Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை 2015 முதல் அதிர்ச்சி: மே.இ.தீவுகளை வீழ்த்தியது அயர்லாந்து
 

 

மேற்கிந்திய தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நெல்சன் மைதானத்தில் நடந்த போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி கண்டது. இந்த உலகக் கோப்பையின் முதல் அதிர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

 

நிர்ணயிக்கப்பட்ட 305 ரன்கள் இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங், போர்டர் ஃபீல்ட் ஜோடி நிதானமான துவக்கத்தைத் தந்தனர். ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கும் அதிகமாக எடுத்து வந்த இந்த இணை 14-வது ஓவரில் பிரிந்தது. கெயில் வீசிய பந்தில் போர்டர்ஃபீல்ட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களத்தில் இணைந்த ஜாய்ஸ், ஸ்டிர்லிங் ஜோடி வெகு சிறப்பாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. ஸ்டிர்லிங் 19 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் ஜாய்ஸ், ஸ்டிர்லிங்கின் அதிரடிக்கு ஈடு கொடுத்து ஆடி வந்தார். துரிதமாக 39 பந்துகளிலேயே அவர் அரை சதத்தைக் கடந்தார்.

 

 

ஸ்டிர்லிங் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ஜாய்ஸ் தனது அதிரடியைத் தொடர்ந்தார். தொடர்ந்து களமிறங்கிய நியால் ஓ பிரெய்ன் தன் பங்கிற்கு ரன்களை வேகமாக சேர்த்து 38 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு ஓவருக்கு குறைந்தது ஒரு பவுண்டரி தவறாமல் வர, அயர்லாந்து அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

வெற்றிக்கு வெறும் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜாய்ஸ் சிக்ஸ் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 67 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 84 ரன்களை அவர் குவித்திருந்தார். தொடர்ந்து வந்த பால்பெர்னியும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதற்குப் பின் வெகு நிதானமாகவே அயர்லாந்து அணி ரன் சேர்த்தது. 8 ஓவர்களில் 19 ரன்கள் தேவையாயிருக்க, ஓவருக்கு 2-3 ரன்கள் மட்டுமே வந்தது. 43-வது ஓவரில் வில்சன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அயர்லாந்தின் நட்சத்திர வீரர் கெவின் ஓ ப்ரெய்னும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். லேசான பதட்டம் உருவான சூழலில் அடுத்தடுத்த பவுண்டரிகள் அடித்து நியால் ஓ ப்ரெய்ன் வெற்றி இலக்கை சுருக்கினார்.

முடிவில் 45.5 ஓவர்களில் ஒரு பவுண்டரியோடு வெற்றி இலக்கைக் கடந்தது அயர்லாந்து அணி. நியால் ஓ ப்ரெய்ன் 60 பந்துகளில் 79 ரன்களுடனும், மூனி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

முன்னதாக டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மே.இ. தீவுகள் இழந்தது. ஆனால் சிம்மன்ஸ் - டேரன் சமி ஜோடி அணியின் நிலையை ஸ்திரப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 154 ரன்களைக் குவித்தனர்.

 

சமி 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதத்தைக் கடந்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். முடிவில் மே.இ. தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களை எடுத்தது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி தந்த அயர்லாந்து அணி, இந்த முறை முதல் போட்டியிலேயே மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2015-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6901197.ece

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது அம்பயர் சதி: அஜ்மல் குற்றச்சாட்டு

 

அடிலெய்டு: உமர் அக்மலுக்கு அவுட் கொடுத்த விவகாரத்தில் மூன்றாவது நடுவரான ஸ்டீவ் டேவிஸ் வேண்டுமென்றே சதி செய்துவிட்டதாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சையது அஜ்மல் குற்றம்சாட்டியுள்ளார். உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் நடுவே நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 301 என்ற இலக்கை துரத்திச் சென்ற பாகிஸ்தானில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து நடையை கட்டியதால் இந்தியா எளிதாக வென்றது.

 

உமர் அக்மல் அவுட்டால் சர்ச்சை இதனிடையே பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான உமர் அக்மலுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

டோணி கேட்ச் உமர் அக்மல் ரன் ஏதும் எடுக்காமல் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா ஆப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை சுழலும் வகையில் வீசினார். அதை தடுத்தாட முயன்றபோது பந்து பேட்டை தாண்டி விக்கெட் கீப்பர் டோணியிடம் தஞ்சம் அடைந்தது. டோணியும் அவுட் என்று நினைத்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். ஆனால் கள நடுவர் அவுட் தரவில்லை.

 

3வது நடுவர் ஆய்வு இதையடுத்து மூன்றாவது நடுவரிடம் மறு ஆய்வுக்கு செல்வதாக கேட்டுக் கொண்டார் டோணி. இதையடுத்து மூன்றாவது நடுவர் ஸ்டீவ் டேவிட் ரிப்ளே செய்து ஆய்வு செய்தார். ஸ்னிக்கோ மீட்டர் எனப்படும் நவீன கருவியை கொண்டும் பேட்டில் பந்து பட்டதா இல்லையா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

 

பேட்டில் பட்டமாதிரி இல்லை கிரிக்கெட்டை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி சேனல் வழியாக, ஸ்னிக்கோ மீட்டர் செயல்பாட்டை உலகெங்கும் உள்ள ரசிகர்களும் பார்க்க முடிந்தது. பந்து பேட்டை தாண்டி சென்றபோது ஸ்னிக்கோ மீட்டர் எந்த வித அசைவுமின்றி அப்படியே காணப்பட்டது. எனவே தொலைக்காட்சி வர்ணனையாளர்களும்கூட அதை அவுட் இல்லை என்று கூறிவிட்டனர்.

 

அவுட் கொடுத்த மூன்றாம் நடுவர் ஆனால் ஸ்டீவ் டேவிட்டிடமிருந்து களநடுவருக்கு வந்த தகவலோ வேறுமாதிரி இருந்தது. அதாவது உமர் அக்மல் அவுட் என்று அறிவித்துவிட்டார். களநடுவரும் விரலை தூக்கி அவுட் என்பதை காட்டிவிட்டார். இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமே ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களிடம் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

எப்பவுமே அந்த நடுவர் அப்படித்தான் இதுகுறித்து பாகிஸ்தானின் சுழற்பந்து நட்சத்திரமான சையது அஜ்மல் கூறுகையில், ஸ்டீவ் டேவிஸ் களநடுவராக இருந்த போட்டிகளில் நான் பந்து வீசியுள்ளேன். எல்பிடபிள்யூ, விக்கெட் கீப்பர் கேட்ச் போன்ற சந்தர்ப்பங்களில் நான் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும், ஸ்டீவ் டேவிஸ் கையை தூக்கியது கிடையாது. எனவே மறு ஆய்வுக்கு சென்றே விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

 

பாகிஸ்தான் என்றால் ஆகாது.. 2009ல் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது இதே ஸ்டீவ் டேவிட், பாகிஸ்தான் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே குரோதம் கொண்டிருப்பவர் ஸ்டீவ் டேவிஸ். எங்களுடனான போட்டிகளின்போது ஸ்டீவ் டேவிஸ் நடுவராக இருக்க கூடாது என்ற கோரிக்கையை ஐசிசி ஏற்க மறுத்துவருகிறது. ஸ்னிக்கோ மீட்டர் அவுட் காட்டவில்லை, பேட்டில் பந்து பட்டதற்கான சத்தம் வரவில்லை. இருப்பினும் ஏன் மூன்றாம் நடுவர் அவுட் கொடுக்க வேண்டும்?

