Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெமுனு வோச்சு எங்க போச்சு

Featured Replies

வட போர் முனையில் மேலும் 40சடலங்கள்.

- பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 14 ழுஉவழடிநச 2006 08:26

வட போர் முனையிலிருந்து நேற்று நான்கு சடலங்கள் மீட்க்கப்பட்டதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் உடலங்கள் உருக்குலைந்த சடலங்களாகக் காணப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். களமுனையில் பலியான சிறிலங்காப் படையினரின் 75உடல்கள் இதுவரை மீட்க்கப்பட்டு அனுப்பப்பட்டதுடன் மேலும் நான்கு உடல்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றில் எடுக்கக்கூடிய உடல்களை எடுத்து இராணுவ மரியாதையுடன் எரிக்கப்டவுள்ளதாகுவும் தெரிவித்தார்.

நாங்கள் மேலும் ஒரு சிறிலங்காப் படையினரின் உடலை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் மூலமாக அனுப்பிவைத்துள்ளோம். மேலும் நான்கு உடல்கள் தற்போது எங்களிடம் உள்ளன அவற்றையும் அனுப்பி வைக்கவுள்ளோம்.

இதே வேளை முன்னணி நிலைகளிலே மிகவும் உருக்குலைந்த நிலைகளில் நாற்பதிற்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கின்றன. அவற்றை அவர்களின் சொந்த விபரங்களை உறவினர்களுக்கு அனுப்பும் நோக்குடன் எடுத்துவைத்துவிட்டு அவ்வுடல்களை உரிய இராணுவ மரியாதைகளுடன் எரிக்கும் படி முன்னிலைகளில் உள்ளவர்களுக்கு அறிவித்துள்ளோம் என்றார். இளந்திரையான்.

http://sankathi.org/news/index.php?option=...id=845&Itemid=1

கெமுனு வோச்சு எங்க போச்சு

  • தொடங்கியவர்

கெமுணு வோச் படைப் பிரிவினர் பலாலிக்கு மீளப் பெறப்பட்டுனர்.

கடந்த 11ம் திகதி வடபோர்முனையில் நடைபெற்ற மோதலில் புலிகளால் அழிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் கெமுணு வோச் படைப்பிரிவில் உயிர் தப்பிய படையினர் அவர்களது உடமைகளுடன் பலாலி நோக்கி நகர்த்தப்படுவதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.நேற்றைய தினம் ஏ 9 பாதை ஊடாக படையினரும் அவர்களது தளபாடங்களும் பலாலி நோக்கி நகர்தப்பட்டதாக குடிசார் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெமுணு வோச் படைப் பிரிவினர்

"கெமுணு வோச்" என்றால் இதன் அர்த்தம் என்ன?

கெமுணு வோச் (Regiment - Gamunu Watch)

கெமுணு வோச் சிறீலங்கா ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு.

கெமுணு என்பது இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் ஒருவனின் பெயர்.

இதே போல சிங்க, கஜபா, விஜயபாகு, போன்ற சிங்களப்பெயர்களில் படைப்பிரிவுகள் உண்டு.

சிறீலங்கா ராணுவம் ஆங்கிலேயர் காலத்தில் உருவானது(http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Army).

வோச் என்ற பெயரில் இங்கிலாந்தில் பிரபல படைப் பிரிவு ஒன்று உள்ளது (http://www.army.mod.uk/blackwatch/).

ஆங்கிலேயர் வீதிகளுக்கு அவர்களின் ஊர் பெயர்களிட்டது போல (York Street, Cambridge Place) இதற்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

சின்னம்.

reg_07_b.jpg

Col of the Regt - Brig S Udumalagala RSP Ldmc

Centre Comdt Col - JCP Paksaweera RSP

2005 ஆம் ஆண்டின் இதன் சாதனையாக ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்காக இதன் ஒரு படைப் பிரிவு Haiti சென்றமை குறிப்பிடப்படுகின்றது.

gw13.jpggw11.jpg

மேலதிக விபரம் - http://www.army.lk/fullregement.php?id=48

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கெமுணு வோச்" என்றால் இதன் அர்த்தம் என்ன?

-----------------------------------

Gemunu Watch

'Watch' என்றது ஆங்கில பதம் 'காவல்' அல்லது பாதுகாப்பு என்று அர்த்தம்....

