்டுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/16/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு!

 

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இரு நாடுகளுக்கு நடுவேயான தொடர் ஒன்றில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெள்ளையடிப்புக்கு உள்ளாகாத நாடு என்ற இலங்கையின் பெருமையை இந்தியா தகர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.

 

டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு! இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிரோசான் டிக்வெல்லா 4 ரன்னிலும், தில்ஷான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்து வழக்கம்போல இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தனர். இதன்பிறகு களமிறங்கிய தினேஷ் சண்டிமால் 5 ரன்கள், ஜெயவர்த்தனே 32 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், கேப்டன் மேத்யூஸ் மற்றும் திரிமன்னே கடும் போராட்டம் நடத்தி சரிவில் இருந்து அணியை மீட்டனர். திரிமன்னே 52 ரன்கள் எடுத்த நிலையில் திசாரே பெரேரா 6 ரன்களும், பிரசன்னா ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசிவரை ஆட்டமிழக்காத மேத்யூஸ் 139 ரன்கள் குவித்தார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது. இந்திய பந்து வீச்சாளர்களில் குல்கர்ணி 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இலங்கை அணி இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இதுவரை தோற்றதில்லை. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் அந்த மோசமான சாதனையை இலங்கைக்கு பரிசளிக்க முடியும். இந்தியாவும் ஐசிசி ரேங்கிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sri-lanka-scores-286-8-against-india-5th-odi-at-ranchi-214975.html

  • தொடங்கியவர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் கன்னி சதம்
 

இந்­தி­யா­வுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தில் படு­தோல்­வி­களை சந்­தித்து வந்த இலங்கை சார்­பாக திற­மையை வெளிப்­ப­டுத்தி வரும் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் கன்னி சதத்தைப் பதிவு செய்­துள்ளார்.

7731angelow-mathews2_zps05333192.jpg
இந்­தி­யா­வுக்கு எதி­ராக ரன்ச்சி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­நடைபெறும் கடைசி சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் மிகவும் பொறுப்­பு­ணர்­வுடன் துடுப்­பெ­டுத்­தா­டிய ஏஞ்­சலோ மெத்யூஸ் 116 பந்­து­களை எதிர்­கொண்டு 10 சிக்­ஸர் கள், 6 பவுண்ட்­ரிகள் அடங்­க­லாக ஆட்­ட­மி­ழக்­காமல் 139 ஓட்­டங்­களைக் குவித்தார்.


இந்தத் தொடரில் இலங்கை சார்­பாக சதம் குவித்த இரண்­டா­வது வீர­ராவார்.
ஏற்­க­னவே மஹேல ஜய­வர்­தன சதம் ஒன்றைக் குவித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக் ­கது.

இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் பிர­கா­ சிக்கத் தவ­றிய நிலையில் ஏஞ்­சலோ மெத் யூஸ் 2 தட­வைகள் ஆட்­ட­மி­ழக்­காமல் 5 போட்­டி­களில் மொத்­த­மாக 339 ஓட்­டங்­க ளைப் பெற்­ற­துடன் அவ­ரது சரா­சரி 113.00 ஆகும்.

மெத்­யூஸின் சதம் லஹிரு திரி­மான்­ன வின் (52) இரண்­டா­வது தொடர்ச்­சி­யான அரைச் சதம் ஆகி­ய­வற்றின் உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7731#sthash.LoedewJh.dpuf

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

ராஞ்சி: இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த 4 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

 

இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மாத்யூஸ் அபாரமாக விளையாடி 139 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்து கைகொடுக்க 48.4 ஓவரில் 288 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 முழுமையாக கைப்பற்றியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1116424

 

  • தொடங்கியவர்

5-0 விகிதத்தில் ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி
 

 

இலங்கை அணியுடனான 5 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி  3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 5:0 விகிதத்தில் இந்திய அணி வெற்றிபெற்று இலங்கைக்கு வெள்ளையடித்துள்ளது.

