Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கு இணைப்புப் பற்றிய விவாதம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ABOUT NORTH EAST MEAGER AND MUSLIMS RIGHTS

தோழன் பசீர் சேகுதாவுத்  தலைவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அவர்களது  சகோதரன் நசீர் அவர்களது கேழ்வி
Segudawood Nazeer முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை கொள்ளாத சமயம் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகளை இனம் கண்டு கருத்து சொன்ன ஒரு சாமான்னியன் நீங்கள் அதுவும் விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு தமிழர்களை எதிரிகளாக்கிய சமயம். வடகிழக்கு இணைந்து 13 அமுல்படுத்தப்பட்டால் அதில்முஸ்லிம்களுக்கு என்ன பங்குண்டு என்பதை சொல்லமுடியுமா
எனது பதில்

 

 

தோழன் பசீர் சேகுதாவுத்துக்கு,
 

 

நான் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது என்பாதுகாப்பு விடுதலை தொடர்பாக துணிச்சலுடன் நீங்கள் எடுத்த முன் முயற்சிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் முயற்சிகளும் தோழர் தலைவர் றவ் ஹக்கீம் அவர்களது துணிச்சலான அறிக்கையும் சர்வதேச நெருக்குதல்களுமே என் விடுதலைக்கு அடிப்படையானது.

வடகிழக்கு இணைப்பு பற்றி நாம் நிறைய விவாதிதிருக்கிறோம். இறுதியாக ஒரு இரவு முழுவதும் தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களோடு பேசியபோதும் இதுபற்றி விவாதித்தோம் உங்களைப்போலவே அவருக்கும் முஸ்லிம்களது இறமையும் சமத்துவமும் பற்றிய எச்சரிக்கை உணர்வு இருந்தது. அதுதான்நியாயமானாதும்கூட.

இது இலகுவாகவும் 100% சரியாகவும் முடிவெடுக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பதை நாம் இருவருமே அறிவோம். வரலாற்றின் முக்கியமான முடிவுகள் இத்தகையதே. நீங்களும் வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் நிலபதுகாப்பு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறவர். இது நாம் முடிவுகள் எடுக்க வேன்டிய தருணம்.

நாம் காலம் காலமாக இரட்டைக் குழந்தைகள்போல பின்னிப் பிணைந்து வாழ்கிறோம். எங்களது நிலமும் வாழ்வும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கடந்த காலத்தில் இணைந்து போராடாதமையால் நாம் நிறைய நிலங்களை இழந்து விட்டோம். இதில் முஸ்லிம்கள் சரி பாதிக்கும் மேல் இழந்துள்ளார்கள் அல்லவா? அருசியை சிங்கள குடியேற்றவாத அரசிடம் இழந்துவிட்டு தமிழரும் முஸ்லிம்களும் உமிக்கு அட்படுகிற கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் தலைமுறையின் தலையாய ப்ரொறுப்பு அல்லவா? .

 முஸ்லிம்களைப் பொறுத்து வடகிழக்கு மாகாண இணைப்பை ஏற்க உரிய நிபந்தனைகளை முன்வைபது அல்லது தனி மாநிலமாக பிரிவது தவிர்த்து நிலப்பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வேறு தீர்வுகள் மார்க்கங்கள் உண்டா? உங்கள் பதில் என்ன?

 

 

தமிழரது மேலாதிக்கம் எற்படாது என்பதை லெபனான் போன்ற ஒரு மாதிரியில் அமைப்பு ரீதியாக உறுதி செய்யப்படவேண்டும் என்பதே என் முதல் தெரிவான விருப்பம். அத்தகைய அடிப்படையிலான வடகிழக்கு இணைப்பை தோழர் அஸ்ரப் அவர்களும் நீங்களும் ஆதரிப்பீர்கள் என்பதுதான் அன்று எனது புரிதலாக இருந்தது.
இப்பவும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

தமிழரதும் முஸ்லிம்களதும் எஞ்சியுள்ள நிலங்களைப் பாதுகாக்க வேறு மார்க்கம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழரும் முஸ்லிம்களும் சரி நிகர் சமமாக வடகிழக்கை இணைப்பது. அல்லது முஸ்லிம்கள் தனித்துப்போய் தங்கள் நிலங்களைப் பாதுகாக்க முடியுமானால் இணைந்த வடகிழக்கு மாகானமும் தனி முஸ்லிம் மாகாணமும் அமைப்பது என்பவைதான் நம்மிடம் எஞ்சியுள்ளமார்க்கங்கள் என்கிற எனது நம்பிக்கை தவறானதா?