'Gemunu' சிங்களப் பெயர் 'Dutugemunu' துடுகைமுனு என்ற சிங்கள அரசனின் பெயருடன் வந்ததே... அவன் 'துடுகாமனி' 'காமனி அபய' என்றெல்லாம் அழைக்கப்பட்டான். ('Dutthagamani' 'Gamini Abhaya')

Gamini Dissanayaka என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?

தமிழ் அரசன் எல்லாளன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில்...இந்த துட்டகைமுனு தெற்கே எல்லை காணாக் கடல், வடக்கே தமிழர், புத்த - சிங்களவருக்கு ஏது வாழ்வு? என கி.மு. 161 இல் தன் தபப்பனிடத்தே கேட்டவன். பின்பு, வயதில் முதிர்ந்த எல்லாளனுடன் இளைஞனாகிய இந்த துடுகாமினி தனி சமருக்கு அழைப்புவிட்டு தன்னுடைய யானையை ஏவி எல்லாலனை விழப்பன்னி கொண்டவன். இவனையே இந்த சிங்கள பேரினவாதம் சிங்களவர்களின் வீரதீர தலைவனாக கொண்டாடுகின்றனர். இந்த சிங்களவாத அரசனின் பெயராளேயே ஒரு சிங்கள இரானுவ படை பிரிவு - 'கெமுனு வாட்ச்'

இந்த நேரத்தில் இதனுடன் தொடர்புபட்ட சில கட்டுரைகளை வாசிப்பது காலச் சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாவம்ச மனப்போக்கு (Mahavamsa Mind-Set) - நக்கீரன்

Wednesday, 11 May 2005

------------------------------------------------------------

துட்டகைமுனு புத்த தர்மத்துக்கு புகழ் தேடித் தரத் தனது படைகள் சகிதம் கங்கையைக் (மகாவலி) கடந்து தமிழர்களோடு போர் புரியப் புறப்பட்டான். அவனது கை ஈட்டியின் முனையில் (புத்தரின்) திருச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அவனது பாதுகாப்புக்குத் துணையாக நூற்றுக்கணக்கான பவுத்த தேரர்களும் உடன் சென்றனர்.

கைமுனு மகியங்கனைப் பகுதியை ஆண்ட சாத்தன் என்ற தம்pழரசனை வாளுக்கு இரையாக்கினான்.

அடுத்து அம்பதித்தகம் ( பின்தனைக்கு கிட்டிய தொலைவில் உள்ளது) பகுதியை ஆண்ட தமிழரசனான தித்தம்பனோடு ஆறு மாத காலம் போரிட்டு அவனைத் தந்திரம் செய்து வென்றான். கைமுனு தன்னுடைய தாயின் அழகைக் காட்டியும் அவனுக்கு அவளை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லியும் ஏமாற்றியதாக மகாவம்சம் தெரிவிக்கிறது.

தொடர்ந்து ஆற்றின் கரையோரமாகச் சென்ற கைமுனுவின் படை ஒரே நாளில் 7 தமிழரசர்களைத் தோற்கடித்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைமுனுவின் படையினருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் அந்த இடத்துக்கு ஹேமராம எனப் பெயரிடப்பட்டது.

அடுத்து அந்தாரசோபவில் மகாகோட்டன் தோற்கடிக்கப்பட்டான், தொடர்ந்து தோனகவாரா, ஹலகொல இஸ்சராயா, நலிசோப நாலிக, திகபாயாவை ஆண்ட திகபாயன், நான்கு மாதத்தில் கச்சதீதாவியை ஆண்ட கப்பிதீசன், கொத்தநகரில் கோட்டன், வாகித்தாவை ஆண்ட அலவகநாகன், வகித்தவில்லை ஆண்ட தமிழனான வாகித்தன், காமினியில் காமினி, கும்பகமவில் கும்பகன், நந்திகமாவில் நந்திகன், கானுகமவில் கானுபன், தம்பாவில் தம்பன், உண்ணமில் உண்ணமன், ( இவர்கள் முறையே மாமனும் மருமகனும்) ஜம்பு போன்ற தமிழ் அரசர்கள் கைமுனுவினால் தோற்கடிக்கப் பட்டனர். கைப்பற்றப்பட்ட ஊர்களுக்கு கைமுனுவின் படைத் தளபதிகளது பெயர் சூட்டப்பட்டது.

இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு 'இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்' என சூளுரைத்தாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் - அதிகாரம் 25)

தமிழர்களோடான கடைசி யுத்தம் விஜயநகரத்தில் இடம்பெற்றது.

மகாவம்சம் கைமுனு படையில் தமிழரும் எல்லாளன் படையில் சிங்களவரும் இருந்ததை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. கைமுனுவின் படைத் தளபதிகளில் நந்தமித்தன் வேலுசுமணன் இருவரும் தமிழர்களாவர். எல்லாளன் படையில் திகாஜந்து என்ற படைத்தளபதி இருந்தான்.

எனவே எல்லாளன்- துட்டகைமுனு இருவருக்கும் இடையிலான போர் ஆட்சிக் கட்டிலுக்கான போரே அல்லாது மகாவம்சம் சித்திரிப்பது போல தமிழர்-சிங்களவர் போர் அல்ல. கைமுனு காலம் சிங்களவர் என்ற இன அடையாளம் உருவாகாத காலம்.

ஆனால் மகாவம்சம் 'புன்நெறி' (false beliefs ) கொண்டவர்களிடம் இருந்து தென்பகுதியை ஆண்ட பவுத்த இளவரசன் துட்டகைமுனு எல்லாளனை வென்று இலங்கை முழுவதையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்தான் எனக் கூறுகின்றது.

உண்மையில் துட்டகைமுனு தென்பகுதி முழுவதையும் ஆளவில்லை என்பதை அவன் அனுராதபுரம் செல்லும் வழியில் எதிர்ப்பட்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களோடு போர் புரிந்து வெல்ல வேண்டி இருந்தது என அதே மகாவம்சம் தெரிவிக்கிறது.

இங்கு வேறொரு உண்மையையும் நோக்க வேண்டும். விஜயனது வருகைக்கு (கிமு 483) முன்னர் இலங்கையில் மனிதர்கள் இருக்கவில்லை, இயக்கர்களும் இராட்சதர்களும் மட்டுமே இருந்தார்கள் என்று கூறும் மகாவம்சம் துட்டகைமுனு காலத்தில் (கிமு 101-77) மகியங்கனை தொடங்கி அனுராதபுரம் ஈறாக தமிழரசர்கள் ஆண்டார்கள் எனக் கூறுகிறது.

துட்டகைமுனுவுக்குப் பின்னரும் அனுராதபுரத்தில் இருந்து அடுத்த 1,000 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களில் பலர் தீசன் அல்லது நாகன் என்ற அடைமொழிப் பெயர்களோடு ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் நாகர் வம்சத்தினரே என்பதை அவர்களது பெயர்கள் காட்டுகின்றன. பிற்காலத்தில்தான் அவர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து சிங்களவர்களாக மாறினார்கள்.

எல்லாளனைப் புறம்கண்ட துட்ட கைமுனு தன் அரண்மனையில் இருந்தவாறு போரினால் ஏற்பட்ட உயிரழிவுகளை எண்ணி கவலையில் மூழ்கி இருந்தான். இதனைக் கேட்டறிந்த பவுத்த தேரர்கள் அரண்மனை ஏகி அவனைச் சந்திக்கிறார்கள்.

துட்டகைமுனு அவர்களை வரவேற்று, வழிபாடு செய்து இருக்கைகளில் அமருமாறு கூறிய பின்னர் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்கிறான்.

'அரசே நாங்கள் உங்களுக்கு ஆறுதல் சொல்ல பவுத்த சங்கத்தின் பீடாதிபதியால் அனுப்பப் பட்டுள்ளோம்'

'வணக்கத்துக்குரிய தேரர்களே! எனக்கு எவ்வாறு மன ஆறுதல் கிடைக்கும்? நான் போர்க்களத்தில் பல இலட்சம் பேரைக் கொன்று குவித்துள்ளேனே?'

