Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

திருச்சி சிறப்பு முகாமில் 26 ஈழத்தமிழர் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் 15.11.2014 காலை 10மணிக்கு ஆரம்பமானது. ஈழ ஆதரவாளர்களின் ஆதரவை விரும்புகின்றோம்.

1978516_741642912540376_2674066303222110

10511606_741643002540367_127239425523618

1941450_741643142540353_1293442552795400

https://m.facebook.com/eela.nehru/posts/pcb.741645132540154/?photo_id=741642912540376&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.741645132540154%26photo%3D741642912540376%26profileid%3D100003898785397%26source%3D48%26refid%3D28%26_ft_%3Dqid.6081870332208535251%253Amf_story_key.7444371574749325132%26ftid%3Du_1h_3&mdf=1

Edited by துளசி

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

இன்று (15.11.2014) முதல் தங்களை விடுதலை செய்யக் கோரி திருச்சி முகாமில்( கிளைச் சிறையில் ) அடைக்கப்பட்டுள்ள 26 ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

அ) முறையாக கடவுச்சீட்டு எடுத்து வந்து காவல்நிலையத்தில் பதிவு செய்தவர்களையும்,

ஆ) அகதியாக ஓடிவந்து பதிவு செய்து சாதாரண முகாம்களில் பலவருடங்களாக வசிப்பவர்களையும்,

இ) ஒரு முறை கடவுச் சீட்டு இல்லாமல் இந்தியாவிற்குள் இருந்ததாக வழக்குபதிவு செய்து விடுதலையானவர்களையும்

பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்துள்ளது எந்தவகை நீதி?

திருச்சி மற்றும் செய்யாறு சிறப்பு முகாம்களை (சித்ரவதை முகாம்களை) மூட அனைவரும் போராடுவோம்.

தமிழ்த்தேச மக்கள் கட்சி

https://m.facebook.com/story.php?story_fbid=665529726897711&id=100003220681513

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

திருச்சி சிறப்பு முகாமில் மூன்றாவது நாளாக (17.11.2014) 26 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்

 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 25 பேர் மலேசிய நாட்டவர் ஒருவரும் ( ஈழநேரு, கருனைராஜ், ஞானவரோதயன், சந்திரகுமார், சுரேஸ்குமார், உதயதாஸ், இலங்கைநாதன், சிறீஜெயன், ஆரோக்கியநாதன், த.மகேஸ்வரன், க.மகேஸ்வரன், சிவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜா, சதீஸ்குமார், கிரிதரன், பகீதரன், சசிதரன்,யுகப்பிரியன், சுபாகரன், ரமேஸ், முகமது சாதிக், முகமது உவைஸ், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன் ) எதுவித நிபந்தனையும் இன்றி தங்களை விடுதலை செய்யக்கோரி 15.11.2014 முதல் உண்ணாவிரதப்போராட்டதினை ஆரம்பித்து மூன்றாவது நாளாக தொடர்கின்றனர்.

 

அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக கருதினால் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரதிநிதிகள் தங்களை நேரில் சந்தித்து விசாரணை செய்து தனிமனித உரிமையை மதித்து விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்ககோரி உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

 

உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான நேற்று, R.D.O கணேசசேகரம், அகதிகளுக்குகான தனித்துணை ஆட்சியர் நடராஜன் (திருச்சி ), Q பிரிவு DSP பால்வண்ணன் ஆகியோர் உண்ணாவிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையினை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக மட்டும் கூறிச் சென்றனர்.

 

இலங்கையில் யுத்தம் நடக்கும் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவப்பொருட்கள் அனுப்பியதான குற்றச்சாட்டில் கைதானவர்கள், அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முயன்றதான குற்றச்சாட்ட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளியே வந்தவர்கள் ஆகியோர் நீதிமன்ற மற்றும் சிறை வளாகத்தில் வைத்து மீண்டும் கைது செய்து நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் சிறப்பு முகாமில் அடைகின்றனர். அயல்நாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு அடைக்கப்படுவதாக காவல்துறையால் காரணம் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டு அடைக்கப்படுபவர்கள் அனைவரும் அகதிகளாக தமிழகம் வந்து அகதி முகாம்களில் முறைப்படி பதிவு செய்து வாழ்ந்து வருபவர்கள் ஆவர். அத்துடன் முறைப்படி வீசா அனுமதி பெற்று இந்தியா வரும் ஈழத்தமிழர்கள் வீசா அனுமதி காலம் முடிவதற்கு முன்னரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னர் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பாக செய்யப்படும் செயல்களாகவே கருதப்படுகிறது.