ரன்ச்சியில் இன்று நடைபெற்ற 5 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286  ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 119 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களைக் குவித்து ஒருநாள் போட்டிகளில் தனது கன்னி சதத்தை பெற்றார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  48.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களைப் பெற்றது.

 

இலங்கை அணித்தலைவர் மெத்யூஸ் போன்று, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால் அவர்  126 பந்துகளில் இந்த ஓட்டங்களைப் பெற்றார்.

 

33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்திய ஏஞ்சலோ மெத்யூஸ் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும்  சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோஹ்லியும் தெரிவாகினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7733#sthash.mDILUaps.dpuf

  • தொடங்கியவர்

கோப்பை வென்றது இந்தியா: கோஹ்லி சதம்: ஐந்தாவது போட்டியிலும் வெற்றி
நவம்பர் 16, 2014.

 

ராஞ்சி: ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தனிநபராக அசத்திய கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடிக்க, இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5–0 என முதன்முறையாக முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது. இலங்கை தரப்பில் கேப்டன் மாத்யூஸ் சதம் வீணானது.     

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற  இந்திய அணி 4–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடந்தது.      

ஜாதவ் அறிமுகம்: இந்திய அணியில் கேதர் ஜாதவ் அறிமுக வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.                             

இலங்கை அணியின் அறிமுக துவக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா (4) ஏமாற்றினார். தில்ஷன் (35), சண்டிமால் (5), ஜெயவர்தனா (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை.     

 

                       

மாத்யூஸ் சதம்: பொறுப்பாக ஆடிய திரிமான்னே(52), ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் கடந்து அவுட்டானார். மறுமுனையில் அசத்திய மாத்யூஸ், கரண் சர்மாவின் 46வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.      

இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் (139 ரன்கள், 116 பந்து, 10 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.      

 

கோஹ்லி அசத்தல்: எட்டக்கூடிய இலங்கை விரட்டிய இந்திய அணிக்கு ரகானே (2) மோசமான துவக்கம் கொடுத்தார். கடந்த போட்டியில் உலக சாதனை (264 ரன்கள்) படைத்த ரோகித் சர்மா (9) நேற்று ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு ஜோடி அசத்தியது. காமகே பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராயுடு, ஒருநாள் அரங்கில் தனது 5வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த போது ராயுடு (59) வீணாக ‘ரன்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா (19), கேதர் ஜாதவ் (20) அஜந்தா மெண்டிஸ் ‘சுழலில்’ வெளியேறினர். இப்படி    

விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுபுறம் அபாரமாக ஆடிய விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 21வது சதத்தை பதிவு செய்து, நம்பிக்கை தந்தார்.                 

ஆட்டத்தின் 44வது ஓவரை வீசிய அஜந்தா மெண்டிஸ், முதலிரண்டு பந்தில் ஸ்டூவர்ட் பின்னி (12), அஷ்வின் (0) ஆகியோரை அவுட்டாக்க, ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இருப்பினும் மெண்டிஸ் வீசிய 49வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த கோஹ்லி, வெற்றியை உறுதி செய்தார்.  

         

இந்திய அணி 48.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (139), அக்சர் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.            ஆட்டநாயகன் விருதை இலங்கை கேப்டன் மாத்யூஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கைப்பற்றினார்.

 

1000 ரன்கள்                       

நேற்று அபாரமாக ஆடிய இலங்கை கேப்டன் மாத்யூஸ், ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டு 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர், 25 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், 8 அரைசதம் உட்பட 1062 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் விராத் கோஹ்லி (1054 ரன்கள்), இம்மைல்கல்லை எட்டினார்.       

          

10                       

சிக்சர் மழை பொழிந்த இலங்கையின் மாத்யூஸ் (10 சிக்சர்), ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில், முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா (11 சிக்சர், எதிர்–பாகிஸ்தான், 1996) உள்ளார்.       