சிங்கள குடியேற்ற வாத அரசுடன் சமரசம் பேசி இழந்தவற்றை மீட்பது மட்டுமல்ல இருக்கும் நிலங்களையும் நலங்களையும் காப்பதும்கூட சாத்தியமில்லை என்பதை வரலாறு நூறு தடவைக்கு மேல் நிரூபித்துள்ளது. இதுதான் முஸ்லிம்கள் முன்னுள்ள பெரும்சவால்.

 

உலக மயமாதல் ஈழ உலகத் தமிழர்களை  இணைப்பதுபோலவே பல்வேறு நாட்டு இனங்களைச் சேர்ந்த முஸ்லிம்களையும்  இணைக்கிறது. ஆனால் அதன் நலன்கள் இலங்கை முஸ்லிம்களுக்குக் கிட்டாத வண்ணம் சிங்கள இனவாதச் சக்திகளால் முஸ்லிம் பயங்கரவாத பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. இனக்கொலைக்குப் பின்னரும் புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என சிங்கள அரசு பிரகடனப் படுதிய பின்னரும் தமிழர்மீதும் அதே பயங்கரவாதப் பூச்சாண்டியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான எல்லா முரண்பாடுகளையும் மீறி திரும்பத் திரும்ப நமது இருப்பு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போலவே அமைந்து விடுகிறது.

 

 

சிங்கள இன்வெறியின் கூர்முனை இப்ப முஸ்லிம்களை நோக்கியும் அடிக்கடி  திருப்பப் படுகிறது. தென்னிலங்கையில் முஸ்லிம்கள்மீதான தாக்குதல்கள் அன்றாட நிகழ்ச்சி ஆகிவிட்டது. இது தற்செயல் நிகழ்ச்சியல்ல. மூஸ்லிம்களுக்கு எதிரான 1915 இனக்கலவரத்தின் நூறாவது 2015ல் வருகிறது. அதனை அப்பாவி முஸ்லிம்களின் இரத்தத்தால் பதிவு செய்ய சிங்கள பெள்த்த சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன என்றே நான் கருதுகிறேன். தமிழரும் முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் இணைந்து செயல்ப்பட வேண்டியது வரலாற்றின் நியதியாக வலுத்து வருகிறது.

முஸ்லிம்கள் தனி மாநிலமாகப் பிரிந்து செல விரும்பினால் அதனை ஆதரிப்பதுதான் நியாயம் என நான் 1990களில்

 

 

இருந்தே சொல்லி வருகிறேன். தமிழர்களைப்போலவே முஸ்லீம்களுக்கும் தங்கள் நிலைபாட்டை தெரிவு செய்வது அவ்வளவு இலகுவல்ல. ஏனேனில் இது ஒரு வரலாற்று முடிவு. எனவே 100% சரியான முடிவு என்று எதுவுமில்லை. எந்த முடிவை எடுத்தாலும் தமிழர்களைப்போல முஸ்லிம்களும் பாரம்பரிய மண்ணைப் பாதுகாபதையே அடிப்படையாக முன்நிறுதி முடிவு எடுக்க வேண்டும் என முஸ்லிம்களின் நண்பனாக வலியுறுத்த விரும்புகிறேன்.

தமிழரும் முஸ்லீம்களும் சரிநிகர் சமமாக செயல்ப்படக்கூடிய அமைப்பின் கீழ் வடகிழக்கு மாகாணம் இணைய வேன்டும் எபதுதான் என் விருப்பம். அதுதான் வரலாற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்கும். எந்த நிலையிலும் முஸ்லிம் மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தோழமையுடன் அலைக்கும் சலாம் வணக்கம்.

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

Nalla pathil eruku kavinjar iya wait...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.