 

தொழில்நுட்பம் சரியில்லை 2011ம் ஆண்டு உலக கோப்பையின்போது, இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மோதியது. அப்போது எனது பந்து வீச்சில் சச்சினுக்கு களநடுவர் எல்பிடபிள்யூ கொடுத்தார். அதை எதிர்த்து மறு பரிசீலனை செய்ய சச்சின் கேட்டார். இத்தனைக்கும் அது சரியான அவுட்தான் என்று கம்பீர் சச்சினிடம் கூறினார். ஆனால் மூன்றாம் நடுவரோ அதை அவுட் இல்லை என்று கூறினார். தொழில்நுட்பங்களும் தவறிழைக்கவே செய்கின்றன. இவ்வாறு அஜ்மல் கூறினார்.

 

அணியில் சேர்க்கப்படாத அஜ்மல் பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டு ஐசிசியால் தடை விதிக்கப்பட்ட அஜ்மல், உலக கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்பு மீண்டும் தகுதி பெற்றார். ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவரை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் நம்பர்1 இடத்தை பிடித்த பவுலர் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ajmal-slams-umpire-davis-referrel-decision-during-match-against-india-221070.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அயர்லாந்து கவுத்துப் போட்டானே..! :o:D

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை வெற்றிகள்: உணர்ச்சிவசப்படாத தோனி
 

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 6-வது வெற்றியைப் பெற்றது பற்றி தோனி பெரிய உற்சாகம் காட்டவில்லை.

போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் அனைத்தும் இதைச்சுற்றியே இருந்தது. இந்தியாவின் இந்த ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாவிடம் கேட்டதற்கு “எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு நடக்கிறது. இதுகுறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.” என்று பதிலுரைத்தார்.

தோனி இதே கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, “சாதனை நல்லதுதான். ஆனால், இந்த விஷயம் பற்றி பெரிதாகப் பேச எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நாம் தோற்கும் காலம் வரலாம். இது அடுத்த உலகக்கோப்பையாக இருக்கலாம் அல்லது 4 உலகக்கோப்பை கழித்து இருக்கலாம். உலகம் இருக்கும் வரை நிச்சயம் இந்த சாதனை இருக்கப்போவதில்லை. இதனைப் பற்றி சிந்திப்பதில் எந்த வித பயனுமில்லை.

 

 

இது பற்றி பெருமையடைகிறோம். ஆனால்.... ஒன்றை நாம் நினைவில் கொள்வது நலம், இந்தியா-பாகிஸ்தான் ஆடிய ஆட்டங்களின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பாருங்கள், இந்த விஷயத்தில் நாம் மிகவும் பின் தங்கியிருப்பது தெரியவரும். உண்மையில் அவர்கள் (பாகிஸ்தான்) ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

உலகக்கோப்பையில் நாம் வென்றுள்ளோம், அது பெருமை சேர்க்கக்கூடியதுதான், ஆனால் ஒட்டுமொத்தமாக நாம் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் ஒரு அபாரமான அணி. அவர்கள் அணியில் முன்பிருந்ததைப் போன்ற வீரர்கள் தற்போது இல்லை. ஆனாலும் திறமையை வைத்துப் பார்த்தால், அவர்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.” என்று நிதானத்துடன் கூறினார் தோனி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6902193.ece

  • தொடங்கியவர்

அஸ்வினின் 3 மெயிடன்கள்; கோலியின் சாதனை சதம்: இந்தியா - பாக். போட்டி முக்கியப் புள்ளிவிவரம்
 

 

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் சதம் எடுத்த கோலி குறைந்த இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினார்.

 

இந்திய-பாகிஸ்தான் போட்டியின் சுவையான தகவல்கள் சில:

 

உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் எவரும் சதம் எடுத்ததில்லை. அதனையும் தற்போது விராட் கோலி தன் சதம் மூலம் சாதித்துள்ளார். 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த அபார இன்னிங்சில் சச்சின் எடுத்த 98 ரன்களே இதுவரை பாக்.க்கிற்கு எதிராக உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

 

143 இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார் கோலி, சச்சின் டெண்டுல்கர் 206 இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எடுத்திருந்தார். ஆனால் சச்சின் முதல் 75 அல்லது 76 போட்டிகளில் தொடக்கத்தில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி உட்பட 5 வீரர்களே இதுவரை ஒருநாள் போட்டிகளில் 22 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்துள்ளனர்.

 

சச்சின் - 49 சதங்கள்

 

ரிக்கி பாண்டிங் - 30 சதங்கள்

 

சனத் ஜெயசூரியா - 28 சதங்கள்

 

சவுரவ் கங்குலி - 22 சதங்கள்

 

விராட் கோலி - 22 சதங்கள்.

 

1979-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஸ்பின்னர் எஸ்.வெங்கட்ராகவன் மே.இ.தீவுகளுக்கு எதிராக 3 மெய்டன்களை வீசினார். அதன் பிறகு இப்போது அஸ்வின் இந்த உலகக்கோப்பை போட்டியில் 3 மெய்டன்களை வீசினார். ஒருநாள் போட்டிகளில் அதிக மைடன்களை வீசியவர் பிஷன் சிங் பேடி, அவர் 1975 உலகக்கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 8 மெய்டன்களை வீசி சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

 

உலகக்கோப்பை போட்டிகளில் 2 சதக்கூட்டணி அமைவது இந்தியாவுக்கு 3-வது முறையாகும் இது. இதற்கு முன்னர் 2007 உலகக்கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 2 சதக்கூட்டணியும் 2011-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சதக்கூட்டணியும் அமைத்துள்ளனர்.

 

நேற்றைய போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் 2 முறையே எதிரணியினருக்கு 300 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறையும், அதற்கு முன்னதாக 2003 ஆம் அண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 310 ரன்களை பாக். விட்டுக் கொடுத்துள்ளது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்தியா 6-0 என்று உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தோற்காமல் அதிக வெற்றிகளை உலகக்கோப்பையில் வைத்திருக்கும் அணியும் பாகிஸ்தானே. இலங்கை அணியை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் 7 முறை வென்றுள்ளது. இலங்கை இதுவரை பாகிஸ்தானை உலகக்கோப்பை போட்டிகளில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6901777.ece

  • தொடங்கியவர்

நியூசிலாந்தை சமாளிக்குமா ஸ்காட்லாந்து
பிப்ரவரி 16, 2015.