                

4வது முறை                 

நேற்று பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் விராத் கோஹ்லி, இந்த ஆண்டு ஒருநாள் அரங்கில் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதன்மூலம், தொடர்ந்து நான்காவது முறையாக (2011–14) ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்தார்.         

        

5வது இடம்                 

அசத்தலாக ஆடிய இந்தியாவின் விராத் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 21 சதம் அடித்துள்ளனர். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (49 சதம்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (30), இலங்கையின் ஜெயசூர்யா (28), இந்தியாவின் கங்குலி (22)  உள்ளனர்.     

            

அக்சர் அசத்தல்                 

இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் அக்சர் படேல் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 11 விக்கெட் வீழ்த்தினார். இவரை அடுத்து இந்தியாவின் உமேஷ் யாதவ் (10 விக்கெட்), குல்கர்னி (8), அஷ்வின் (6) ஆகியோர் உள்ளனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அஜந்தா மெண்டிஸ், மாத்யூஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.   

        

மாத்யூஸ் முதல்வன்           

இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையில், இலங்கை கேப்டன் மாத்யூஸ் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 339 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 329 ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் ஷிகர் தவான் (283 ரன்), ரோகித் சர்மா (273), அம்பதி ராயுடு (250) ஆகியோர் உள்ளனர்.  

         

முதல் முறை                       

நேற்றைய கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், முதன்முறையாக 5–0 என இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக இரண்டு முறை, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வந்த இலங்கை அணியை 1–4 (1986–87), 1–3 (2009–10) என இந்தியா வென்றது.            

* கடந்த 1982ல் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3–0 என முழுமையாக வென்றது. தற்போது 32 ஆண்டுகளுக்கு பின், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது.   

        

* இரண்டு அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக 9 முறை இந்தியாவுக்கு வந்த இலங்கை அணியால் ஒருமுறை கூட தொடரை கைப்பற்ற முடியவில்லை. கடந்த 1997ல் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமன் ஆனது. எட்டு முறை (1982–83, 86–86, 90–91, 93–94, 2005–06, 06–07, 09–10, 14–15) இந்தியா தொடரை கைப்பற்றியது.

 

ரசித்தார் அமித் ஷா

நேற்றைய போட்டியை பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, அரங்கில் இருந்து உற்சாகமாக ரசித்தார். இவரது வருகை இந்திய அணிக்கு வெற்றியும் தேடித் தந்தது.

 

‘ஹெலிகாப்டர் ஷாட்’

கடைசி கட்டத்தில் மெண்டிஸ் பந்தை தோனி மாதிரி ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடித்து வெற்றியை உறுதி செய்தார் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி. இதன் மூலம் அவரை போல தானும் ‘பினிஷிங்’ செய்வதில் கில்லாடி என்பதை நிரூபித்தார். தவிர, ராஞ்சியில் தோனி இல்லாத குறையையும் போக்கினார்.

 

இந்தியா ‘நம்பர்–1’     

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5–0 என முழுமையாக கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) 117 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. அடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்கா (115 புள்ளி), ஆஸ்திரேலியா (114) அணிகள் உள்ளன.  இலங்கை(108) 4வது இடத்தில் நீடிக்கிறது.

 

இப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கும் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில், 4–1 என கோப்பை வெல்லும் அணி முதலிடத்துக்கு முன்னேறலாம்.

 

வென்ற ‘139’

நேற்று இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, இலங்கை கேப்டன் மாத்யூஸ் ஒரே மாதிரியாக 139 ரன்கள் எடுத்தது அபூர்வமான விஷயம். இதில் கோஹ்லிக்கே வெற்றி வசமானது.

 

‘100’

நேற்று வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் 100வது வெற்றியை(83 ஒருநாள் போட்டி, 14 டெஸ்ட், 3 ‘டுவென்டி–20’) பதிவு செய்தது.

