Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ந்து செல்லும் வண்ணங்கள்

Featured Replies

ஊர்ந்து செல்லும் வண்ணங்கள்

 

Nov 4, 2014
 

பலரும் பயத்துடனும் அருவருப்பாகவும் நினைக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர் மா. ரமேஸ்வரன். ஒரு பக்கம் இந்திய வனப் பணி அலுவலராகும் முயற்சிகளுடன் மற்றொருபுறம் ஊர்வனவற்றைத் தேடுவது, அவற்றைப் படம் எடுப்பது, ஆராய்ந்து கட்டுரைகளை எழுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே முழு நேர வேலையாகக் கொண்டிருக்கிறார். இதற்காக www.rcind.in என்ற இணையதளத்தையும் உருவாக்கி வருகிறார். ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியே இல்லை எனலாம்.
தொடர்புக்கு: mrameshwaran@rcind.in

rameswaran_2186048a.jpg

 

 

 

1_2186047g.jpg

 

கறையான் புற்றுப் பல்லி: இந்தப் பல்லிக்குப் பூச்சிகள் பிடிக்கும் என்றாலும், மிகவும் பிடித்தவை கறையான்கள்தான். தரையில் நடமாடும் இயல்பு கொண்ட இந்தப் பல்லி, இரவில் இரை தேடுவதால் காண்பது அரிது. ஆங்கிலப் பெயர்: Termite hill Gecko

 

 

2_2186046g.jpg

 

 

அரணை: பரவலாகக் காணப்படும் இந்த அரணை வகை நீண்ட வாலைக் கொண்டது. அதனால், வேகமாக ஊர்ந்து செல்லும்போது, பாம்பு ஊர்ந்து போவதைப் போலவே இருக்கும். குட்டியாக இருக்கும்போது, அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் வால் பகுதியின் நிறம் வளர வளர மங்கிவிடும். கல் இடுக்குகள், மக்கிய இலைகளின் அடியில் வசிக்கும் இதன் உணவு பூச்சிகள். ஆங்கிலப் பெயர்: Spotted supple skink

 

3_2186045g.jpg

 

பச்சை காட்டு ஓணான்: மரங்கள், புதர் செடிகளில் காணப்படும் இந்த அழகான ஓணான் அரையடி ஸ்கேல் அளவுக்கு இருக்கும். நீண்ட வாலைக் கொண்ட இதன் முக்கிய உணவு பூச்சிகள். ஆங்கிலப் பெயர்: Common green forest lizard

 

4_2186044g.jpg

 

நல்ல பாம்பு: நஞ்சுடைய இந்தப் பாம்புக்கு, இரட்டைச் சக்கர இந்திய நாகம் என்ற பெயரும் உண்டு. 4 முதல் 5.5 அடி நீளம் வரை வளரும். அச்சுறுத்தப்படும்போது எலும்புகளின் துணையுடன் கழுத்துச் சதையை விரித்துக் காட்டி எச்சரிக்கை செய்யும். ஆங்கிலப் பெயர்: Spectacled cobra

 

5_2186043g.jpg

 

 

கோரைப் பாம்பு: நஞ்சற்ற இந்தப் பாம்பு ஏரிகள், கம்மாய் போன்ற நீர்நிலைகளில் வசிக்கும். நண்டு, மீன், தவளைகளை உண்ணும். பரவலாகக் காணப்பட்டாலும் கண்ணுக்குத் தென்படுவது அரிது. ஆங்கிலப் பெயர்: Olive keelback water snake

 

 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6563581.ece?ref=slideshow#im-image-4

Edited by நிழலி
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியண்ணா மேல் உள்ள பந்தி இரண்டு தரம் பதியப் பட்டுள்ளது ....மற்றப்படி நன்று.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

நிழலியண்ணா மேல் உள்ள பந்தி இரண்டு தரம் பதியப் பட்டுள்ளது ....மற்றப்படி நன்று.

இரண்டு தரம் Ctrl + V அமத்திட்டன்... :)

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பாம்புக் கோதாரியை விட்டிட்டு மற்றதுகளைப் போடுங்கோ நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பாம்புக் கோதாரியை விட்டிட்டு மற்றதுகளைப் போடுங்கோ நிழலி

சுமே... இந்தக் கொக்கு நல்லாயிருக்கா?  :D

Beautiful-Snakes-4.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.