 

டுனிடின்: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.           

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. டுனிடினில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.           

 

ஆண்டர்சன் நம்பிக்கை: இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்த அசத்திய மார்டின் கப்டில், கேப்டன் பிரண்டன் மெக்கலம், வில்லிம்சன், கோரி ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீண்டும் சாதிக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ ராஸ் டெய்லர், கிராண்ட் எலியாட், லுாக் ரான்கி அதிரடி காட்டும் பட்சத்தில் மீண்டும் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.          

 

வேகப்பந்துவீச்சில் டிம் சவுத்தி, டிரண்ட் பவுல்ட், ஆடம் மில்னே, கோரி ஆண்டர்சன் நம்பிக்கை அளிக்கின்றனர். ‘சுழலில்’ அனுபவ டேனியல் வெட்டோரி பலம் சேர்க்கிறார்.     

மூன்றாவது முறை: இரண்டு முறை (1999, 2007) உலக கோப்பையில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி, ஒரு வெற்றி கூட பெறாமல், லீக் சுற்றோடு திரும்பியது. எட்டு ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பையில் விளையாடும் ஸ்காட்லாந்து அணி, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி தர முயற்சிக்கலாம். 

          

அயர்லாந்துக்கு எதிரான பயிற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி, வெஸ்ட் இண்டீசிடம் 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. அயர்லாந்துக்கு எதிராக சதம் கடந்த மாட் மக்கான், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 96 ரன்கள் எடுத்த கைல் கோட்ஜெர் ஆகியோருடன் கேப்டன் பிரஸ்டன் மம்சன், பெர்ரிங்டன் உள்ளிட்டோர் அசத்தும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.     

 

பயிற்சியில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட அலெஸ்டர் ஈவன்ஸ், மஜித் ஹக், ஜோஸ் டாவே மீண்டும் கைகொடுக்கலாம்.

 

http://sports.dinamalar.com/2015/02/1424100627/WorldCupCricketNewZealandScotland.html

 

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்துக்கு எதிராக திக்கித் திணறி வென்ற நியூசிலாந்து
 

 

டுனெடினில் இன்று நடைபெற்ற ஸ்காட்லாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து அணித் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது.

நல்ல பவுன்ஸ், ஸ்விங் உள்ள பிட்சில் டாஸ் வென்ற மெக்கல்லம் முதலில் ஸ்காட்லாந்தை பேட் செய்ய அழைத்தார். அற்புதமான பந்துவீச்சுக்கு ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 146 ரன்கள் எடுத்து தட்டுத்தடுமாறி தனது 2-வது வெற்றியைப் பெற்றது.

 

1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 183 ரன்கள் இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் தோற்ற போது மால்கம் மார்ஷல் கூறிய உளவியல் இன்று கண்கூடாக நிகழ்ந்தது. தனக்கு அடுத்து வருபவர் வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்ற நினைப்பில் வரிசையாக நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். அதற்காக ஸ்காட்லாந்தின் அற்புதமான பந்துவீச்சையும், அதன் துல்லியம் மற்றும் தீவிரத்தையும் மறுப்பதற்கில்லை.

 

தொடக்கத்தில் ஸ்காட்லாந்து வீரர்களுக்கு நியூசி. இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் அற்புதமாக வீசினார். 2-வது ஓவரில் மெக்லியாடிற்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்ய நேராக எல்.பி. ஆனார். ரன் இல்லை. அடுத்த பந்தே, பெரிய அளவுக்கு பந்து உள்ளே ஸ்விங் ஆக கார்டினர் என்ற வீர்ரும் எல்.பி.ஆகி வெளியேறினார். இந்த நிலையில் ஹேட்ரிக் வாய்ப்பை போல்ட் பெற 5 ஸ்லிப், ஒரு கல்லி என்று டெஸ்ட் மேட்ச் ஆட்டக்களம் அமைக்கப்பட்டது.

களமிறங்கியது அயர்லாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் சதம் எடுத்த மேச்சன் என்ற வீரர் பந்து இம்முறை வெளியே ஸ்விங் ஆக ஆடாமல் விட்டு ஹேட்ரிக்கை மறுத்தார். அதன் பிறகு மேச்சன் 2பவுண்டரிகளை அடித்தார்.

 

 

மீண்டும் 5-வது ஓவரில், 2 விக்கெட்டுகள் விழுந்தது. இம்முறை டிம் சவுதீ வீசிய லெக் திசை பந்தை கூயெட்சர் மிட்வீக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தே ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் இன்ஸ்விங்கரில் எல்.பி ஆனார். மீண்டும் ஹேட்ரிக் வாய்ப்பு இம்முறை பெரிங்டன் தடுத்தாடினார். ஸ்காட்லாந்து 12/4 என்று ஆனது.

அதன் பிறகு மேட் மேச்சன் (56), பெரிங்டன் (50) இணைந்து 23 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு மேச்சன், பெரிங்டன் இருவரையும் கோரி ஆண்டர்சன் வீழ்த்த கடைசி விக்கெட்டுகளை டேனியல் வெட்டோரி கைப்பற்ற ஸ்காட்லாந்து கதை 36.2 ஓவர்களில் 142 ரன்களுடன் முடிந்தது. உணவு இடைவேளைக்கு முன்னரே ஸ்காட்லாந்து ஆல் அவுட். நியூசிலாந்து தரப்பில் வெட்டோரி, ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சவுதீ, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மிகச்சிறிய வெற்றி இலக்கை எதிர்த்து நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் ஸ்காட்லாந்து அணியிடம் இவ்வளவு தீவிரத்தை எதிர்பார்க்கவில்லை. எனவேதான் 21 ஓவர்களில் நியூசிலாந்து 117/5 என்று ஆனது.

 

நல்ல பவுன்ஸ் இருந்ததால் பேட்ஸ்மென்கள் கவனத்துடன் ஆட வேண்டிய நிலை இருந்தது. கவனம் தப்பினால் அவுட் என்ற நிலையே இருந்தது. மீண்டும் கேன் வில்லியம்ஸ் 38 ரன்களையும், கிராண்ட் எலியட் 29 ரன்களையும் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் வார்ட்லா கப்திலுக்கு அருமையான பந்தை வீசி அவரை எட்ஜ் செய்ய வைத்தார். ஆனால் கப்தில் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்துவிட்டார். மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் வார்ட்லா பந்தை ஷாட் ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கிராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் ஹக் என்பவரது பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார். 18-வது ஓவரில் கேன் வில்லியம்சன் 38 ரன்கள் எடுத்து டேவி பந்தை மிகப்பெரிய டிரைவ் ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு வி.கீப்பரிடம் கேட்ச் ஆனது. நியூசிலாந்து 106/4.