* கோஹ்லி கேப்டனாக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416161493/IndiaSriLankaOneDayCricketCupViratKohli.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி ஒரு மாதிரி முடிஞ்சுதா.என்ன நடந்ததாம் இலங்கையணிக்குள் பிரச்சனையா?...வீரர்களுக்கும்,நிர்வாகத்திற்கும் பிரச்சனையா?...உண்மையாகவே இலங்கை சொத்தையாய் போய் விட்டதா?...இந்தியா பலம் பெற்று விட்டதா?...இப்படித் தான் மட்ச் நடந்து முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து நடந்து முடிந்த மட்ச்சா? ஒன்றுமே புரியல

  • தொடங்கியவர்

ரதி, இந்த திரியில் கருத்து இலக்கம் 4 யை வாசியுங்கள். மத்தியூஸ் என்ன சொல்லி இருக்கிறார் என்று.

இந்த தொடர் திடீரென திட்டமிடப்பட்டது. இலங்கை வீர்ர்கள் போதிய பயிற்சி இன்றி இந்தியா போனார்கள்.

சங்ககாரா வெளிப்படையாக ஊடகங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்தியா போக முதலே.

இலங்கை கிரிக்கெட் சபை இந்தியாவை திருப்திபடுத்தவும்,காசுக்காகவும் இந்த தொடருக்கு சம்மதித்தார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/148917-தோல்வி-எதிரொலி-இலங்கை-வாரியம்-ம/

இலங்கை அணியின் பந்து தடுப்பு மிக மோசமாக இருந்தது எல்லா போட்டிகளிலும். அத்தோடு இந்தியாவை அவர்களது மைதானங்களில் வெல்வது இலகுவான காரியம் அல்ல.

இங்கிலாந்து அணியுடன் 7 ஒரு நாள் போட்டி இலங்கையில் 26 ம் திகதி முதல் நடைபெற இருக்கு.அதில் தெரியும் இலங்கை அணியின் பலம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாதனைகள் படைத்தார் மெத்தியூஸ்
 

 

இந்திய அணிக்கெதிராக ராஞ்சியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் பல சாதனைகள் படைத்துள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் 25 போட்டிகளில் விளையாடிய மெத்தியூஸ் சதம் உட்பட 8 அரைச் சதங்களுடன் 1,062 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 139 ஓட்டங்களை விளாசிய மெத்தியூஸ், இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களை பெற்ற வெளிநாட்டு அணித்தலைவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் அணித் தலைவர் ஸ்டிராஸ்-158 ஓட்டங்கள்(பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு), அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி-156 ஓட்டங்கள் (நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு) ஆகியோர் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் 10 சிக்சர்களை பறக்கவிட்ட மெத்தியூஸ், ஜெயசூர்யாவுக்கு (1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 11 சிக்சருடன் 134 ஓட்டங்கள்) அடுத்து ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/11/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

  • தொடங்கியவர்

5-வது ஒருநாள் போட்டி வெற்றி: சில புள்ளிவிவரங்கள்
 

 

ராஞ்சியில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா, இலங்கையை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்தப் போட்டியின் சில சுவையான புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

அம்பாத்தி ராயுடு நேற்று எடுத்த அரைசதம் (69 பந்துகளில் 59) அவரது 5-வது ஒருநாள் அரைசதமாகும்.

5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 18.09 என்று கைப்பற்றிய அக்சர் படேல் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. 149 ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக 83 போட்டிகளில் வென்று, 54 போட்டிகளில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய வெற்றி விகிதம் இலங்கைக்கு எதிராக முதன் முறையாக 60%-க்கும் மேல் சென்றது.

மேலும், இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 6 ஒருநாள் போட்டித் தொடர்களை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.

 

5-0 என்ற ஒயிட் வாஷ் வெற்றியை இந்தியா இதுவரை 5 முறை சாதித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இருமுறை ஒயிட்வாஷ் வெற்றியைச் சாதித்ததோடு இலங்கை, ஜிம்பாவே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை இதனைச் சாதித்துள்ளது.