 

சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை காலத்திற்கு அதிகமாக (பல மாதங்கள்,பல வருடங்கள்) இங்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பின்னர் அவ்வழக்கினை அவர்கள் நடத்தி முடிப்பதற்கு பல வருடங்கள் ஆகும் என்ற பயத்தினால் செய்யாத குற்றத்தினை ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலைகளும் ஏற்படுகின்றது. தற்போது இங்குள்ளவர்கள் ஒரு வருடம் தொடக்கம் எட்டு வருடங்கள் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இங்கு அடைக்கப்படுபவர்கள் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கால வரையறையற்று அடைக்கப்படுவதால் பொருளாதார ரீதியாக நலிவடைந்து பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றன. அந்த பாதிப்பினால் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முழுமையாக மனநலம் பாதிக்க பட்டவர்கள் என்று அடியாள படுத்தபடுபவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுகின்றனர். மிகவும் கொடுமையான விடயம், ஈழத்தில் போரினால் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காதவர், பிறர் உதவி இன்றி செயற்பட முடியாதவர் அனைவரும் ஈவு இரக்கமின்றி இந்த சிறப்பு முகாமில் அடைத்து கொடுமைபடுத்தப் படுகின்றார்கள். மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும், உறவினர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது சர்வதேச மனிதவுரிமை மீறலான விடையமாகும்.

தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

10384226_742755745762426_469015888988670

 

10419031_742755982429069_225858301424986

 

10382978_742756079095726_650982295269568

 

https://www.facebook.com/eela.nehru/posts/742756299095704

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

....மிகவும் கொடுமையான விடயம், ஈழத்தில் போரினால் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காதவர், பிறர் உதவி இன்றி செயற்பட முடியாதவர் அனைவரும் ஈவு இரக்கமின்றி இந்த சிறப்பு முகாமில் அடைத்து கொடுமைபடுத்தப் படுகின்றார்கள். மேலும் வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கும், உறவினர்கள் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது சர்வதேச மனிதவுரிமை மீறலான விடையமாகும்.

தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் இந்த கொடுமையான சிறப்பு முகாமில் இருந்து ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை பல வருடங்களாக நடாத்தியும் அரசு செவி சாய்ப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/eela.nehru/posts/742756299095704

 

கொடுமை.

 

தாயிக்கு, சேயும் புரியவில்லை, நேயமும் வரவில்லை! :o:wub:

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்

திருச்சி அகதிகள் முகாமில் 20 பேர் தற்கொலை முயற்சி.

http://www.yarl.com/forum3/index.php?/topic/149085-திருச்சி-அகதிகள்-முகாமில்-20-பேர்/#entry1058982

  • கருத்துக்கள உறவுகள்


  • தொடங்கியவர்

திருச்சி சிறப்பு (சித்ரவதை) முகாமில் உயிரைப் பணயம் வைத்து உண்ணா நிலைப் போராட்டம் நடத்தும் ஈழ தமிழர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு.

தமிழ்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி ,அமைப்புசெயலாளர் செந்தமிழ் குமரன் ,தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி ,கட்சி தலைமை நிலைய செயலாளர் தமிழ்மகன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

1467228_1547193718826862_820915060971054

https://m.facebook.com/photo.php?fbid=1547193718826862&id=100006087461015&set=p.1547193718826862

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்பு முகாம் தற்பொழுதைய நிலை

திருச்சி சிறப்புமுகாமில் நேற்று 20 பேர் தற்கொலை முயற்சி செய்தனர் இவர்களில் யாரையும் இன்று காலைவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறப்பு முகாமிற்கு உள்ளேயே வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7 பேருடைய உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து சிறை மருத்துவர் இவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறையில் வசதியில்ல எனவே பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி அவரே ஆம்புலன்சிற்கும் தகவல் சொல்லி வரவைத்துவிட்டார். ஆனால் அவர்களில் 4 பேரை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ள காவல்துறையினர் மற்றவர்களை இதுவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று தூக்க மாத்திரை போட்ட பலர் மீண்டும் தங்கள் கையில் இருந்த தூக்க மாத்திரைகள் நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதனால் பலர் மீண்டும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்

திருச்சி சிறப்பு முகாமை கவனித்துவரும் டெபுட்டி கலெக்டர் நடராஜனை தொடர்புகொண்டு கேட்ட பொழுது 4 பேர் மட்டுமே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டதாகவும் தகவல் சொல்கிறார் மற்றவர்கள் குறித்து கேட்ட பொழுது மற்றவர்களை பற்றி தனக்கு தெரியாது என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்.

எங்களை வாழ விடுங்கள் அல்லது சாகவிடுங்கள் என்ற கோரிக்கையோடு 5வது நாளாக திருச்சி சிறப்புமுகாமில் உயிருக்கு ஆபத்தான சூழலிலும் உண்ணாவிரதம் தொடர்ந்துவருகிறது.

10376818_846888768666672_168242455996412

8949_846888755333340_5398445526009442414

10313455_846888758666673_502510858809827

10302385_846888692000013_269150529141912

10801793_846888765333339_291954926261105

https://www.facebook.com/prithik007/posts/846889028666646

திருச்சி சிறப்புமுகாமில் உதயதாஸ், மகேஸ்வரன், யுக பாரதி ஆகிய உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் மூவரை இதுவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து சிறப்புமுகாம் வாசலில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

https://www.facebook.com/prithik007/posts/846926375329578

பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்படாத மற்ற மூவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்புமுகாமில் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ நேரு மற்றும் கருணை ராஜ் ஆகியவர்களின் மேல் போராட்டத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் நாளை கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

 

(facebook)

 