 

வார்ட்லா பந்து வீச வந்து கிராண்ட் எலியட்டை (29) நல்ல பந்துக்கு எட்ஜ் செய்ய வைத்தார். 117/5 என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் டீப் ஃபைன் லெக்கில் கொடுத்த கேட்ச் கைக்கு நேராக வந்தது ஆனால் அதனை வார்ட்லா தவறவிட்டார். அந்த நேரத்தில் அந்த கேட்சை எடுத்திருந்தால் நியூசி.க்கு திண்டாட்டம் அதிகரித்திருக்கும்.

ஆனால் ஆண்டர்சன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை 11 ரன்களில் அவர் பிளிக் ஷாட்டில் அதே ஃபைன்லெக்கில் கேட்ச் கொடுத்தார். இம்முறை வார்ட்லா தவறு செய்யவில்லை.

இவர் அவுட் ஆன அதே ஓவரிலேயே லுக் ரோஞ்சி 12 ரன்களில் இருந்த போது டேவி பந்தை தூக்கி அடித்து மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியில் டேனியல் வெட்டோரி (8) வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஸ்காட்லாந்து தரப்பில் வார்ட்லா 3 விக்கெட்டுகளையும், டேவி 3 விக்கெட்டுகளையும்கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிரெண்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6904704.ece

  • தொடங்கியவர்

சமி, மூனிக்கு அபராதம்
 

 

மேற்கிந்திய தீவுகள்-அயர்லாந்து இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது, விதிமுறைகளை மீறி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டெரன் சமி மற்றும் அயர்லாந்து அணியின் ஜோன் மூனி ஆகிய  இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து தலா 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. போட்டி நடுவர் அறிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

நியூசிலாந்தை நிலை குலைய வைத்த ஸ்காட்லாந்து "மச்சான்"!

 

டுனெடின்: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியன்போது ஸ்காட்லாந்து வீரர்கள், நியூசிலாந்து வீரர்களுக்கு செம டென்ஷனைக் கொடுத்து விட்டனர். அவர்களிடமிருந்து தப்பி மீண்டதே நியூசிலாந்துக்குப் பெரிய கதையாகிப் போய் விட்டது. ஸ்காட்லாந்து வீரர் மாட் மச்சன், ரிச்சி பெரிங்டன் ஆகிய இருவரும் சேர்ந்து 5 விக்கெட்டுக்கு 97 ரன்களைக் குவித்து ரன் சேர்த்து ஸ்காட்லாந்துக்கு உயிர் கொடுத்தனர். பின்னர் பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்து வீரர்களுக்கு, ஸ்காட்லாந்து வீரர்கள் நெருக்கடி கொடுத்ததால் நியூசிலாந்து விழி பிதுங்கிப் போய் விட்டது. ஸ்காட்லாந்து தரப்பில் 2 பேர் அரை சதம் போட்டனர். ஆனால் ஜாம்பவான் நியூசிலாந்து தரப்பில் ஒருவரால் கூட அரை சதம் போட முடியாமல் போனது வினோதம்தான். இன்று காலையில் கிரிக்கெட் ரசிகர்களை கலகலப்பாக்கிய இந்தப் போட்டியின் ஹைலைட்ஸ் பார்க்கலாம், வாங்க.

 

டாஸ் வென்று பீல்டிங் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

நல்லாத்தான் இருந்தது பவுலிங் நியூசிலாந்தின் பந்து வீச்சும் நன்றாகத்தான் இருந்தது. டிம் செளதீயும், டிரென்ட் போல்ட்டும் சிறப்பாக பந்து வீசினர். முதல் 3 விக்கெட்களையும் அடுத்தடுத்து இருவரும் வீழ்த்தினர். இதனால் ஸ்காட்லாந்து தடுமாறிப் போனது.

 

வந்தாருய்யா "மச்சான்"! ஆனால் மாட் மச்சனும், தொடர்ந்து பெர்ரிங்டனும் சேர்ந்தபோது ஸ்காட்லாந்து வீரர்கள், சற்றே நியூசிலாந்துக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர். இருவரும் நிறுத்தி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் குதித்தனர்.

 

"மச்சான்" 56 மச்சன் 56 ரன்கள் எடுத்து கோரி ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரது ஸ்கோரில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை மச்சன் மிரட்டி விட்டார்.

 

பெர்ரிங்டன் 50 மறுபக்கம் பெர்ரிங்டன் 80 பந்துகளைச் சந்தித்து 50 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 4 பவுண்டரிகளும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் சரிவர ஆடவில்லை. இதனால் 36.2 ஓவர்களில் ஸ்காட்லாந்து 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

5வது வி்க்கெட்டுக்கு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மச்சனும், பெர்ரிங்டனும் சேர்ந்து 97 ரன்களைச் சேர்த்ததுதான் ஸ்காட்லாந்துக்கு சற்றே உயிர் கொடுத்தது. நியூசிலாந்தை ரொம்பவே சோதித்து விட்டது இந்த இணை

 

கோரி வந்து முடித்தார் இவர்களைப் பிரிக்க கேப்டன் மெக்கல்லம் நிறையவே முயற்சித்தார். கடைசியில் கோரி ஆண்டர்சன் வந்துதான் கதையை முடித்தார். மச்சன், பெர்ரிங்டன் இருவரையும் கோரி அவுட்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பழசு பழசுதான் பழம்பெரும் வீரரான டேணியல் வெட்டோரி தன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது என்பதை இப்போட்டியில் நிரூபித்தார். கடைசி இரண்டு விக்கெட்களை டக் அவுட் ஆக்கினார் வெட்டோரி. அடுத்த போட்டியில் தனது முதல் பந்தில் ஒரு விக்கெட்டை வெட்டோரி வீழ்த்தினால் அது அவருக்கு ஹாட்ரிக் ஆகும்.

 

மொத்தம் 5 முட்டை ஸ்காட்லாந்து அணியில் மொத்தம் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆயினர்.

 

திருப்பி அடிச்ச ஸ்காட்ஸ் பின்னர் ஸ்காட்லாந்து பவுலிங் செய்தபோது பந்து வீச்சில் உண்மையிலேயே மிரட்டி விட்டனர்.

 

எம்புட்டுக் கஷ்டம் நியூசிலாந்து வீரர்களை ரொம்பவே சோதித்து விட்டனர் ஸ்காட் பந்து வீச்சாளர்கள். அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது, நியூசிலாந்து வீரர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பயமுறுத்தி விட்டது.

 

நல்ல லென்த் ஸ்காட்லாந்து பவுலர்கள் நல்ல லென்த்தில், அருமையாக பந்து வீசினர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி விடுவார்களோ என்று கூட நிலைமை இருந்தது. இருப்பினும் அந்த மோசமான நிலையிலிருந்து நியூசிலாந்து மீண்டு வந்து விட்டது.