ஒயிட் வாஷ் வெற்றியை தோனி, கோலி ஆகியோர் தலைமையிலேயே இந்தியா சாதித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மென் ஆனார் இலங்கை கேப்டன் மேத்யூஸ். அவர் 25 போட்டிகளில் 1062 ரன்களை 70.80 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

 

மேத்யூஸைத் தொடர்ந்து இந்த ஆண்டில் 1,000 ரன்களைக் கடந்த மற்றொரு வீரர் விராட் கோலி ஆவார். இவர் 21 போட்டிகளில் 1054 ரன்களை 58.55 என்ற சராசரியில் பெற்றார். தொடர்ந்து 2011, 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி.

இந்தியாவுக்கு எதிராக 10 சிக்சர்களை விளாசிய ஒரே கேப்டன் ஆனார் மேத்யூஸ். இதற்கு முன்னர் ரிக்கி பாண்டிங் 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடித்த 8 சிக்சர்களே இந்தியாவுக்கு எதிராக ஒரு கேப்டன் அடித்த அதிகபட்ச சிக்சர்களாகும்.

சனத் ஜெயசூரியா பாகிஸ்தானுக்கு எதிராக சிங்கப்பூர் மைதானத்தில் 1996-ஆம் ஆண்டு 65 பந்துகளில் எடுத்த 134 ரன்களின் போது 11 சிக்சர்களை அடித்திருப்பதே இன்றும் இலங்கையின் சாதனையாக இருந்து வருகிறது.

 

ஆனாலும், ஒரு கேப்டனாக, ரிக்கி பாண்டிங் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு ஜொகான்னஸ்பர்கில் 105 பந்துகளில் 164 ரன்கள் எடுத்த போது அடித்த 9 சிக்சர்கள் என்ற சாதனையை நேற்று மேத்யூஸ் தனது 10 சிக்சர்கள் மூலம் கடந்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி நேற்று தனது 21-வது சதத்தை எடுத்தார். வெற்றிகரமான துரத்தல்களில் அவரது 13-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

4-ஆம் நிலையில் களமிறங்கி 139 ரன்கள் எடுத்த விராட் கோலி, இதேநிலையில் இலங்கை அணிக்கு எதிராக ஹோபார்ட் மைதானத்தில் எடுத்த 133 ரன்களைக் கடந்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6607947.ece

  • தொடங்கியவர்

http://youtu.be/5uFl4m6jCho

 

 

நேற்று Angelo mathews அடித்த 10 சிக்ஸர்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'ஒயிட் வாஷ்': சனத் ஜெயசூரியா பொறுப்பேற்பு
 

 

திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை படுதோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பேற்பதாக இலங்கை அணித் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாத அமர்வில் விளையாட்டுத் துறை துணை அமைச்சராகவும் உள்ள சனத் ஜெயசூரியா இதனை தெரிவித்தார்.

 

"விளையாட்டுத் துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்த வேண்டிய அவசியமில்லை. நான் இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்று சனத் ஜெயசூரியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக முன்னாள் கேப்டனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுனா ரணதுங்கா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை திருப்தி செய்வதற்காக திடீரென இந்தத் தொடரை ஏற்பாடு செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தாநந்த அதுல் கமகே, கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் ஆகியோரை கடுமையாக சாடியிருந்தார்.

மேலும், இந்தத் தோல்விகள் உலகக் கோப்பை தயாரிப்பில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் சாடியிருந்தார்.