'அரசே! நீங்கள் சொர்க்கம் புகுவதற்கு போரினால் ஏற்பட்ட உயிரிழப்பு எந்த விதத்திலும் தடையாக இருக்காது! போர்க் களத்தில் ஒன்றரை மனிதர்களே கொல்லப்பட்டார்கள்! ஒருவர் மும்மணிகளில் சரண் அடைந்தவர். மற்றவர் பஞ்ச சீலத்தை மட்டும் அனுட்டித்த அரை மனிதர். எஞ்சியோர் நம்பிக்கைஈனர்கள். கேடு கெட்டவர்கள். இவர்கள் விலங்குகளைவிட மேலாக மதிக்கக் கூடியவர்கள் (Unbelievers and men of evil life were the rest, not more to be esteemed than beasts) அல்லர்! ஆனால் உங்களைப் பொறுத்தளவில் அரசே! நீங்கள் புத்தரின் தர்மத்துக்கு பலவிதத்திலும் புகழ் தேடித்தர வேண்டியவர். எனவே உங்கள் உள்ளத்தில் இருக்கும் கவலை அனைத்தையும் ஒழித்து விடுங்கள்!'

மகாவம்சத்தின் கதாநாயகன் துட்ட கைமுனுவும் அதற்குப் பிந்திய சூளவம்சத்தின் கதாநாயகன் தாதுசேனனும் பவுத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராகப் போர் புரிந்தார்கள் என வர்ணிக்கப்படுகிறார்கள்.

மகாவம்சம் என்ற நூலை மகாநாம தேரர் பாளி மொழியில் எழுதினார் என்பது தெரிந்ததே. பவுத்த தேரர்களின் சமய மொழியாக மட்டும் விளங்கிய பாளி மொழியில் எழுதப்பட்ட அந்த நூல் சாதாரண பொதுமக்களைச் சென்றடையவில்லை.

பாளி மொழியில் இருந்த மகாவம்ச நூலை முதன் முதலாக Turnour என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1987 ஆம் ஆண்டு பதித்து வெளியிட்டார். பின்னர் முதலியார் எல்.சி. விஜயசிங்கா என்பவர் அதனை 1989 ஆண்டு மறுபதிப்புச் செய்து

வெளியிட்டார். பேராசிரியர் Wilhelm Geiger என்பவர் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பை பாளி விளக்கவுரை சங்கம் (Pali Text Society ) 1908 ஆம் ஆண்டு பதித்து வெளியிட்டது. பின்னர் அதனை திருமதி டீழனந என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

மகாவம்சம் மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பவுத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல சிங்கள அறிவுப் பிழைப்பாளர் மற்றும் மேல்தட்டு சிங்களவர் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது. இதன் விளைவாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் அன்னிய ஆட்சியாளரது ஆதிக்கத்தினால் சிங்கள சமூக பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து சிங்கள தேசியவாதிகள் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். சிங்கள பவுத்த தேசியத்துக்கு புத்துயிர் கொடுப்பதன் மூலம் சிங்களவர்களது பாரம்பரியமான மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றின் தனித்துவதைதையும் தன்மானத்தையும் நிலைநாட்ட இவர்கள் முயன்றார்கள்.

இந்த எதிர்ப்புணர்வுகளுக்கு அமைப்பு வடிவம் கொடுக்கும் பொருட்டு 1880 ஆம் ஆண்டு பவுத்த இறைஞான சங்கம் (Buddhist Theosophical Society) தொடங்கப்பட்டது. பவுத்த கல்வியை பரப்புவதே இந்த சங்கத்தின் நோக்கமாக இருந்தது. பவுத்த சிங்கள பாரம்பரிய அடிப்படையில் அரசு அமைய வேண்டும் எனவும் இந்தச் சங்கம் விரும்பியது.

பவுத்த சிங்கள தேசிய இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பலரில் டேவிட் ஹேவவித்தாரன என்னும் இயற்பெயர் கொண்ட அநகாரிக தர்மபாலா குறிப்பிடத்தக்கவர். செல்வக் குடியில் பிறந்த (கிபி 1864) இவர் மேலை நாட்டு கல்வி பண்பாட்டைக் கைவிட்டு பவுத்த தர்மத்தின் பாதுகாவலர் எனப் பொருள் குறிக்கும் தர்மபாலா என்ற பெயரைச் சூட்டிக் கொண்டதோடு பவுத்த சங்கத்தில் ஒரு தேரராகவும் சேர்ந்து கொண்டார்.