 

ஒரு அரை சதம் கூட இல்லை ஸ்காட்லாந்து தரப்பி்ல் 2 பேர் அரை சதம் போட்டனர். ஆனால் நியூசிலாந்து தரப்பிலோ ஒருவர் கூட அரை சதம் போட முடியாமல் போனது ஆச்சரியம்தான். அதிகபட்சம் கனே வில்லியம்சன் 38 ரன்கள் எடுத்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/new-zealand-vs-scotland-highlights-match-6-221127.html

  • தொடங்கியவர்

வெற்றி நினைவுச் சின்னமாக ஸ்டம்ப்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
 

2ijkkl5.jpg

 

வெற்றிபெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். குறிப்பாக இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு வெற்றி நினைவுச்சின்ன சேகரிப்புப் பழக்கம்.

 

ஆனால் கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு தோனி பைல் ஒன்றை நினைவுச் சின்னமாக பாதுகாக்க எடுத்தார்.

உடனே நடுவர் இயன் கோல்ட், தோனியிடம் ஒரு சில வார்த்தைகளைப் பேச பைல் மீண்டும் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

இதற்கு குறிப்பிடத்தகுந்த காரணங்கள் உள்ளன. இப்போது கிரிக்கெட் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டம்ப்கள் எல்.இ.டி. ஹை-டெக் ஸ்டம்ப்கள். இதன் விலை சுமார் ரூ.24 லட்சம் என்று கூறப்படுகிறது. 2 பைல்களின் விலை சுமார் ரூ.50,000 ஆகும்.

 

 

எனவே வெற்றியின் நினைவாக ஸ்டம்ப்களையோ, அல்லது பைல்களையோ எடுத்துச் செல்ல ஐசிசி-யிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ‘பிக்-பாஷ்’ இருபது ஓவர் லீக் போட்டிகளில் முதன் முதலாக இந்த ஹை-டெக் ஸ்டம்ப்கள் 2013-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளில் பரிசோதனை முயற்சியாக இவ்வகை ஸ்டம்ப்கள் பயன்படுத்தப்பட்டன.

 

இவ்வகை எல்.இ.டி. ஸ்டம்ப்களை உருவாக்கிய எக்கர்மான் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளின் போது பிடிஐ செய்தி நிறுவனந்த்திடம் கூறும் போது, "இந்த ஒட்டுமொத்த அமைப்புக்கும் அதிகம் செலவாகியுள்ளது. ஒரு போட்டிக்கு இதனை வைத்துப் பராமரிக்க ஆகும் செலவு சுமார் ரூ.25 லட்சமாக இருக்கும். எனவேதான் எந்த வித வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் ஸ்டம்ப்களை பெயர்த்து எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினேன்.” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article6905099.ece

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணியில் நாராயண், பிராவோ , பொல்லார்ட் போன்றவர்கள் விளையாடாதது துரதிஸ்டமே!!!

  • தொடங்கியவர்

Breaking Now பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடென் ராஜினாமா

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

3 ஓவர்களில், 3 ரன்களுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன்! சரிவை தடுக்க போராட்டம்

 

கான்பெரா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்து 267 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 3 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமாக தடுமாறியது. குரூப் ஏ-விலுள்ள வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த தொடரில் குட்டி அணிகள்தான் சக்கைபோடு போடுகின்றன என்பதால், இவ்விரு குட்டி அணிகள் போட்டியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

 

3 ஓவர்களில், 3 ரன்களுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்த ஆப்கன்! சரிவை தடுக்க போராட்டம் டாசில் வெற்றி பெற்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனாமுல் ஹாக் 29 ரன்களிலும், தமிம் இக்பால் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதைத் தொடர்ந்து சவும்யா சர்க்கார் 28, மமுதுல்லா 23, ஆகியோரும் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் 30வது ஓவரில் வங்கதேசம் 119 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஷகிப் அல் ஹசன் 63 ரன்களும், முஷாபிர் ரஹிம் 71 ரன்களும் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் வங்கதேசம் மீண்டது. இறுதியில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வங்கதேசம் கடைசி ஓவரில் 267 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கன் தரப்பில் ஹமீத் ஹாசன், ஷப்பூர் ஜர்டான், அப்டாப் ஆலம், மிர்வாயிஸ் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

 

இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜாவீத் அகமது, அப்சர் ஜசாய் மற்றும் அஸ்கர் ஸ்டைனிக்சாய் ஆகியோர் தலா 1 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது (ஒருவேள 3ம் நம்பர் ஆப்கனுக்கு ராசியில்லையோ) . வங்கதேசம் தரப்பில் மாஷ்ரப் மொர்டாசா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ருபேல் ஹொசைன் 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தானின் நவ்ரோஸ் மங்கல் மற்று சாமுல்லா சேன்வாரி ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிவருகின்றனர். 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/bangladesh-won-the-toss-decided-bat-first-against-afghanista-221191.html

  • தொடங்கியவர்

துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் தேவை : மெக்கலம்
 

 

பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியன உண்மையிலேயே அபாரமாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நான் கலந்துகொண்டு விளையாடிய அணிகளில், தற்போதைய நியூசிலாந்து அணி தான் மிகவும் வலுவானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்கொட்லாந்து அணியுடனான போராட்ட வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரண்டன் மெக்கலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு உண்மையிலேயே அபாரமாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

 

இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி இங்கிலாந்து அணியை வெலிங்டனில் சந்திக்க இருக்கிறோம். இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும். இதில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

போல்டும் சௌத்தியும்  உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் . இருவரும் நிலையான இடத்தைப் பிடித்து நியூசிலாந்து அணிக்காக நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

 

நாம் ஸ்கொட்லாந்து அணிக்கான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்து வீச முடிவெடுத்த போது, அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு அமைந்தமை பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில் எளிதில் கணிக்க முடியாத இந்த ஆடுகளத்தில் ஸ்கொட்லாந்து வீரர்கள் இவ்வளவு ஓட்டங்களை பெற்றதையும் பாராட்டாமல் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/18/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிராக மோதத் தயார் : ஸ்கொட்லாந்து அணித் தலைவர் மொம்ஸன்
 

 

உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக மோதத் தயாராக இருப்பதாக ஸ்கொட்லாந்து அணித் தலைவர்  பிரஸ்ரின்  மொம்ஸன் தெரிவித்துள்ளார்.

குழு “ஏ” யில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையிலேயே ஸ்கொட்லாந்து அணித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து அணி உலகக் கிண்ண பயிற்சி கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக 3 ஓட்டங்களால் தோற்ற போதிலும் இறுதிவரை மேற்கிந்தித் தீவுகளை திணறடித்தது.
இந்நிலையில் இப்போது இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக ஸ்கொட்லாந்து அணி திகழ்ந்திருப்பதை நினைத்து அவ்வணியின் தலைவர் பிரஸ்ரின்  மொம்ஸன்  பெருமிதம் அடைந்துள்ளார்.

 

இது குறித்து பிரஸ்ரின்  மொம்ஸன்  மேலும் தெரிவிக்கையில்,

குறைவான ஓட்டங்களை எடுத்த போதிலும் அதை வைத்துக் கொண்டு எங்களது வீரர்கள் வெளிப்படுத்திய போராட்டம் பெருமை அளிக்கிறது.