இதனையடுத்து, இன்று சனத் ஜெயசூரியா, தோல்விகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6608277.ece

  • தொடங்கியவர்

இந்தியாவிடம் பெற்ற தோல்வி ஒரு கெட்ட கனவை போல உள்ளது: ஜெயசூர்யா புலம்பல்

 

டெல்லி: இந்தியாவுடன் ஐந்து போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியது ஒரு கெட்ட கனவு போல உள்ளது என்று புலம்புகிறார் இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜெயசூர்யா. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இரு தரப்பு ஒருநாள் போட்டியொன்றில் ஐந்து போட்டிகளிலும் இலங்கை தோற்பது அதன் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். இந்தியாவிடம் பெற்ற தோல்வி ஒரு கெட்ட கனவை போல உள்ளது: ஜெயசூர்யா புலம்பல் இதுகுறித்து தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா அளித்த பேட்டி: இலங்கை அணி, இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் நம்பியிருக்கவில்லை.

 

அதே நேரம் தனது முழுமையான திறமையை காண்பித்து விளையாடி, இந்தியாவுக்கு தக்க போட்டி கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்தது பொய்த்துவிட்டது. இந்தியாவிடம் இலங்கை வீரர்கள் மொத்தமாக சரணடைந்துவிட்டனர். இந்திய வீரர்கள் போல இலங்கை பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடியிருக்க வேண்டும். முதல் 4 இடங்களுக்குள் இறங்கும் ஏதாவது ஒரு வீரராவது 40 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் வெற்றிபெற முடியும். உலக கோப்பை தொடர் துவங்க சிறிது காலமே உள்ள நிலையில் இலங்கை இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் கவலை அளிக்கிறது.

 

இந்தியாவுடனான தொடர் ஒரு கெட்ட கனவைப்போலவே உள்ளது. இருப்பினும் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இலங்கை விளையாட உள்ளதால், அந்த தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தால் உலக கோப்பைக்கு தயாராக வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தோல்வியடைந்துள்ள இந்த நேரத்தில்தான் இலங்கை வீரர்களு்கு ரசிகர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். வீரர்களை ஒரேடியாக விமர்சனத்திற்கு உள்ளாக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயசூர்யா தெரிவித்தார். அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய ஜெயசூர்யா இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். மொத்தம் 7 செஞ்சுரிகள் அடித்துள்ள ஜெயசூர்யா அதில் அதிகபட்சமான 189 ரன்னை இந்தியாவுக்கு எதிராகவே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/sri-lanka-defeat-againist-india-is-bad-dream-sanath-jayasuriya-215107.html

  • தொடங்கியவர்

அனைத்து வடிவங்களிலும் இலங்கைக்கு எதிராக 100 போட்டிகளில் வென்ற இந்தியா
 

 

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-0 என்று கைப்பற்றியதையடுத்து, ஒருநாள், டெஸ்ட், டி20 என்று அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக இந்தியா இலங்கையை 100 போட்டிகளில் வென்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 14 முறையும், டி20 கிரிக்கெட்டில் 3 முறையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 83 முறையும் இந்தியா வென்று 100 போட்டிகளில் இலங்கையை இந்தியா வென்றுள்ளது.

 

இந்திய மண்ணில் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றதில்லை. 1982-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் 2 ஒருநாள் போட்டிகளில் இலங்கை விளையாடியது. ஆனால் அதில் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றது.

மிகச்சிறந்த வீரர்களை இலங்கை அணி உருவாக்கி இந்தியாவில் வந்து விளையாடிய போதும் ஒருநாள் தொடரில் வெற்றி என்பது இன்று வரையிலும் இலங்கை அணிக்கு இந்திய மண்ணில் லபிக்கவில்லை.

 

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கைக்கு எதிராக மொத்தம் 190 சர்வதேச போட்டிகளை அனைத்து வடிவங்களிலும் இந்தியா விளையாடியதில் 100 போட்டிகளில் வென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 211 போட்டிகளில் 74-ல் வென்றுள்ளது.

அடுத்ததாக மே.இ.தீவுகளுக்கு எதிராக மொத்தம் 209 போட்டிகளில் 70 போட்டிகளில் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 210 போட்டிகளில் 69-ல் வென்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக 191 போட்டிகளில் 63-ல் மட்டும் வெற்றி கண்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 107 போட்டிகளில் 38-ல் வென்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-100-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6611935.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.