பவுத்த சிங்கள மக்களுக்கு அநகாரிக தர்மபாலா பவுத்த சிங்கள தேசியத்தின் தலைவராகவும், தன்னலமற்ற தேசியவாதியாகவும், சிங்கள பவுத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் சின்னமாகவும் தோற்றமளித்தார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிரான அநகாரிக தர்மபாலா தலைமையிலான போராட்டம் காலப் போக்கில் தமிழர் - முஸ்லிம்கள் ஆகிய சமூகத்தினருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக வடிவம் கொண்டது.

இதன் விளைவாக இலங்கை பவுத்த சிங்களவருக்கே சொந்தமானது தமிழர்- முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்ற கருத்தியல் வலுப் பெற்றது. அதனை உறுதி செய்யும் பொருட்டு சிங்கள பவுத்தர்களைக் குறிக்க 'சிங்களபவுத்தாய' என்ற புதுச் சொல்லை அநகாரிக தர்மபாலா உருவாக்கினார்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் இலங்கை பவுத்த சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, தமிழர்கள் அன்னியர் என்ற மகாவம்சக் கோட்பாட்டை மீள்வாசிப்புச் செய்த அநகாரிக தர்மபாலரது சீடர்களாகவே விளங்கி வருகிறார்கள்.

டி.எஸ். சேனநாயக்கா முதல் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டம் (1948) தேர்தல் திருத்தச் சட்டம் (1949), தமிழரின் பாரம்பரைப் பூமியில் திட்டமிட்ட பட்டிப்பளை, அல்லை-கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொண்டு வந்த சிங்களம் மட்டும் சட்டம் (1956);, திருமதி பண்டாரநாயக்காவின் தரப்படுத்தல் (1972), ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பவுத்த மதத்துக்கு அரச அந்தஸ்து கொடுக்கும் அரசியல் யாப்பு (1978) அநகாரிக தர்மபாலரின் 'மகாவம்ச மனப்போக்கை' (Mahavamsa mind set ) ஒட்டி ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக எடுத்த அரசியல் நடவடிக்கைகளாகும்.

அண்மைக் காலமாக அம்பாரை மாவட்டத்தில் சுனாமி அழிவின் பின்னர் பவுத்த சிங்களவர்கள் புத்தரின் சிலைகளை புதிதாக நிறுவி வருகிறார்கள். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவ் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஹெல உருமய தலைவர் சோபித தேரர் 'புத்தர் சிலையை நிறுவ பவுத்தர்களாகிய நாங்கள் யாருடைய ஒப்புதலையும் பெற வேண்டிய அவசியமில்லை. ஸ்ரீலங்காவின் ஒவ்வொரு அங்குல நிலமும் பவுத்தர்களாகிய எங்களுக்குச் சொந்தமானது........' எனப் பதில் இறுத்தார். இதுவும் மகாவம்ச மனப்போக்கின் ஒரு வெளிப்பாடாகும்.

ஸ்ரீலங்காவின் சமகால அரசியலை ஆய்வு செய்பவர்கள் இந்த மகாவம்ச மனப்போக்கின் பின்னணியில் அல்லது அதன் பின்புலத்தில் அதனைச் செய்தல் வேண்டும்.

'சிங்கள கிராம மக்கள் நல்லவர்கள். அவர்களை சிங்கள அரசியல்வாதிகள்தான் பிழையாக வழி நடத்துகிறார்கள்' என்ற சில தமிழர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை தவறானது. சிங்கள இலக்கியங்கள், நாடோடிப் பாடல்கள் தமிழர்களை சிங்களவர்களது பரம வைரிகளாகவே சித்திரிக்கின்றன. அதில் சிங்கள கிராம மக்கள் ஊறிப்போய் இருக்கிறார்கள்.

மறைந்த மாமனிதர் சிவராம் (தராக்கி) சிங்கள பவுத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்ற தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் (24-10-2004) அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ஒவ்வொரு தமிழ்த் தேசியவாதியும் எழுத்தெண்ணி அந்தக் கட்டுரையைப் படித்துச் செரிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதில் இருந்து சில முக்கிய பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன்.

1)சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சம் பௌத்த மதமாகும். சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோவொருவகையில் இலங்கையின் தேரவாத பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன.