உலகக் கிண்ணப் போட்டியில் நாங்கள் ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டியதில்லை.

ஏனெனில் நாங்கள் அனுபவம் இல்லாத அணி. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான மோதலுக்கு தயாராக இருக்கிறோம்’  என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/18/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D

  • தொடங்கியவர்

டேல் ஸ்டெய்னுக்குக் காய்ச்சல்: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு சந்தேகம்?
 

 

காய்ச்சல் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வலைப்பயிற்சியில் டேல் ஸ்டெய்ன் ஈடுபடவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறுவதையடுத்து அவர் உடல் நலம் தேறுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 9 ஓவர்களில் 64 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்தப் போட்டிக்குப் பிறகு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.

 

2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

 

இந்நிலையில் அவருக்கு ஃபுளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார என்ற ஐயம் எழுந்துள்ளது.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகர் மைக் ஹஸ்ஸி, மற்றும் கேரி கர்ஸ்டன் ஆகியோர் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி செயிண்ட் கிட்லா கிளப் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டது.

 

இதுவரை 3 உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாகக் கூட 70 ஒருநாள் போட்டிகளில் 42 வெற்றிகளுடன் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6908990.ece

 

  • தொடங்கியவர்

முஷ்பிகுர், ஷாகிப், மோர்டசா அபாரம்: ஆப்கான் கனவைத் தகர்த்தது வங்கதேசம்

 

கான்பராவில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி 50 ஓவர்களில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 43-வது ஓவரில் 162 ரன்களுக்குச் சுருண்டது.

வங்கதேச அணியில் பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 114 ரன்களை சுமார் 15 ஓவர்களில் சேர்த்தனர். முஷ்பிகுர், ஷாகிப் இருவரும் அரைசதம் கண்டனர்.

 

ஆப்கான் அணியில் ஹமித் ஹசன், ஷபூர் சத்ரான், அப்டாப் ஆலம், மிர்வைஸ் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆப்கான் அணியின் பேட்டிங் வரிசையில் சமியுல்லா ஷென்வாரி (42), கேப்டன் மொகமது நபி (44) ஆகியோர் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். மற்றபடி தொடர் சரிவு கண்டு தோல்வி தழுவியது.

 

வங்கதேச அணியில் கேப்டன் மோர்டசா 9 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார். ஷாகிப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக 56 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்யப்பட்டார்.

 

சுமாரான தொடக்கத்துக்கு பிறகு நிலைப்படுத்திய முஷ்பிகுர், ஷாகிப் அல் ஹசன்:

ஆப்கான் தனது தொடக்க பந்துவீச்சில் வங்கதேசம் எதிர்பார்த்த விரைவுத் தொடக்கத்திற்கு முட்டுக் கட்டை போட்டது. தமீம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் இருவரும் இணைந்து 15-வது ஓவர் வரை ஆடியும் ஸ்கோர் 50-ஐ எட்டவில்லை. 47 ரன்களையே எட்டியது தமீம் இக்பாலும் அவுட் ஆகியிருந்தார்.

 

3-வது ஓவரில் ஆப்கான் செய்த தவறு:

 

3-வது ஓவரை ஹமித் ஹசன் வீச, அந்த ஓவரின் 5-வது பந்தை கவர் டிரைவ் அடித்து பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்து 145 கிமீ. வேகம். அடிக்க முடியாத பந்தை தமீம் ஆட முயல பந்து எட்ஜில் பட்டு கேட்ச் ஆனது. ஹமித் ஹசன் உடனடியாக அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் ஸ்டீவ் டேவிஸ் அவுட் தர மறுத்தார். ஆனால், ஆப்கான் அணியினர் டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்தவில்லை. பெரும் தவறிழைத்தனர். பந்து கிளீன் எட்ஜ் என்று ரீப்ளேயில் தெரிந்தது. கடைசியில் டி.ஆர்.எஸ். கேட்கலாம் எனும்போது அதற்கான 15 வினாடிகள் கால அவகாசம் முடிந்தது என்று நடுவர்கள் அறிவுறுத்தினர்.

 

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான் மிகத் துல்லியமாக, நல்ல திசை மற்றும் லெந்த்தில் பந்தை எழுப்பியும், ஸ்விங்கும் செய்தார். இதனால் அவர் வீசிய முதல் 3 ஓவர்களில் 4 ரன்களே வந்தது. அவரை இன்னும் 2 ஓவர்கள் வீசச் செய்திருக்கலாம். ஆனால் கட் செய்யப்பட்டார்.

47 ரன்கள் எடுக்க தட்டுத் தடுமாறிய வங்கதேசம் அந்த ரன்னில் தமீம் இக்பால் (19) விக்கெட்டை இழந்தது. ஆப்கான் விக்கெட் கீப்பர் அப்சர் ஸசாய் இந்த கேட்சை அற்புதமாகப் பிடித்தார். இடது புறம் டைவ் அடித்து பிடித்தார். பிடிக்கும் போது விட்டுவிடுவார் என்ற ஐயம் ஏற்பட்டது ஆனால் இரு கைகளையும் அவர் அபாரமாக, சமயோசிதமாகப் பயன்படுத்தினார்.

 

55 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த அனாமுல் ஹக், மிர்வைஸ் அஷ்ரப் பந்தில் எல்.பி.ஆனார். ஆட்டத்தின் 25-வது ஓவரில் சவுமியா சர்க்கார் முதல் சிக்சரை அடித்தார். மேலேறி வந்து லாங் ஆனில் அந்த சிக்சரை அடித்தார். 15 ஓவர்களில் 47 ரன்களிருந்து 25-வது ஓவரில் 101/2 என்று ஆனது வங்கதேசம்.

25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த சவுமியா சர்க்கார். ரன் விகிதத்தை கூட்ட அடிக்க நினைத்து இடது கை வேக வீச்சாளர் ஷபூர் சத்ரான் பந்தை விட்டுவிட அது கால்காப்பைத் தாக்க எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

 

அடுத்து இறங்கிய ஷாகிப் அல் ஹசன் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். வங்கதேசத்தின் முக்கிய வீரர் மஹ்முதுல்லா 46 பந்துகள் விளையாடி பவுண்டரி அடிக்க முடியாமல் 23 ரன்களில் வீழ்ந்தார். சத்ரான் இவரது விக்கெட்டையும் கைப்பற்றினார். 30 ஓவர்கள் முடிவில் 122/4 என்று இருந்தது.

ஆட்டத்தின் 33-வது ஓவரில் ஆப்கான் பவுலர் ஷென்வாரி பிட்சை சேதம் செய்ததால் தொடர்ந்து வீச அனுமதிக்கப்படவில்லை. இடையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பு வந்தது. ஆனால் சத்ரான் மிட் ஆஃபிலிருந்து அடித்த த்ரோ ஸ்டம்புக்கு அருகில் சென்றது.