  • தொடங்கியவர்

நேற்று இரவு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 14 பேரை சிகிச்சை முடியும் முன்பே மீண்டும் திருச்சி சிறப்புமுகாமில் அடைத்தது காவல்துறை. அதில் சிவநேஸ் சரண், மகேஸ்வரன் ஆகிய தோழர்களின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மீண்டும் அவர்களை அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

மேலும் போராட்டத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஈழ நேரு என்ற தோழரை சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். கருணை ராஜ் என்ற தோழர் அநேகமாக இன்று கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=847860858569463&id=100000366696465

  • தொடங்கியவர்

திருச்சி மற்றும் செய்யாறு ஆகிய இடங்களில் தமிழக அரசு அமைத்துள்ள ஈழத் தமிழர்கள் சித்ரவதை முகாம்களை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் முன் வழக்கறிஞர்கள் இன்று 21.11.2014 மதியம் போராட்டம் நடத்தினர்.

10371451_668576316593052_389397107905059

1507727_668576799926337_5649726408733469

https://m.facebook.com/story.php?story_fbid=668576816593002&id=100003220681513&ref=bookmark

Edited by துளசி

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்புமுகாமில் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்க: பண்ருட்டி வேல்முருகன் அறிக்கை!

திருச்சி முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர் உட்பட 31 பேர் உள்ளனர். இதில் ஈழத் தமிழர்கள் 26 பேர் தங்களை முகாமில் இருந்து விடுவிக்க கோரியும் வழக்குளை சட்டப்படி வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறியும் கடந்த 15-ந் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 25 பேர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தங்களது உயிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்திருக்கிறார்கள் எனில் அவர்களது துயரத்தையும் வலியும் மிகக் கொடூரமானது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் தங்களது விடுதலைக்காக போராடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஈழ ஏதிலியர் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதே இந்தியாவில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தொடர்பே இல்லாத திபெத்திய அகதிகள் ஒரு தனிநாட்டுக்கான அத்தனை சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் 7 கோடி மக்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதி முகாம்களோ மிக மோசமான திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கிறது.

திருச்சி மட்டும்ன்றி தமிழகத்தின் அனைத்து திறந்தவெளிச் சிறைச்சாலைகளான ஈழத் தமிழ் உறவுகள் இருக்கும் முகாம்களையும் இழுத்து மூடி அவர்களை சுதந்திர மனிதர்களாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப்பட்டு கொடுங்கைதிகளாக நடத்தப்பட்டு வரும் ஈழத் தமிழ் உறவுகளை சிறைகளில் இருந்து கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் ஈழ உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களை விடுதலை செய்து அவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://tamilsnow.com/?p=29747

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அரசு நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று தற்காலிகமாக தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

(Facebook)

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அரசு நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று தற்காலிகமாக தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில் காலவரையற்று தங்களை சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்துள்ளதை கண்டித்தும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கடந்த 15-ம் தேதி முதல் நான்கு நாட்களாக சந்திரகுமார், ஈழநேரு, கருனைராஜ், ஞானவரோதயன், சுரேஸ்குமார், உதயதாஸ், இலங்கைநாதன், சிறீஜெயன், ஆரோக்கியநாதன், த.மகேஸ்வரன், க.மகேஸ்வரன், சிவனேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, தர்மராஜா, சதீஸ்குமார், கிரிதரன், பகீதரன், சசிதரன், யுகப்பிரியன், சுபாகரன், ரமேஸ், முகமதுசாதிக், முகமதுஉவைஸ், ராஜேந்திரன், சிவகுமார், பாலச்சந்திரன் ஆகிய 26 பேர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

அரசு தரப்பில் எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாததால் இவர்களில் 20 பேர் 18.11.2014 அன்று அதிகப்படியான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்காத காவல்துறையினர் 19.11.2014 அன்று முகாமிற்கு வெளியே போராட்டங்கள் நடந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாக தொடந்துவந்த போராட்டத்தையடுத்து அரசு தரப்பிலிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பால்வண்ணன், மற்றும் துணை ஆட்சியர் ராஜசேகரன் ஆகியவர்கள் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்த மாத இறுதிக்குள் அனைவரையும் விடுதலை செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=848444258511123&id=100000366696465

  • தொடங்கியவர்

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்காக போராடிய அனைத்து தோழர்களுக்கும் உண்ணாவிரத போராட்டக்காரர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களை உடனடியாக மருத்துவமையில் அனுமதிக்க கோரி ஆட்சியருடன் பேசிய தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கும், அனைத்து தோழர்களுக்கு இந்த தகவலை கொண்டு சேர்த்த தோழர் திருமுருகன் அவர்களுக்கும், இயக்குனர் கவுதமன் அவர்களுக்கும், சிறப்புமுகாமிற்கு வெளியே உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் தோழர்களுக்கும், தோழர் சீமான் அவர்களுக்கும், சிறப்புமுகாம் வாசிகளை விடுதலை செய்யக்கோரி அறிக்கை வெளியிட்ட தோழர் வேல்முருகன் அவர்களுக்கும், தோழர் வைகோ அவர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=848450375177178&id=100000366696465&ref=bookmark

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.