2) முதலில் எழுதப்பட்ட தீபவம்சம், அதையொட்டிப் பின்வந்த மஹாவம்சம், சூளவம்சம், ராஜவாளிய என சிங்கள அடையாளத்தின் ஊற்றுமூலங்களாக உள்ள அனைத்தும் பௌத்த பிக்குகளால் இலங்கைத் தீவில் தேரவாத பௌத்தத்தின் அரசியல் மேலாண்மை கருதி உருவாக்கப்பட்டவையாகும். இவையின்றி சிங்கள தேசியமில்லை. ஏன்? சிங்களம் என்ற இனப்பெயரின் தோற்றுவாயான விஜயன் கதையே இல்லை.

3) சிங்கள தேசியத்தையும் இலங்கையின் தேரவாத பௌத்த பீடங்களின் அரசியல் மேலாண்மைக் கலாசாரத்தையும் பிரித்துப் பார்த்திட முடியாது என நான் கருதுகிறேன்.

4) இலங்கை பௌத்தத்தின் முக்கிய அம்சங்களாக இரண்டு விடயங்கள் வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. ஒன்று, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்கான விசேட இடமாக இலங்கைத் தீவு புத்தபகவானால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற நம்பிக்கை. இரண்டு, பௌத்த அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தல் என்ற எண்ணம்.

http://sooriyan.com/index2.php?option=cont...65&pop=1&page=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம் - Taraki

24 October 2004

கடந்தமுறை எழுதிய கட்டுரையில் தென்னிலங்கையில் தமிழர் உரிமைக்காக ஒரு காலத்தில் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எமது சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபாடு காட்டிய பலர் (ஜனாதிபதி சந்திரிகா உட்பட) எங்ஙனம் இன்று சிங்கள மேலாண்மையாளர்களாக மாறியுள்ளனர் என்பதுபற்றி எனது அனுபவங்களை எழுதியிருந்தேன்.

இவர்கள் அனைவரும் ஏன் இப்படி மாறினார்கள் என்ற கேள்வியை மட்டும் அக்கட்டுரை எழுப்பியதேயொழிய விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை. அதைப் படித்தவர்களிடமிருந்து இரு கருத்துக்கள் வந்தன. முதலாவது, நான் குறிப்பட்ட அனைவரும் தத்தமது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் காரணமாகவே சிங்கள மேலாண்மையாளர்களாக மாறினார்கள் என்பது. இரண்டாவது, சிங்கள தேசியவாதத்தின் உள்ளார்ந்த தன்மை காரணமாகவே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன என்ற கருத்தாகும்.

தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசியம் மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது என்பதே ஆரம்பத்திலிருந்து இந்தக் கட்டுரைத் தொடரின் உட்கிடையாகும்.

சுயநலம் காரணமாகவே தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள மேலாண்மையாளராக மாறுகின்றனர் என நம்புகின்றவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது இந்த அரசியல்வாதிகளுடைய சுயநலம் அவர்களை எப்போதுமே இறுதியில் ஏன் சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்குள் தள்ளவேண்டும்?

அவர்களுடைய சிங்கள அடையாளத்தின் அடிப்படைத் தன்மையே அவர்களை இவ்வாறு செய்யத் து}ண்டுகின்றது என்பது எனது கருத்து. தமிழர் பற்றிய சாதகமற்ற வரலாற்று பார்வைகளும் ~சிங்களமாய் இருத்தல்| என்ற உளநிலைக்கு இன்றியமையாத அத்திவாரமாக இருக்கின்றன என்பதை நாம் நோக்க வேண்டும்.

சிங்கள தேசியவாதத்தால் நாம் கடந்த 56 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பாதிப்புகளுக்குள்ளாகி வந்துள்ளோம். ஆகவே அதன் வரலாறுபற்றி, உளவியல்பற்றி, கலாசாரம்பற்றி தமிழில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யவேண்டிய கடமை, கட்டாயம் எம்முன் உள்ளது. காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தை, போச்சுவார்த்தை எனக் கத்துகிறோம். எல்லாம் பிழைத்த பின்னர் ஏமாந்த வரலாறுகளைப்பற்றி பேசுகிறோம். சிங்கள தேசியத்தைப் பற்றிச் சரியாக புரிந்துகொண்டால் நாம் இவ்வாறான குழப்பங்களுக்கு ஆளாகி காலத்துக்குக் காலம் அல்லல்படுவதை ஓரளவேனும் தவிர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சம் பௌத்த மதமாகும். சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோவொருவகையில் இலங்கையின் தேரவாத பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த குருமாரும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்வது கடினம். ஏனெனில் சிங்கள அடையாளமும் உணர்வும் இலங்கையின் பௌத்த மத பாரம்பரியங்களில் வேரூன்றி இருப்பதற்கு பௌத்த பீடங்கள் சிங்கள சமூகத்தில் இன்றியமையாதனவாகும்.