 

முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்களில் இருந்த போது அப்தாப் ஆலம் பந்தில் எல்.பி.ஆனார். அது அவுட்தான், நடுவர் கொடுக்கவில்லை. இவர்களும் டி.ஆர்.எஸ்.ஐ பயன்படுத்தவில்லை. மீண்டும் தவறிழைத்தனர். இது நடந்த அடுத்த பந்தே முஷ்பிகுர் ஸ்கொயர்லெக்கில் அபாரமான சிக்சரை அடித்தார்.

ஆட்டத்தின் 45-வது ஓவரில் ஹமித் ஹசன் ஓவரில் ஒரு அபாரமான பவுண்டரி மற்றும் சிக்சரை அடித்து 51 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் பவுல்டு ஆனார். இந்தச் சதக்கூட்டணி நன்றாக அமைய வங்கதேசம் நல்ல இலக்கை எட்ட முனைந்தது. ஆனால் நல்ல பந்து வீச்சு, மோசமான பேட்டிங் ஒன்று சேர அடுத்த 5 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது வங்கதேசம். கடைசியில் 267 ரன்களையே எடுக்க முடிந்தது.

 

ஆப்கான் சரிவு:

 

பெரிய லட்சியத்துடன் களமிறங்கிய ஆப்கான் அணியின் தொடக்க வீரர்கள் ஜாவேத் அகமதி, அஃப்சர் ஸசாய், 7 பந்துகள் வீசப்பட்ட நிலையில் பெவிலியன் திரும்ப ஸ்டானிக்ஸாய் 3-வது ஓவரில் வெளியேற ஆப்கான் அணி 3/3 என்று ஆனது.

அதன் பிறகு நவ்ரோஸ் மங்கல் (27), சமியுல்லா ஷென்வாரி (42) இணைந்து ஸ்கோரை 65 ரன்களுக்கு உயர்த்த மங்கோல் அவுட் ஆனார். கேப்டன் மொகமது நபி, ஷென்வாரி இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 58 ரன்களைச் சேர்த்தனர். பின்வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. 43-வது ஓவரில் 162 ரன்களுக்கு சுருண்டது ஆப்கான்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article6909030.ece

  • தொடங்கியவர்

அரை இறுதிக்கு தகுதிபெற இந்தியாவால் முடியாது: ஹஸி
 

 

என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கிண்ணத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பதே எனது கணிப்பாகும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரர் மைக் ஹஸி  தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னாள் துடுப்பாட்டவீரர் மைக் ஹஸி அளித்த ஒரு பேட் டியில் ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணி யில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர்.

 

 

இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும். என்னை பொறுத்தமட்டில் இந்த உலக கிண்ணத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன் னேறும் என்பதே எனது கணிப்பாகும்.

உலக கிண்ணத்தை வெல்ல அவுஸ்தி ரேலிய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான அணி கள் உள்ளன. எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும்’ என தெரிவித்துள்ளார்

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/19/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BF

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எமிரேட்ஸுக்கு பயன்படாமல் போன 'பாலக்காட்டு மாதவனின்' அசத்தல்.. வென்றது ஜிம்பாப்வே!

 

வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பையின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டும், ஜிம்பாப்வேயும் இன்று மோதின. நியூசிலாந்தின் சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் எல்டன் சிக்கும்புரா தனது அணி முதலில் ஃபீல்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் அணி பேட்டிங்கை தொடங்கியது.

 

 

கிருஷ்ண சந்திரன் தொடக்க ஆட்டக்காரர் அம்ஜத் அலி, 7 ரன்களில் டென்டாய் சடாரா பந்தில் கிரேக் எர்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஆன்ட்ரி பெரென்கர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது சாலமன் மிரே பந்து வீச்சில் பிரென்டன் டைலரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஒன்-டவுன் பேட்ஸ்மேன் கிருஷ்ணா சந்திரன் 63 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது சாலமோன் மிரே பந்து வீச்சில் எல்டன் சிக்கும்புராவிடம் கேட்ச் கொடுத்தார்

 

 

பேட்டிங் சூப்பர் இதைத் தொடர்ந்து குர்ரம்கான் 45 ரன்கள், விக்கெ் கீப்பர் ஸ்வப்னில் பாட்டீல் 32 ரன்கள், சைமான் அன்வர் 67 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை அதிகரிக்க உதவினர். ரோகன் முஸ்தபா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். 8வதாக களமிறங்கிய அம்ஜத் ஜாவீத் 25, 9வதாக களமிறங்கிய முகமது நவீத் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்து, முறையே, 25 மற்றும் 23 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்டின் சிறப்பான பேட்டிங் காரணமாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் குவித்தது. டென்டாய் சடாரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

பந்து வீச்சிலும் யூ.ஏ.இ அசத்தல் இதன்பிறகு பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வேக்கு எதிராக பந்து வீச்சிலும் ஐக்கிய அரபு எமிரேட் கட்டுப்பாட்டை காண்பித்தது. ஜிம்பாம்பே தொடக்க வீரர் சிகந்தர் ரஜா 44 பந்துகளில் 46 ரன்களை அதிரடியாக குவித்தபோதும், எமிரேட் கேப்டன், முகமது தாகிர் பந்து வீச்சில் கிருஷ்ண சந்திரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

 

பிரெண்டன் டெய்லர் அதிரடி ஹேமில்டன் மசகட்சா 1 ரன்கள் எடுத்திருந்தபோது அம்ஜத் ஜாவீத் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ரேஜிஸ் சகப்வா 35 ரன்கள் எடுத்திருந்தபோது, தாகிர் பந்து வீச்சில் ஹிட்விக்கெட் முறையில் அவுட் ஆனார். ஆனால் மிடில் ஆர்டரில் பிரெண்டன் டெய்லர் 47 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். அவர் நாசிர் ஆஜிஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். சாலமோன் மிரே 9 ரன்களில் முகமது நவீத் பந்து வீச்சில் ஸ்வப்னில் பாட்டிலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

 

மீண்டும் கிருஷ்ண சந்திரன் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரேக் எர்வின் 42 ரன்களை எடுத்திருந்தபோது, தனது பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார், கிருஷ்ண சந்திரன். ஒருமுனையில் சீரான இடைவெளியில் வீக்கெட்டுகள் வீழ்ந்தாலும், சீன் வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே வெற்றிக்கு துணையாக இருந்தார். அவருக்கு கேப்டன் எல்டன் சிக்கும்புரா நல்ல துணையாட்டம் கொடுத்து 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 48வது ஓவரில் ஜிம்பாப்வே அணி 286 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

 

 

ஆல் ரவுண்டராக கிருஷ்ண சந்திரன் அனுபவம் குறைந்த ஐக்கிய அரபு எமிரேட் பந்து வீச்சாளர்களும், ஃபீல்டர்களும் பல்வேறு தவறுகளை களத்தில் செய்திருந்தாலும், பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே அணியை 48வது ஓவர் வரை சமாளித்து சாதித்தனர். கேரளாவில் பாலக்காடு அருகேயுள்ள கொல்லங்கோட்டில் பிறந்து, சென்னையில் படித்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்காக விளையாடும் கிருஷ்ண சந்திரன் 34 ரன்கள் விளாசியதுடன், தனது பவுலிங்கில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். ஈ பாலக்காட்டு மாதவன் ஒரு வல்லிய ஆட்டக்காரனல்லோ.. அதே!

  • தொடங்கியவர்

சிரித்தமையால் சர்ச்சை: வெளிவந்ததது உண்மை
 

உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு இருந்தார்.

கொரி ஹெனடர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார். இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹென்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார

 

போட்டியின் தன்மையை மாற்றியமைத்த கொரி ஹென்டர்சனின் பிடியெடுப்பை நழுவிட்டதும் இல்லாமல் ஜீவன் மெண்டிஸ் சிரித்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு கிரிக்கெட் ரசிகளுக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் இடையே பெரும் விமர்சனங்களுக்குள்ளானது.

 

இந்நிலையில் ஜீவன் மெண்டிஸ் ஏன் அவ்வாறு சிரித்தார் என்பதன் உண்மை தெரியவந்துள்ளது. அதாவது அவர் பிடியெடுக்கும் போது பந்து கைகளிருந்து நழுவி அவரின் மர்ம உறுப்பில் பட்டுள்ளது. இதனால் தான் அவர் புன்னகைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2015/02/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் வெற்றி தொடருமா: இங்கிலாந்துடன் இன்று மோதல்
பிப்ரவரி 19, 2015.

 

வெலிங்டன்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று நடக்கும் லீக் போட்டியில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று வெலிங்டனில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.      

 

ஆண்டர்சன் பலம்: முதலிரண்டு லீக் போட்டிகளில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் நியூசிலாந்து உள்ளது. இலங்கைக்கு எதிராக துவக்கத்தில் அசத்திய மார்டின் கப்டில், கேப்டன் பிரண்டன் மெக்கலம் ஜோடி, ஸ்காட்லாந்திடம் ஏமாற்றியது. இவர்கள் இன்று எழுச்சி கண்டால் நல்லது. வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டம் மீண்டும் தொடரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ ஏமாற்றும் ராஸ் டெய்லர், கிராண்ட் எலியாட் அதிரடியாக ரன் சேர்க்க முயற்சிக்க வேண்டும். கோரி ஆண்டர்சன் இன்றும் ரன் மழை பொழியலாம். ரான்கி, வெட்டோரி பொறுப்பாக விளையாடினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

 

வேகப்பந்துவீச்சில் டிம் சவுத்தி (4 விக்.,), டிரண்ட் பவுல்ட் (4 விக்.,) நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு ஆடம் மில்னே (2 விக்.,) ஒத்துழைப்பு தந்தால் வேகத்தின் பலம் அதிகரிக்கும். ஸ்காட்லாந்துக்கு எதிராக மித வேகப்பந்துவீச்சில் 3 விக்கெட் கைப்பற்றிய  கோரி ஆண்டர்சன், மீண்டும் சாதிக்கலாம். ‘சுழலில்’ அனுபவ டேனியல் வெட்டோரி இருப்பது பலம். பகுதி நேர பந்துவீச்சில் எலியாட், வில்லியம்சன் கைகொடுத்தால் நல்லது.

 

டெய்லர் நம்பிக்கை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட சோகத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்தை சந்திப்பது சவாலான விஷயம். மொயீன் அலி, இயான் பெல் ஜோடி சிறந்த துவக்கம் கொடுத்தால் நல்ல ஸ்கோரை பெற அடித்தளம் அமைக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேரி பேலன்ஸ், ஜோ ரூட், கேப்டன் இயான் மார்கன், ஜாஸ் பட்லர் அதிரடியாக ரன் சேர்க்க முயற்சித்தால் நல்லது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய ஜேம்ஸ் டெய்லர் (98*), மீண்டும் நம்பிக்கை தரலாம்.

 

ஸ்டீவன் எதிர்பார்ப்பு: இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன்களை வாரி வழங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த ஸ்டீவன் பின் (5 விக்.,), நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். ‘சுழலில்’ மொயீன் அலி, ஜோ ரூட் எழுச்சி பெற வேண்டும்.

 

இதுவரை....

உலக கோப்பை வரலாற்றில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் 7 முறை மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 4 (1983, 92, 96, 2007), இங்கிலாந்து 3 (1975, 79, 83) போட்டிகளில் வெற்றி பெற்றன.

 

http://sports.dinamalar.com/2015/02/1424360921/NewZealandEnglandWorldCupCricket.html

 

  • கருத்துக்கள உறவுகள்

Eng Vs NZ: இங்கிலாந்து 123

  • தொடங்கியவர்

NZ 71/0 5.1 overs

  • தொடங்கியவர்

96/0 in 6 overs

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிராக தீயாய் பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்த டிம் சவுத்தி...உலக கோப்பையில் சாதனை

 

வெலிங்டன்: நியூசிலாந்தின் டிம் சவுத்தி உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக சென்று அமர்ந்துள்ளார். இதன்மூலம் முந்தைய சாதனையாளர்களை அவர் சமன் செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை 123 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆக உதவினார்.

 

சாதனை சமன் உலக கோப்பை வரலாற்றில் இதுவரை மூன்று பேர் மட்டுமே ஒரே மேட்சில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அந்த சாதனைக்காரர்களுக்கு மத்தியில் டிம்சவுத்தியும் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.

 

மே.இ.தீவு வீரர் முதல் சாதனை முதல் முறையாக 7 விக்கெட் சாதனை 1983ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது நடந்தது. மே.இ.தீவுகளின் வின்ட்சன் டேவிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10.3 ஓவர்களில் (அப்போதெல்லாம் மொத்தம் 60 ஓவர்கள் என்பதால், ஒரு பவுலர் 12 ஓவர்கள் வீச அனுமதி உண்டு) 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

ஆன்டி பிச்சல் இதன்பிறகு 2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் ஆன்டி பிச்சல் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

மெக்ராத் 2003 உலக கோப்பையில் பிச்சல் சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய பவுலரான கிளென் மெக்ராத் சமன் செய்தார். நமீபியா அணிக்கு எதிராக 15 7 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மெக்ராத்.

 

ஜஸ்ட் மிஸ் நடப்பு 2015 உலக கோப்பையில், இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிம் சவுத்தி 9 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கூடுதலாக ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், புது சாதனை உருவாகியிருக்கும்.

 

நியூசிலாந்தில் இவர்தான் டாப் அதே நேரம் ஒரே போட்டியில் அதிக விக்கெட் எடுத்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்களில் டிம்சவுத்திக்குதான் முதல் இடம். அந்த அணியின் அதிவேக பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் 2003 உலக கோப்பையின்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரையிலான சாதனையாக இருந்தது. (அந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற்றது தனிக்கதை).

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/tim-southee-equals-world-cup-record-with-7-wickets-221343.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.