முதலில் எழுதப்பட்ட தீபவம்சம், அதையொட்டிப் பின்வந்த மஹாவம்சம், சூளவம்சம், ராஜவாளிய என சிங்கள அடையாளத்தின் ஊற்றுமூலங்களாக உள்ள அனைத்தும் பௌத்த பிக்குகளால் இலங்கைத் தீவில் தேரவாத பௌத்தத்தின் அரசியல் மேலாண்மை கருதி உருவாக்கப்பட்டவையாகும். இவையின்றி சிங்கள தேசியமில்லை. ஏன்? சிங்களம் என்ற இனப்பெயரின் தோற்றுவாயான விஜயன் கதையே இல்லை.

சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தங்களுடைய இன அடையாளத்தின் அடித்தளமாக மேற்படி பௌத்த அரசியல் மேலாண்மையை நிறுவும் நு}ல்களின் கருத்தியலையே கொள்கின்றனர். எனவேதான் சிங்கள தேசியத்தையும் இலங்கையின் தேரவாத பௌத்த பீடங்களின் அரசியல் மேலாண்மைக் கலாசாரத்தையும் பிரித்துப் பார்த்திட முடியாது என நான் கருதுகிறேன்.

மதத்தைத் தூக்கி ஒருபக்கம் போட்டாலும் தமிழ் அடையாளம் மாறுபடாது. மதமே இல்லாத தமிழ்த்தேசியம் சாத்தியமானது. "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை உருவாக்கியவன் ஒரு முட்டாள். கடவுளை வணங்குபவன் ஒரு காட்டுமிராண்டி " என தன் இறுதிநாள்வரை அயராது கூறிவந்த பெரியாரை நாம் இன்றுவரை தமிழ்த் தேசியத்தின் தந்தையாக போற்றுகின்றோம்.

மறுபுறம் பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறுவதுபோல உலகின் பெருமதங்கள் அனைத்தும் (கிறிஸ்தவம், இந்துமதம், இஸ்லாம், பௌத்தம், சமணம்) தமிழில் தம்மை சிறப்புற வெளிப்படுத்தியுள்ளன. இதுமட்டுமன்றி மத நம்பிக்கையை அறவே மறுத்த ஆசீவகமும் உலோகாயதமும் தமிழில் தமது கோட்பாடுகளை பரப்பியுள்ளன. மதமில்லாமலோ அல்லது அனைத்து மதங்களுடாகவோ தமிழ்தேசியமென்பது சாத்தியமாகும். ஆனால் பௌத்தமின்றி சிங்கள தேசியத்தைப்பற்றி நாம் பேசமுடியாது. அதுவே அதன் பிரிக்கணிடியாத அடித்தளமாகும்.

இலங்கை பௌத்தத்தின் முக்கிய அம்சங்களாக இரண்டு விடயங்கள் வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. ஒன்று, பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்கான விசேட இடமாக இலங்கைத் தீவு புத்தபகவானால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற நம்பிக்கை. இரண்டு, பௌத்த அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தல் என்ற எண்ணம்.

ஆரம்பத்தில் எழுதப்பட்ட தீபவம்சத்திலிருந்து பிற்காலத்தில் எழுதப்பட்ட ராஜவாளியவரை இவ்விரு கருத்துகளுமே ஊடுபாவாக காணப்படுகின்றன. இக்கருத்துக்களின் மேலாதிக்கம் காரணமாக இலங்கையில் பௌத்தத்தை வளர்ப்பதில் தமிழர்களின் பங்கோ அம்மதத்தை பர்மா தொடக்கம் சீனாவரை தமிழர்கள் பரப்பிய கதையோ எடுபடாமல் போயிற்று. புத்தர் வானில் பறந்துவந்து இலங்கைத் தீவின் நான்கு திசைகளை ஆசிர்வதித்தார் என்றும், இதன் காரணமாக இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சிங்கள, பௌத்த மக்களுக்கே உரித்துடையவை என்ற நம்பிக்கை சிங்கள அடையாளத்தின் அடிநாதமாக அன்றிலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது.

கடந்த 56 வருடங்களாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த ஒற்றையாட்சி நாடு என்ற கருத்தும் தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு என்பனவும் இன முரண்பாட்டிற்கு ஒரு நியாயமான தீர்வை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றன. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக குரலெழுப்பிய ஜே.ஆர். ஜயவர்தன கூறியதும் இன்று புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபை தூக்கி எறியவேண்டும் என்று கோரி பத்து லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கக் கிளம்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய கூறுவதும் ஒன்றே. எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை சிங்கள பௌத்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நாடு என்பது தீபவம்சத்திலிருந்து இன்றுவரை நிலவி வரும் நம்பிக்கையாகும். துட்டகைமுனு தமிழரை முறியடித்து இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் சிங்கள பௌத்த ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான் என்ற கதை அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள தேசத்தில் கொண்டாடப்படுவதின் அடிப்படையில்தான் இலங்கையின் ஒற்றையாட்சியை மாற்றி எமக்கொரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்வதில் நாம் காலம் காலமாக எதிர்கொண்டுவரும் முட்டுக்கட்டைகளை நோக்க வேண்டும். இதில் நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புவது என்னவெனில் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி என்பதும் சிங்கள அடையாளம் - தேசியம் என்பதும் வேறாக்கிட முடியாத ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையாகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் சமஷ்டி பற்றி இடையிடையே பேசினாலும் அவர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை பல்வேறு வழிகளில் பேணவும் பலப்படுத்தவுமே முயற்சி செய்தனர்ஃசெய்கின்றனர். இது விடயத்தில் ஜனாதிபதி சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஹெல உறுமய தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோரிடையே எந்த வேற்றுமையும் இல்லை. இதை உணராமல் எம்மிடையே காலத்துக்குக் காலம் தோன்றும் சில வெங்காயக் கூட்டங்கள் ஒவ்வொரு சிங்களத் தலைவரைப் பற்றியும் எம் மக்களிடையே போலி நம்பிக்கைகளையூட்டிடும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

சிங்கள தேசியத்தின் இந்த அம்சங்கள் 20 ஆம் நு}ற்றாண்டில் தோன்றிய சிங்கள அதிகார வர்க்கங்களால் இலங்கைத் தீவின்மீது தமது பிடியை வலுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்ட மேலாண்மைக் கருத்தியலின் கூறுகள் என பல அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். அதாவது நாம் இன்று காணும் சிங்கள தேசியம் என்பது நவீன சிங்கள ஆளும் வர்க்கத்தால் தயார்செய்யப்பட்டு பரப்பப்பட்ட ஒருவகை கற்பிதம் என்ற கருத்தே இந்த அறிஞர்களிடம் காணப்பட்டது. இந்த அடிப்படையில் சிங்கள ஆளும் வர்க்கம் முறியடிக்கப்பட்டால் சிங்கள தேசியமும் அதன் மேலாண்மைக் கருத்தியலும் தாமாகவே இல்லாதொழிந்துவிடும் என இடதுசாரிகளும் பின்நவீனத்துவ கல்வியாளர்களும் நம்புகின்றனர்.

தமிழரின் நியாயமான அரசியல் அவாவுதல்கள், இன்னல்கள் பற்றி சிங்கள மக்களிடையே நாம் இடையறாது பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது ஆட்சியாளரின் சிங்கள பௌத்த தேசியம் என்ற கற்பித்ததிலிருந்துவிடுபட்ட

  • தொடங்கியவர்

கெமுணு வோச் படைப் பிரிவினர்

"கெமுணு வோச்" என்றால் இதன் அர்த்தம் என்ன?

வீணா அடிவாங்கிச்சாகும் படைப்பிரிவு என்றும் சொல்லலாம்

:lol::lol::lol::lol::lol:

கெமுனுவோச் தன்னையே வோச்பண்னமுடியாமல் இருக்குது இபோது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.